சினிமா
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா அந்த சாமி இறங்கி வந்து அவளுக்குத் துணையா நிக்கும்...

twitter.com/arattaigirl

கேட்டுக்கொண்டே இருந்த கைத்தட்டல் ஓசைகள் நின்றதும், தன்னைத்தானே அறைந்து கொண்டு சப்தம் கேட்டு ரசிக்கும் பிறழ்வு நிலை புகழ் போதையை விட ஆபத்தானது... தன் பற்றிய பேச்சுகள் குறைந்ததும் ஆடை கிழித்து அம்பலத்தில் சென்று நிற்கும் கவன ஈர்ப்பு. அதற்கு தீனி போட்டு கொழுக்க வைக்காதி ருங்கள்!

twitter.com/itz_idhayavan

ராகுல் காந்திக்கு மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும்: திருநாவுக்கரசர்

ஆமா... ஆமா... அவரோட பலமும் பலவீனமும்தான் தெரியாது!

twitter.com/anand17m

உண்மை வெளி வருவதற்குள் பொய் அனைத்திலும் அதிகாரத்துடன் சொகுசாக வாழ்ந்து விடுகிறது...

twitter.com/GreeseDabba2

நியாயமும் தைரியமும் ஒரு பொம்பள புள்ளைக்கு இருந்துச்சுனா அந்த சாமி இறங்கி வந்து அவளுக்குத் துணையா நிக்கும்...

# இல்ல, புரியல, அதுக்கப்புறம் எதுக்கு துணைக்கு வரணும்? தைரியம் இல்லாதவங்களுக்குத்தானே துணை தேவை..?

twitter.com/WritterRamesh

கோப்பெருந்தேவி குடும்பத்தை காப்பாத்துனா, ‘வீரம்’. தத்து எடுத்த தமிழ காப்பாத்துனா, ‘வேதாளம்’. பொண்டாட்டிய காப்பாத்துனா, ‘விவேகம்’. பொண்ண காப்பாத்துனா, ‘விஸ்வாசம்’. தங்கச்சியை காப்பாத்துனா, ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவாகிட்ட இருந்து சினிமாவ முதல்ல காப்பாத்தணும்!

Shraddha Srinath: சோறு முக்கியம் பாஸ்!
Shraddha Srinath: சோறு முக்கியம் பாஸ்!

twitter.com/ImAvudaiappan

ஆபத்பாந்தவன்-அஞ்சல் துறை.

சில நாட்களுக்கு முன்பு கர்நாடகப் பகுதியில் இருக்கும் ஒகேனக்கல் போய் இருந்தேன். கையில் மொத்தமே 10 ரூபாய்தான் இருந்ததது. அவசரமாகப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பகுதியில் ATM கிடையாது. கோபிநத்தம் பகுதியிலும் கிடையாது. ‘‘பரிசலில் அந்தப் பக்கம் இருக்கும் தமிழ்நாட்டில் விட்டுவிடுங்க. அங்க போய் பணம் எடுத்துக்குறேன்’’ என சொன்னேன். ‘‘தண்ணீ நிறைய போகுது தம்பி, அந்தப் பக்கம் தாட்டி விட முடியாது’’ என சொல்லிவிட்டார் பரிசல் அண்ணன். 25 கிமீ கடந்தா மட்டும்தான் யோசிக்க முடியும்.

அப்போது கண்ணில் பட்டதுதான் இந்த போஸ்ட் ஆபீஸ். சட்டென அங்க போய், ‘‘10 ஆயிரம் ரூபாய் வேணும்’’ என்றேன். அவர், ‘IPPB Account இருந்தால் எடுத்துக்கலாம்’ என சொன்னார். ‘அல்லது ஆதாரை மொபைல் நம்பருடன் இணைத்து இருந்தால் பணம் கொடுக்க முடியும்’ என்றார். என்னிடம் IPPB Account இருக்கவே, அதை வைத்து பணம் எடுத்துவிட்டேன். அவசரத்துக்கு அஞ்சல் ஆபீஸ்தான் உதவியது.

அந்த இடத்தில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ்க்குத் தினமும் 20 பேர் வந்தாலே பெரிய விஷயம். மணியார்டர், முதியோர் ஓய்வுத் தொகை இது மாதிரி காரணங் களுக்காக அது நடந்து வருகிறது. இது தனியார்மயத்தை ஆதரிப்பவர்களுக்கான எச்சரிக்கை. இப்படிப்பட்ட ஊரில் எந்த தனியாரும் செயல்பட விரும்பமாட்டார்கள்.

இரண்டாவது, அரசு அலுவலர்கள் என்றாலே அனைவரும் வேலை செய்யமாட்டார்கள் என்ற பார்வை உண்டு. இந்த மாதிரியான காட்டுப்பகுதியில் சிமென்ட் ஷீட் போட்ட இடத்தில் ஒரு அரசு அலுவலர் வேலை செய்கிறார். மக்களுக்கு அங்கு உதவியாகவும் இருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் அஞ்சல் துறை இருக்கட்டும்!

twitter.com/LAKSHMANAN_KL

பழுத்த மரத்தில்தான் கல்லடிபடும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

அதான்... வரிசையா ரெய்டு வந்துட்டு இருக்கோ பாஸ்?!

twitter.com/anand17m

அடாவடி பண்றது, அடிக்கிறது, கத்துறது, ஓவரா சீன் போடுறது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துறது, வம்புக்குப் போறது, திமிராப் பேசுறது எல்லாமே இப்ப ‘இதான் கெத்து’ அப்படினு இந்த தலைமுறை நம்புகிறது போல...

Prayaga Martin: கிடார் கம்பி மேலே நின்று...!
Prayaga Martin: கிடார் கம்பி மேலே நின்று...!

twitter.com/Vasanth920

காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை: சோனியா வருத்தம்

அப்பாடா... அப்போ இன்னும் கட்சில தலைவர்கள்லாம் இருக்கத்தான் செய்றாங்க!

twitter.com/saravankavi

போப் பிரான்சிஸ் இந்தியாவுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்தேன்: பிரதமர் மோடி

# குஜராத்ல எய்ம்ஸ் எல்லாம் தயாரா இருக்கு... குடிசையை மறைக்க சுவர் கட்றது மட்டும்தான் பாக்கி..!

twitter.com/Sabarish_twittz

பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மற்றும் ஒருவர் இருக்கும்போது புகை பிடித்துக்கொண்டே அருகில் செல்பவர்களெல்லாம் வேற்றுக் கிரகவாசிகளாகத்தான் இருக்கக்கூடும்...

twitter.com/laksh_kgm

உலகிலேயே அதிக பணக்காரர்களையும், அதிக ஏழைகளையும் உருவாக்குவது நாம்தான்.

twitter.com/saysatheesh

உரிக்க ஈசியா இருக்கட்டும் என சின்ன வெங்காயத்தில் பெரிய சைஸ் என வாங்கி வந்தா, இது பெரிய வெங்காயத்தில் சின்ன சைஸாம். இந்த நாள் இனிய நாள்... மண்டகப்படி இனிதே நிறைவடைந்தது!

twitter.com/anantheselvan

எல்லா உண்மைகளையும் நீங்கள் பேசவேண்டுமென்ற கட்டாயம் எதுவும் கிடையாது. நீங்கள் பேசுவதெல்லாம் உண்மையாக இருக்கட்டும்!

twitter.com/balu_gs

சன் டிவி நாடகத்துல கல்யாணப் பந்தில போன வாரம் சாப்பிட உக்காந்தாங்க. அந்தப் பந்தில பாயசத்துல விஷத்தை கலந்து ஊத்த ஒருத்தன் பக்கெட்டோட போன வாரத்துல இருந்து நிக்கான். இன்னும் ஊத்தின பாடில்ல... அடேய்!

Anushka sharma: நல்லதோர் குடும்பம்!
Anushka sharma: நல்லதோர் குடும்பம்!

twitter.com/nesamithran

குஞ்சுகளின் கால்களும் சேர்த்து பன்னிரெண்டு கால்களால் பஞ்சாரத்துள்ளே நிற்கிறது தாய்க் கோழி. ஏழை வீட்டு ஆயிரங்கால் மண்டபம்.

twitter.com/Suyanalavaathi

ஜவுளிக் கடைக்காரர், ‘பட்டாசுக் கடைக்குதான் இந்த வருஷம் அதிக வியாபாரம்’னு நினைப்பாரு. பட்டாசுக் கடைக்காரர், ‘ஜவுளிக் கடைக்குதான் இந்த வருஷம் அதிக வியாபாரம்’னு நினைப்பாரு. உண்மை என்னன்னா, மக்கள்கிட்ட செலவழிக்க காசு கிடையாது.

twitter.com/Neera_Twitz

அனுபவ வரிகள் பலவற்றைப் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகின்றன சாலையில் ஆட்டோக்கள்.

twitter.com/poopoonga

மகளைப் பெற்ற அப்பாக்களுக்கு பல நேரம் புரியாதது, அவங்க மனைவியையும் அவங்கப்பா இப்படித்தான் வளர்த்திருப்பாருங்கறது!

twitter.com/npgeetha

ஊர் நினைவைக் கிளப்பிவிடாத ஒரே ஒரு ஞாயிறு மாலைகூட வாய்ப்பதில்லை. கூடவே இந்த மழையும், கிட்ட நிற்கும் பண்டிகையும் வேறு தூண்டுகோல்களாகிப் பெரும் இம்சை!

twitter.com/Sabarish_twittz

யாரும் ரசிக்கவில்லை என்பதற்காக நள்ளிரவில் மழை வராமல் இருப்பதில்லை...

twitter.com/Giri47436512

காதலிக்கறதும் தப்பில்ல, காதலிக்கப் படறதும் தப்பில்ல... இந்த ரெண்டுக்கும் நண்பனா இருக்கறதுதான் தப்பு!

twitter.com/mekalapugazh

நீதிமன்றங்கள் வாதத்தின்போது உதிர்க்கும் கருத்துகள், தீர்ப்பில் எதிரொலிக்காத நேரத்தில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படுகிறது.

twitter.com/prabhu65290

எல்லா வீடுகளிலும் காய்ந்த துணிகளை அடுக்கி வைக்கும்முன் போட்டு வைக்க ஒரு சோபா இருக்கும்.

twitter.com/saravankavi

துன்பங்கள் எல்லாம் பா.ஜ.க உறுப்பினர்கள் போல அதிகமாகிக் கொண்டே செல்கின்றன... இன்பங்கள் எல்லாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் போல குறைந்து கொண்டே வருகின்றன!

facebook.com/vinayaga.murugan.7/

கீர்த்தி சுரேஷுக்கு ரஜினி பொண்ணை விட பத்து வயது குறைவாம். எப்படி தங்கச்சியா நடிக்கலாமுன்னு பஞ்சாயத்துல பொங்குறானுங்க. அதுக்காக பண்டரிபாயை கூப்பிட்டா தங்கச்சியா நடிக்க வைக்கமுடியும்? இதெல்லாம் நியாயமா?

twitter.com/amuduarattai

தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள், ஸ்பான்சர்களின் பெயர்களை மூச்சு விடாமல் சொல்லும் வேகத்தைப் பார்த்தால், எஸ்.பி.பி கஷ்டப்பட்டு மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலின்றி’ பாட்டை மிக எளிதாகப் பாடி விடுவார்கள் போல!

Radhika : ஸ்டைலிஷ் குமுதவள்ளி!
Radhika : ஸ்டைலிஷ் குமுதவள்ளி!

twitter.com/mohanramko

மழை: நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, துணி துவைச்சி காயப் போடும்போது கரெக்டா வந்துடுவேன்!

twitter.com/manipmp

பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 33 பைசாவும் உயர்வு!

# கூட்டிக் கழிச்சுப் பாரு... வாரக் கடைசியில் 2 ரூ. ஏறியிருக்கும்...

twitter.com/mekalapugazh

நண்பர்களிடம் கடன் எளிதாகக் கேட்டுவிட முடிகிறது... கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கத்தான் அதிகம் தயங்க வேண்டியிருக்கிறது.