Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது.

twitter.com/ashoker

இன்னைக்கு ஒரு உறவினர் மரணத்துக்கு இ-பாஸ் விண்ணப்பிக்குறப்ப ‘to attend a death’னு போட்டேன். அப்புறம் நாம funeralதான attend பண்ணமுடியும். இறந்தவர்தான் death attend பண்ணாருன்னு ஒரு நிமிசம் ஜெர்க் ஆயிடுச்சு.

வலைபாயுதே

twitter.com/ItsJokker

ஆகச்சிறந்த `கொரோனா கொடுமைகளில்’ இதுவும் ஒன்று,

“அருகே அருகே அமர்ந்து பயணம் செய்து, ஒன்றாய் வாழ்ந்த கடைசித் தலைமுறை நாம்தான்”ன்னு சொல்ல வச்சிரும்போல..!

twitter.com/kurumbuvivek

இந்த Eating Challengeன்னு கிலோ கணக்குல பிரியாணி சிக்கன்னு திங்கறானுங்க... அவனுங்களுக்கு ஒண்ணும் ஆகாது; பாத்து பாத்து அளவா சாப்பிடறவனுக்குதான் எதுனா ஆகும்... ஆக நல்லா ஆச தீர சாப்டுங்க..

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

twitter.com/DrTRM

சார்கஸம் என்ற பெயரில் எதுவும் எழுதாதீங்க, அது உண்மை என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் உலாவருது.

வலைபாயுதே

twitter.com/RahulGandhi

எவ்வளவு தீவிரமான வெறுப்பும் ஒரு மகத்தான தலைவனைக் களங்கப்படுத்த முடியாது.

twitter.com/skpkaruna

ஆடி மாசம் வந்துருச்சு! கூழு ஊத்தறது, பொங்கல் படைக்கிறது, கெடா வெட்டறது, சாராயம், சீட்டாட்டம், கோழிச் சண்டைன்னு எவ்ளோ இருக்கு! நம்ம மக்களைக் கட்டுப்படுத்த முடியாதே! இதற்காவது அரசு முன்கூட்டியே சிந்தித்து ஏதேனும் திட்டம் வகுத்திருக்குமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/vettipaiyal

ஆணின் திறமை அவன் வாங்கி வரும் விலையில்லா கறிவேப்பிலை கொத்தமல்லியால் கணக்கிடப்படுகிறது

twitter.com/thirumarant

பசங்க School-ல ‌நாளைக்கு Screen Free Holiday விட்டிருக்காங்க... Adapting to change...

வலைபாயுதே

twitter.com/KLAKSHM14184257

கொரோனாவுடன் போராட பசுவின் கோமியத்தை அருந்த வேண்டும்! - மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்.

கடைசியில... கோமியத்தில் இருந்துதான் கொரோனா வேக்ஸினைக் கண்டுபிடிச்சிருக்காங்க போல..?!

வலைபாயுதே

twitter.com/karuppukullaa

‘நான் கறுப்பாக இருப்பதால், எனக்கு நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டது’ - பாபா ராம்தேவ்.

#ஏன்யா அதான் பதஞ்சலி க்ரீம் இருக்கே அத போட்டு வெள்ளையாக வேண்டியதுதானே..

twitter.com/KLAKSHM14184257

தமிழகத்தில் எந்த மாவட்டமும் இனிப் பிரிக்கப்படாது! - முதல்வர் பழனிசாமி.

அதான்... கொரோனா ஒவ்வொரு மாவட்டத்தையும் பிரிச்சு மேய்ஞ்சுக்கிட்டு இருக்கே..?!

வலைபாயுதே

twitter.com/Suyanalavaathi

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.182 கோடிக்கு மது விற்பனை - செய்தி

#அரசு நவ் : 182 கோடி பத்தாதே டா...

twitter.com/krishnaskyblue

பக்கத்து வீட்டு வாட்ஸப் பைத்தியம் எங்க அம்மா கிட்ட பூரான் கடிச்சா சுகர் வராதாமேன்னு சொல்லும்போது எங்க அப்பா குறுக்கால வந்து எனக்கு 15 வயசுல ஒருக்கா 28 வயசுல ஒருக்கா கடிச்சு இருக்கு 38 வயசுல இருந்து சுகர் இப்போ வரைக்கும் மாத்திரை திங்குறேன்னு சொல்லி மூக்கை உடைச்சுவிட்டாப்ல.

வலைபாயுதே

www.facebook.com/gkarlmax

பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமலே போகலாம் - WHO

பரவால்ல விடு அப்புடி என்ன வாழ்க்கையை மொதல்ல வாழ்ந்துட்டோம்.