சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

நாம் மெதுவாக வண்டியை ஓட்டலாம் என்று நினைக்கும்போது, நம் பின்னே வேகமாகப் போக ஹாரன் அடித்துக்கொண்டு ஒருவர் இருப்பார்.

facebook.com/WriterRavikumar

கர்நாடக மாநிலத்தில் SC சமூகத்தினருக்கு 15%த்திலிருந்து 17% ஆகவும், ST சமூகத்தினருக்கு 3%த்திலிருந்து 7% ஆகவும் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்திற்குக் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு ஆளுநரை கர்நாடகாவுக்கு மாற்றல் செய்தால் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பாரா? அல்லது, இது ‘அநீதி’ என்று சொல்லித் தடுத்து நிறுத்துவாரா?

facebook.com/saravanakarthikeyanc

மனிதர்களிடம் மனம் கசந்து விலகியவர்களே செல்லப் பிராணிகளிடம் நெருங்கி அன்பு செய்கிறார்கள். மற்றவர்க்கு மனிதர்களைக் கையாளவே நேரம் போதாமல் இருக்கிறது.

twitter.com/manipmp

மற்றவர் தற்பெருமைகளை ஒருவர் பொறுமையாய்க் கேட்கிறார் என்றால்... அடுத்து இவர் பேசுவதை எதிரில் இருப்பவர் பொறுமையாய்க் கேட்க வேண்டுமென்ற பரஸ்பர புரிந்துணர்வுதான் காரணம்.

வலைபாயுதே...

twitter.com/amuduarattai

நாம் மெதுவாக வண்டியை ஓட்டலாம் என்று நினைக்கும்போது, நம் பின்னே வேகமாகப் போக ஹாரன் அடித்துக்கொண்டு ஒருவர் இருப்பார். நாம் வேகமாகப் போக நினைக்கும்போது, நம் முன்னே மெதுவாக வண்டி ஓட்டும் ஒருவரும் இருப்பார்.

facebook.com/venkatesh.arumugam1

‘‘ஏன் சார், அதான் எனக்கு லோன் இல்லைன்னு பேங்க்லயே சொல்லிட்டீங்களே, அதையே ஏன் இப்போ வீட்ல வந்தும் சொல்றீங்க?''

‘‘இது ‘வீடு தேடி வரும் வங்கி' திட்டம்ங்க. அதான் இங்க வந்து சொல்றோம்!''

twitter.com/Itz_Araviind

சுயமா சிந்திக்கத் தெரியாதவன்தான் தாய்மொழியவிட அடுத்தவன் மொழி பெஸ்ட்னு சொல்லுவான்.

twitter.com/IamUzhavan

காலங்காத்தால ஒருவர் தினமும் வாட்ஸப்பில் ‘Healthy Morning' என அனுப்பினால், அவர் உடல் எடையைக் குறைக்கும் பொடி டப்பா விற்கிறார் எனப் பொருள்.

twitter.com/saravankavi

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதன் சுருக்கமான அர்த்தம் இதுதான்... நண்பராக இருக்கும் வரைதான் உயிரைக் கொடுப்பார்கள். அதே நண்பர் எதிரியாகும்போது உயிரையும் எடுப்பார்கள்.

வலைபாயுதே...

twitter.com/Kozhiyaar

வாழ்வதைவிட விலகுவதற்கே அதிகம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!

facebook.com/ramanujam.govindan

‘ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது', ‘தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கக் கூடாது', ‘தெரியாத துறையில் தலையிடக் கூடாது.' இந்த அறிவுரைகள் எல்லாம் ஒருத்தர் நமக்குக் கொடுக்கிறார் என்றால் அவருக்குப் பிடித்த கட்சி, தலைவர், நடிகர், ஜாதி, மதம், கடவுள் எதையோ நாம் விமர்சித்திருக்கிறோம் என்று அர்த்தம்.

ஐந்து நிமிடம் கழித்து அவரே அவருக்குப் பிடிக்காத கட்சி, தலைவர், ஜாதி, மதம், நடிகர் பற்றி மேலே சொன்ன எல்லாவற்றையும் பண்ணிக் கொண்டிருப்பார்.

facebook.com/gkarlmax

கறிக்கடையிலும் டாஸ்மாக்கிலும் கூட்டம் அள்ளுது. அப்புறம் ஏன் மக்கள்கிட்ட பணப்புழக்கம் இல்லன்னு சொல்றீங்க என்று ஒரு நண்பர் கேட்கிறார். Global Hunger Index - உலக பட்டினிக் குறியீடு எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்றால் அது இப்படித்தான். கோளாறான மாதிரிகள்.

