Published:Updated:

வலைபாயுதே

இசைக்குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
இசைக்குடும்பம்

இந்த உலகம் பசியினாலா முன்னேறுகிறது? இல்லை. பெண்களின் எக்காலத்திலும் அணையா எதிர்பார்ப்புத் தீயால்தான்.

வலைபாயுதே

இந்த உலகம் பசியினாலா முன்னேறுகிறது? இல்லை. பெண்களின் எக்காலத்திலும் அணையா எதிர்பார்ப்புத் தீயால்தான்.

Published:Updated:
இசைக்குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
இசைக்குடும்பம்

twitter.com/cablesankar

வயலன்ஸ் ஜாஸ்தி, செக்ஸ் ஜாஸ்தி, அதனால குடும்பத்தோட பார்க்க முடியாது அப்படின்னு எழுதுறாங்க. எதுக்காக அடல்ட்ஸ் ஒன்லி படத்தை குடும்பத்தோட பார்க்கணும்? எனக்குப் புரியலை!

twitter.com/JamesStanly

‘Oh My God’ன்னு சிரிச்சானுங்கல்ல... சிலிண்டர் ரேட்டுக்கு ‘Oh My God’ன்னு கதறட்டும்...

twitter.com/vidhaanam

வைடு ஆங்கிள் வைக்க நல்லாருக்குமேன்னு தன்னந்தனி ஒத்தைக் குடிசையா பாத்துத் தங்கியிருக்காங்க, ‘சாணிக் காயிதம்’ படத்துல எல்லாரும்!

twitter.com/Russetlane

தகவமைத்துக்கொள்ள தன் சிறகுகளை வெட்டி எறியும் உலகில், விரிந்த சிறகுகளின் வழி வான் அளக்கிறது தனிமையின் பறவை.

twitter.com/niranjan2428

சந்தேக மரணம் எனச் சொல்லப்பட்டது. வலிப்பு ஏற்பட்டதாக சட்டமன்றத்தில் சொல்லப்பட்டது. காவலர்கள் துரத்திச் சென்று அடித்து இழுத்துச் செல்லும் காட்சிகள் வெளியானது. தற்பொழுது பிரேதப் பரிசோதனையில் எலும்பு முறிவு, லத்தியால் தாக்கியதற்கான காயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இத்தனையும் ஒரு மரணத்தில்?

Nazriya: என்றென்றும் காதல்!
Nazriya: என்றென்றும் காதல்!

twitter.com/karna_sakthi

‘படத்த சென்னைல ஷூட் பண்ணுங்க. இங்க இருக்க திரைத்துறை உழைப்பாளி களுக்கு வேலை கிடைக்கும்’னு ஆர்.கே.செல்வமணி சொன்னதுக்கு, ‘அவர் பொண்டாட்டி ஏன் ஆந்திரால எம்.எல்.ஏ-வா இருக்கு? தமிழ்நாட்டுல எம்.எல்.ஏ ஆக வேண்டியதுதான’ன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க.

twitter.com/teakkadai1

இந்த உலகம் பசியினாலா முன்னேறுகிறது? இல்லை. பெண்களின் எக்காலத்திலும் அணையா எதிர்பார்ப்புத் தீயால்தான். அடைய அடைய ‘அடுத்து என்ன உன்னதம் இருக்கிறது’ என எதிர்பார்த்து அதை அடைந்து எரித்து, அடுத்த இலக்கை நோக்கி எரியும் தீ அது. ஆண் ஒரு குறிப்பிட்ட வயதில் ‘போதும்’ என உட்கார்ந்துவிடுவான். பெண் அப்படியல்ல. இந்த உலகத்தின் முன்னேற்றமே பெண்ணைத் திருப்திப்படுத்த ஆண் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளே...

twitter.com/Schumy_Official

பள்ளிக்கூடத்திற்கு அருகில் கள்ள மது விற்கப்படுவதாகப் புகார் கொடுத்த மாற்றுத்திறனாளியைக் கட்டி வைத்து அடித்த விராலிமலை போலீஸ்.

மனுஷன்தானா நீங்கல்லாம்... டிஜிபி சாருக்கு சைக்கிள் ஓட்டி வீடியோ போடவே நேரம் பத்தல. இத எங்க கவனிக்கப்போறாரு..?

twitter.com/mohanramko

வெப்ப அலை - பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஏசி, ஃபேன்க்குக் கூடுதல் வரி போடப்போறீங்க, அதானே..!

twitter.com/skpkaruna

“மாசத்துக்கு ஒரு முறை அவன் எங்க வீட்டுக்கு வரணும். ஐந்து நிமிடங்கள் எங்களோட உட்கார்ந்து பேசிட்டுப் போகணும்.” இயக்குநர் எஸ்.ஏ.சி நெகிழ்ச்சியான குரலில் கேட்கும் இந்தக் கோரிக்கை, அவரின் மகனுக்கு மட்டுமானதல்ல. பரபரவென ஓடும் இந்த வாழ்க்கையில் எல்லாப் பிள்ளைகளுக்குமானது. Don’t miss it.

twitter.com/mohanramko

உங்க தலைவரோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மாமனாரோட எதிர் வீட்டு பையன் எங்க கட்சியில் சேர்ந்துட்டான். எங்க கட்சி பலமாயிடிச்சி, பார்த்தியா...

Ranveer singh: பாலிவுட் ராக்கி பாய்!
Ranveer singh: பாலிவுட் ராக்கி பாய்!

twitter.com/VignaSuresh

கல்யாணமானதும் வந்த அவரோட பிறந்தநாளுக்கு, வீட்டில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கிஃப்ட் ஒளிச்சு வச்சிருந்தேன். ‘எதையெதையோ கண்ட இடத்துலலாம் வச்சிருக்க பாரு’ன்னு சொல்லி, நான் மனசுக்குள்ள ஊதி வச்சிருந்த எல்லா பலூனையும் உடைச்சுட்டாரு. அன்னையோட சர்ப்ரைஸ் பண்றத ஏறக்கட்டினவதான்.

facebook.com/umanathselvan

ஒகேனக்கல் பூங்காவில் ஒரு காட்சி. குடும்பத்தினர் படகுச் சவாரி சென்றுவிட்டனர். சில மணி நேரமாகும். நீரில் கால் வைக்க வேண்டிவரும் என்பதால் நான் நின்றுவிட்டேன். சிறுவர் பூங்காவில் இருக்கையைத் தேடிப் பிடித்து அமர்ந்துகொண்டேன். பூங்காவே பயங்கர அசுத்தமாகத்தான் இருந்தது. இருக்கையின் பக்கத்தில் ஒருவர் அமர்ந்தபடியே செம உறக்கம். மசாஜ் செய்துகொண்டு குளித்துவந்து அப்படியே உறங்கியிருக்க வேண்டும். நான் அமர்ந்திருந்த முக்கால்மணி நேரமும் குறட்டைதான்.

எதிரே சில அடிகள் தொலைவில் ஒரு குடும்பம். பெட்ஷீட் விரித்து அமர்ந்திருந்தனர். குடும்பத்தலைவர் மட்டும் சாப்பிடவில்லை. பெண்களும் குழந்தைகளும் சாப்பிட்டனர். வீட்டில் இருந்தே சமைத்து பெரிய பாத்திரங்களில் எடுத்துவந்திருந்தனர். மற்றவர்கள் கிளம்பி எங்கோ போக, குடும்பத் தலைவர் மட்டும் அமர்ந்தார். வெயிலுக்கு சட்டையைக் கழற்றி வைத்திருந்தார். யாரோ பாட்டி ஒருவர் ‘மிச்சம் ஏதாச்சும் இருந்தா கொடுப்பா’ எனக் கேட்டார். ஆனால் கடும்கோபத்தில் விரட்டினார். இல்லைன்னா இல்லைன்னு சொல்லலாமே என நினைத்துக்கொண்டேன். மகன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான். ‘தூர விளையாடு’ என விரட்டினார்.

பையில் இருந்து சரக்கு பாட்டிலை எடுத்தார். கிளாஸில் தண்ணீருடன் கலந்தார். மகன் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்த்துக்கொண்டே இதைச் செய்தார். அவன் வரும் முன்னர் பாட்டிலை தூர வீசினார். பின்னர் டம்ளரில் இருந்த சரக்கை ரசித்துக் குடிக்க ஆரம்பித்தார். பின்னர் பொறுமையாக தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தார். மகன் அருகே வரும்போதெல்லாம் முன்னர் பதற்றமாகவே இருந்தார். ஏதாச்சும் கத்தினார். இப்போது பதற்றமே இல்லை. “பார்த்து ஓடு.”

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அதே பாட்டி மீண்டும் வந்து யாசகம் கேட்டார். இப்போது அவர் உடல்மொழி மாறியிருந்தது. ‘பாத்திரம் இருக்கா’ எனக் கேட்டு, தட்டு, பிளாஸ்டிக் பை என அவரே திரட்டி தனக்குக் கொஞ்சம் வைத்துக்கொண்டு அனைத்தையும் பாட்டிக்குக் கொடுத்தார். அன்பாக விசாரித்தார்.

மனிதர்கள் போக்கு விந்தையானது. மது அதனை மேலும் விந்தையாக்குகிறது.

Kalidas: சும்மா ஒரு செல்பி!
Kalidas: சும்மா ஒரு செல்பி!

twitter.com/ramesh_twetz

அம்மா தோள் மேல கை போட்டு செல்பி எடுத்த போட்டோவ சோஷியல் மீடியாவுல அப்லோடு பண்றதெல்லாம் பாத்தா, போட்டோ வேணாம்னு சொல்ற அம்மா கழுத்துல கையப் போட்டு வலுக்கட்டாயமா புடிச்சிப் போடுற மாதிரியே இருக்கு. #அன்னையர்_தினம்

facebook.com/cmayilan

சச்சின் ஓய்வு பெற்றதையடுத்து, அவரது ஜெர்சி எண்ணான 10க்கும் பிசிசிஐ ஓய்வு அறிவித்தது. அந்த எண்ணை வேறு இந்திய வீரர் எவரும் இனிப் பயன்படுத்தமுடியாது. தோனியின் எண்ணான 7க்கும் ஓய்வளிக்க வேண்டுமென தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்தார். நாளை 18க்கும் அளிக்கப்படும். இவையெல்லாம் ஒருவிதத்தில் அவர்களின் ஆளுமைக்குச் செய்யப்படும் மரியாதை. விஷாலின் அடுத்த படத்தின் தலைப்பு ‘மார்க் ஆண்டனி’ எனப் பார்க்கவே...

facebook.com/hariharan.jeg

கடமையை மேற்கொள்ளலும், கட்டளைக்கு அடிபணிதலும் வெவ்வேறானவை. சில சமயங்களில் அவை ஒன்று போலத் தோன்றலாம். ஆனால் அவற்றைப் பிரித்தறிய முடியாதவன்தான் காலத்துக்கும் அடிமையாகக் கிடக்கிறான்.

facebook.com/sowmya.ragavan

நாம ரொம்ப முக்கியம்னு நம்பினாத்தான் நமக்கான அங்கீகாரம் கிடைக்கல, நமக்காக நேரம் ஒதுக்கலை, நம்ம மேல அன்பில்லை, மரியாதை இல்லைன்னு புலம்பிட்டு இருப்போம். நாமளே ஒரு பொருட்டில்லைன்னு தெரிய வந்தா கம்முனு இருந்துடுவோம்!

twitter.com/kryes

பகுத்தறிவுள்ள அமைச்சருக்கு அழகல்ல! ‘நம் நாட்டு உணவை மட்டுமே விரும்பணும்’ என்றால், பல உணவைத் துறக்கணும்! Ready?

சர்க்கரை சீனாவில் வந்தது (சீனி). நிலக்கடலை, தென் பசிபிக் (மணிலா). உருளை, அமெரிக்கக் கண்டம். தரம் உறுதி செய்வதே அரசின் பணி! எந்த உணவை விரும்பணும் என்பது அல்ல! நாட்டுக்குத்தான் எல்லை. காற்றுக்கோ, நீருக்கோ, உணவுக்கோ அல்ல! தமிழ் நாகரிகத்தின் உச்சமான சங்க காலத்திலேயே சீனாவில் இருந்து வந்த சீனியை (Sugar) தமிழர்கள் விரும்பி ஏற்றனர்!

Shawarma என்ற பேரில் கண்டதையும் கலந்து மைதா, மட்டமான எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்றால்... அதை மட்டும் முறைப் படுத்துங்கள். உணவு/உடல்நலச் சட்டம் செய்யுங்கள். அதை விடுத்து, ‘அந்த உணவு உண்ணாதே, நம் உணவு மட்டுமே உண்’ என்று சொல்ல, ஓர் அரசு தேவையில்லை. இன்று நம் மண்ணில் பயன் படுத்தும் உணவுப்பொருள்கள் பல நம் மண்ணில் விளைந் தவையே அல்ல. எந்த உணவிலும் போலிப் பெருமை கொள்ளாதீர்!

Yuvan: இசைக்குடும்பம்!
Yuvan: இசைக்குடும்பம்!

twitter.com/Thaadikkaran

சிக்னல் பக்கத்துல கிரீன் கலர் ஸ்க்ரோலிங் போர்டு வைக்குறவங்களுக்கு கும்பி பாகம் தண்டனை கொடுக் கணும்யா, சிக்னல் போட்டுட்டாங்கன்னு வந்தா, அது போர்டு.

twitter.com/Vasanth920

மனைவி யூடியூப் பார்த்து சமைக்கும் அன்று வருகின்ற பசி என்பது மிகவும் ஆபத்தானது.

twitter.com/itz_idhayavan

நமக்குத் தேவைப்படாத ஒன்றின் மீது கோபம் கொள்வதும் பொறாமைப்படுவதும் கால விரயமே..!

twitter.com/saravankavi

2 பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களைத் தூக்குவோம் - தி.மு.க எம்.பி செந்தில்குமார்

என்னண்ணே சொல்றீங்க? யார்ண்ணே அந்த ரெண்டு பேர்..?!

யாருக்குத் தெரியும். யார் என்ன ஏதுன்னு தெரியாம இனி ரெண்டு நாளைக்கு அவங்க தூங்க மாட்டாங்கல்ல... அதுல அவங்களுக்கு ஒரு டென்ஷன்.. நமக்கு ஒரு டைம் பாஸ்.

twitter.com/amuduarattai

நாம் வாங்கிய பிறகே, இந்த முறை சிலிண்டர் விலை அதிகமானது என்பதே நடுத்தரக் குடும்பங்களுக்கான மகிழ்ச்சி.

twitter.com/pachaiperumal23

‘‘நல்லவங்களை கடவுள் முதல்ல சோதிப்பான்...’’

‘‘அப்புறம்..?”

‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்னு தொடர்ந்து சோதிப்பான்.’’

twitter.com/Thaadikkaran

சர்வர் இஷ்யூ எனச் சொல்லும் ‘கூகுள் பே’வை நம்பு, ஷார்ட்ஸ்ட் ரூட் எனச் சொல்லும் ‘கூகுள் மேப்’பை நம்பாதே.

twitter.com/Suyanalavaathi

பேச்சலரா வெளியூர்ல வேலை செய்யுற எல்லாரையும், வாரம் வாரம் வீட்டுக்குப் போகத் தூண்டுவது, ரெண்டே விஷயம்தான். ஒண்ணு, நல்ல சாப்பாடு. ரெண்டாவது, துவைக்காமச் சேர்த்து வைத்த அழுக்குத் துணி.

twitter.com/Kozhiyaar

ஒரு கேள்விக்கு, ‘என்னைக் கேட்டுட்டா எல்லாம் செய்ற’ என்று மனைவி கேட்டால் மிதமான கோபம் என்றும், ‘என்னமோ பண்ணு’ என்றால் சற்றே அதிகமான கோபம் என்றும், ‘ம்’ என்று ஒற்றை வரி மறுமொழி வந்தால் கடுங்கோபம் என்றும் பொருள்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism