Published:Updated:

வலைபாயுதே

விஜய் - விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - விஜய் சேதுபதி

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்- ரஜினிகாந்த்.

வலைபாயுதே

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்- ரஜினிகாந்த்.

Published:Updated:
விஜய் - விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
விஜய் - விஜய் சேதுபதி

https://twitter.com/smbsultan

எதையும் எளிதாகக் கிழித்துவிட முடியும் என்று நம்பிக்கொண்டு இருக்கும்போது தான், குளிக்கும்போது ஷாம்பு பாக்கெட்டைக் கிழிக்க முடியாமல் போவது!

vijay and vijay sethupathi
vijay and vijay sethupathi

https://twitter.com/shivaas_twitz

ஆபீஸில் ஒர்க் பெஞ்ச்சுக்கு கீழே, கைக்கு எட்டாத தூரத்தில் பிளக் பாயின்ட் இருக்கும் வண்ணம் வடிவமைத்தவர் யோகா ஆர்வலராக இருக்கக்கூடும்.

https://twitter.com/saravankavi

நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்- ரஜினிகாந்த்.

அப்படின்னா படத்தில் மட்டும் நடிங்க போதும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

https://twitter.com/kumarfaculty

சட்டம் தன் கடமையைச் செய்வது போட்டோ பிரேம்களில் மட்டும்தான்..!

https://twitter.com/Thaadikkaran

நாம கிரிக்கெட் விளையாடும்போது யார் பேட்டிங் பர்ஸ்ட்னு தெரிய குனிய வச்சு நம்பர் கேட்கும்போது ஒருத்தன் சிக்னல் கொடுப்பான் பாரு, அதுதான்யா கிரிக்கெட்ல நடந்த முதல் மேட்ச் ஃபிக்ஸிங்..!

வலைபாயுதே

https://twitter.com/HAJAMYDEENNKS

கடந்து வந்த பாதையை மறக்காதவர்கள் டிரைவர்கள் மட்டுமல்ல, திருடர்களும்தான்!

twitter.com/Thaadikkaran

குப்பைத்தொட்டிகிட்ட நின்னு லவ்வர்ஸ் பேசிக்கிட்டு இருக்காங்க, காதலுக்கு மூக்கும் இல்லபோல!

twitter.com/pachaiperumal23

இந்தியாவில்10 ஆண்டுகளில் 27கோடிப் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர் - ட்ரம்ப்.

யாரோ தவறான தகவல்களைத் தந்திருக்காங்க ஜி. புதிதாகக் கட்டப்பட்ட அந்தச் சுவரை எட்டிப் பாருங்கள்.உங்களுக்கு உண்மை புரியும்.

Tamannaah
Tamannaah

twitter.com/skpkaruna

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனக் கோயில்களை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல முடிவு...

இப்படி ஒவ்வொரு சிறகாகப் பிடுங்குவதைவிட மொத்தமாக மாநில அரசையே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடலாம். மாநிலங்களுக்கு எதற்காக தனியாகத் தேர்தல், சட்டமன்றம், அமைச்சரவை எல்லாம்? வீண் செலவுதானே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/lakschumi

Marks dont matter-னு ஒரு ட்வீட். இப்படி ரகத்தில் கல்லூரிக்குப் போகாமலே கோடீஸ்வரன்... படிக்காத மேதை... இவங்கள எல்லாம் உலகம் எப்படிப் பார்க்குதுன்னு யாருக்குத் தெரியும். படிப்பு ஒண்ணுதான் சாஸ்வதம். எப்படியாவது படிச்சிட்டா முன்னேறிடலாம்னு நினைக்கற நடுத்தர / வறுமைக்கோட்டுக்குக் கீழ இருக்கவங்க நம்புவாங்க. அந்த நம்பிக்கைதான் அத்தனை அவமானங்களையும் துடைத்தெறிந்துவிட்டு சலையோர விளக்கொளியில் படிப்பதையும்... ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு கல்லூரிக்கு வருவதையும் கிண்டல் செய்தவர்களையும் தாண்டி சாதிக்க வைக்கும். மார்க் எல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்பவர்களுக்குத் தெரிவதில்லை அந்த மதிப்பெண் தரும் நம்பிக்கை.

greta thunberg
greta thunberg

twitter.com/teakkadai

செவன்டீஸ் கிட்ஸுக்கும் 2கே கிட்ஸுக்கும் உள்ள வித்தியாசம் இன்னைக்கு நல்லாத் தெரிஞ்சது. நான் ப்ளஸ் 2, முதல் எக்ஸாமுக்கு நாலு மணிக்கெல்லாம் எந்திரிச்சு பரபரத்துக் கிடந்தேன். பையன் கூலா எந்திரிச்சு டீ சாப்பிட்டுக்கிட்டே இன்ஸ்டாகிராம் பார்த்துக்கிட்டு இருக்கான்.

twitter.com/Coimbatoraan

ஆபீஸ்ல ஒரு பீஹாரி நண்பருக்கு கொழந்த பொறந்துருக்கு. என்னப்பா பீஹார் போய்ட்டு அதுக்குள்ள வந்துட்டன்னு கேட்டா, இவ்ளோ நல்ல வசதி இருக்கற ஆசுத்திரிய இங்க வச்சுட்டு நான் ஏன் பீஹார் போகணும்னு கேட்டான்... அப்டியே ஒரு சுமைலோட இனிப்பு எடுத்துட்டு வந்துட்டன். #திராவிடத்தால்_வாழ்ந்தோம்

வலைபாயுதே

twitter.com/naaraju

நவீன குடும்பங்கள், இப்போ குழந்தைகளுக்கு டயாபர் வாங்குற காசை RD’ல போட்டு வச்சா, செல்வமகள் திட்டத்தை விட நல்ல returns தரும்.

www.facebook.comBogan Sankar

ஆயிரத்தெட்டு டிவி சானல்கள், அதற்கெனவே இருக்கும் ஸ்போர்ட்ஸ் சைட்டுகள்,யூ டூப் லைவ் சேனல்கள் எல்லாம் இருக்க பேஸ்புக்கில் வந்து கிரிக்கட் ஸ்கோரை ஸ்டேட்டசாகப் போடுகிறவர்களைப் பார்த்து வியக்கிறேன்.

வியந்து முடிந்ததும் அன்பிரண்ட் செய்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism