Published:Updated:

வலைபாயுதே

Yuvan
பிரீமியம் ஸ்டோரி
News
Yuvan

அஜித் படத்துக்கு ஏன் அப்டேட் விடலன்னு போனி கபூர திட்டப் போய்டுவாங்க..

twitter.com/angry_birdu

சாதிப் பெருமையை ஒருத்தர் மனசுல ஏன் ஈஸியா ஊட்ட முடியுதுன்னா, அது மட்டும்தான் எந்த ஒரு சாதனையும் செய்யாம, துரும்பக்கூடக் கிள்ளிப் போடாம, ப்ரீயா கிடைக்கிற பெருமை.

ஒரு செயலைச் செய்து அதன் மூலமா பெருமையை அடைய முடியாத கையாலாகாதவர்களுக்கு சாதிப் பெருமைதான் ஒரே வழி!

Bharath - காதல் 2 - எப்போ?
Bharath - காதல் 2 - எப்போ?

twitter.com/bhaskarvasugi

தி.நகரில் அத்துமீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கத் தொடங்கினால் மைதானமாகும். ஒரு செங்கல்லை நம்மால் பிடுங்க முடியுமா? ஒரு குடியிருப்பை எவ்வளவு சுலபமாக தரை மட்டமாக்குகிறார்கள், இதைச் சுலபமாகக் கடக்கக் கூடிய மனநிலையைப் பரிசோதியுங்கள். இது புரியாமல் பேசப்படும் எல்லா சமூகநீதியும் போலி.

twitter.com/arattaigirl

இன்னொரு 1000 ஸ்டெப் நடந்தா இன்னும் கொஞ்சம் கலோரி குறையும்னு சிலர் நடப்பாங்க. இன்னொரு 1000 ஸ்டெப் அதிகம் நடந்தா இன்னொரு சப்பாத்தி எக்ஸ்ட்ராவா சாப்டுக்கலாம்னு பிளான் பண்ணிட்டே சில லெஜெண்டுகள் நடப்பாங்க #வாக்கிங் பரிதாபங்கள்

twitter.com/Suyanalavaathi

ஞாயிற்றுக்கிழமை வெட்டியாக இல்லாமல், பிஸியாக வெட்டி வெட்டி முறிப்பவர்கள் கறிக்கடைக்காரர்களும், சலூன் கடைக்காரர்களும் மட்டுமே!

Hardik Pandya - இவ்ளோ கஷ்டமா..!
Hardik Pandya - இவ்ளோ கஷ்டமா..!

twitter.com/Paruthi_Moottai

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? - கமல்

என்ன கமல் சார். கட்சிலாம் ஆரம்பிச்சுட்டீங்க. இது கூடவா தெரிய வில்லை. போட்டோ ஷூட்டுக்காகத்தான். எத்தனை நாள்தான் பழைய கட்டடத்துலயே வச்சு போட்டோ எடுக்கிறதாம்.

RajiniKanth - பிரசாரத்தைத் தொடங்கியாச்சு..!
RajiniKanth - பிரசாரத்தைத் தொடங்கியாச்சு..!

twitter.com/HariprabuGuru

103 கிலோ தங்கத்தை காணுமுங்கய்யா.

சிபிஐ விசாரணைக்கு வேணும்னா உத்தரவு போடட்டுமா?

அய்யா, காணாமப் போனதே சிபிஐ ஆபீஸ்லதாங்கய்யா..

twitter.com/Vkarthik_puthur

“அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் வேல் யாத்திரை அமைந்துள்ளது” - நடிகை குஷ்பு!

குத்து டான்ஸ் போட்டும் திரும்பிப் பார்க்கலைன்னா எப்புடி..?!

Yuvan - #Valimai அப்டேட் ப்ளீஸ்
Yuvan - #Valimai அப்டேட் ப்ளீஸ்

twitter.com/poli_kaalai

நாட்ல என்ன பிரச்னை நடந்தாலும் விஜய் படத்துக்கு அப்டேட் விட்டா போதும்.. பாதிப் பேர் பிரச்னைய மறந்துட்டு அதக் கொண்டாடப் போய்டுவாங்க..

அப்போ மீதிப் பேரு?

அஜித் படத்துக்கு ஏன் அப்டேட் விடலன்னு போனி கபூர திட்டப் போய்டுவாங்க..

twitter.com/RahimGazzali

எங்கள் வாக்குகளை ரஜினி பிரிக்க மாட்டார்- ஹெச்.ராஜா.

இருந்தால்தானே பிரிக்க...?!

twitter.com/ramesh_twetz

பீரோல அடுக்கி வச்சிருக்க துணியெல்லாம் மடிக்கிறேன்னு கீழ இழுத்துப் போடுறாங்கன்னா வீட்ல வேற எந்த வேலையும் இல்லைன்னு அர்த்தம்...!

#மனைவி.

twitter.com/HAJAMYDEENNKS

வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது..

அரசாங்கம்தான் அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் ‘போராட்டத்திற்கு சீனா, பாகிஸ்தான் காரணம்’ என்கிறது!