Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

‘‘ஏம்பா, அய்யாதான் பொறுப்பாளர்கள் பணத்துக்கு மயங்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் அழுறே..?’’

facebook.com/Sowmya Ragavan

ஓடி வந்து ஏற முனைகையில் கிளம்பிச் செல்லும் பேருந்து, வாழ்வின் அத்தனை அவமானங்களையும் நினைவுபடுத்தி விடுகிறது.

twitter.com/Kozhiyaar

மனைவியிடம் நமக்காக ஏதாவது கேட்டால், ‘உண்மையைச் சொன்னா வருத்தப்படுவ, அதனால் பொய்யே சொல்றேன்’ என்கிற ரீதியிலேயே பதில் வரும்!

facebook.com/Meenamma Kayal

குரங்குக்குட்டிய நாய்கள் கடிச்சுக் கொன்னதுக்கு, நாய்க்குட்டிய குரங்குக உயரமான இடத்துக்குத் தூக்கிட்டுப் போயி கீழ வீசிக் கொன்னுருக்குக... மனிதன் குரங்கிலிருந்து பிரிந்தான் என்பதற்கு வலுவான ஆதாரம்!

Arun Vijay: நாட்டாமை குடும்பத்தார்..!
Arun Vijay: நாட்டாமை குடும்பத்தார்..!

twitter.com/star_nakshatra

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு எலெக்ட்ரீஷியன் ஆசை இருக்கும்போல... ஆனா என்னன்னா, அதுக ரிப்பேர் பாக்றேன் பேர்வழின்னு உருட்டுறதுல பாதிக்கு மேல உருப்படாமப்போயிரும்!

twitter.com/Thaadikkaran

ஜிம் ஓனர்: நியூ இயர் வேற வருது, நம்ம பசங்க ரெசல்யூஷன் வேற எடுத்திருப்பானுங்க. இப்போ ஏதாவது ஆஃபர் போட்டாகணுமே..!

twitter.com/mohanramko

கூட்டணியிலிருந்து யார் விலகினாலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடரும். -அண்ணாமலை

‘அதிமுகவே விலகினாலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி தொடரும்’னு சொல்றாரு!

twitter.com/saravankavi

‘‘ஏம்பா, அய்யாதான் பொறுப்பாளர்கள் பணத்துக்கு மயங்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரே... அப்புறம் ஏன் அழுறே..?’’

‘‘நான் இப்பத்தான் பொறுப்புக்கு வந்தேன்...’’

twitter.com/Greesedabba2

புது வருஷத்துக்கு எதாவது ரெசல்யூஷன் எடுக்கலாம்னு பார்த்தா, ஏற்கெனவே எல்லா நல்ல பழக்கமும் இருக்கு, புதுசா ஆரம்பிக்க ஒண்ணுமில்ல. சரி, ஏதாவது கெட்ட பழக்கத்தை விட்டொழிக்கலாம்னா, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. என்னதான் பண்றது... டெலிகேட் பொசிஷன்!

twitter.com/saravankavi

துன்பத்திலும் இன்பம் என்பது, பெட்ரோல் இல்லாமல் வண்டி பெட்ரோல் பங்க் அருகில் நின்றுவிடுவதுதான்!

twitter.com/HariprabuGuru

தெலுங்கு பேசும் தமிழ்ப் பையன் நான்: அல்லு அர்ஜுன்

தமிழ் பேசுற தமிழ்ப்பசங்க நாங்க. எங்களையே ‘வந்தேறி’ன்னுதான் சொல்றாங்க. போவியா..!

twitter.com/star_nakshatra

‘மொபைல் மாத்தும்போது உங்க நம்பர் டெலிட் ஆகிருச்சு’ என்பது... சிறந்த மொக்கையான சமாளிப்புதான்!

twitter.com/sankariofficial

திரையில் கலகலவென்று இருக்கும் காமெடி நடிகர்கள் நிஜத்தில் கடுகடுவென்றும்; கடுகடுவென்று இருக்கும் வில்லன் நடிகர்கள் நிஜத்தில் கலகலவென்றும் இருப்பதுதான் டிசைன்‌!

Radhika Apte: எல்லாமே ஸ்டைல்..!
Radhika Apte: எல்லாமே ஸ்டைல்..!

twitter.com/Lakshmivva1

விடைகளுக்குப் பரிணாமம் உண்டு; கேள்விகளுக்கோ கிளைகள் மட்டும்!

twitter.com/Kozhiyaar

பல சமயங்களில் நம்மை வாழ்க்கை பத்து ரூபாய் காயின் போலத்தான் நடத்துகிறது. பளபளன்னு இருக்கும், ஆனா செல்லுபடி ஆகாது!

twitter.com/manipmp

சோம்பேறித்தனத்தின் நாகரிக வெர்ஷன்தான் ‘பொறுமைசாலி!’

twitter.com/Greesedabba2

உ.பி வளர்ச்சியடையும்போது நாடு முன்னேறும்: மோடி

# இதுக்கு ‘நாடு முன்னேறாது’ன்னு நேரடியாவே சொல்லியிருக்கலாம் தெய்வமே...

twitter.com/Kannan_Twitz

பொய் சொல்றதுல எந்தப் பிரச்னையும் இல்ல, சொன்ன பொய்யவே ஞாபகம் வச்சி திரும்பச் சொல்லவேண்டி இருக்குறதுதான் பிரச்னையே!

twitter.com/Aruns212

வீட்டிற்கு வந்ததும் ‘சார்ஜ்’ எடுத்துக் கொள்கின்றன செல்போன்கள்.

twitter.com/Suyanalavaathi

நமக்கெல்லாம் நியூ இயர்க்குக் கிடைக்கிற ஒரே கிஃப்ட், அந்த ஓசி காலண்டர் மட்டும்தான்!

twitter.com/g_for_Guru

கத்திபாராவுல வெச்சிருக்குற உயிரெழுத்து களை இன்னும் ஒரு வாரத்துல கீழ தள்ளிடுவாங்கன்னு நினைக்கிறன். ‘அ’ மேல ஏறி போட்டோ எடுத்துக்கிறாங்க.

twitter.com/NameisSoni

தோழர் புருஷ்: பிரியாணிலயே ஏதாவது Innovative-வா பண்ணிக் குடேன்!

Me: உன்னோட மன தைரியத்த பாராட்டி, சோனு கொடுக்கக்கூடிய ஒரு அதிசயப் பொருள், பிரியாணிப் பாயசம்!

twitter.com/red2192

சில நாள்களுக்கு முன் மீன் விற்கும் ஒரு‌‌ பாட்டியைப் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் ஞாபகம் இருக்கிறதல்லவா? இதேபோல கருவாடு விற்ற பாட்டி ஒருவரின் கதை எனக்குத் தெரியும். வேதாரண்யம் இந்தியன் வங்கிக்கு மிக அருகில்தான் அந்தப் பாட்டி கருவாட்டுக் கூடை ஒன்றை வைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார். ஒவ்வொரு முறை அந்த வங்கி ஊழியர்கள் வெளியில் செல்லும்போதும் எழுந்து ஒரு வணக்கம் வைப்பார் பாட்டி. அந்த வங்கிக்கும் பாட்டிக்குமான உறவு இதுதான்.

புதிதாக வந்த ஊழியர் ஒருவர், அந்தப் பாட்டியை அழைத்துச்சென்று ஒரு வங்கிக்கணக்கைத் தொடங்கி பத்தாயிரம் ரூபாய் கடனும் பெற்றுத் தருகின்றார்‌. கருவாட்டுக் கூடை, கருவாட்டுக் ‘கடையாக’ பரிணாமம் அடைகிறது. பத்தாயிரம் ரூபாய் கடன் அடைந்த நேரத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் கடன், அந்தக் கடன் அடைந்த நேரத்தில் அந்தப் பாட்டியின் மகனுக்கு மீன்பிடி படகு வாங்குவதற்குக் கடன் என இந்தியன் வங்கிக்கும் அந்தப் பாட்டிக்குமான உறவு தொடர்ந்தது. மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கிளையின் முக்கியமான வாடிக்கையாளர்களை வைத்து ‘கஸ்டமர் மீட்’ நடத்தப்படுவது வழக்கம். வழக்கமாக கோடீஸ்வரர்கள், நிலச்சுவான்தாரர்கள், மில் ஓனர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் கூட்டம் நடந்த அன்று அந்த‌ப் பெரும் பணக்காரர்கள் உட்கார்ந்திருந்த அதே‌ வரிசையில் கருவாடு விற்ற பாட்டிக்கும் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது.

இது இந்தியன்‌ வங்கிக்கும் கருவாடு விற்ற பாட்டிக்குமான கதை. கருவாடு விற்ற பாட்டியை அழைத்து வந்து கணக்கு தொடங்கிய ஊழியர், அதிகாரி இருவருமே ரிசர்வேஷனால் வங்கி வேலை செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள். அதாவது, வங்கிகள் தேசியமயமானதால் கிடைத்த வாய்ப்பு. அதனால்தான் அவர்களால் இப்படிச் சிந்திக்க முடிந்தது. வங்கிகள் தனியார் மயம், இவர்களைப் போன்ற பாட்டிகளை வங்கிகளிலிருந்து நிரந்தரமாக வெளியில் தள்ளப் போகிறது, அன்று பேருந்திலிருந்து வெளியில் தள்ளியதைப் போல! வங்கி ஊழியர்கள்மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அது‌ நடந்துவிடாமல் இதுநாள் வரை தடுத்து வைத்திருப்பவர்கள் அவர்கள்தாம்.

twitter.com/Kozhiyaar

ஜெ. இறந்தபிறகு சின்னம்மாவைத் தலைமையேற்க விடப்பட்ட அறிக்கைகள் போலவே, உதயநிதியை அமைச்சராக்க அறிக்கைகள் விடப்பட்டுவருகின்றன!

facebook.com/Uma Mahalingam

மெச்சூரிட்டின்னா என்ன? நம்ம பிரச்னையே நாலு குப்பை லாரிய வச்சு அள்ளுற அளவுக்கு இருக்கும்போது, அடுத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதும்மா...

twitter.com/star_nakshatra

நமக்குன்னு போய் சேலை வாங்குறதவிட, வேற யாருக்காகவோ வாங்கப் போயிட்டு நமக்கு ஒரு சேலை எடுக்கறப்ப ஓவர் சந்தோஷமாதான் இருக்கு!

twitter.com/HariprabuGuru

‘சில்லறை இல்லை’ன்னு பிச்சைக்காரங்க கிட்ட சத்தமா சொன்ன நம்மளை, பஸ் கண்டக்டர்கள்கிட்ட பம்முனாப்புல சொல்ல வைக்குறதுக்குப் பேர்தான் கர்மா!

twitter.com/nandhu_twitts

நிலையானது என்று எதுவுமில்லை... வாட்ஸ் அப் ஸ்டேட்டஸே 24 மணி நேரத்தில் காணாமல் போயிடுது!

twitter.com/nesamithran

பாம்புகளைப்போல் தோலுரிக்கக் கற்றுக் கொண்டிருக்கலாம். பச்சோந்திகளைப்போல் நிறம் மாற்றிக்கொள்ள, குறைந்தபட்சம் மரங்களைப்போல் இலையுதிர்க்கவாவது பழகியிருக்கலாம். பாருங்கள், அரசருக்கு உங்கள் தோல் பிடிக்கவில்லை. எங்களுக்கும் வேறு வழியில்லை!

twitter.com/ComradeTalkies

யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமிப்பே இல்லை. ஆனால் கொளத்தூரில் எளிய மக்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு... இடித்துத் தள்ளு?!

Vikranth: இது சீசன் 2..!
Vikranth: இது சீசன் 2..!

twitter.com/Suyanalavaathi

கரன்ட் இல்லாதபோது வீட்ட பூட்டிட்டு வெளிய கிளம்பியதும்தான், லைட் ஸ்விச்ச ஆப் பண்ணினோமா, பேன் ஸ்விச்ச ஆப் பண்ணினோமான்னு இந்தப் பாழாப்போன மூளை யோசிச்சு நம்மள டென்ஷன் பண்ணும்!

twitter.com/saravankavi

இப்ப டைம்லூப்ல சிக்கி இருப்பது சாட்டை துரைமுருகன்தான்!

twitter.com/dhanalakshmirs

ஒரு திங்களைத் தொடங்க வேண்டியது மட்டும்தான் உங்கள் பொறுப்பு... மற்றபடி அதுவே உங்களை சனிக்கிழமையில் கொண்டுவந்து தள்ளிவிட்டுவிடும்.

twitter.com/JARA

சீமான் நெக்ஸ்ட்: இவனுங்க ராகுல் திராவிட்ம்பானுக. ஆனா நான் ராகுல் தமிழர்ம்பேன்...

twitter.com/spidey_spyy

இந்த இரவுக்குன்னு ஒரு குணம் இருக்கு. மறந்த எல்லாக் கவலைகளையும் ஒவ்வொண்ணா லிஸ்ட் எடுத்து பொறுமையா படிச்சுக் காட்டும், நாம கேக்கறமோ இல்லையோ!

facebook.com/Rk Rudhran

பல பெற்றோர்கள் என்னிடம், ‘‘பாப்பாக்குப் பதினெட்டு வயசாச்சு, சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்” என்று கவலைப்பட்டி ருக்கிறார்கள். அந்த ‘பாப்பா’ என்னிடம், ‘‘சார், நான் படிக்கணும்னு சொல்லுங்க” என்று தனியாக மன்றாடுவாள். பல பெண்களின் பெற்றோர், கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டிலேயே ‘‘இப்ப ஆரம்பிச்சா டிகிரி முடிக்கறதுக் குள்ள முடிச்சுடலாம்” என்றும், “நல்ல சம்பந்தம்... கல்யாணத்துக்கு அப்புறமும் படிக்க வைக்கிறேன்னு சொல்றாங்க” என்றும், பெரிய அளவில் படித்து, மிகச்சிறந்த வேலையில் முன்னுக்கு வரக்கூடிய பெண்களை ஆரம்பத்திலேயே முடக்கியிருக்கிறார்கள். ஒரு பெண் படிக்கவும், வேலையில் சேர்ந்து சுயமாய்ச் சம்பாதித்துத் தன் வாழ்வை நடத்திக் கொள்ள முடியும் எனும் நிலை வந்தால்தான், சுயவிருப் பத்தினாலோ சூழலின் நிர்ப்பந்தங் களினாலோ திருமணம் செய்து கொண்டாலும், சுயமரியாதையுடன் வாழ முடியும் எனும் நம்பிக்கை வரும். நம்பிக்கையில்லாமல் கனவுகளை மட்டும் சுமந்து செல்வது வாழ்க்கை யல்ல. 21 வயது வரை கல்யாணத்திற்காகக் காத்திருக்க முடியாதது காதலும் அல்ல. அந்த ‘சட்டரீதியான’ கட்டம் வரும் வரை காதலில் வாழ்வைத் தெளிவாகத் திட்டமிடத் தெரிந்தவர்கள், ஒன்றிணைந்து காத்திருப்பதும் என்னைப் பொருத்தவரை தவறும் அல்ல.