facebook.com/jeyachandra.hashmi
‘கிளாடியேட்டர்' படத்துல ஒரு சூப்பர் மேட்டர் வரும். ரஸல் க்ரவ்/மேக்ஸிமஸ் அந்தப் பெரிய கொலோசியத்துல சண்டை போடப்போறதுக்கு முன்னாடி, பழைய க்ளாடியேட்டரான அவரோட ட்ரெய்னர் ஒன்னு சொல்லுவாரு.
‘‘நீ அங்க போய் அடிச்சு ஜெயிக்கிறது மட்டும் முக்கியம் இல்லை. மக்கள என்டர்டெய்ன் பண்ணி ஜெயிக்கணும். அப்பதான் அவங்க உன்ன விரும்புவாங்க''ன்னு சொல்வாரு. மேக்ஸிமஸும் அதே மாதிரி ஆக்ரோஷமா சண்டை போடறதோட மட்டுமல்லாம, மக்கள செமையா என்டர்டெய்ன் பண்ணி அவங்களோட ஃபேவரைட் க்ளாடியேட்டரா மாறிடுவாரு. ஒரு கட்டத்துல அதுதான் அவரைக் காப்பாத்தும். வேற வழியே இல்லாம மன்னரை இறங்கி வந்து அவர்கூட சண்டை போட வைக்கும்.
ரிஷப் பண்ட் ஃபாலோ பண்றது அப்படியே இந்த ஸ்டைலதான்னு நினைக்கிறேன். நின்னு அடிச்சு மேட்ச் வின் பண்றது மட்டும் அவரோட நோக்கமா தெரில. ஏதோ ஒரு கட்டத்துல பொறி பறக்க வச்சு, பாக்குறவன கத்த வைக்குறதுதான் பண்ட்டோட டார்கெட்டா இருக்கு. அதுவும் ரொம்ப இக்கட்டான சூழலில் நின்னு ஆடி கடைசில இப்படி கொளுத்திப் போடறதெல்லாம் செம! ரிஷப் பண்ட் - ஒரு வெறிபுடிச்ச, தரமான, என்டர்டெய்னிங்கான வீரன்!

twitter.com/TheRaavanaa
நாலு நாளாச்சு புள்ள இறந்து! நாலு நாளா நீதி கேட்டுப் போராடுறாங்க, யார் காதுலயும் விழல. இன்னைக்குக் கலவரம் ஆனதும் சி.எம் வரைக்கும் பதறிட்டு நலம் விசாரிக்காரு. மக்களுக்கான ஆட்சிதான், ஆச்சரியம் இல்லை!
twitter.com/Suyanalavaathi
இன்னமும் OTP, பேங்கிங் மெசேஜ் மட்டும் text message-ல வரலன்னா, text message என்னைக்கோ அழிஞ்சிருக்கும்!
twitter.com/altappu
பத்து வருடங்கள் முன்புவரை ஒரு சிலிண்டர் இன்றைய விலைக்கு வாங்க நீங்கள் 35$ வரை தர வேண்டியிருக்கும். இன்று அதே சிலிண்டரை நீங்கள் 18$க்கு வாங்கிவிடலாம். கிட்டத்தட்ட 15$ லாபம். இதுபோல அத்தனை பொருள்களின் விலையையுமே டாலரில் குறைத்துள்ளார் நம்ம ஜி. மாஸ்டர் ஸ்ட்ரோக்!
twitter.com/iam_nithankrish
முதல்வர் படுத்துட்டா மொத்த அரசு இயந்திரமும் படுத்துரும் போல! கலவரம் நடக்குற வரை மாநில உளவுத்துறை என்ன பண்ணிச்சு? பிரச்னை நடந்து 3 நாளா அமைச்சர்கள் வாயவே திறக்கல. அனிதாவுக்காகப் போராடுன அமைச்சர்கள் யாரும் இங்க களத்துக்குப் போகல?!
twitter.com/Kozhiyaar
‘கோபம்லாம் இல்லை, வருத்தம்' என்பதே உச்சக்கட்ட அன்பின் வெளிப்பாடுதான்!
twitter.com/altappu
நேற்று அதிபர், இன்று அகதி... கோத்தபய ராஜபக்ஷே ஒரு பிட் காய்ன்!
twitter.com/mohanramko
அவரு இவரைக் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு. இவரு அவரைக் கட்சியிலிருந்து நீக்கிட்டாரு. ரெண்டு பேரையும் சின்னம்மா நீக்கிட்டாங்க. ஆனா சின்னம்மாவைக் கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கிட்டாங்க...
twitter.com/RavikumarMGR
உண்மையான சிபில் ஸ்கோர் நம்ம உறவினர்கள் & நண்பர்கள்தான்! அவசரம்னு ஆயிரம் ரூபாய் கேட்டா உடனே குடுக்குறாங்களா, இல்ல யோசிக்கிறாங்களான்னு பார்த்தே நம்ம மதிப்பைக் கண்டுபிடிச்சுரலாம்!
twitter.com/Anvar_officia
இனிமே வாட்ஸ்அப்பில் ‘Voice Status'ன்னு வாய்ஸ் நோட்டுகளை ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ளலாமாம். இனிமே இவனுங்க காலை வணக்கம் ஆரம்பிச்சி இரவு வணக்கம் வரை பேசியே வைப்பானுங்களே.
twitter.com/Thaadikkaran
‘‘புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களைக் கட்சியை விட்டு நீக்குகிறோம்...''
‘‘யோவ், அந்தம்மா இறந்துட்டாங்க!''
‘‘மன்னிச்சிருய்யா, டெய்லி கட்சியை விட்டு நீக்குற லிஸ்ட் அனுப்பிட்டு இன்னைக்கு ஏதும் இல்லேன்னதும் கை நமநமங்குது...''

facebook.com/Bapeen Leo Joseph
சரி, நீங்க தடை பண்ணின எந்த வார்த்தையவும் பேச மாட்டோம். அதேமாதிரி பாகிஸ்தான், ஏழைத்தாயின் மகன், டீ விற்றேன், வெளிநாட்டு சதி செய்கிறார்கள், முதலைக்குட்டி, புதிய இந்தியா, நேரு, காங்கிரஸ், உலகமே உற்று நோக்குகிறது, இது எதையும் பயன்படுத்தாம ஒரு 5 நிமிஷம் பேசுங்க பார்க்கலாம்... முக்கியமா கண்ணீர் விடக்கூடாது!
twitter.com/Sabarish_twittz
யாரோ எப்படியோ போயிட்டுப்போறாங்கன்னு நினைச்சு இருக்கும்போதுதான் நம்மை நோக்கிப் பல பிரச்னைகள் வரும்...
twitter.com/Suyanalavaathi
‘‘நீங்க நினைக்கிறதுக்கு ஆப்போசிட்டா எல்லாமே நடக்குதா..?''
‘‘அட, ஆமாப்பா! எப்படி கரெக்டா சொல்லுற..?''
‘‘எனக்கும் அப்படித்தான் நடக்குது. ஒருவேளை உங்களுக்கு மட்டும் நினைக்கிறது நடக்குதோன்னு பயந்துட்டேன்!''
twitter.com/Kozhiyaar
நம்மகூட இருக்கேன்னு வீட்டில் சொல்லிட்டு வந்த நண்பன் ரொம்ப பிரச்னை பண்ணிட்டே இருக்கானா? சத்தம் இல்லாமல் அவன் மனைவிக்கு போனைப் போட்டு ‘வரேன்னு சொன்னான் இன்னும் வரலையே, எங்க இருக்கான்னு தெரியுமா?'ன்னு கேட்டு போனை வச்சிட்டா போதும். அதுக்கு மேல நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டான்!
twitter.com/sherlockveedu
‘குணா' படத்த மொத மொதல்ல பாக்கறப்ப வெறும் குருவி செத்ததுக்கா இப்பிடி மூர்க்கமாவுறான் மெண்டல் பயனு தோணுச்சு. Then life happened. கொஞ்சம் வயசும் அனுபவமும் அடிகளும் வலிகளும் சேந்தப்புறந்தான் அது ‘வெறுங்குருவி இல்ல'ன்னு புரிஞ்சது. அது அவன் வாழ்க்கையில அப்ப இருந்த ஒரே பற்று. Life saver. இன்மைக்கும் இருண்மைக்கும் நடுவுல ஊடாடிட்டிருக்க வாழ்க்கைல ஒவ்வொரு நாளையும் கடத்தவும் அடுத்த நாளை எதிர்நோக்கவும் அவன இணைச்சு வச்சிருந்த ஒற்றைச் சரடு. அது இல்லன்னு ஆனதும் அவன் வாழ்க்கை சமநிலைய இழக்குது. இழந்ததும் அதுக்குக் காரணமானவங்கள நிர்மூலப்படுத்த அவனத் தள்ளுது.
யோசிச்சுப் பாத்தா லைஃப்ல எல்லாரும் யாரையாச்சும் எதையாச்சும் பற்றிக்கொண்டுதான் வாழ்க்கைய கடத்துறோம். பற்றியிருத்தல் இயற்கையின் விதி. எல்லாம் இருப்பவர்களுக்கு பிரச்னை இல்ல. எதுவுமே இல்லாதவங்க நிலை பரிதாபம். அவங்களுக்குத் துணை ஒரு கிழிஞ்ச போட்டோவோ, தெரியாத நபர்ட்டருந்து கிடைக்கற ஒரு சிறு புன்னகையோ, செல்லாத ரூபா நோட்டோ, திரும்பக் கிடைக்காத நினைவுகளோ, தழும்புகளோ, வலியோ, மதுவோ, வேற எதுவோ! ‘கைதி'ல குத்துயிரா கெடக்குற டில்லிய எழ வெக்கிறது அந்தச் சின்னக் கம்மல் ஒடைக்கப்படுறதுதான். அவனோட மொத்த வாழ்க்கைக்குமான ஒற்றை நம்பிக்கையா இருந்தது அந்தக் கம்மல். வெளிய இருந்து பாக்கறவங்களுக்கு அது வெறும் கம்மல்தான். ஆனா அவனுக்கு அது வாழ்க்க. இப்டி எல்லாருக்கும் ஒரு கம்மல் இருக்கும்.
twitter.com/Lakshmivva1
காலத்தால் உருமாறும் நம்பிக்கைகள் ‘சரி, தவறு' என்ற இரண்டிலிருந்து பிரிந்துபோனவையே.
twitter.com/manipmp
வாழ்க்கையில் பெருமைக் குரிய தருணம் என்னான்னா... நான் ஒன்னுமே தெரியாம எக்ஸாம் எழுதும்போது டீச்சர் சொல்வாங்க, ‘உன் பேப்பரை மறைச்சி எழுது, பின்னால இருக்குறவன் உன் பேப்பரைப் பாக்குறான்'னு!
twitter.com/RealAravind36
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் 5,000 அபராதம் - மத்திய அரசு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாமல் வெளிநாடு தப்பிச்சென்ற விஜய்மல்லையாவுக்கு ரூ.2000 அபராதம் - உச்ச நீதிமன்றம்

twitter.com/amuduaratta
ஏதாவது வண்டியை மோதி விடும் நிலைக்கு வரும்போது, தனது வண்டியின் பிரேக்கைப் பிடிப்பதற்கு பதில், இரு கண்களையும் மூடிக்கொண்டு கடவுளை அழைத்தால் வண்டி மோதாமல் நின்றுவிடும் என்பது பல பெண்களின் நம்பிக்கைகளில் ஒன்று.
twitter.com/saravankavi
உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் பந்தேல்கண்ட் விரைவுச்சாலையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
# அந்த ஈரவெங்காயமெல்லாம் வேணாம். அங்க இருக்குற குப்பையை அள்ளி சுத்தம் பண்ணுன மாதிரி போட்டோ எடுத்தாரா, இல்லையா? அத மட்டும் சொல்லு!
twitter.com/VemaIism
‘‘மாணவி மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடப் போனியே... கிடைச்சுதா?!''
‘‘கிடைச்சது...''
‘‘என்னது?!''
‘‘ரெண்டு பெஞ்சு... நாலு டியூப் லைட்டு!''
twitter.com/Kozhiyaar
பெற்றோரின் ஒரு நாளின் பாதி சக்தி, குழந்தையை எழுப்பிப் பள்ளிக்கு அனுப்புவதிலேயே வடிந்து விடுகிறது!
facebook.com/ramanujam.govindan
நாஸா விஞ்ஞானிகள் உயிரைக் கொடுத்து பிரபஞ்சத்தின் புகைப்படத்தை எடுத்திருக்கின்றனர். நாமோ அதை வைத்து, ‘பிள்ளையார்பட்டிதானே நடுவில், ஓரமாய் இருப்பது திருநள்ளாறுதானே?' என்று கேட்டும், அந்தப் படத்தைப் பின்னணியாக வைத்து ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்' என மஞ்சள் எழுத்தில் டைட்டில் வைத்து மீம்ஸ் போட்டும், ‘அன்பே! பல கோடி ஒளியாண்டு தொலைவிலுள்ள நட்சத்திரங்களின் புகைப்படங்களைக்கூட அனுப்புகின்றனர். பத்துத் தெரு தள்ளியிருக்கும் நீ உன் செல்பியை அனுப்ப மாட்டாயா?' எனக் கவிதை எழுதியும் விளையாடிக்கொண்டிருக்கிறோம்.
ஹ்யூமன்ஸாடா நாமெல்லாம்?!
twitter.com/krishnaskyblue
எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினி
# வேணாம்... ஜெயிலர் பட புரொமோஷனுக்கு நாங்கதான் கிடைச்சோமா?

twitter.com/RavikumarMGR
நண்பரின் வீட்டில் ஒரு கல்யாண வீடியோ பார்த்தேன். பந்தியில் சாப்பிட்டவர்களில் 100க்கு 10 பேர் எல்லா அயிட்டங்களும் பரிமாறிய பிறகு இலையை ஒரு போட்டோ, இலையோடு சேர்த்து ஒரு செல்ஃபி எடுத்த பிறகுதான் சோற்றில் கையை வைக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் இது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிடும்போல!
facebook.com/Ram Vasanth
ஆதியிலே எல்லா சேல்ஸ் மேனேஜர்களும் உண்மை பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் ppt வந்தது.
twitter.com/Anvar_officia
திங்கட்கிழமை காலைல வேலையிடத்துக்கு சுறுசுறுப்புடன் சிரிச்ச முகத்தோட ஒருத்தர் வர்றார்னா, அது அந்தக் கம்பெனி முதலாளியாதான் இருக்கணும்!