கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

வலைபாயுதே...

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

இந்தத் தோசையை அப்பாவுக்குக் குடுத்துட்டு அடுத்த தோசையை உனக்குத் தரேன்.

twitter.com/kumarfaculty

எர்வாமேட்டின் சொல்கிற மாதிரி மனிதனின் வழுக்கைத் தலையில் முடி முளைத்தால், அமேசான் காடுகள் வழுக்கையாகிப்போகும்!

twitter.com/manipmp

வருமான வரி கட்டுமளவு சம்பாதிப்பது வரம், வருமான வரி ரெய்டு வருமளவு சம்பாதிப்பது சாபம்.

twitter.com/Nimeshiga

பர்ஸில் பணம் இல்லாதபோது வரும் பதற்றத்தைவிட, மொபைலில் சார்ஜ் இல்லாதபோது அதிக பதற்றத்தை உருவாக்கியுள்ளது டிஜிட்டல் உலகம்!

facebook.com/AuthorPara

பின்னி மில், கிண்டி கேம்ப கோலா வளாகத்துக்குப் பிறகு அதிக சண்டைக் காட்சிகள் நடக்கும் இடம் சத்தியமூர்த்தி பவன்தான்.

twitter.com/HAJAMYDEENNKS

மாசக் கடைசியில் பேச்சுலர்ஸ் ரூமில் போய் ‘உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா'ன்னு கேட்கக்கூடாது. ஏன்னா, அங்கே பேஸ்ட்டே இருக்காது!

twitter.com/Suyanalavaathi

gpay, paytmனால பாதிக்கப்பட்டது யாரு தெரியுமா சார் உங்களுக்கு? ரெண்டு ரூபாய் சில்லறை இல்லன்னு சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா சாக்லேட்ட விக்கிற பெட்டிக்கடை வியாபாரிதான் அது!

twitter.com/san_officl

வீட்டம்மா டு மகனார்: இந்தத் தோசையை அப்பாவுக்குக் குடுத்துட்டு அடுத்த தோசையை உனக்குத் தரேன்.

மீ டு வீட்டம்மா: நா அப்புறம் சாப்பிடுறேன், இப்ப குழந்தைக்கே குடு...

வீட்டம்மா டு மீ: இந்தத் தோசையில எண்ணெய் அதிகமாயிடிச்சி, அதான் உனக்குத் தரேன். குழந்தைக்கு நெய் தோசை செஞ்சி தரேன்.

Aishwaryaraibachchan_arb: க்யூட்னெஸ் ஓவர்லோடட்..!
Aishwaryaraibachchan_arb: க்யூட்னெஸ் ஓவர்லோடட்..!

twitter.com/RahimGazzali

பல ஊர்களில் நெடுஞ்சாலை என்பது மாடுகள் படுத்திருக்கும் கோசாலை.

twitter.com/Greesedabba2

சாதாரணமா நடந்து போனா பக்கமா தெரியற 700 மீட்டர் தூரம், கூகுள் மேப் போட்டு போனா 7 கிலோ மீட்டர் மாதிரி தெரியுது!

twitter.com/Thaadikkaran

கவலைல இருக்குற மனுஷன் அழுது முடிச்சிட்டு தெம்பாகி புது மனுஷன் ஆகிடுறான். அடக்கி உள்ளேயே வச்சிக்குற மனுஷன் நோயாளி ஆகிடுறான்..!

facebook.com/NaveenKumarN85

‘அடுத்த முறை மோடி அவ்வளவுதான், இம்முறை மாற்றம் நிச்சயம், இனி இந்தியாவுக்கு விடிவு காலம்தான்' போன்ற உத்வேகங்கள் பீறிக்கொண்டு எழுகிறதா? எனக்கும் அப்படித்தான் இருந்தது. அப்படி உத்வேகம் பொங்கும்போதெல்லாம் யாரேனும் ஒரு வட இந்திய நண்பனுடன் ஐந்து நிமிடம் உரையாடுங்கள். இயல்புநிலைக்குத் திரும்பிவிடுவீர்கள்.

twitter.com/Itz_Araviind

புரண்டு புரண்டு படுத்தாலும் வராத தூக்கம், சலூன் கடைக்காரர் தலைல கத்தரிக்கோல் வச்ச உடனே வந்திடுது!

twitter.com/its_Jokker

உங்களின் மீதான ஆச்சரியங்கள் விலகாதிருக்கும் வரை மட்டுமே, அவர்களின் விருப்பப் பட்டியலில் நீங்கள் இருப்பீர்கள். ஆச்சரியம் விலகிய கணத்திலிருந்து, நீங்கள் அந்நியப்பட்டுப் போவீர்கள்!

twitter.com/iidhayavan

எங்களுக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் மட்டுமல்ல, டெல்லிக்கும் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டார் இ.பி.எஸ்: டிடிவி.தினகரன்

# ஆமா, இ.பி.எஸ்ஸை ஏன் கொண்டு வந்தீங்க?

ஓ.பி.எஸ் துரோகம் பண்ணிட்டார்னு!

twitter.com/LAKSHMANAN_KL

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 2023-ல் முதலிடம் பிடிக்கும்: ஐ.நா தகவல்.

இதையும் ‘வளர்ச்சி'ன்னு கணக்கு காட்டி, 2024 தேர்தல்ல பிரசாரம் செய்வாங்களோ?!

Radikaasarathkumar: நாங்களும் ரௌடிகதான்..!
Radikaasarathkumar: நாங்களும் ரௌடிகதான்..!

twitter.com/Kozhiyaar

கறி வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும் கணவர்களுக்கான ஒரே பிரச்னை, ‘‘என்னத்த சொல்லிக் கொடுத்து வளத்தாங்களோ, எல்லாம் முத்தலா வாங்கிட்டு வந்திருக்கீங்க!''

facebook.com/magudeswaran.govindharajan

90ஸ் கிட்ஸுக்கும் நல்ல தமிழ்ச்சொல் சொல்லுங்கள் என்கிறார்கள். ‘தொண்ணூற்றுப் பொடியர்கள்' எனலாமா? பேச்சுவழக்கில், ‘தொண்ணூத்தானுங்க.'

facebook.com/nchokkan

ஆங்கிலத்தில் இலை, தண்டு, வேர் போன்றவற்றைத்தான் Vegetable என்று சொல்லவேண்டுமாம், விதை உள்ள எல்லாம் Fruitsஆம். வெள்ளரிக்காய், தேங்காயெல்லாம்கூடக் கொஞ்சம் பரவாயில்லை, கத்தரிக்காயை எப்படி ஐயா பழமாக நினைப்பது!

twitter.com/LAKSHMANAN_KL

காங்கிரஸ் கட்சி மீண்டும் இந்தியாவைக் கட்டமைக்கும்: கே.எஸ்.அழகிரி.

மொதல்ல காங்கிரஸ் கட்சியை மீண்டும் கட்டமைக்கிற வழியைப் பாருங்க!

twitter.com/SHIJA25

அமித்ஷா சென்னை வரும்போதெல்லாம் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை: எடப்பாடி பழனிசாமி

# அண்ணே, நீங்க மைண்ட்வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசுறீங்க!

twitter.com/itz_radhi3

நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் சண்டை போடவில்லை என்றால், நீங்கள் அவர்களுடன் நேரம் செலவு பண்ணவில்லை என்று அர்த்தம்!

twitter.com/mohanramko

‘‘ஏங்க, இந்தப் பக்கம் வாக்கிங் போகாதீங்க...''

‘‘ஏன்டா?''

‘‘இந்தப் பக்கம் வடை போடுற கடை எதுவுமே இல்லை. நேரா போயி லெப்ட் எடுத்தா ரெண்டு மூணு கடை இருக்கு!''

Sobhitad: பிளாக்பஸ்டர் டீம்!
Sobhitad: பிளாக்பஸ்டர் டீம்!

twitter.com/parveenyunus

கூட்டணி குறித்து விவாதித்தோம். ஆனால் அதை விவரிக்க முடியாது - கமல்

# நீங்க விவரிச்சிட்டாலும் எங்களுக்குப் புரியவா போகுது?

facebook.com/shahjahanr

கண் மருத்துவரிடம் சென்றிருந்தேன். பெரியவளும் நானும் வரிசையில் காத்திருந்தோம். எய்ம்ஸ் மருத்துவமனை. OPD-யில் தினமும் கண் சிகிச்சைப் பிரிவுக்கு வருகிறவர்கள் மட்டுமே சுமார் 1,500-2,000 பேர் இருப்பார்கள். ஓபிடி-க்கு சுமார் 70 மருத்துவர்கள்.

நாங்கள் தவறுதலாக வேறொரு வரிசையில் ஏற்கெனவே ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து, இப்போது சரியான இடத்தில் மீண்டும் புதிய வரிசையில் இருந்தோம். எங்களுக்கு முன்னால் பத்துப் பேராவது இருந்திருப்பார்கள். பின்னால் பத்துப் பதினைந்து பேர் இருந்திருப்பார்கள். முன்னால் இருந்தவர்கள் குறையக் குறைய முன்னேறிக்கொண்டிருந்தோம். இன்னும் ஆறேழு பேர்தான் முன்னால் இருந்தார்கள். நிற்க முடியாத சிலர் பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள்.

புதிதாக வந்த ஒரு பெண் நிற்கவே முடியாதவர் போல பெஞ்சில் வந்து உட்கார்ந்துகொண்டார். சிறிது நேரம் கழிந்தது. எனக்கும் முன்னால் இப்போது இருவர்தான் இருந்தார்கள். அந்தப் பெண் எனக்கும் முன்னால் வந்து வரிசையில் நிற்காமல் கீழே உட்கார்ந்துகொண்டார். ‘என்னை முதலில் போக விடுங்கள்’ என்பதுபோல பாவனையாலேயே தெரிவித்தார். சரி, போகட்டும் என்று விட்டு விட்டோம். ஏதோ தனக்குள் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார். ‘தலைவலி தாங்க முடியவில்லை போல... அதான் சத்தம் போடுகிறார்’ என்று நினைத்துக் கொண்டோம்.

அவருடைய முறை வந்ததும் டாக்டரிடம் போனார். விவரத்தைச் சொன்னார். பொதுவாகவே மிகப் பொறுமையாகவே பதிலளிக்கும் டாக்டர் பெண்மணி அந்தப் பெண்ணிடம் கத்திய பிறகுதான் விஷயம் புரிந்தது. அந்தப் பெண்மணி கூறிய பிரச்னை: ஊசியில் நூல் கோக்க முடியலே!

twitter.com/Greesedabba2

முன்ன எல்லாம் ஸ்வீட்ஸ் ஒரு கிலோ என்ன விலைன்னு எழுதி வைப்பாங்க. அப்படியே படிப்படியா அரைக் கிலோ, கால் கிலோன்னு குறைச்சுக் குறைச்சு, இப்ப 100 கிராம் என்ன விலைன்னு எழுதி வைக்கறாங்க. படிக்கறவனை, ‘அட, விலை கம்மியா இருக்கே'ன்னு வாங்கத் தூண்டற வியாபார தந்திரம்.

Rashmika_mandanna: அலங்கார அல்லி நிலா!
Rashmika_mandanna: அலங்கார அல்லி நிலா!

twitter.com/Kozhiyaar

நம்ம உடல்நலனில் அக்கறையாகப் பேசுபவர் நெருங்கிய உறவினராகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, இன்ஷூரன்ஸ் ஏஜென்டாகவும் இருக்கலாம்!

twitter.com/h_umarfarook

கலையைப் பற்றித் தெரியாதவர்களுக்குக் கலைமாமணி விருது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

# கிரிக்கெட்டைப் பற்றித் தெரியாத ஜெய்ஷாதானே பி.சி.சி.ஐ செயலாளர்?!

twitter.com/Manimaa168

முகமூடி அணிந்திருக்கிறார்கள் என்பதைவிட, அதனை எப்படி லாகவமாக ஆளுக்கேற்றாற்போல் மாற்றி அணிகிறார்கள் என்பதே ஆச்சரியம்!

twitter.com/saravankavi

‘‘மயக்க மருந்தே கொடுக்காமல், கருத்தடை ஆபரேஷன் பண்ணியிருக்காங்க...''

‘‘அந்த ஈரவெங்காயமெல்லாம் வேணாம். அது உத்தரப்பிரதேசமா, பீகாரான்னு மட்டும் சொல்லு!''

twitter.com/ItsJokker

God ஐயப்பன்: வருஷம் முழுக்க குடிச்சி, கூத்தடிச்சி, சல்லித்தனம் பண்ணிட்டு இவர் ஜாலியா இருப்பாராம். இந்த ஒரு மாசம் மாலை போட்டு பயபக்தியா விரதம் இருந்ததும், நாங்க உடனே இவருக்கு நல்லது பண்ணணுமாம்...