twitter.com/FareethSபொறுமையாக இருக்கத்தான் தைரியம் வேண்டும், மத்தபடி கோபம் நாய்க்குக் கூட வரும்.
twitter.com/GreeseDabba2
அலுவலகத்திலோ, உறவு வட்டத்திலோ உங்களைப் பாராட்டுகிறார்களா? அப்படியென்றால், ஏதோ ஏமாந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
twitter.com/The_69_Percentலவ் படம் பாத்துட்டு நமக்கு யாரும் இல்லனு ஃபீல் பண்றத விட, Conjuring பாத்துட்டு யாரோ கூட இருக்காங்கனு ஃபீல் பண்றதே மேல்!
twitter.com/__BoyHasNoName/‘நாம இல்லனா கம்பெனி நடத்த முடியாது’, ‘நாம இல்லன்னா இவளுக்கு/இவனுக்கு இன்னொருத்தர் கிடைக்கமாட்டாங்க’னு நம்புறதெல்லாம் ஓவர் கான்ஃபிடென்ஸ். யார் போனாலும் ரீப்ளேஸ்மென்ட் உண்டு இங்க!

twitter.com/ChainTweter
அளவோடு இருந்தாலும் நஞ்சு அமிர்தமாவதில்லை...
twitter.com/Drgsivaramanமூன்றாம் அலை குறித்த உலகத் தரவுகள் உலுக்குகின்றன. பிரேசில் மரணங்கள் ஐந்து லட்சத்தைத் தாண்டி நிற்கிறது. 23 ஆப்பிரிக்க நாடுகளில் 2ம் அலையைவிட 3ம் அலையின் தாக்கமும் மரணமும் அதிகமாம். இங்கே பெருமழைக்கிடையே சனி இரவு, நெரிசலாய், பலரும் தாடையில் முகக்கவசத்துடன்! அவசர அவசியத் தேவை, கூடுதல் அக்கறை!
twitter.com/mekalapugazh
அடுத்தவனின் இழப்பில்/மரணத்தில் கர்மாவை இணைத்துப் பேசுபவன்...அக்மார்க் அயோக்கியன்.
twitter.com/HariprabuGuru
ஆடி மாசம் பிரிச்சு வைக்குறதாலதான் ஜூன் மாசத்துல நிறைய பிறந்த நாள் வருது. நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்.
www.facebook.com/vidhya.muthusamyதிரும்புதல் பற்றிய பிரக்ஞை இல்லாத பறத்தல்தான் சுதந்திரம்.

twitter.com/Sunandhaspeaks
ஆயிரம் களவு யுக்திகளோடு மக்களாட்சி எதற்கு? சொந்த நாட்டு மக்களை, ஊடகவியலாளர்களை எதிரிகள் போல் உளவுப்புனைவில் சிக்கவைக்கும் அரசு மக்களுக்கான அரசா? அரசியல் பிழைப் போர்க்கு அறம் கூற்றாகட்டும்.
twitter.com/Parithiist
மக்கள்னா ஏதோ ஒரு நடிகருக்கு ரசிகரா இருக்கணும்னு கட்டாயம் இல்லை. சினிமா கருத்துகளாலதான் ஆளப்படணும். அத தாண்டி பிம்பங்கள் ஆண்டா அது ஒருநாளும் நல்லதுக்கில்ல.இந்த தலைமுறை நடிகர்களோட அது முடியணும்.
twitter.com/saravankavi என்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பிரமிப்பாக உள்ளது - சசிகலா # சிறைக்குள் இருக்கும்போதே ஷாப்பிங்லாம் கூட போக முடியும்னு நெனைச்சா பிரமிப்பாதான் இருக்கும்..
twitter.com/RajaAnvar_Offic
நமக்கு எந்த நேரத்துல என்ன பிரச்னைகளைத் தருவாங்கன்னு சொல்ல முடியாத இரண்டு பேர்...
சொந்த கார்களும், சொந்தக்காரர்களும் தான்!
twitter.com/Vkarthik_puthur
கொங்குநாடு என்பது தட்டச்சுப்பிழை - எல்.முருகன்.
# நல்லவேளை, ‘அட்மின்’ செய்த பிழைன்னு சொல்லாம விட்டீங்களே?!
twitter.com/ramesh_twetz
வாழ்க்கையில ‘திரும்பி’ பார்க்க முடியாத வலின்னா, அது கழுத்து வலி தான்!
twitter.com/saravankavi
யார் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் 2026ல் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை
# அப்ப கூட்டணில இருக்குற அதிமுக?
அது அவ்ளோதான்...!
twitter.com/teakkadai1
எந்த சம்பளத்திலும் குடும்பம் நடத்தலாம். சரி தான். ஆனா நான் ஏன் ராத்திரி பன்னெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குப் போகணும் என்பதே தெளிவான பெண்களின் எண்ணம். அது சரி தானே?
twitter.com/tparavalவெங்கடேஷ் நடிச்ச தெலுங்குப் படத்தை, தமிழ்ல ‘யாரடி நீ மோகினி’ன்னு ரீமேக் பண்ணி நடிச்சது தனுஷ். இப்ப தனுஷோட அசுரனை தெலுங்குல ரீமேக் பண்ணி நடிக்கிறாரு வெங்கடேஷ்... காலம் எவ்ளோ வேகமா சுழலுது பாத்தீங்களா?
twitter.com/skpkarunaபொதுவாவே இந்திய சினிமாவில் ஓர் அபத்தம் தொடர்ந்து நடந்துகிட்டு இருக்கு. அது போலீசுக்கு பயந்து மரணத்தை மறைக்கும் வேலைகள். இந்தப் படத்திலும் அதே அபத்தம்தான்.
ஒரு வீட்டுக்குள் போய் குடும்பத் தலைவியை வில்லன் மிரட்டும்போது தவறுதலா அவன் செத்துட்டா, அது கொலை அல்ல; விபத்துதான். போலீஸ் அப்படித்தான் பார்க்கும். ‘பாபநாசம்’ படத்தில் கூட அந்தப் பையன் செத்த பிறகு அம்மாவும் மகளும் போலீஸுக்கு தகவல் சொல்லி இருந்தால் கேஸ். படம் இரண்டுமே அங்கேயே க்ளோஸ். அதேபோலதான், கார் ஓட்டும்போது மோதி யாராவது இறந்துட்டா, அதுக்குப் பயந்து டிரைவரை ஆள் மாறாட்டம் செய்வது போல பழைய படக் கதைகள் வரும். இதெல்லாம் பார்த்த மக்கள், ‘விபத்து நடந்து விட்டால் டிரைவரை தூக்கில் போட்டுவிடுவார்கள்’ என நம்பிக் கொண்டிருந்தனர். நிஜ வாழ்வில் இப்படி எந்த அசம்பாவிதம் நடந்தாலும் தயங்காமல் போலீஸை அழையுங்கள். சட்டத்தை விட நண்பன் வேறில்லை.
twitter.com/RajaAnvar_Officஆடியோல தொடங்கி வீடியோல முடிஞ்சா அது ‘சினிமா’.
வீடியோல தொடங்கி ஆடியோல முடிஞ்சா அது ‘சின்னம்மா’.
twitter.co/teakkadai1மகளிர் கட்டணமில்லாப் பேருந்துகளில் டிக்கெட் வரிசை எண் போட்டு, விளம்பரச் சீட்டுகள் போல கொடுக்கலாம். நிறைய கம்பெனிகள் முன் வருவார்கள். போக்குவரத்துக்கழகத்தின் பொருளாதார இழப்பில் கொஞ்சமாவது கிடைக்கும்.
twitter.com/PeterAlphonse7முகப் பவுடர், உதட்டுச் சாயம், சருமத்தை வெள்ளை ஆக்கும் க்ரீம் தயாரிக்கும் பாபா ராம்தேவ் கம்பனிக்கு 5 ஆண்டு வரி கிடையாதாம். உயிர் காக்கும் மருந்துக்கு வரி, கொரோனா தடுப்பூசிக்கு வரி. மோடிஜியின் ஆட்சியில் அம்பானி, அதானி கம்பெனிகள் தர்ம ஸ்தாபனங்கள்!
twitter.com/parveenyunus
ரஜினியால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும்னு 2020-ல் சொன்ன பழ.கருப்பையா இப்ப கமல் கட்சியில் இருக்கார். சும்மா ஒரு தகவலுக்கு...
twitter.com/saravankavi
பேய்ப் படத்தைக் கூட நான்கைந்து முறை பார்த்துட முடியுது. இந்த கல்யாண கேசட்டைதான் ஒரு முறைக்கு மேல பார்க்க முடியல...

twitter.com/Kozhiyaar
‘போன் மாற்றியதில் நம்பர் தொலைஞ்சிடுச்சு’ என்பது போன்ற பொய்களின் வரிசையில் புது வரவு, ‘மாஸ்க் போட்டு இருந்ததால் அடையாளம் தெரியலை!’
twitter.com/manipmp
மகனைப் பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்,
மகனின் ப்ளஸ் 2 மார்க்கைக் கேட்கும்போது பொய் சொல்ல வேண்டுமென்று!
twitter.com/skpkarunaமனிதகுலம் கண்டிராத நோய்ப் பேரிடர். உலகின் பல கோடி மக்கள் உயிருக்குப் போராடிய சூழல். இந்த நிலையில் வேறு வழியின்றி தரப்பட்ட 100% தேர்ச்சி என்பது மாணவர்கள் கேட்டு பெற்றது அல்ல! இந்த மதிப்பெண்களைக் கொண்டு அவர்களை நையாண்டி செய்யும் கொடூரச் சிந்தனைக்கு நீங்களும் பலியாகி விடாதீர்கள்.
twitter.com/Kozhiyaar
கடன் வாங்கி கட்டின வீட்டுக்கு முன்னாடி திருஷ்டி பொம்மை எல்லாம் வைக்காதீங்கய்யா. கடன் வாங்கி கட்டின ஓனர் போட்டோவை மாட்டுங்க. பார்த்துட்டு பரிதாபப்பட்டு கண்ணு வைக்காம போய்டுவாங்க!