Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

பத்து நாள்களுக்கு முன்பு வாட்ஸப் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்ட விஜய் மல்லையா

வலைபாயுதே

பத்து நாள்களுக்கு முன்பு வாட்ஸப் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்ட விஜய் மல்லையா

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/SriviShiva

முதல் 20 நிமிசம் கும்மானிங் மிஸ், ஹேப்பி மார்னிங் மேம்னு சொல்லிட்ருந்தானுக. ஒரு வழியா எல்லாரையும் அமைதிப்படுத்தி “லெட்ஸ் ஸ்டார்ட் தி க்ளாஸ்”னு சொல்லுது மிஸ். மறுபடியும் கும்மானிங் மிஸ்னு ஆரம்பிக்கிறாய்ங்க இந்த ஒன்னாங் கிளாஸ் சுண்டைக்காய்ஸ்

twitter.com/KsRadhakrish

கூட்டம் அதிகரிக்குமென்று இப்போதைக்கு நூலகங்களைத் திறக்கும் எண்ணமில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நல்லது.ஆச்சர்யமாக இருக்கிறது. எந்தக் காலத்தில் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு நூலகங்கள் சென்றுள் ளார்கள்? சினிமாக் காட்சிகளுக்கும், ஓட்டை விற்கவும் முண்டியடிப்பார்கள் என்பது தெரியாதா?

வலைபாயுதே

twitter.com/teakkadai

அந்தக்கால சின்னப்பசங்க அப்பா பாக்கெட்ல சில்லறை அடிக்கிற மாதிரி இப்ப இருக்கற பசங்க அப்பா மொபைல் டேட்டாவ தெரியாம திருடிடுறாங்க. போட்டோ, வீடியோலாம் டைம்லைன்ல பார்க்க முடியலை. தட் டொம்மு டொம்முன்னு சத்தம்தான் கேட்குது ‘அந்த வாண வேடிக்கைலாம் பார்த்ததே இல்லை’ கவுண்டமணி மொமென்ட்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

twitter.com/skpkaruna/

ஒரு லிட்டர் டீசலுக்கு 5 ரூபாய் விலை ஏற்ற முடிவு செய்துட்டா, ஒரேடியா ஏத்துறதில்லை. ஒவ்வொரு நாளா 57 பைசாவா 9 நாளைக்கு ஏத்துறாங்க! உலகத்திலேயே தனது சொந்த மக்களிடம் இப்படித் தெரியாமல் கறக்கும் இப்பேர்ப்பட்ட சிஸ்டம் வேறெங்கும் இருக்காது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

facebook.com/karl max ganapathy

கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை. சென்னைக்கு மத்தியக் குழு வருகிறது. ஜெயலலிதா ஹாஸ்பிட்டல்ல இருந்தப்ப இப்படித்தான வந்தாங்க...

வலைபாயுதே

facebook.com/nathandmt

இன்னும் 6 மாதத்தில் அதிமுக விஸ்வரூபம் எடுக்கும் - அமைச்சர் காமராஜ். பார்ட் 3 எடுப்பாங்கபோல இருக்கு... எதுக்கும் கமல்ட்ட ஒரு வார்த்தை கேட்டிடுங்கண்ணே.

twitter.com/delta tamizhan

பத்து நாள்களுக்கு முன்பு வாட்ஸப் மூலமாக இந்தியா அழைத்து வரப்பட்ட விஜய் மல்லையா இப்போது இந்தியாவில் எங்கே இருக்கிறார்? தெரிந்தவர்கள் கூறவும்.

வலைபாயுதே

facebook.com/vinayaga murugan

சென்னை மாநகராட்சியிலிருந்து ஓர் இளைஞர் எங்கள் தெருவுக்கு தினமும் வந்து நலம் விசாரித்துவிட்டுப் போவார். எப்போதும் உற்சாகமாகத் தெரியும் அவரே இன்று கொஞ்சம் டல்லாக இருந்தார். அவரது அலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். சின்ன இருமல்,காய்ச்சல் வந்தாலே போன் செஞ்சுடுங்க என்று சொல்லிவிட்டு வெளிறிய முகத்தோடு போனார். இந்தச் சூழல் கொஞ்ச கொஞ்சமாக இங்குள்ளவர்களின் மன உறுதியைக் கலைத்துப்போடுகிறது. நிலநடுக்கம் , சுனாமி, பெருவெள்ளம் எல்லாம் பார்த்த நகரம் இப்போது மெல்ல மெல்ல தனது மன உறுதியை இழந்துவருகிறது. பெரு வெள்ளத்தின்போது வேலூரிலிருந்து பேரிடர் குழு வந்தது. நாங்கள் சிலர் அவர்களோடு சேர்ந்து வேலை செய்து வெள்ளநீரை வெளியேற்றினோம். சப்மரைன் டீசல் மோட்டார்களுடன், கனமான ஹோஸ் பைப்புகளை எடுத்துக்கொண்டு இடுப்பளவு நீரில் நடந்துகொண்டே இருந்தோம். அந்த மீட்புப் பணிகளில் ஈடுபட்டது இன்னும் ஒரு சாகசமாக நினைவில் உள்ளது. மாநகரை மீட்டெடுத்த எண்ணற்ற கரங்களில் எங்கள் கரங்களும் இருந்தது. இப்போதுள்ள இந்தக் கொடுமையான சூழலில் என்ன செய்வதென்று, எப்படி உதவி செய்வதென்று தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

twitter.com/shivaas_twitz

At office -

மாஸ்க் போட்டுக்கணும், அடிக்கடி கையைக் கழுவணும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கணும், அடிக்கடி சானிட்டைசர் யூஸ் பண்ணணும், இருமல் சத்தம் கேட்டா யாருன்னு கவனிக்கணும்... இதுக்கு இடையில வேலையும் செய்யணும்னா எப்படி சார்?

twitter.com/salemsiva25

மனைவியிடம் பேசிய தற்பெருமைகள் தவறு என்பது குழந்தைகளை நம்மிடத்தில் தனியே விட்டுச்சென்ற போது தெரிந்துவிடும்..!

வலைபாயுதே

twitter.com/manipmp

என்னப்பா படிச்சிருக்க நீ?

M.sc படிச்சிருக்கேங்க..

அதெல்லாம் இருக்கட்டும் பத்தாவது பரீட்சை எழுதியிருக்கியா?

twitter.com/shivaas_twitz

நேபாளத்துக்குத் தக்க பதிலடி கொடுத்துட்டோம்.

எப்படி?

எங்க ஏரியா கூர்க்கா இன்னைக்குக் காசு கேட்டு வந்தார்... காசு கொடுக்கல.

twitter.com/SolitaryReaper_

நெட்வொர்க் டவுனாயிருந்தா உலகத்தைப் பத்திக் கவலைப்படற வேலை மிச்சமாயிடுது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism