சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே

ரஜினி - பிரதீப்
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - பிரதீப்

‘ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்புதான் அதிகம் ஆகியிருக்கு' என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான், ‘இந்தியா நல்லவேளை இங்கிலாந்திடம் தோற்ற

twitter.com/amuduarattai

தவறுகளைக் கண்டுபிடித்து பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் கூறிவிடுகிறார் என்ற வருத்தம் தி.மு.க-வுக்கு உள்ளது - வானதி சீனிவாசன்.

# திருக்குறள், ஆன்மிகம் என ஆராய்ச்சி பண்ணவே ஆளுநருக்கு நேரம் பத்தாது. இதற்கெல்லாமா நேரம் இருக்கு அவருக்கு?!

twitter.com/Kirachand4

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் அட்டையைப் புதுப்பிப்பது கட்டாயம்...

# புதுப்பிக்கும்போதாவது நம்ம முகம் நமக்கு அடையாளம் தெரியுமா?

ghibranofficial: ‘துணிவு’க்கு வெயிட்டிங்..!
ghibranofficial: ‘துணிவு’க்கு வெயிட்டிங்..!

twitter.com/balebalu

‘ரூபாய் மதிப்பு குறையவில்லை டாலர் மதிப்புதான் அதிகம் ஆகியிருக்கு' என்பதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான், ‘இந்தியா நல்லவேளை இங்கிலாந்திடம் தோற்றது, பாகிஸ்தானிடம் தோற்கவில்லை' என்று பெருமைப்பட்டுக்கொள்வது!

twitter.com/Kozhiyaar

அவங்க ஜெயித்ததுகூட வலிக்கலை, ஆனா ‘போய் வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா கூட்டிட்டு வா' என்கிற மாதிரி டீல் பண்ணுனதுதான் ரொம்ப வலிக்குது!

twitter.com/ilayakaanchi

எதைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை... தேடலின் முடிவில் நிச்சயம் எதையேனும் தொலைத்திருப்பேன்!

twitter.com/oorkkavalaan

சாலையில் தேங்கிய மழைநீரில் நடக்கும் நாய், ஒருசேர வானத்தையும் பூமியையும் கடக்கிறது!

twitter.com/manipmp

பர்சனல் லோன் பாக்கி இருக்கும்போதே, விதி கார் லோன் வாங்க காலிங் பெல் அடிக்கும்!

twitter.com/Anvar_officia

25-30 பேர்கூட ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறது எனக்கு என்னவோ பிக்பாஸ் வீட்டில் இருக்கிற மாதிரியே இருக்கு!

twitter.com/oorkkavalaan

ஹைவே மேம்பாலம் என்பது ஒரு மிகப்பெரிய ‘நிழற்குடை..!’

twitter.com/HAJAMYDEENNKS

ரூபாய் நோட்டுல இப்ப யாரும் எழுதுறது இல்ல. சமீபகாலத்துல பொருளாதாரரீதியில் நடந்துள்ள ஒரே முன்னேற்றம் இதுதான்!

twitter.com/itz_radhi3

நம்ம கையில மொபைல் இருக்கும்போது எந்தப் பிரச்னையும் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. மொபைல ஒரு பக்கம் வச்சிட்டு உக்காந்தோம்னா, நம்ம பிரச்னை மட்டும் இல்லாம அடுத்தவன் பிரச்னையும் சேர்த்து ஞாபகம் வருது!

meerajasmine:வெல்கம் மீரா!
meerajasmine:வெல்கம் மீரா!

twitter.com/Suyanalavaathi

‘லவ் டுடே' பாத்துட்டு போனை மாத்துனதுக்கு ஒரு ஐபோன் தேறுச்சு. அப்படியே பிரேக்கப் பண்ணிட்டு ஓடிற வேண்டியதுதான்...

facebook.com/gokul.prasad.7370

தமிழ்த் திரைப்படங்களில் என்னை மிகவும் எரிச்சலூட்டக்கூடிய காட்சி. ஒரு சிறுவனின் கையில் தேநீர்க் குவளைகளைக் கொடுத்து அதன் பின்னாலேயே க்ளோசப்பில் பின்தொடர்வது. இதுவரை 938 தடவை எடுத்துவிட்டார்கள்.

facebook.com/NaveenKumarN85

ஜி.பி.முத்துவின் எதார்த்தமும் வெகுளித்தனமும் மட்டுமே அவரை இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருக்கிறது என்றால், நாம் அனைவரும் அவற்றைத் தொலைத்துவிட்டோம் என்று அர்த்தம்.

facebook.com/murugavel.raju.9

யாராவது வெளிநாட்டுக்காரர்கள் நமது டி.வி சீரியல்களைப் பார்த்தால், இந்தியாவில் குடும்பத் தலைவியாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று நினைப்பார்கள். பாம் வைப்பது, பாய்சன் கலப்பது, பாம்பை விட்டுக் கடிக்கச் செய்வது, இன்னபிற கொலை பாதகங்கள் எல்லாம் வில்லிக்கு செய்யத் தெரிய வேண்டும். கதாநாயகியாக இருந்தால் இதையெல்லாம் கண்டுபிடிக்கத் தெரிய வேண்டும். நம்ம அக்யூஸ்டுகளுக்கே இத்தனை வித்தை தெரியாதே!

facebook.com/shamshrikha.shamshrikha

பூமர்களாக இருப்பதில் குறையொன்றுமில்லை. அந்த விழுமியங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கக் கிடைத்த அந்த உலகம் அப்படியானது. சத்தியமாய் அது புனிதமானதுதான். அந்தப் பாதையில் நின்றுகொண்டு இன்றைக்கானவர்களை முன்முடிவுடன் அணுகுதல்தான் தவறானது. அங்கேதான் அடிக்க ஆரம்பிக்கிறார்கள். வெறுப்பு அங்கிருந்துதான் தொடங்குகிறது.

pradeep_rangaathan: ஆரம்பிக்கலாமா தலைவா..!
pradeep_rangaathan: ஆரம்பிக்கலாமா தலைவா..!

twitter.com/FareethS

உ.பி: சிறுநீரகத்தில் உள்ள கல்லை அகற்ற மருத்துவமனை சென்றவருக்கு சிறுநீரகத்தையே அகற்றிய மருத்துவர்.

# கிட்னி இருக்கிறதாலதான கல்லு சேருது. அதனாலதான் கிட்னியவே எடுத்திட்டோம்..!

twitter.com/THARZIKA

காலத்தின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பிப்பதுதான் மனிதனுக்குத் தெரிந்த விடுதலை.

twitter.com/SS_twtz

ஜன்னல்களே

இல்லாத ஒரு வீட்டில்

மழலையின் கைகள்

வரைந்த

கோணலான நிலவு

தேய்வதேயில்லை.

twitter.com/kozhiyaar

என்ன சாப்பிட்டா ருசி நல்லா இருக்கும்னு ஆரம்பித்து, என்ன சாப்பிட்டா உடம்பு நல்லா இருக்கும்னு முடிகிறது வாழ்க்கை!

twitter.com/Qalbi_zm

‘எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை' என உணரும்போது கிடைத்துவிடுகிறது ஒருவித மன நிம்மதி.

twitter.com/Greesedabba2

இன்றைய தேதியில், கார் பார்க்கிங் இல்லாத கல்யாண மண்டபம் என்பது, முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாத சலூனிற்கு சமம்.

twitter.com/amuduarattai

நம் வீட்டு விசேஷங்களில் யார் முதலில் வந்து நிற்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ, அவர்தான் கடைசியாக வருவார்.

twitter.com/saranya121289

`திறமை' என்பது ஸ்லீப்பர் செல் போல தான், சில பேருக்கு நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும், சில பேருக்கு கடைசிவரைக்கும் வாய்ப்பே கிடைக்காது.

facebook.com/selvu

‘‘இப்போ வந்து சார்... நீ இந்தி படிச்சா, வடக்கே இருந்து நம்மிள் வந்து உன்னை இந்தி படின்னு சொல்லும்போது, நான் இந்தி படிக்க மாட்டேன்னு இந்தில சொல்லலாம். அதுக்காகவாச்சும் இந்தி படி சார்... அப்படியே கார்டு மேல நம்பர் சொல்லு...''

facebook.com/sridharfc

‘திருமணத்துக்குப் பிறகும் இரவு 9 மணி வரை நண்பர்களுடன் நேரம் செலவிட மணமகனை அனுமதிக்க வேண்டும்; போன் செய்து தொந்தரவு செய்யக் கூடாது' என்று திருமண நிகழ்விலேயே மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக ஒரு செய்தி பார்த்தேன்.

அது உண்மைச் செய்தியா அல்லது யாரோ கிண்டலுக்கு உருவாக்கியதா என்று தெரியாது. உண்மையெனில் ஆச்சரியமான அணுகுமுறை. காரணம், திருமணத்துக்குப் பின் தனது முந்தைய நட்புகளுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போவது வழக்கமாக பெண்களுக்குத்தான் நடக்கும். பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத் தோழிகளுடன்கூட அவர்களால் நட்பைத் தொடர இயலுவதில்லை. ஆண் நட்புகள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

பெண்ணுக்குத்தான் கல்யாணம் ஆனவுடன் சொந்த ஊர், அம்மா, அப்பா, உற்றார் உறவினர், நட்புகள், நாய்க்குட்டி என்று தனக்குப் பரிச்சயமான எல்லாவற்றையும் துறந்துவிட்டு கணவன் வீட்டுக்கு மாற்றலாக வேண்டியிருக்கிறது. பலர் வேலையையும் துறந்து போகிறார்கள். இவ்வளவும் அந்தப் பெண்ணுக்கு நிகழும்போது, பிறந்ததிலிருந்து தான் வசித்த ரூமைக்கூட மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல், தன் அம்மாவின் முந்தானைத் தலைப்பையும் விடாமல் பற்றிக்கொண்டே அந்த ஆண்மகன் தன் வாழ்வைத் தொடர முடிகிறது.

இந்த அவலமான சிஸ்டம் குறித்துக் கவலைப்படுவதற்கு ஆண்களாகிய நமக்கு வக்கில்லை. ஆனால் தன் நண்பர்களுடன் சரக்கடிக்க அனுமதிக்க வேண்டும் என்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் வெட்கங்கெட்டதனம் மட்டும் இருக்கிறது.

divyaspandana:பொல்லாதவன் -2 எப்போ?
divyaspandana:பொல்லாதவன் -2 எப்போ?

facebook.com/elambarithi.k

நாளை மீது எதிர்பார்ப்புகள் கொண்டவனுக்கு விடியல் ஒன்று மட்டுமே ஆறுதல்.

facebook.com/erodekathir

வயது ‘அட, இவ்ளோ ஆகிடுச்சா!’ என்பதுபோல் பெரிய எண்ணாகத் தெரிகின்றது. அதே வயதை மாதமாகவோ அல்லது நாள்களாகவோ கணக்கிட்டுப் பார்த்தால் ‘அட, இவ்ளோதானா’ன்னு ஆச்சரியமா இருக்கு!

twitter.com/suyanalavaathi

சனிக்கிழமை நைட்டுக்கும், ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கும் இடையில இருக்குற சந்தோஷத்துக்குப் பெயர்தான் weekend!

twitter.com/jiyaanofficial

Finally got married சொல்றாங்க, finallyன்னு எத வச்சு முடிவு பன்றாங்க... இல்ல வேற அர்த்தம் இருக்கா... ஒன்னும் புரியல!

twitter.com/senbalan

ஒரு பக்கம் “படிக்காதே, ஆடு மேய், விவசாயம் செய், பெட்டிக்கடை வை” என பிரசாரம் செய்துகொண்டே இன்னொரு பக்கம் இட ஒதுக்கீட்டைத் தங்களுக்குச் சாதகமாக ஏன் மாற்றுகிறார்கள் என்பது புரிந்தால் வாழ்க்கையில் உருப்படலாம்.

facebook.com/மீனாட்சி

கையறு நிலை என்பது, வெள்ளிக்கிழமை அதுவும் நேத்து வைத்த மீன் குழம்பு ப்ரிட்ஜில் இருப்பது.