சிதம்பரத்தில் தீட்சிதர் 15 வயசுப் பிள்ளைக்குக் கல்யாணம் பண்றாப்ல. 300 சாம்பிள்ல அவரும் ஒரு ஆள்னா இந்தியாவின் சராசரி கல்யாண வயது ரொம்பக் குறைவாதானே காட்டும். ஆனா 90ஸ் கிட்ஸ் ஒத்துப்பாங்களா, சொல்லுங்க?!

twitter.com/itz_radhi3

என் பையன் 6 வயசா இருக்கும்போது, பெரியவனாகி டாக்டர் ஆகப் போறேன்னு சொன்னான். அப்புறம் பைலட், போலீஸ், இன்ஜினீயர்னு போயி, இப்ப சொல்றான் யூடியூபர் ஆகப் போறேன்னு... அடேய்!

twitter.com/saravankavi

வாழ்க்கையில் எவ்வளவு இழப்புகள், கஷ்டங்கள், தலைமைகள் வந்தாலும் அ.தி.மு.க தொண்டர்கள்போல கண்டும் காணாமல் வாழக் கத்துக்கணும்..!

வலைபாயுதே...

twitter.com/sasitwittz

ஆம்புலன்ஸ் வேகத்தைவிட பல நேரங்களில் தண்ணீர் லாரியின் வேகம் அதிகமாக இருக்கு..!

twitter.com/ss_twtz

ஒரு கட்டப்பை நிறையா அறிவுரைகள் வச்சுட்டு ஒரு குரூப்பு எப்பவுமே சுத்துது.

twitter.com/RavikumarMGR

சம்பாதித்ததெல்லாம் காகிதம்தான். அதை அனுபவித்தால்தான் பணம்!

twitter.com/urs_venbaa

வருங்காலங்களில் ஷாம்பூ விளம்பரங்களில் மட்டுமே நீளமான கூந்தலைப் பார்க்க முடியும் போல!

facebook.com/gokul.prasad.7370

உணவகத்தில் ஆர்டர் கொடுத்துவிட்டு பில் கவுன்ட்டர் அருகிலேயே காத்திருந்தேன். அங்கிருந்த பணியாளர், “உட்காருங்க சார், ஆர்டர் ரெடியாக ஃபோர் மினிட்ஸ் டுவென்ட்டி செகண்ட்ஸ் ஆகும்” என்றார். இதெல்லாம் ரொம்ப ஓவரு. சமைக்கத்தானய்யா போறீங்க, ஏவுகணை விடற ரேஞ்சுக்கு துல்லியமான கணக்கெல்லாம் சொல்றீங்க...

twitter.com/LAKSHMANAN_KL

2015-ல் பருப்பு வகைகளை அதிக சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தேன்- பிரதமர் மோடி.

# ‘வடை' சுடுறதுக்காகத்தானே..?

twitter.com/shivaas_twitz

காசு, பணம் சம்பாதிக்க சென்னை வேணும். பண்டிகையெல்லாம் மட்டும் சொந்த ஊர்லதான் போய்க் கொண்டாடுவோம்!

twitter.com/Greesedabba2

அன்னூர்-அவினாசி சாலையில் ஒரு ஊர். பஸ் ஸ்டாப்கிட்ட ஒரு பேக்கரி. ஓனர், வேலை செய்யறவங்க எல்லாம் உள்ளூர்க்காரங்க. விக்கறதும் முட்டை பஜ்ஜி, வெங்காயப் பக்கோடா மாதிரி அயிட்டங்கதான். ஆனா, பேக்கரி பேரு ராஜஸ்தான் பேக்கரி. ராஜஸ்தான்ல உள்ள எது இவனை ஹெவியா லைக் பண்ண வெச்சிருக்கும்..?

twitter.com/Bacteria_Offl

என் சாதிக்காரனே பருத்தி விதைத்து, என் சாதிக்காரனே அதை நெய்து, என் சாதிக்காரனே உடை தைத்து, என் சாதிக்காரனே விற்கும் கடையில்தான் வாங்கி உடுப்பேன் என்றால் ஆயுள் முழுதும் அம்மணமாகத்தான் திரியணும்!