Published:Updated:

வலைபாயுதே

‘‘27 வயசு ஆச்சு, இன்னுமா கல்யாணம் பண்ணல''ன்னு ஒரு குரூப் கேட்கும்.

பிரீமியம் ஸ்டோரி

twitter.com/shafeeqkwt

5,000 ரூபாய்க்குச் செருப்பா? எனக்கெல்லாம் அது ஒரு மாச சம்பளம்டா!

twitter.com/RahimGazzali

சென்னையைப் பொறுத்தவரை ரெண்டு பிரச்னைதான். ஏப்ரல், மே-யில் தண்ணீருக்காக கஷ்டம். நவம்பர், டிசம்பரில் தண்ணீரினால் கஷ்டம்.

twitter.com/Raajavijeyan

தவறுகளுக்கான தண்டனை சிலருக்குச் சிறைச்சாலைகளிலும், பல பேருக்கு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது.

twitter.com/Vkarthik_puthur

அ.தி.மு.க அரசு தூர் வாரியதால் சென்னை தப்பியது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். # அதுக்காக வெள்ளை அறிக்கை வெளியிடுற அளவுக்கு கஜானாவையுமா தூர் வாருவீங்க?

Alia Bhat: சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
Alia Bhat: சுந்தரி கண்ணால் ஒரு சேதி!

facebook.com/Saravanakarthikeyan

‘என் சாதியால் எனக்குப் பெருமை இல்லை; என் பெயர் சொல்லி என் சாதி வேண்டுமானால் பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்' என்ற திமிரும் தன்னம்பிக்கையும் கொண்ட எவனும் சாதியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு இருப்பதில்லை. ஒன்றுக்கும் உதவாத, கையாலாகாத, அறிவோ, திறமையோ, முயற்சியோ, உழைப்போ இல்லாத கழிசடைகளே சாதி மூலம் தன் கனத்தை உயர்த்திக்காட்ட சாதி வெறி பிடித்துத் திரிகிறார்கள்.

twitter.com/amuduarattai

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைப்பது சாத்தியமில்லை: பழனிவேல் தியாகராஜன். # உள்ளாட்சித் தேர்தல் சமயத்திலாவது குறைக்க சாத்தியம் இருக்குங்களா?

twitter.com/Kozhiyaar

ஏதாவது மீட்டிங் போனா நான் டைம் வேஸ்ட் செய்வதில்லை. பார்க்காமல் இருக்கிற வாட்ஸ்அப் மெசேஜ்கள், மெயில் எல்லாத்தையும் பார்த்து முடிச்சிடுவேன்!

twitter.com/prabhu65290

‘‘27 வயசு ஆச்சு, இன்னுமா கல்யாணம் பண்ணல''ன்னு ஒரு குரூப் கேட்கும். ‘‘கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு. இன்னுமா கொழந்த பெத்துக்கல''ன்னு ஒரு குரூப் கேட்கும். ‘‘சொந்தமா தொழில் பண்ற. இன்னுமா ஆல்டோ கார ஓட்டிட்டு இருக்க''ன்னு ஒரு குரூப் கேட்கும். இப்படி பல குரூப்கள் இருக்கு. ஆம்பள வாழ்க்கை கஷ்டம் சார்!

twitter.com/Kannan_Twitz

டீ போடலாமேன்னு கிச்சனுக்குள்ள போனா, ரூம்ல இருந்துட்டே ப்ரெண்ட்டு போன் பண்ணி ‘‘மச்சா, வரக்குள்ள மேட்ச் பாக்ஸ் எடுத்துட்டு வாடா''ன்றான். மக்களுக்குப் பேருதவியா இருக்கும்னு மொபைல் கண்டுபுடிச்சவன் இதெல்லாம் பார்த்தா தொங்கிடுவான்!

Shreya goshal: குட்டிக் குயில்!
Shreya goshal: குட்டிக் குயில்!

twitter.com/KannaMosaan

ஒரு ஜோடி செருப்பும் பொதுபுத்தியும்!

