சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

படிக்கிற காலத்தில் நாங்களெல்லாம், ‘மழை பெய்தால் ஸ்கூல் லீவா சார்?'ன்னு ஆசிரியரிடம் கேட்கவே அவ்வளவு பயப்படுவோம்.

twitter.com/manipmp

ரிலேட்டிவிட்டி தியரி என்பது House ஓனருக்கும் குடியிருப்போருக்கும் இடையிலான நாள்கள் சம்பந்தப்பட்டது!

twitter.com/LAKSHMANAN_KL

தண்ணீர் ஆதாரங்களைப் பாதுகாக்க உதவும் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடியுங்கள்!- விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் முர்மு வேண்டுகோள்.

# அண்ணன் செல்லூர் ராஜு எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்..!

twitter.com/kirachand4

2024 பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி - எடப்பாடி பழனிசாமி

# அ.தி.மு.க கூட்டணிதான்... அதுல இருக்கிற அ.தி.மு.க எங்களுடையது இல்ல.

 musicthaman: ரசிக ரஞ்சிதங்கள்..!
musicthaman: ரசிக ரஞ்சிதங்கள்..!

twitter.com/greesedabba2

பேசாமல் விட்ட சொற்களுக்கு நீங்கள் எஜமான், பேசிய சொற்களுக்கு உங்கள் மனைவிதான் எஜமான்.

twitter.com/mohanramko

ஜெயலலிதாவின் மரணத்தில் தி.மு.க அரசியல் செய்தால் மாட்டிக்கொள்வார்கள் - டிடிவி தினகரன்

# யாரு மாட்டிக்குவாங்கன்னு சொல்ல மாட்றாரே...

twitter.com/asdbharathi

மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டு வந்தவரிடம் பேசினால் தெரியும், வாழ்க்கையின் மதிப்பு.

twitter.com/Bacteria_Offl

பல மதக் கடவுள்கள் சேர்ந்து உருவாக்கிய ஒரே ஒரு பூமி... ஆளுக்கொரு பூமியைப் படைச்சிருந்தா சண்டையே இல்லாம இருந்திருக்கும்.

twitter.com/Anvar_officia

உலகத்தில் முதன்முதலாக ‘விலையில்லா' பொருளாகக் கொடுக்கப்பட்டது ‘கறிவேப்பிலை'தான் போலிருக்கு!

twitter.com/Anvar_officia

மழைக்கு ஸ்கூல் லீவு விடுறதைப் பார்த்துட்டு நாமும் குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணினப்ப பசங்களோட வீட்டுப்பாட டைரியைப் பார்த்தேன். நல்லவேளை வளர்ந்துட்டேன்னு தோணுச்சி!

samantharuthprabhuoffl: கண்ணால் ஒரு சேதி..!
samantharuthprabhuoffl: கண்ணால் ஒரு சேதி..!

twitter.com/itz_radhi3

அடுத்தவன் வீட்ல என்ன வேகுதுன்னு பார்க்கறதுக்கு முன்னாடி உங்க வீட்ல என்ன கருகுதுன்னு பாருங்க!

facebook.com/sowmya.ragavan

சாப்பிடும் போது கரன்ட் போனா சாப்பிடக் கூடாதாம். இருட்டுல சாப்பிடறது பேய்க்குதான் போய்ச் சேருமாம். லைட் வந்தப்பறமோ, மெழுகுவத்தியாவது கொளுத்தி வச்சோதான் சாப்டணுமாம்.

மீ: அப்ப இனி எது சாப்ட்டாலும் இருட்டுல சாப்டறேன். டேஸ்ட் எனக்கு, கலோரி பூராம் பேய்க்கு.

facebook.com/Magudeswaran.Govindarajan

முன்பெல்லாம் திருமண விழாக்களுக்குச் சென்றால் மெல்லிசைக் கச்சேரி நடக்கும். செவிக்கினிய பாடல்கள் காற்றை நிறைக்கும். கச்சேரி இல்லையென்றாலும் இன்னிசை நிரம்பும். ஒளிமயமான எதிர்காலம், பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி, என் கல்யாண வைபோகம் உன்னோடுதான், மாங்குயிலே பூங்குயிலே போன்ற சூழ்நிலையை உணர்ச்சிமயமாக்கும் அழகிய பாடல்களின் நிரல் கலையாத வரிசையுண்டு. அத்தகைய மணவிழாக்கள்தாம் மறக்க முடியாதனவாக நினைவில் தங்கியிருக்கின்றன.

