twitter.com/i_Soruba
பெரிய குடும்பமொன்றில், கோடைக்கால இரவில் எவர் முதலில் தோசை போதுமென்று சொல்கிறாரோ அவர்மேல் பாசம் கூடுவதில் வியப்பேதுமில்லை.
twitter.com/sundar_aaron
கிளப் ஹவுஸ் பரிதாபங்கள்...
Moderator: எல்லாரும் மைக்கை ஆஃப் பண்ணுங்க ப்ளீஸ்... சுதா, நீங்க சொல்லுங்க, எந்த ஊரு? என்ன பண்றீங்க?
என் பெயர் சுதாகரன், சென்னை ப்ரோ, ஆட்டோ ஓட்டுறேன்!
twitter.com/manuvirothi
‘அரைகுறை உடையணிவதும் பாலியல் வன்முறைக்குக் காரணம்’ என்றார் முன்பொரு மட அதிபதி. ‘வெற்றுடம்போடு திரியும் உங்களுக்கு ஏதும் பாதிப்பிருக்கா’ என்றேன்.
twitter.com/Maddoc_
பார்த்த வரைக்கும் Suspect wardல தான் கோவிட் வார்டு விட அதிக டெத் ஆகுது. அதும் சாகுற ஆளுங்க எல்லாமே வேக்சின் போடாம, சிம்டம்ஸ் இருந்தும் டெஸ்ட் எடுக்க பயந்து ஒரு வாரம் கழிச்சி Desaturate ஆனதால அட்மிட் ஆகி அடுத்த நாளே போற கேஸுங்கதான்... தயவுசெஞ்சு வேக்சின் போட்டுத் தொலைங்கயா!

twitter.com/paramporul
ஏங்க, நீங்க வாங்கிட்டு வந்ததுல 2 முட்டை ஒடஞ்சிருக்கு... அதுகூடவா ஒழுங்கா எடுத்துக்கிட்டு வர முடியாது?
மீ: அல்லோ, நீங்க கேட்டது 20 முட்டை. நான் வாங்கியாந்தது 24. அப்பக்கூட 2 முட்டை எக்ஸ்டிராதான் இருக்கும். போய் வேலைய பாருங்க அம்மணி...
twitter.com/iamkarki
வாழ்க்கைல செட்டில் ஆகுறதுன்னா 4 கி.மீ.க்கு ஒரு ரோட்டையும் முனைல ஒரு டோல் கேட்டையும் போட்டு உக்கார்றதுதான் போல! நாட்டுல யாவாரம் நடக்கல. தொழில் நடக்கல. ஆனா இன்னைக்குத் தொறந்துட்டாங்க சென்னைல... தளர்வுகள்ல இதுக்கு மட்டும் வந்துடும்.
twitter.com/RajaAnvar_
இயல்பு நிலைக்குத் திரும்பிட்டோம் என்பதைத் தெரிவிக்க டாஸ்மாக்கைத் திறக்கவேண்டியிருக்கிறது!
twitter.com/LAKSHMANAN_KL
கல்லணையை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - செய்தி.
எங்க டாக்டர் எடப்பாடி பழனிசாமி, அணைக்கு ‘காய்ச்சல்’ அடிச்சாலே கண்டுபிடிப்பாரு... போவீங்களா?!
twitter.com/Vkarthik_puthu
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல்மீதான வரியைக் குறைக்க வேண்டும்: பா.ஜனதா அறிவுறுத்தல்!
அப்பதான் விலையேற்ற இன்னும் வசதியா இருக்கும், அப்படித்தான?!
twitter.com/saravankavi
ஆவின் பாலகத்தில் வேறு பொருள்கள் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர் நாசர்.
மெடிக்கல் ஷாப் ஓனர்ஸ்: நல்ல வேளை, நம்மள சொல்லல...
www.facebook.com/ilango.krishnan.
ஹவுஸ் ஓனர்: ஏன் தம்பி, வீட்டுல ஏதும் சண்டையா?
நான்: இல்லியேண்ணே... ஏன் கேட்கறீங்க?
ஹ.ஓ: ராத்திரியெல்லாம் சத்தம் போட்டுப் பேசிட்டே இருந்தீங்க. அதான் கேட்டேன்.
நான்: அது கிளப் ஹவுஸ்ல பேசிட்டு இருந்தேண்ணே.
ஹ.ஓ: என்னது கிளப் ஹவுஸா... தம்பி இது நம்ம ஹவுஸ்... குடித்தனக்காரங்க இருக்க ஏரியா... கிளப் கிப்பெல்லாம் நமக்கு செட் ஆவாது, இப்பவே சொல்லிட்டேன்.

www.facebook.com/Sa Alagusubbaiah
நாம் கேட்டிருக்கிறோமா? நம்மிடம் சொல்லலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறோமா?
சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன; அல்லது அதிக அளவில் வெளிவருகின்றன. பாலியல் வன்கொடுமை என்றே தெரியாமல் கூட நம் அம்மா, சகோதரி, இணையர், குழந்தைகள் அதைக் கடந்து வந்திருக்கிறார்கள். இதெல்லாம் நமக்குத் தெரியும் என்றாலும்கூட, இது தொடர்பாக நாம் அவர்களிடம் பேசியிருக்கிறோமா? அப்படிப் பேசும்போது முன்முடிவுகள் இன்றி அவர்களை அணுகியிருக்கிறோமா?
நான் கேட்டேன். என் இணையரிடம்… ‘இப்படியெல்லாம் நடந்திருக்கிறதா?’
‘ஆமாம், எங்க சொந்தக்காரர்தான். ஆனால், யார்ட்ட சொல்றது. எப்படிச் சொல்றதுன்னு ஏதும் சொல்லல. இப்பவும் அவரைப் பாக்கும்போது நடுக்கமாக இருக்கும்’ என்றார்.
நாம் கேட்போம், எவை எவை பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்கள் எனப் புரிய வைப்போம். யாரிடமும் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியமும், யாரிடமும் சொல்ல முடியாது என்ற அச்சமும்தான் இது நடப்பதற்கான முதல் வாய்ப்பு. இனியும் அப்படி நடக்காமல் இருக்கச் செய்வோம்.
www.facebook.com/Karthikeyan Maddy
லாக்டௌன்ல ஊருக்குள்ளயே இருக்கற நமக்கே இப்புடி இருக்கே... மோடிஜிக்கு எப்புடி இருக்கும்..!
www.facebook.com/Ramanujam Govindan ‘பிரபல பாடகி ஒருவர் மனநல சிகிச்சை எடுத்த விவரம் எனக்குத் தெரியும்’ என மிரட்டும் தொனியில் மருத்துவர் ஒருவர் பொதுவெளியில் பேசியதாக அறிகிறேன். மருத்துவர் தன்னிடம் சிகிச்சை பெற்ற விவரங்களைப் பொதுவில் வெளியிடுவது கடுங்குற்றம். நோயர்களின் அனுமதி யின்றி அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்ட மருத்துவர்கள்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவைகூட நல்ல நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுக்காகச் செய்த பதிவுகள். அல்லது மருத்துவர் தன் திறமையை வெளிக்காட்டப் போட்டிருக்கலாம். ஆனால் நோயர்களை அவமானப்படுத்த இல்லை. அதற்கே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அப்படி இருக்க, சிகிச்சை விவரங்களை வெளியிடுவேன் என மிரட்டும் தொனியில் பேசுவது மிகக் கடுமையான கண்டனத்துக்குரியது.
இன்னொரு விஷயம். மனநல சிகிச்சை எடுத்திருக்கிறார் என்பதால் அவர் சுய உணர்வு அற்றவர் என்று அர்த்தம் அல்ல. மனநல பாதிப்புகள் என்பவை பெரும்பாலும் உணர்வுகள் சம்பந்தப்பட்டவை. கோபம், பயம், பதற்றம், சோகம் ஆகிய உணர்வுகள் எல்லோருக்கும் இருப்பவை. இவை அளவு கூடும்போது மனநல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அது ஒன்றும் அவமானத்துக்குரியது அல்ல. அந்தப் புரிதல் இல்லாமல் ஒரு மருத்துவரே பேசியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
twitter.com/RavikumarMGR
சோஷியல் மீடியா நமக்குத் தந்திருப்பது கட்டற்ற சுதந்திரமல்ல! அது கழுத்தில் கட்டப்பட்ட கண்ணுக்குத் தெரியாத சங்கிலி! எந்நேரமும் நம் கழுத்தை இறுக்கலாம், கவனமாக இருப்போம்!
twitter.com/ramesh_twetz/இந்தக் கொரோனாவுக்கு முதல் பலி எதுன்னா, அது ‘மூட நம்பிக்கைகள்’தான்!
www.facebook.com/sakthivel.subramaniam?__
கிட்டத்தட்ட 40 நாள்கள் கழித்து வேலைக்குப் போவது என்னவோ சம்மர் ஹாலிடே முடிச்சு ஸ்கூலுக்குப் போகுற மாதிரி சந்தோஷமாகவே இருந்தாலும்,
இத்தனை நாள் கேஷுவல் டிரஸ்ஸே போட்டிருந்துட்டு இன்னைக்கு ஃபார்மல் டிரஸ் போடுறப்பதான் தெரியுது, தின்று தீர்த்ததன் விளைவு... தெறிக்கும் பொத்தான்களும் அமுங்கும் வாகன சக்கரங்களும் கூடுதல் சாட்சி.
பாரதி இன்று இருந்திருந்தால் இப்படியாகத் தொடங்கியிருப்பார்... ‘அமர்ந்து சோறுநிதந் தின்று...’
www.facebook.com/sowmya.ragavan
செத்த கொரோனா வைரஸுக்கு பதிலா நமக்கு மட்டும் உயிரோட இருக்கற வைரஸை ஊசியா போட்டாங்களான்னு தோணற அளவு வச்சு செய்யுது கோவிஷீல்டு... ஊசிக்கே ஓஞ்சிட்டமே, நமக்கு கொரோனா வந்திருந்தா... ரிப்புகள்தான்!