மத்தியானம் சாப்ட்டு, ‘சுருளி' படம் பாக்கலாம்னு உக்காந்தேன். அப்பார்ட்மென்ட் செகரட்ரிகிட்ட இருந்து போன். கிரவுண்ட் ப்ளோர்ல ஒருத்தரோட செருப்பு ஜோடியா காணாமப்போயிடுச்சி. அதனால CCTV footage செக் பண்ணக் கூப்பிட்டாங்க.

‘செருப்பா'ன்னு ஷாக் ஆகாதீங்க, விஷயமிருக்கு. 10 நாளுக்கு முன்னாடிதான் ஒரு சின்ன சைக்கிள் காணாமப்போயிடுச்சி, அதனால செருப்புக்கு வெயிட்டேஜ் கூடிடுச்சி‌. சைக்கிள் காணாமப்போனப்ப கரெக்டா CCTV footage மக்கர் பண்ணிடுச்சி. இன்னும் அந்த வழக்கு நிலுவைலதான் இருக்கு. இன்னைக்கு நான்தான் footage செக் பண்ணினேன்.

நான் எந்த முன்முடிவும் இல்லாமதான் இருந்தேன்‌. ஆனா ஒரு செகரட்ரிக்கு வாட்ச்மேன், கூட்டிப் பெருக்கறவங்க மேல டவுட்டு இருந்துச்சி‌. மூணு கேமராவ செக் பண்ணியும் ஒண்ணும் கிடைக்கல. நாலாவது கேமராவ பாத்தா ஸ்கூட்டிய நிறுத்திட்டு, முதுகில் பேக் மாட்டிட்டு உள்ள வர்ற ஒருத்தன், அந்த வீட்டு வழியா போயி, ஒரு நிமிஷம் இடைவெளில, யாராவது பாக்கறாங்களான்னு நோட்டம் விட்டுட்டு, கையில செருப்பத் தூக்கிட்டுப் போறான். Footage பாத்துட்டிருந்த எங்களுக்கு செம ஷாக். அவனுக்கு 25-30 வயசு இருக்கும். அவனோட அப்பா, அம்மா ரெண்டு பேரும் பேங்க்ல வேலை பாக்கறாங்க. இவனும் வேலைல இருக்கான். கொஞ்ச நேரம் எங்களுக்கு பேச்சே வரல‌.

அப்புறமா, அவனோட ஃபிளாட்டுக்கு முன்னாடி இருக்கற செருப்புகளை போட்டோ எடுத்து, தொலைச்சவர்கிட்ட செக் பண்ணுனா, தொலைஞ்ச செருப்பு அங்கதான் இருக்கு. அந்தப் பையனோட அப்பாவைத் தனியா கூப்பிட்டு வீடியோவ காமிச்சி, தொலைஞ்சுபோன சைக்கிளையும் விசாரிக்கப்போறாங்க.

எனக்கு இப்பவரைக்கும் அதே யோசனையா இருக்கு. ஒரு பொருள் திருட்டுப் போயிடுச்சின்னா, ஏன் நம்ம வீட்டுல, அப்பார்ட்மென்ட்ல, ஆபீஸ்ல வேலை பாக்கற வேலையாட்கள் மேல சந்தேகப்படணும்னு பொதுப்புத்தி போகுது?

இன்னிக்கு ஒரு ஜோடி செருப்பைத் திருடியவன் கைநிறைய சம்பளம் வாங்கறவன். தவிர, இந்தப் பையன் குழந்தைங்ககிட்ட தொட்டுப்பேசற விதம் சரியில்லன்னு என் மனைவி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சொன்னது இப்ப ஞாபகத்துக்கு வருது. இந்த மாதிரி ஆட்கள் நாம வசிக்கற இடத்துலயேதான் நம்மகிட்ட சிரிச்சுப் பேசிட்டு நார்மலா இருக்காங்க.

Be Alert & Stay safe.

Aditi Rao: சிண்ட்ரெல்லா!
Aditi Rao: சிண்ட்ரெல்லா!

twitter.com/pachaiperumal23

சென்னையன்ஸ் நவ் டு மழை: ஏண்டா எங்களையே சுத்திச் சுத்தி வர்றே... வேற ஊரே தெரிலையா உனக்கு?

twitter.com/manipmp

ஒரு நாயின் ஆத்திரக் கூச்சல், மற்றொரு நாயை அடக்கித் தலைகுனிய வைப்பதுதான். இது நமக்கும் பொருந்தும்!

twitter.com/saravankavi

தப்பிச் சென்ற வங்கி மோசடியாளர்கள் நாடு திரும்ப வேண்டும்: பிரதமர் மோடி. # எதுக்கு, மறுபடியும் கடன் கொடுத்துத் தப்ப வைக்கிறதுக்கா?

twitter.com/prabhu65290

‘‘ஏன் சார் எப்பவும் தனியாவே இருக்கீங்க? உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா?''