சில நாள்கள் முன்னம் ஒரு மணவிழாவிற்குச் சென்றிருந்தேன். கொட்டொலி முழங்கும் ஒலிப்பான்களை அமைத்து ஒருவர் கணினியில் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் பன்னிற விளக்குகள் சுழன்றன. அப்படி என்ன பாடலைப் போட்டார் என்கிறீர்கள்?

ஏய் ஜலபுல ஜங்கு... டேய் டமடம டங்கு... தக் லைப்புல கிங்கு... டான் செட்டிங்கு

ஒரு மணவிழாவில் ஒலிக்கும் இந்தப் பாடலை எந்தப் பொருளில் எடுத்துக்கொள்வது என்று எனக்குக் குழப்பமாகவே இருக்கிறது.

facebook.com/sudhakarthulasiraman

பொறுமையே இல்லாமல் வாழ்க்கையில் துன்பப்படுபவரா நீங்கள்? ஒரு எலக்ட்ரிக் வண்டியை வாங்கி ஈக்கோ மோடில் ஓட்டிப் பழகுங்கள்.

hegdepooja: ஸ்வீட்டி.. பியூட்டி..!
hegdepooja: ஸ்வீட்டி.. பியூட்டி..!

facebook.com/karthekarna

ஒரு ஆணுக்கு தன் குடும்பத்தில் தனக்கு உண்மையில் என்ன மாதிரியான மதிப்பு, மரியாதை இருக்கிறதென்பதை குடையைத் தொலைத்து வீடு திரும்பும் நாளில் அறிந்து கொள்ளலாம்.

twitter.com/Anvar_officia

காலையில் பால் பாக்கெட்டில் ஆரம்பிச்சி, இரவில் மாவு பாக்கெட்டில் முடிவதே நடுத்தர வர்க்க வாழ்க்கை!

twitter.com/talksstweet

நம்மகூட கடைசிவரை இருக்கப்போவது சொந்தமோ பந்தமோ இல்ல... இந்த மொபைல் போன்தான்.

twitter.com/HAJAMYDEENNKS

மைதானத்துக்குள் ரோகித் சர்மாவைக் காண ஓடி வந்த ரசிகருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம்.

# அவர் பேட்டிங் இறங்கும்போது 5 நிமிஷம் பெவிலியன் பக்கம் வெயிட் பண்ணியிருந்தால் அவுட் ஆகி வரும்போது பார்த்திருக்கலாம்!

twitter.com/TRAMESH21548526

சோம்பேறித்தனம்தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது.

twitter.com/manipmp

சில கல்லூரிகளில் வாத்தியார்களைவிட வாட்ச்மேன்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் போல!

twitter.com/manipmp

நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக்கொள்வது போலத்தான்... நமக்கு நாமே டீ போட்டுக் குடிப்பதும்!

twitter.com/mohanramko

குஜராத்தில் டிசம்பர் 5-ம் தேதியோடு தேர்தல் முடிகிறது.

# பெட்ரோல் விலை 5-ம் தேதி வரை உயராது

twitter.com/saravankavi

ஆவின் பால் விலையேற்றம் சாதாரண மக்களை பாதிக்காது! - அமைச்சர் நாசர்!

# ஆமாமா... பால் வாங்கறவங்களை மட்டும்தான் பாதிக்கும்!

facebook.com/M.Elangovan

முற்றுப்பெறாத காதல், அப்போதைய தருணம் அப்படி, விதிப்பயன், நல்வாய்ப்பு அமையவில்லை என ஏதோ ஒன்று. அவரவர் வாழ்க்கைப் பாதைகள் திசைமாறி விட்டன... மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இன்று காலையில் ஒரு அலைபேசி அழைப்பு.

‘‘இந்தியா வந்திருக்கேன்...’’

‘‘ஓ! எப்போ, என்ன திடீர்னு?’’

‘‘தங்கை வீடு வாங்கியிருக்கா, புது வீடு பால் காய்ப்பு.’’

நான் உடனடியாகப் பரபரப்படைந்து இப்படிக் கேட்டேன்...

‘‘அபார்ட்மென்ட்டா, தனி வீடா, ரெடி கேஷா, லோனா, எந்த பேங்க்ல லோன் எடுத்தாங்க, யார் லோன் பண்ணிக் கொடுத்தாங்க, என்ன ரேட் ஆஃப் இன்ட்ரஸ்ட், மொதல்லியே சொல்லியிருந்தா நானே வாங்கிக் கொடுத்திருப்பேன்ல...’’

தொழில் புத்தி... மறுமுனையில் ஒரு சிறிய மௌனத்துக்குப் பிறகு ‘‘லூஸு’’ என்று சொன்னது என் காதில் கேட்டுவிட்டது.

Life has to go on... இல்லையா மக்களே?

facebook.com/PariAyyasami

பென்சிலை ஆங்காங்கே போட்டு வைத்திருக்கிறார்கள் என பிள்ளைகளைப் பார்த்து, ‘‘பொருளோட அரும தெரியிதா உங்களுக்கு?’’ என்று சீறி வெடித்துக் கொண்டிருக்கிறார் அம்மணி. கிச்சனில் அமைதியாகக் காட்சியளிக்கும் ஃப்ரிட்ஜைப் பார்த்துவிட்டு, நானும் அதே மாதிரி அமைதியாக உட்கார்ந்திருக்கிறேன்.

twitter.com/saravankavi

கேரளாவின் கண்ணூரில் தனது காரில் சாய்ந்ததற்காக 6 வயதுச் சிறுவனை நெஞ்சில் உதைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளானாம்!

# கல்வியறிவில் கேரளா முதல் இடம்னு சொன்னவங்களை யாராச்சும் பார்த்தீங்களா?

twitter.com/drkrvcvijay

ஒரு நாள் வெறும் potato என்று கவனிக்காத உலகம், நீ French fries ஆக மாறிய பின் கொண்டாடும்!

twitter.com/itz_radhi3

ஒரு நாள்தான் ஷாப்பிங் போய்ட்டு வந்தேன். எங்கடா இங்க இருந்த சம்பளத்த காணோம்!

therealandreajeremiah: அழகிய பிசாசு..!
therealandreajeremiah: அழகிய பிசாசு..!

twitter.com/amuduarattai

‘இது எங்க ஏரியா, நீ உள்ளே வராதே’ என்பது நாய்களின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று.

twitter.com/LAKSHMANAN_KL

எங்களைப் பொறுத்தவரை ஒரு கட்சியைப் பிரித்து, அதன் வலிமையைக் குறைத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை: அண்ணாமலை.

# இந்த விஷயம் உத்தவ் தாக்கரேவுக்குத் தெரியாமப் பாத்துக்கோங்க!

twitter.com/Kozhiyaar

ரொம்ப நாள் போன் பண்ணாதவங்க போன் பண்றாங்கன்னா ஒண்ணு கடன் கேட்கப் போறாங்க, இல்லை, திருமண அழைப்பிதழ் தரப்போறாங்க!

facebook.com/ramanujam.govindan

எனக்கு சொர்க்கம், நரகத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் திங்கள்கிழமை காலை என் மகளின் சாக்ஸை என் காலில் மாட்டிக்கொண்டே வீட்டுச் சாவியால் காரைத் திறக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது போன் செய்து ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே பாட்டு என்ன ராகம்?' எனக் கேட்பவர்கள் கட்டாயம் நரகத்துக்குத்தான் போவார்கள்.

twitter.com/itz_radhi3

யாராவது நமக்கு அட்வைஸ் பண்ணும்போது அதை சீரியஸா கேக்குற மாதிரி நடிக்குறதுதான் உலகத்துலயே கஷ்டமான வேலை!

twitter.com/RahimGazzali

படிக்கிற காலத்தில் நாங்களெல்லாம், ‘மழை பெய்தால் ஸ்கூல் லீவா சார்?'ன்னு ஆசிரியரிடம் கேட்கவே அவ்வளவு பயப்படுவோம். இப்ப உள்ள பசங்க எல்லாம் கலெக்டரிடமே இதை சோஷியல் மீடியா வழியாக டேக் செய்து கேட்டுடறாங்க.