Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வீட்டில் இருக்கும் சாமி படங்களை திரை இட்டு மூடினால் அவருக்கு வீட்டில் நடப்பது எதுவும் தெரியாது என நினைக்கும் அந்த மனசு இருக்கே..

facebook.com/revathy.ravikanth?

ஒரு கிலோ அவரைக்காய், அரைக் கிலோ பீன்ஸ், கால் கிலோ நீள பச்ச மிளகாய் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி ஒரு கவர்ல போட்டுக் குடுத்துப் பிரிக்கச் சொன்னா, எப்பேர்ப்பட்ட தீவிரவாதியும் திருந்திடுவான்!

Keerthy Suresh:  ஜாமூன் தின்ன ஆசையா..?
Keerthy Suresh: ஜாமூன் தின்ன ஆசையா..?

twitter.com/saysatheesh

வீட்டில் இருக்கும் சாமி படங்களை திரை இட்டு மூடினால் அவருக்கு வீட்டில் நடப்பது எதுவும் தெரியாது என நினைக்கும் அந்த மனசு இருக்கே... அதுதான் சார் நாத்திகத்தின் முதல் படி. இவங்கதான் கடவுளை ‘அவர் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை’ என நினைக்க வைப்பவர்கள்.

Mohanlal - விஷயம் தெரியுமா..!
Mohanlal - விஷயம் தெரியுமா..!

twitter.com/manipmp

என்ன அண்ணாமலை... கொரோனானு பயந்திட்டியா? நான்தான் பறவைக்காய்ச்சலு

twitter.com/Aruns212

நமக்குப் பிடித்த ஆடையை அணிய முடியாமல் போகும்போதுதான் ‘வாக்கிங்’ போக வேண்டும் என்ற நினைப்பே வருகிறது.

twitter.com/mekalapugazh

எல்லா நாடுகளிலும் பகுத்தறிவாளர்கள்தான் சிறுபான்மையினர்.

twitter.com/kumarfaculty

டூவீலரில் எடுக்காத ஸ்டேண்ட், பகலில் அணைக்காத லைட்... நிறைய சமூக சேவகர்களை உருவாக்கிவிடுகிறது!

twitter.com/holyhemp_

Privilegeஓ, கடின உழைப்போ, முன்னேறினதுக்கு அப்புறம் நமக்குக் கீழ இருக்கிறவன மேல தூக்கி விட நினைக்காம, ‘அவன் அங்க இருந்தாதான் நாம இங்க சுகமா இருக்க முடியும்’னு நினைக்குற ஜந்துகள் திருந்தினாலொழிய இங்க எதுவும் நடக்காது.

Dhoni: அடுத்தது.. அதே தான்..!
Dhoni: அடுத்தது.. அதே தான்..!

twitter.com/HariprabuGuru

உனக்கு, ‘அகர முதல ஆத்திசூடியில வருது’ன்னு சொன்னாங்களேங்குற கவலை. எனக்கு, ‘அதை எழுதியது விஜய் ஆன்டனி’ன்னு சொல்லலையேங்குற சந்தோஷம்.

twitter.com/krishnaskyblue

தமிழ்நாட்டின் ஆபிரகாம் லிங்கனாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் - பொள்ளாச்சி ஜெயராமன்

ஆபிரகாம் லிங்கன் - நான் என்ன வெள்ளை மாளிகை, பெண்டகன் கான்ட்ராக்ட என் சம்பந்திக்கா கொடுத்தேன்?

North Korea President:  ஆனாலும் ஓவர் நக்கல்ப்பா..!
North Korea President: ஆனாலும் ஓவர் நக்கல்ப்பா..!

twitter.com/happyselvan

‘‘வாட்ஸப், பேஸ்புக் எல்லாம் அகற்றிவிட்டேன் சார். எனக்கு பிரைவசிதான் முக்கியம்.’’

‘‘சூப்பர் சார். சரி. பையன் ஏதோ டிகிரில சேர்ந்துட்டதா சொன்னீங்களே... என்ன கோர்ஸ்?’’ ‘‘டேட்டா மைனிங்!”

twitter.com/kumarfaculty

கூண்டோடு கைலாசம் போனது நித்யானந்தாதான்...!