Published:Updated:

வலைபாயுதே

மீரா ஜாஸ்மின்
பிரீமியம் ஸ்டோரி
மீரா ஜாஸ்மின்

நீங்கள் ஹிஜாப் அணிவது உங்களுக்குக் கடுப்பாக இல்லையா எனக் கேட்பது பகுத்தறிவு.

வலைபாயுதே

நீங்கள் ஹிஜாப் அணிவது உங்களுக்குக் கடுப்பாக இல்லையா எனக் கேட்பது பகுத்தறிவு.

Published:Updated:
மீரா ஜாஸ்மின்
பிரீமியம் ஸ்டோரி
மீரா ஜாஸ்மின்

twitter.com/NaveenFilmmaker

மதத்துக்காக வருத்தப்படற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க்க வாழல சக இந்தியர்களே. நாம வருத்தப்படறதுக்கு நெறைய பிரச்சனை இருக்கு. நம்மையும் சக மனுசனா சமமா நடத்தி, நமக்கான மறுக்கப்பட்ட வாய்ப்புகள் கெடச்சு, மூணு வேல சோறு, கல்வி, சமத்துவம் அடஞ்ச பெறகு கடவுளுக்காகப் போராடலாம். #மனிதம்போற்று

facebook.com/இரா.செந்தில் கரிகாலன்

வாக்கிங், ரன்னிங்லாம் போறமாதிரி நினைச்சுக்கிட்டே தூங்கினா வரும் பாருங்க ஒரு தூக்கம், கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காது.

twitter.com/JamesStanly

அங்க இவ்ளோ கலவரம் நடக்கே... சி.எம் யாரு?

*பொம்மை

ஏன் அமைதியா இருக்காரு?

*அதான் சொன்னனே...

Aparna Balamurali: சேலை சூடிய மலரே!
Aparna Balamurali: சேலை சூடிய மலரே!

twitter.com/gpradeesh

படம் அறிவிப்பு, டைட்டில், பர்ஸ்ட் லுக், க்ரூ, பாட்டு, டீசர், டிரெயிலர்னு ஒவ்வொன்னுத்துக்கும் பொழுதன்னிக்கும் ஃபயர் விடுறானுக. படம் ரிலீசாகி 3 நாள்ல பெட்டிக்குள்ள போய்ருது... அடுத்த பட அறிவிப்பு... ரிப்பீட்டு. போர் அடிச்சுருச்சு.

twitter.com/narsimp

நீங்கள் ஹிஜாப் அணிவது உங்களுக்குக் கடுப்பாக இல்லையா எனக் கேட்பது பகுத்தறிவு.

நீங்கள் அணிவது எங்களுக்குக் கடுப்பாக இருக்கிறது என்பது மதவெறி.

twitter.com/Anvar_officia

காங்கிரஸ் சரியாகப் பணியாற்றியிருந்தால், எங்களுக்கு இந்த அளவு சுமை இருந்திருக்காது! - பிரதமர் மோடி.

ஆமா... ஒவ்வொண்ணையும் பேரம் பேசி விக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...

twitter.com/Thaadikkaran

கஷ்டமான நேரத்துல பெட்டியைத் திறந்து பாருன்னு வடிவேலு படத்துல சொன்ன மாதிரி, எப்பவெல்லாம் இந்தியா தோக்குதோ அப்ப வெல்லாம் ஒரு டீமை இந்தியாவுல இறக்கி விட்டு அந்த டீமை அடிச்சு கெத்து காமிக்குறாய்ங்க..!

twitter.com/asdbharathi

டிபன் பாக்ஸில் சாப்பாடு மிச்சம் இருந்தால் பிடிக்கலையோன்னு தோணுறதும், மிச்சம் இல்லைன்னா பத்தலையோன்னு தோணுறதும் அம்மாக்களின் டிசைன்.

twitter.com/RahimGazzali

ஏழைகளுக்காக உழைக்கும் எங்களை கோழைத்தனமாகத் தாக்க வேண்டாம்-அண்ணா மலை.

ஏழை, கோழை ரைமிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் எந்த ஏழைகளுக்காக உழைத் தீர்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

twitter.com/thoatta

அவனவன் தன் மாநிலம் உ.பி மாதிரி ஆகிடக்கூடாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கான்... இதுல இவனுங்களுக்கு உ.பி கேரளா மாதிரி வங்காளம் மாதிரியாகிட வேணாமாம்? உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா?

twitter.com/ItsJokker

ராமதாஸ் : மகனே, `காதல்’னு இன்னைக்கு ஒரு படம் பார்த்தேன். அருமையா இருக்கு... நீயும் பாரு.

லவ்பெல் ~ ஐயோ, நாம எதுக்கு அரசியல் பண்ண வந்தோம்ங்கிறதயே மறந்துட்டு இப்படி படத்தை ரிவியூ பண்ணிட்டு இருக்காரே..!

Meera Jasmine: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
Meera Jasmine: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

twitter.com/mekalapugazh

தமிழ்நாடு பெயர் மாற்றம் நடைபெறாதவரை...

அறிஞர் அண்ணாதான் தமிழகத்தை ஆளுவதாகப் பொருள். போலவே தமிழகத்தில் சாதிய மனநிலையில் வாழும் உயர்சாதியினர் தங்களது பெயருக்குப் பின் தங்களது சாதிப் பெயரை இணைத்துக்கொள்ளத் தயங்கும்வரை இது தந்தை பெரியார் வழிமொழிந்த திராவிடச் சிந்தனை மண்தான்.

twitter.com/selvu

“அவுங்க திட்டுவாங்க, இவுங்க திட்டுவாங்க, வருமானம் கம்மியா வருதுன்னு எதையும் கண்டுக்காம உனக்குப் பிடிச்ச வேலையைச் செய். என்னைக்காச்சும் ஒருநாள் பெரிய ஆளா வருவ. பிடிச்ச வேலையைச் செய்யுற திருப்திக்கு நிகர் வேற எதுவும் இல்ல.”

“எனக்கு சும்மா இருக்கத்தான் பிடிச்சிருக்கே.”

twitter.com/manipmp

ஐம்பது சேனலை மாற்றிய பிறகுதான் ஒரு சேனலை மன அமைதியுடன் பார்க்க முடிகிறது.

twitter.com/balebalu

ஒமைக்ரானுக்கு அடுத்து வரும் கொரோனாத் திரிபுகள் தீவிர தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.

இனிமே எந்தத் திரிபு வந்தாலும் ‘டோலோ’ இருக்கு பாத்துக்குவோம். கொஞ்ச நாள் அனத்தாம சும்மா இருங்க!

twitter.com/RahimGazzali

பெட்ரோல் விலையை ஏன் மூணு மாசமா உயர்த்தல?

வடஇந்தியாவுல தேர்தல் முடியட்டும்னு காத்திருக்கோம்!