‘‘இருந்தாங்க, இப்ப கொஞ்சம் கஷ்டத்துல இருக்கேன்!''

‘‘அப்ப நீங்க தனியாதான் இருப்பீங்க!''

twitter.com/Kannan_Twitz

ஒரு விஷயத்த தெரிஞ்ச மாதிரி காட்டிக்கச் செய்யுற மெனக்கெடலை கொஞ்சம் அதைத் தெரிஞ்சிக்கக் காட்டிக்கிட்டாலே போதுமானது!

twitter.com/yaar_ni

என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. 2026-ல் அன்புமணி தமிழக முதல்வராகணும்: ராமதாஸ் கட்டளை. # அதுக்கு அன்புமணி வீட்டை விட்டு வெளியே வரணும்...

twitter.com/pachaiperumal23

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் த.மா.கா சாா்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு செலுத்தலாம்: ஜி.கே.வாசன்

# டிராபிக் ஜாமாகலாம் என்பதால் முன்கூட்டியே நடவடிக்கை தேவை!

twitter.com/kumarfaculty

மன வருத்தத்தை யாரிடமாவது சொல்லிய பிறகுதான் வார்த்தைகள் எடையிழக்கின்றன!

twitter.com/Raajavijeyan

சிலரைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னா பணத்தை வாங்கிப் பார்க்கணும்; சிலரைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னா பணத்தைக் கொடுத்துப் பார்க்கணும்!

twitter.com/balebalu

மாணவர்கள் நவ்: விவசாயிகளுக்குப் புரியலன்னு சொல்லி சட்டத்தை ரத்து பண்ணுன மாதிரி, எங்களுக்கும் நடத்துற பாடம் எல்லாம் புரியல, எக்ஸாம் ரத்து பண்ணுவாங்களா?

twitter.com/Thaadikkaran

‘எவ்வளவு நேரம் பேசியிருக்கோம் பாரேன்'னு ஆரம்பிச்சு, ‘என்கிட்ட பேசக்கூட டைம் இல்லயே'ன்னு ஆரம்பிக்குது காதல் சண்டைகள்..!

Chennai super kings: தல - தளபதி!
Chennai super kings: தல - தளபதி!

twitter.com/sultan_Twitz

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சோகமானது, வெட்கக்கேடானது: கங்கனா ரணாவத்

ஜி: பத்ம விருதுலாம் குடுத்தேன் தம்பி, கொஞ்சங்கூட நன்றியே இல்ல!

twitter.com/saravankavi

15 லட்சம் கையில் உண்டு. ஆனால் சரியான சிறு வியாபாரம் எதுவும் கண்ணில் படவில்லை! ‘உங்க கிட்ட 15 லட்சம் இருந்தா, வியாபாரம் மட்டும்தான் செய்யணும்னா என்ன பண்ணுவீங்க'ன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க... ஒருத்தர் அதைச் சொல்லி பிரதமராவே ஆகிட்டாரு!

facebook.com/Jesu charlie

‘‘என்னடி, உன் புள்ள சாதி ஒழிப்புலாம் பேசுறான்..?''

‘‘அதான்டி எனக்கும் புரியல... எவள காதலிக்குறான்னே தெரியலயே!''

twitter.com/narsimp

அறிவியல் தொழில்நுட்ப அறிவார்ந்த சமூகத்தை நோக்கிப் போய்ட்டோம்னு நினைச்சா, கோ-எட் இருக்கக்கூடாது, மாணவிகளுக்கு ஆசிரியைகள் மட்டும்னு ஆரம்பிக்கிறாங்க. அப்படியே வேட்டைச் சமூகம், கற்காலம், சிக்கிமுக்கின்னு போனா துணிச் செலவாச்சும் மிஞ்சும்டா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு