Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

நாம சலிச்சிட்டே போற வேலை இன்னொருத்தருக்கு அவ்வளவு அவசியமா இருக்கறது தெரிஞ்சா அத்தனை சலிச்சிக்க மாட்டோம்ல?!

வலைபாயுதே

நாம சலிச்சிட்டே போற வேலை இன்னொருத்தருக்கு அவ்வளவு அவசியமா இருக்கறது தெரிஞ்சா அத்தனை சலிச்சிக்க மாட்டோம்ல?!

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/mohanramko

ரஜினி கட்சி ஆரம்பிக்கலைன்னா என்ன? என்கிட்ட வாங்க, என்கிட்டேயும் கட்சி இருக்கு... அப்பா எஸ்ஏசி மக்கள் இயக்கம்

twitter.com/Kannan_Twitz

நாலு பேரோட நல்லதுக்கு வாழலாம் தப்பில்ல, நாலு பேரோட அபிப்ராயத்துக் காக வாழ்றதெல்லாம் ஆகச்சிறந்த அரைவேக்காட்டுத்தனம்!

twitter.com/tparaval

Amitabh - I AM BACK
Amitabh - I AM BACK

இந்த சிவாங்கி ஒரு சின்னத்தம்பி பிரபு மாதிரி... பேசுறப்ப வெகுளி, பாடுறப்போ வேற லெவல்.

twitter.com/manipmp

இனி ‘சிசேரியன் செய்ய சிறந்த நேரம்’னு காலண்டரில் அச்சடித்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

twitter.com/HariprabuGuru

“அதிமுகவைத் தாயில்லாத பிள்ளைகளாக நினைத்து மக்கள் ஆதரிக்க வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு.

ஏற்கெனவே அப்படித்தான போற வர்றவன்லாம் அடிச்சுக்கிட்டு இருக்கான்.

twitter.com/prabhu65290

SriDivya - ஊதா கலர் வானம்!
SriDivya - ஊதா கலர் வானம்!

திருமங்கலம் பார்முலா என்பது எங்களது கடினமான உழைப்பு - மு.க‌.அழகிரி

ஓட்டுக்குக் காசு குடுப்பது எல்லாம் பெருமையா அண்ணே?

witter.com/drkvm

மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் - கமல்ஹாசன்

# அது கிடக்கட்டும்... கழுத. BIGGBOSSல ரம்யா பாண்டியன்தானே winner!

twitter.com/KLAKSHM14

Dhanush - ரவுடி பேபிகள்!
Dhanush - ரவுடி பேபிகள்!

தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும் - வைகோ.

இப்பத்தான் ஸ்டாலினுக்கு பயமே வரும் போல..?!

twitter.com/Vkarthik_puthur

வதந்திகளை நம்ப வேண்டாம் - பிரதமர் மோடி!

அதான் ஜீ... நீங்க எது சொன்னாலும் நாங்க நம்பறதே இல்லை.

twitter.com/RavikumarMGR

தமிழ் சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சிகள் 60% கல்யாண மண்டபத் திலும் 30% ரயில்வே நிலையங்களிலும் தான் நடந்திருக்கும்.

twitter.com/shivaas_twitz

Dhruv - அடுத்த நம்பிக்கை!
Dhruv - அடுத்த நம்பிக்கை!

குளிர்காலத்துல அடிக்கிற அலாரம், விலகியிருக்குற போர்வையை நல்லா இழுத்துப் போத்திக்க யூஸ் ஆகுது!

twitter.com/mrithulaM

நாம சலிச்சிட்டே போற வேலை இன்னொருத்தருக்கு அவ்வளவு அவசியமா இருக்கறது தெரிஞ்சா அத்தனை சலிச்சிக்க மாட்டோம்ல?!

twitter.com/IamUzhavan

ரசத்தை ஊற்றி சாதத்தைப் பிசையும்போது இலை கிழிவதெல்லாம் இந்த ஆண்டின் சோகமோ, சாபமோ அல்ல.

twitter.com/amuduarattai

ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தை இழந்தார் முகேஷ் அம்பானி.

இதுக்கு.. இனி என்னென்ன பர்னிச்சர் உடைக்கப்போறாரோ மோடி.

twitter.com/kumarfaculty

மனைவியாரின் கேள்விகள் நீளமானதாக இருக்கும். பதில்கள் ‘ம்’ என்றிருக்கும்...!

twitter.com/krishnaskyblue

Kanimozhi - இரு தலைவர்களின் மடியில்
Kanimozhi - இரு தலைவர்களின் மடியில்

திண்டுக்கல் சீனிவாசன்: நாங்க என்ன ஏசுவை சுட்ட கோட்ஸே வாரிசா?

பிளடி ராஸ்கல்... காந்தியதான் சுட்டுக் கொன்னிருக்கன்னு பார்த்தா ஏசுவையும் சுட்டிருக்க?!

twitter.com/Kozhiyaar

சொந்த வீடு, சொந்த கார் என்பதெல்லாம் கடனை அடைத்த பின்பே உண்மையாகின்றன!

twitter.com/saravankavi

பெண்கள்மீதான தாக்குதலை பா.ஜ.க வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது - எல்.முருகன்

பின்னே, வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தா தாக்குதல் நடத்த முடியுமா?

facebook.com/vinayaga.murugan.7

Shivangi - ஓம் லாபம்..!
Shivangi - ஓம் லாபம்..!

புதிய தலைமுறையில் கமலின் நேர்காணல் பார்த்தேன். நீங்க ஒருத்தர்ட்ட ‘காலையில என்ன சாப்பிட்டீங்க’ என்று கேட்டால், ‘இட்லி’ இல்லாட்டி ‘பொங்கல்’ன்னு சொல்வார். ‘கிண்டிக்கு எப்படிங்க போகணும்’ என்று கேட்டால், ‘நேரா போய் லெப்ட்ல திரும்பிப் போங்க’ன்னு சொல்வார். ஆனால் கமல் என்ன சொல்வார் தெரியுமா? ‘நான் காலையில் என்ன சாப்பிட்டேன் என்பது முக்கியமில்லை. நேற்று இரவு என்ன சாப்பிட்டேன், நாளை காலை என்ன சாப்பிடப்போகிறேன் என்பதுதான் வரலாறு. கிண்டிக்குச் செல்ல ஆயிரம் வழிகள். ஆனால், அதில் உங்களுக்குத் தேவையான வழியைத் தேர்ந்தெடுத்துச் செல்வதே புத்திசாலித்தனம்’ என்பார். இப்பத்தான் புரியுது... கமல் ஏன் பாமர மக்கள் அதிகம் இல்லாத மெயின் ரோட்டில மட்டும் பிரசாரம் செஞ்சுட்டுப்போறார்னு!

twitter.com/nandhu_twitts

குழந்தைகள் புது வருட காலண்டரில் விடுமுறை நாள்களைத் தேடவில்லை என்பது நிதர்சனம்..!

twitter.com/kalaiyinkural

சாம்பார் பாக்கெட்ட கொட்டாம இருக்க கட்டிக் குடுக்கணும், பிரிக்காம இருக்க கட்டிக் குடுக்கக் கூடாது... பிரிக்கிறதுக்குள்ள தோசை காலியாகிடுது. பேச்சிலர்ஸ் பாவம்டா!

twitter.com/parveenyunus

அழுக்கு ஜீன்ஸ் பேன்ட் மூலமும் கொரோனா பரவுகிறது எனச் செய்தி வராத வரை யாரும் அதைத் துவைக்கப் போவதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism