twitter.com/ItsJokker
முன்னாடிலாம் வொர்க் அவுட் செய்றப்பதான் மூச்சு வாங்கும். இப்போலாம் வொர்க் அவுட் வீடியோ பாத்தாலே மூச்சு வாங்குது..!!!
twitter.com/RagavanG
தனிப்பட்ட வாழ்க்கையோ நட்போ வேலையோ தொழிலோ அரசியலோ... எதிலானாலும் மிகை நாடித்தான் மிக்க கொள்ள வேண்டியிருக்கிறது. சொக்கத் தங்கத்தில் குண்டூசி கூட செய்ய முடியாது என்பதே உண்மை.

twitter.com/teakkadai1
மிஸ்டர் ட்ரம்ப், எங்க தமிழ்நாட்டுக்காரங்க அமெரிக்கால நிறைய வேலை பார்க்கிறாங்க. ஏன் அமெரிக்கர்கள் தமிழை இரண்டாம் மொழியா படிக்கக்கூடாது?
twitter.com/ItsJokker
ஆமா, ஹிந்தி படிச்சிருந்தா இப்போ என்ன செஞ்சிட்டு இருப்பீங்க? ~ கூடிய விரைவில் “அமிதாப்பச்சன் பிரதமர்” ஆவார்ன்னு சொல்லிட்டு இருந்திருப்பேன். - தமிழருவி மணியன்
twitter.com/shivaas_twitz
வீட்ல யூ-டியூப் பார்த்து சமைச்ச டிஷ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். முதல் வாய் சாப்பிட்டவுடனே உப்புமா மீதான வெறுப்பு சரிய தொடங்குகிறது.

twitter.com/sundartsp
மே்க் இன் இந்தியான்னு சொல்ற கட்சி இன்னோவா கார் குடுக்கப் போறாங்களாம், மஹிந்திராவோ டாட்டாவோ குடுக்கலாமே
twitter.com/shivaas_twitz
ஆபீஸ்ல நம்ம டீம்ல இருக்குற ஆட்கள் எல்லாம் தோனியோட சேர்ந்து ஓய்வு அறிவிச்ச ரெய்னா மாதிரி தான் இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா பாருங்க, எல்லோரும் ஈபிஎஸ் பதவிக்கே வேட்டு வைக்கிற ஓபிஎஸ் மாதிரி தான் இருக்காங்க.

twitter.com/pachchakkili
புத்தகம் படிக்கும்போதெல்லாம் எழுத்து கொஞ்சம் சின்னதா இருந்தா அனிச்சை செயலாக பட்டென்று ஜும் பண்ணப் போய்டுது கை. ஆண்ட்ராய்ட் போனின் பாதிப்பு பலமாத்தான் இருக்கு போல.
twitter.com/HariprabuGuru
ஏன்ணே அவனை அடிக்குறீங்க.
லாக்டவுன்லாம் என்னைக்கு முடியுதோ அந்த தேதியில வருஷா வருஷம் இன்னொரு சுதந்திர தினம் கொண்டாடுவாங்களான்னு கேக்குறாம்ப்பா..

twitter.com/krishnaskyblue
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருந்ததாக சீனா குற்றச்சாட்டு
சீனா~எங்களுக்கே விபூதி அடிக்க பாக்குறல நீ
twitter.com/star_nakshatra
லிட்டில் பிரின்சஸ்க்கு அப்பாவா இருக்குறதுலாம் ரொம்ப ஈசி...
அண்ணனாவோ புருஷனாவோ இருக்கறதுதான் ரொம்ப கஷ்டம்.