
இதுக்கும் ஏதாவது வித்தியாசமா சொல்லுவாக... காத்திருப்போம். தட்டிக்கேட்க வேண்டிய நேரம் முட்டுக் கொடுப்பது கேவலம் சென்ட்ராயன்...
twitter.com/Iyankarthikeyan
‘‘ஓசி!’’
‘‘அது பேச்சு வழக்குங்க...’’
‘‘ஓஹோ... பெரியார் போட்ட பிச்சை..?’’
இதுக்கும் ஏதாவது வித்தியாசமா சொல்லுவாக... காத்திருப்போம். தட்டிக்கேட்க வேண்டிய நேரம் முட்டுக் கொடுப்பது கேவலம் சென்ட்ராயன்...
twitter.com/pandi_twits
Family: எப்பதான்டா கல்யாணம் பண்ணுவ?
Me: 95% பணிகள் முடிவடைந்துவிட்டது. விரைவில்...
twitter.com/NaveenFilmmaker
ஈரானில் பெண்கள் ஹிஜாபை எரித்துப் போராடுகின்றனர். இந்தியாவில் ஹிஜாப் தடையை எதிர்த்துப் போராடுகின்றனர். இரண்டு போராட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை, ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது. அணிந்தே தீரவேண்டும், அணியவே கூடாது எனும் இரண்டு கட்டுப்பாடுகளும் ஆதிக்கமே.

twitter.com/_blankie_
ரீசன்ட்டா வந்த லிரிக்செல்லாம் பாரேன்... மெழுகு டாலு... டிப்பம் டப்பம்... தாய்க்கெழவி... இப்ப ஒண்ணு வந்துருக்கே என்னது அது... பிம்பிளிக்கி பிளாப்பி!
twitter.com/amuduarattai
“கோட்சே தற்காப்புக்காகத்தான் சுட்டார்” என்று யாரும் இன்னும் சொல்லாமல் இருப்பது ஆச்சரியமே.
twitter.com/THARZIKA
எல்லோரையும் நல்லவிதமா புரிஞ்சுக்கிறதுல ஒரு நிம்மதி இருக்கு.
twitter.com/Anvar_officia
நேரத்தை நாம நிறுத்த முடியாதுதான், ஆனா நேரம் நம்மளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு போய் நிறுத்தும்!
twitter.com/Suyanalavaathi
வீட்டில் உள்ள பரணை சுத்தம் செய்ய ஆரம்பித்தால், வீட்டுக்குள்ளேயே பல பண்டைய பொக்கிஷங்கள் கிடைக்கின்றன!
twitter.com/sasitwittz
அதிர்ஷ்டம் அப்படிங்கறது எப்போதுமே கூட வரணும்; இல்லனா எப்பவுமே வரக்கூடாது. வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்..!
twitter.com/mohanramko
‘‘எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 120% முடிஞ்சிடிச்சின்னு போட்டுக்க...”
‘‘எல்லோரும் சிரிப்பாங்க...”
‘‘அப்ப ஒரு 95%ன்னு போட்டுக்க!”
twitter.com/Thaadikkaran
ஒரு செயலைச் செய்யுறதுக்கு ‘அப்றம்’ங்குற வார்த்தையை விட்டுட்டு ‘இப்போவே’ங்குற வார்த்தையை பாலோ பண்ணுனவங்கதான் ஜெயிச்சிருக்காங்க...

twitter.com/laksh_kgm
ஒரு குடிமகனுக்குக் கல்வி மறுக்கப்படும்பொழுது, நாடு ஒரு கற்றவனை இழக்கிறது.
twitter.com/Kannan_Twitz
என்னைத் தொலைக்க ரொம்ப மெனக்கெட வேண்டாம், சிறு அலட்சியமே போதும்!
twitter.com/teakkadai1
நகரங்களில் 80% பேர் தினமும் பணிக்குச் செல்பவர்கள்தான். அரசு அலுவலகங்கள்/வங்கிகள் மாதத்தில் ஏதாவது ஒன்றோ/இரண்டோ ஞாயிற்றுக்கிழமைகள் செயல்படலாம். ஒரு சின்ன வேலையாக இருந்தாலும் ஒரு வேலை நாள் அனாமத்தாகப் போய்விடுகிறது. வங்கி KYC updateக்குக்கூட நேரில் வரச்சொல்கிறார்கள்.
twitter.com/Kozhiyaar
குழந்தைகள் மிச்சம் வைக்கும் உணவை உண்டு முடிப்பதாலேயே அம்மாக்கள் அதிகம் எடை கூடுகிறார்கள்!
twitter.com/Greesedabba2
எம்.ஜி.ஆர் தலைமையை விட்டுவிட்டு வந்தேன். போயும் போயும் எடப்பாடி தலைமையிலா அ.தி.மு.க-வில் இணைவேன்? - சுப்புலட்சுமி ஜெகதீசன்.
# ஓ.பி.எஸ்: ஒருவேளை இந்த கௌசிக் தலைவரா வந்தா..?
twitter.com/saravankavi
எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்காம்! அது என்னன்னா, சாப்பிட்டுட்டுத் தூங்குறதாம்! அதுல ஒரு பிரச்னை இருக்கு. அது என்னன்னா, சாப்பாட்டுக்கு வழி இல்லைன்றதுதான்..!
twitter.com/itz_radhi3
எல்லாத்தையும் நாளைக்குச் செய்யலாம்னு நினைக்கக்கூடாது. நாளன்னைக்கும் செய்யலாம்!
twitter.com/mohanramko
அமாவாசை அன்று: கா கா கா கா
தட் காக்கா: கூப்பிட்டே கதறட்டும் சார். மீதி நாள்ல ஒரு வாய் சோறு வைக்க மாட்டாங்க சார்!

facebook.com/dvaipayana.krishna
TTF வாசன் இரண்டு நிமிடப் பேச்சில்: 200 கிலோமீட்டர் போவேன்... இப்பதான் 150 கிலோமீட்டர். 22 வயசுதான் ஆகுது... ducati புக் பண்ணப்போறேன். ஷார்ட் பிலிம் வேலை போய்ட்டு இருக்கு... அடுத்து feature filmக்குள்ள enter ஆகிடுவோம். ducati டெலிவரி எடுக்கணும்... K2K போறோம். கன்னியாகுமரி 2 காஷ்மீர். பைக் எடுத்தா 300, 400 கிலோமீட்டருக்கு ஒரு தடவை பெட்ரோல் break மட்டும்தான். காஷ்மீர்லதான் போய் சாப்பிடுவேன்... அடுத்து லடாக், நார்த் ஈஸ்ட்...
Me to myself: லைஃப்ப தொலைச்சிட்டியேடா!
twitter.com/prabhu65290
கலர் கலராக மழையை வர வைக்க குழந்தைகளால்தான் முடியும், டிராயிங் புக்கில்!
twitter.com/Greesedabba2
என்ன முடிவு எடுக்கறதுன்னு குழப்பமான சூழ்நிலைல மாட்டிக்கிட்டா, நாம முடிவு எடுக்கக் கூடாது. தேவைன்னா முடிவு நம்மளை எடுக்கட்டும்னு விட்டுறணும்.
twitter.com/DrNagajothi11
இலவசம்னு சொல்லுறதே சுயமரியாதைக்கு இழுக்கான துன்னுதான் இலவசங்களை ‘விலையில்லா பொருள்கள்’னு சொல்ல ஆரம்பிச்சோம். இப்ப இலவசத்தை ஓசின்னு சொல்லுறத மட்டும் மக்கள் மொழின்னு பேசுறதெல்லாம் சுயமரியாதைக்கு இழுக்கா இல்லையா?
twitter.com/Kannan_Twitz
ஐபோன் வாங்குனதும் நண்பர் ஒருவர் ‘ஏன் காச கரியாக்குற, இவ்வளவு ஆடம்பரம்லாம் தப்பு’ன்னு அட்வைஸ் பண்ணுனாரு. நான்கூட பெரிய பொருளாதார நிபுணர் போலன்னு கம்முன்னு கேட்டுக்கிட்டேன்! அவரு நேத்து நைட்டு சீட்டு விளையாடி 35,000 விட்டுட்டு வந்துட்டு ‘வாழ்க்கைன்னா எஞ்சாய் பண்ணணும்’னுட்டுப் போறாரு.
facebook.com/RedManoRed
அதற்குத் தகுந்தவாறு நம்மைச் சரியாக மாற்றிவிடும் இந்தச் ‘சூழ்நிலை’க்கு எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும்!
twitter.com/Greesedabba2
ஒரு கேள்விக்கு உண்மையாக பதிலளிப்பவன், கேள்வி கேட்டு முடிக்கப்படும் ஒரு விநாடி முன்பே பதில் சொல்லத் தொடங்கிவிடுவான் என்று அமெரிக்க ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
facebook.com/Ramvasanth
திங்கட்கிழமை காலை ஏழரை - ஒன்பது... அத்தனை பாட்டிகளும் செத்துவிடுகிறார்கள்.