Published:Updated:

வலைபாயுதே

ஒரு முனிவர் ஆத்தங்கரையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது ஒரு தேள் முனிவர் காலில் கொட்டுச்சு.

பிரீமியம் ஸ்டோரி

twitter.com/teakkadai1

அமிதாப் பச்சன் தன் மகன் அபிஷேக் பச்சன் படிக்கும் வகுப்பில் மின்விசிறி இல்லையென, அந்த வகுப்பிற்கு மட்டும் போட்டால் நன்றாக இருக்காது; எல்லா வகுப்பறைகளுக்கும் போடுவோம் எனக் கொடுத்தது பெரிய செய்தியானது எண்பது களில். தற்போது ஹாஸ்டலில் ஏசி ரூம் இல்லையென்றால் அந்தக் கல்லூரி அட்மிஷன் வேண்டாம் என பையன்கள் மறுக்கும் காலமாகிவிட்டது.

twitter.com/prabhu65290

நவம்பர் 1 முதல் திரையரங்குகள் 100% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி.

# ஆமா இப்ப மட்டும் என்ன, 50 சதவிகிதம் மட்டும்தான் இயங்குதாக்கும்..?

twitter.com/manipmp

ஒழுங்குபடுத்தப்பட்ட பேராசைக்கு ‘லட்சியம்’ என்று பெயர்.

twitter.com/urs_venbaa

Post paid என்பது வாயால் பேசி மூக்கால் அழுது பில் கட்டுவது.

twitter.com/KAG_SekarTwitz

ஒரு முனிவர் ஆத்தங்கரையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தபோது ஒரு தேள் முனிவர் காலில் கொட்டுச்சு. அவர் அந்தத் தேளை வருடிக் கொடுத்து மீண்டும் திரும்ப கீழே இறக்கி விட்டாராம். ‘‘அதான் கொட்டுதுன்னு தெரியுதே, அடிச்சுக் கொல்ல வேண்டியது தானே’’ என சீடன் கேட்டானாம். அதுக்கு அந்த முனிவர், “சீடரே, கொட்டுவது தேள் குணம். அதை மன்னித்து வருடிக் கொடுப்பது மனித குணம்” என்று சொன்னாராம். உடனே அந்த சீடன், ‘‘என் அறிவுக்கண்ணைத் திறந்து விட்டீர்’’னு விஷப் பாம்பைத் தூக்கி முனிவர் பக்கம் போட்டுட்டு நடந்தாராம்...

Ramya Nambessan: கொஞ்சம் ஜூஸ், கொஞ்சம் போஸ்!
Ramya Nambessan: கொஞ்சம் ஜூஸ், கொஞ்சம் போஸ்!

நண்பர்களே, கதை முடிஞ்ச்... குட் நைட்!

twitter.com/Ilavarasiii

3 வருஷம் முன்ன நாத்தனார் பையன் talcom powder வாசனை வந்தா கத்த ஆரம்பிச்சிருவான், ‘நம்மள விட்டுட்டு எங்கயோ வெளிய போறாங்க’ன்னு! இப்போ என் பையன் மாஸ்க் மாட்டுனா கத்த ஆரம்பிச்சிடறான்!

twitter.com/BlitzkriegKK

தோனி விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் நான் தோனியை ஆதரித்து வருகிறேன். ஆனால் தோனி ஓய்வு பெற்றபின் நடக்கும் போட்டிகளிலும், ‘தோனி போல் வருமா’. ‘தோனி இருந்திருந்தால்...’ போன்ற Ifs & Buts Gimmicks உண்மையாகவே அயர்ச்சியை உண்டாக்குகின்றன. தோல்வியில் பாடம் கற்றுப் புதிதாகப் பல தோனிகள் வரட்டுமே!

twitter.com/shivaas_twitz

டேய் மணியா, ஊசி போட்டதைவிட முக்கியம் அதை ஓசில போட்டது. அதை நல்லா அழுத்திச் சொல்லோணும்!

twitter.com/amuduarattai

தமிழ்நாட்டு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிக்காரர்களுக்கு வாழ்த்துகள் - மோடி.

# அப்போ... அந்த ஒத்த ஓட்டு வாங்கிய வருக்கு வாழ்த்துகள் இல்லைங்களா ஜி?

Nivedha Thomas: சிகரம் தொடு!
Nivedha Thomas: சிகரம் தொடு!

twitter.com/idumbaikarthi

‘சரிசமமாகப் பார்ப்பதல்ல; சரிசமமான வாய்ப்புகளை வழங்குவதே சமத்துவம்’ என்றார் அண்ணா. உதயநிதிக்கு அளிக்கப்படும் வாய்ப்பு வெள்ளக்கோவில் சாமிநாதனுக்குச் சரிசமமாக வழங்கப்பட வில்லை. துரை வையாபுரிக்கு வழங்கப் படும் வாய்ப்பு ம.தி.மு.க-வினருக்கு வழங்கப்படவில்லை.

twitter.com/DrHolyhemp

வீட்டைச் சுத்தி தண்ணி தேங்குற மாதிரியான இடங்கள சரி பண்ணிருங்க. வெளிய பக்கெட், அண்டா மாதிரிலாம் இருந்தா கவுத்தி வைங்க. கொசுவலை, கொசுவிரட்டி பயன்படுத்துங்க. எங்கெங்கு காணினும் டெங்கு!

twitter.com/manipmp

ஏதாவது வாங்கலாம்னா கையில் வேற காசு இல்ல...

கிரெடிட் கார்டு: நான்தான் இருக்கேன்ல?!

twitter.com/saravankavi

4 நாள்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு! - நிலக்கரி ஆணையம்.

ஜீ டு ஆபீசர்ஸ்: இப்ப நீங்க என்ன பண்றீங்கன்னா... தேவையான அளவுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ற வரைக்கும் காலண்டர்ல இருக்குற தேதியைக் கிழிக்காம வச்சிருங்க. நிலக்கரியும் அப்படியே இருக்கும்!

facebook.com/revathy.ravikanth

‘அண்ணாமலை’ படத்துல வர்றாப்ல ஸ்வீட்ஸ் அடுக்கி ஓவர்நைட்ல பெரிய ஆளு ஆவலாம்னா, பாதியை நாமளே திங்குற ஆளா இருக்கோம்.

facebook.com/இரா.செந்தில் கரிகாலன்

மொழி கத்துக்குறதுல சின்ன லாஜிக்தான்... நம்ம தேவைக்காக எத்தன மொழி வேணாலும் கத்துக்கலாம்; அடுத்தவன் தேவைக்காக ஒரு வார்த்தைகூடக் கத்துக்கத் தேவையில்ல.

twitter.com/Kannan_Twitz

கார் சர்வீஸ்ல இருந்து எடுக்கப் போறப்போ ரிசப்ஷன்ல இருந்த பொண்ணு பார்த்து சிரிச்சுது, நானும் சிரிச்சேன். ஆனா மாஸ்க் போட்ருந்தேன். ஒரே கவலையாவே இருக்கு, நான் சிரிச்சது அவங்களுக்கு தெரிஞ்சுருக்குமா இல்லையான்னு! பேசாம திரும்பப் போய் மாஸ்க்க கழட்டிட்டு ஒரு முறை சிரிச்சுட்டு வந்திடலாமா!

Pooja hegde: குட்டித் தூக்கமும் கொட்டாவியும்!
Pooja hegde: குட்டித் தூக்கமும் கொட்டாவியும்!

twitter.com/itz_idhayavan

பிரதமர் மோடி வரும் 29-ம் தேதி இத்தாலி பயணம்.

# மறுபடியும் ஊர் சுத்தக் கிளம்பிட்டாருன்னு நெகட்டிவ்வா பார்க்காம, மீம்ஸுக்கு கன்டென்ட் கிடைக்கும்னு பாசிட்டிவ்வா பார்க்கலாமே?!

twitter.com/Kozhiyaar

பஸ் ஸ்டாப்பில் நிற்பவரைவிட, நடந்துகொண்டிருப்பவரை அணுகினால் எளிதாக ஆள் பிடித்துவிட முடியும் என்ற வித்தை அறிந்தவர்கள் ஆட்டோக்காரர்கள்!

twitter.com/mekalapugazh

பெண்களின் உடையில் குடும்ப மானத்தையும், கிரிக்கெட் மேட்ச்சில் நாட்டு மானத்தையும் வைக்கும் நாடு இது!

twitter.com/LAKSHMANAN_KL

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - சசிகலா

# கடைசியில் ‘பரப்பன அக்ரஹாரா’வில் தள்ளும்... அப்படித்தானே?!

twitter.com/parveenyunus

பார்த்திபன் - ஒத்த செருப்பு

தி.மு.க - ஒத்த செங்கல்

பா.ஜ.க - ஒத்த ஓட்டு

twitter.com/mohanramko

‘‘மாப்பிள்ளைக்கு சொந்தமா வீடு, கார், டூவீலர் எல்லாமே இருக்கு...’’

‘‘சொந்தமா யூடியூப் சேனல் இருக்கா?’’

‘‘எது..?”

twitter.com/sultan_Twitz

உன் எதிரில் நிற்பவனைவிட, உன் அருகில் இருப்பவனிடம் கவனமாய் இரு...

twitter.com/Sivaji_KS

விளையாட்டை அரசியலாகவும், அரசியலை விளையாட்டாகவும் பார்ப்பதுதான் புதிய இந்தியா.

twitter.com/mohanramko

அப்டேட் செய்துகொள்வது என்பது பழசை மறப்பதல்ல...

twitter.com/FareethS

முன்னொரு காலத்தில் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே டெய்லர்கள் பிசியாகிவிடுவார்கள் என்று ஒரு வரலாறு உண்டு...

twitter.com/Suyanalavaathi

‘லேசா சாரல்தான் விழுது, டூவீலர்ல விரட்டிப் போயிறலாம்’னு கிளம்புனா, மழையும் நல்லா பெஞ்சு நம்மள விரட்ட ஆரம்பிக்கும். கடைசியா ஜெயிப்பது என்னமோ மழைதான்!

twitter.com/manipmp

‘‘நான் கொரோனா வந்திருக்கேன்...”

‘‘தீபாவளி வருது. போய்ட்டு அப்புறம் வா!”

twitter.com/RagavanG

நல்லவர்களோடு மோத நேர்ந்தால் நேர்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். மானங்கெட்டவர்களோடு மோத நேர்ந்தால் அறிவுக்கூர்மையையும் சூழ்ச்சித்திறனையும் பற்றிக்கொள்ளுங்கள்.

twitter.com/JamesStanly

‘‘தம்பி ஜொமாட்டோ, இங்க இப்டிதான். போகப் போக கண்டுக்க மாட்டாங்கே‌...”

‘‘யாருணே நீயி..?”

‘‘நானும் உன்ன மாதிரிதான்... கூல்ட்ரிங்ஸ் கம்பெனி. ஜல்லிக்கட்டு டைம்ல ஃபேமஸ்!”

twitter.com/saravankavi

தர்மபுரி மாவட்டத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் வாடிக்கை யாளர்கள் அதிர்ச்சி!

# தண்ணீர் இலவசமா சேர்ந்து வருது, அதை யாராச்சும் பாராட்டறாங்களா பாரு...

Dhanush: விருதுகள் குவிக்கும் குடும்பம்!
Dhanush: விருதுகள் குவிக்கும் குடும்பம்!

twitter.com/Mr_vandu

‘‘Zomato ஆப்ப வேற அன் இன்ஸ்டால் பண்ணணும்...”

‘‘அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல, ஒன் செகன்ட்ல பண்ணிடலாம்!”

‘‘ஆனா நம்மகிட்டதான் அந்த ஆப் இல்லயே!”

twitter.com/thecommonman__

இத்தனை வருஷமா பெட்ரோல் 100 ரூவா ஆவப்போகுதுன்னுதான் மீம்லாம் போட்டு கலாய்ச்சாங்க... ஒரு வழியா இந்த வருஷம்தான் அது நடந்துச்சு. டீசலல்லாம் லிஸ்ட்லயே இல்ல... அதுலாம் ஆகவே ஆவாதுன்னு நினைச்சாங்க. எப்படி எடுத்துக்கிட்டு வந்து நிறுத்துனாங்க பார்த்தீங்கில்ல... அதாம்ல வர்கீசு. அச்சா தின்!

twitter.com/anand17m

பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஒரு ரூபாய்கூட லஞ்சம் கொடுக்காமல் சொத்துப் பத்திரம் பதிவானவுடன் பட்டாவும் எனது பெயருக்கு மாறி குறுஞ்செய்தி வந்துவிட்டது... அப்புறம் பார்த்தால் அலைபேசியில் காலை அலாரம் அடித்து என்னைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டது!

twitter.com/amuduarattai

மட்டன், சிக்கன் வாழ்வுதனை புரட்டாசி மாதத்தில் காளான் வெல்லும். புரட்டாசி மாதம் முடிவினிலே மீண்டும் மட்டன், சிக்கனே வெல்லும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு