சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

அதர்வா
பிரீமியம் ஸ்டோரி
News
அதர்வா

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருமானம் சம்பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்த கொரோனா காலத்தில்தான் உயர்ந்திருக்கிறது.

twitter.com/teakkadai1

பள்ளிக்கால நண்பனை சில ஆண்டுகள் கழித்துச் சந்தித்தேன். ‘எப்பவும் நிமிர்ந்து வெறைப்பா இருப்ப. பட்டுன்னு பேசுவ. இப்ப பாடிலாங்வேஜ்ல கூன் விழுந்திருச்சு, குழைஞ்சு பேசுற. பொழச்சிக்கிருவ’ என்றான்.

twitter.com/NeoDravidian

முதல்ல தற்கொலைக்குத் தூண்டுவோம்: மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன்.

அப்புறம் ஒரு எமோஷனல் பிளாக்மெயில்: வரும் எதிர்காலம் உன்மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்.

கவித்துவமா?

twitter.com/VignaSuresh

இளையராஜாவின் குரல் யாவருக்குமானதல்ல. எனினும், மடியில் படுத்து சத்தமின்றி விசும்பி அழும் மகளின் முதுகை மெல்ல நீவிவிடும் அப்பாவின் கைகள் அது எனக்கு!

Vignesh Shivan: காதல் போக்குல ஒரு டப்பிங்!
Vignesh Shivan: காதல் போக்குல ஒரு டப்பிங்!

twitter.com/ImAvudaiappan

ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை வருமானம் சம்பாதித்தவர்களின் எண்ணிக்கை இந்த கொரோனா காலத்தில்தான் உயர்ந்திருக்கிறது.

twitter.com/shankaruppusamy

எந்த எழுத்தாளரை எதிர்த்து அழுக்கு அரசியல் செய்து துன்புறுத்தி பலனடைந்தார்களோ அதே எழுத்தாளரின் படம் அரசுத் திட்டங்களுக்கான விளம்பரங்களில் தவறுதலாக இடம் பெற்றுவிடுவது இனிய நீதி. அந்த அளவுகூட பொது அறிவு இல்லாதவர்கள்தான் மைய அரசு விளம்பரங்களை வடிவமைக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.

twitter.com/angry_birdu

மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள். தமிழ்நாட்டிலிருந்து சென்ற 18 எம்.பி-களில் ஒருவரைத் தவிர மீதமுள்ள 17 எம்.பி-களும் கலந்துகொண்டனர். கலந்துகொள்ளாத அந்த ஒருவர், அன்புமணி ராமதாஸ்!

twitter.com/Ramya2202

கடுகை வெடிக்கவிட்டு, பூண்டைத் தட்டிப்போட்டு, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப்போட்டு, எல்லாக் கோபத்தையும் சமையலறையிலேயே முடித்துக்கொள்கிறோம் நாம்!

facebook.com/revathy.ravikanth

புவர் மீ: நியூ இயர் செலிப்ரேஷனுக்கு ஃபேமிலியா கோவா போலாம்னு இருக்கோம்!

ஒமைக்ரான்: நானும்தான் தோழி!

twitter.com/arattaigirl

ஊர் முழுக்க ஜோராய் கொட்டும் மழையை ரசிக்க... வீட்டுக்குள் தண்ணீர் சொட்டாத ஒரே ஒரு கூரை தேவையாய் இருக்கிறது.

twitter.com/pachaiperumal23

மருத்துவமனையில் பக்கத்துப் படுக்கை நபருக்கு சாப்பாடு வாங்கித் தர ஆளில்லாத நிலையில், தனது உணவில் பாதியைத் தந்து சாப்பிடச் சொல்லும் நபரைவிட பெரிதான மனிதாபிமானியை எங்கு கண்டிட இயலும்?

twitter.com/kick_ofl

ரெய்னாவை ஏன் தலைவன் எடுக்கலன்னு பீல் பன்றானுக! தலைவனுக்குத் தெரியும் ரெய்னாவ யாரும் எடுக்க மாட்டாங்கன்னு... சோ சி.எஸ்.கேவே எடுக்கும் டோன்ட் வொர்ரி. இது ஒருவிதமான திரிசூல வியூகம்!

facebook.com/gkarlmax

இலங்கையில் போரால் இறந்தவர்களின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவுத் தூபியை இடிக்கிறார்கள். கல்லறைகளை இடிக்கிறார்கள். அதைப் படம் பிடித்த போட்டோ ஜர்னலிஸ்ட்களை முள்கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையால் அடிக்கிறது ராணுவம். மாணவர்கள் உண்ணாவிரதம், மக்களின் போராட்டம் என்று நீள்கிறது அந்தச் சம்பவம். இதற்கு நடுவே ஒரு இலங்கைப் பெண் பணக்கார மாப்பிள்ளை பற்றி உளறியது வைரலாகிறது. அவளைத் தூற்றி அவளது புகைப்படத்தைப் பகிர்ந்து எதிர்வினையாற்றுகிறது இலங்கையிலேயே இன்னொரு கும்பல்.

சொரணையுள்ள சமூகம் எதை முக்கியமானதாகக் கருதும்? சமூகத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு பைத்தியக்கார விடுதிக்குள் மாட்டிக்கொண்டதுபோல இருக்கிறது!

twitter.com/Suyanalavaathi

முன்னாடியெல்லாம் தூரத்து ஊருக்கு பஸ்ல போனா, முதல்ல தண்ணி பாட்டில் ஒண்ணு பைல எடுத்து வைப்பாங்க. இப்பெல்லாம் முதல்ல பவர் பேங்க் எடுத்து வைக்குறாங்க!

facebook.com/iam.suriyaraj?

மனோஜ் முதல்முறையா சிம்புவ கைது பண்றப்போ, ஆல்ரெடி அந்த இடம் தெரிஞ்சமாதிரியே பேசி, சரியான டைமுக்கு வந்து நிப்பார் எஸ்.ஜே.சூர்யா. அப்போ சிம்புக்கு முன்னாடியே எஸ்.ஜே.சூர்யா டைம்லூப்ல மாட்டிக்கிட்டாரா?

twitter.com/amuduarattai

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு: உச்ச நீதிமன்றம்.

மதுரையில் இருக்கிற எய்ம்ஸுங்களா?

Atharvaa: மஞ்சள் வெயில் மாலையிலே!
Atharvaa: மஞ்சள் வெயில் மாலையிலே!

twitter.com/red2192

கற்பகம் மில் நூற்பாலையில் ஒரு பெண் தாக்கப்படுவது போன்ற வீடியோக் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். ஒரு தொகையை மொத்தமாகக் கொடுத்து பெண்களை அழைத்து வந்து விடுதிகளில் தங்க வைத்து வேலை வாங்கும் ஏற்பாடு இது. இதை ‘கேம்ப் கூலி’ முறை என்று சொல்வார்கள். இவ்வாறு கேம்ப் கூலிமுறையில் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எந்தச் சட்டப்பாதுகாப்பும் கிடையாது. வரையறுக்கப்பட்ட வேலை நேரம், விடுமுறை, PF, Gratuity, maternal benefits போன்ற எந்தத் தொழிலாளர் நல அம்சங்களும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஆலைக்குள் நுழைந்துவிட்டால் அங்கிருந்து வெளியேறவே முடியாது. வெளியேறும் பட்சத்தில் மொத்தத்தொகையையும் வட்டியுடன் செலுத்தியாக வேண்டும். ஒரு‌ தொகையை‌க் கொடுத்து அவர்களை நிரந்தரமான பொருளாதார நெருக்கடியில் சிக்க வைத்துக் கொத்தடிமை வேலை வாங்குவதுதான் இந்த ஏற்பாடு. திருப்பூர், கோவை அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பல ஆலைகளிலும் இதுதான் நடக்கிறது.

இந்த மில் பிரச்னையில் தொடர்புடைய நபர்களைக் கைது செய்வதால் மட்டும் எதுவும் மாறிவிடாது. அரசாங்கம் இதுபோன்ற பெண்களைப் பாதுகாக்கும் வண்ணம் சட்ட அங்கீகாரம் வழங்குவதே தீர்வாக அமையும்.

twitter.com/twittornewton

இப்பதானேடா உங்களுக்கு பத்து விக்கெட் எடுத்துக் கொடுத்தேன். அதுக்குள்ள என்னை பேட்டிங் பிடிக்க அனுப்பறீங்களேடா - அஜாஸ் படேல்

twitter.com/prabhu65290

கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு.

மொதல்ல ஆன்லைன்ல லோன் குடுத்து கந்துவட்டி வசூல் பண்ற ‘ஆப்’களைத் தடை பண்ணுங்க சார், இன்னும் எத்தன பேர் குடியைக் கெடுக்கப்போறாகளோ?

Ashwin: நால்வர் ஒன்றானோம்!
Ashwin: நால்வர் ஒன்றானோம்!

twitter.com/Suyanalavaathi

மனைவி செல்போன் நம்பருக்கு மட்டும் தனி ரிங் டோன் வைத்திருக்கும் கணவர்கள் பாசக்காரர்கள் அல்ல... அலர்ட் ஆறுமுகங்கள்!

twitter.com/balasubramni1

சம்பளம் கிரெடிட் ஆகுது, இ.எம்.ஐ டெபிட் ஆகுது, சம்பளமே காலி ஆகுது... ரிப்பீட்டு!

twitter.com/mohanramko

ஏம்ப்பா, இன்னைக்காவது துணியைக் காயப் போடலாமா? இல்ல வழக்கம் போல உடம்பு சூட்டுலேயேதான் காயணுமா #மழை

twitter.com/mujib989898

தொலைத்ததை அச்சு அசலாகத் தேடாதீர். அது உங்களுக்கானதாக இருந்திருந்தால், தொலைந்திருக்க வாய்ப்பே இல்லை!

twitter.com/ss_twtz

கவனித்தல் ஒரு கலை. கவனிக்காதது போல நடித்திருப்பது ஆகச்சிறந்த கலை.

twitter.com/Thaadikkaran

யூ டியூப்ல பாட்டு ரிலீஸ் பண்ணுறதுக்கு இன்ஸ்டாகிராம்ல ரிலீஸ் பண்ணினா அவனவன் ரீல்ஸ் ரெடி பண்ணி பாட்டு ஹிட் ஆக்கிடுவாய்ங்க, ஐடியா இல்லாத பசங்க..!

Priya varrier: ஊர்சுற்றி!
Priya varrier: ஊர்சுற்றி!

twitter.com/itz_idhayavan

தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை: சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்

ஊரடங்கைத் தாங்குற சக்தி எங்களுக்கும் இல்ல!

twitter.com/HariprabuGuru

விமானத்துல வந்து இறங்கி, இங்க பட்டி தொட்டியெல்லாம் பரவி ஃபேமஸா இருக்குன்னா அது கோடாலி தைலமும் கொரோனா வகைகளும்தான்!

facebook.com/revathy.ravikanth

நல்ல படம் எடுத்து பெரிய டைரக்டரா வர்றத விட ஃபீல்ட்ல இருக்கற நல்ல டைரக்டர்கள தன் படத்துலயே நடிக்க வச்சு குழிக்குள்ள தள்ளிட்டா அப்புறம் இவருதான் நம்பர் ஒண்ணு கோலிவுட்ல...

இந்த ஐடியா யாருக்காச்சும் வந்துச்சா?