Published:Updated:

வலைபாயுதே

Gal Gadot
பிரீமியம் ஸ்டோரி
Gal Gadot

சேர்வராயன் மலைக்குக் கீழே மெயின் ரோடிலேயே காட்டெருமைகள் வந்து மேய்வதைக் கண்டு படம் பிடித்தேன்.

வலைபாயுதே

சேர்வராயன் மலைக்குக் கீழே மெயின் ரோடிலேயே காட்டெருமைகள் வந்து மேய்வதைக் கண்டு படம் பிடித்தேன்.

Published:Updated:
Gal Gadot
பிரீமியம் ஸ்டோரி
Gal Gadot

facebook.com/Neethujan Bala

பிக்பாஸில் இந்த முறை வந்தவர்கள் யார் யார் என்றே தெரியவில்லை. டி.வி பார்ப்பதை விட்டு வேறு வருடக் கணக்கு ஆகிவிட்டது. முகங்களே தெரியவில்லை. இப்படித்தான் ஒருவர் வந்தார். சிமென்ட் குழைக்கும் வேளையில் மட்டும் லேபர்களுக்கு சைட்டில் நாம் அணியக் கொடுக்கும் கம் பூட்ஸ் அணிந்திருந்தார். பின்வருமாறு பேசினார்: “அடுத்து வரப்போகிறவரை வரவேற்பதில் இந்த நிகழ்ச்சி பெருமைகொள்ள, முதன்முறையாக என்றெல்லாம் இதை அடிக்கோடிட்டுக் காட்டாமல் எதார்த்தமாக இந்த நிகழ்ச்சியில் இதையும் ஒரு முக்கிய நிகழ்வாக ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பதில் பெருமை கொள்கிறோம் என்பதைத்தான் நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.”

கமல் என்று கண்டுபிடித்தேன்.

twitter.com/RVikraman

நூறு நாள் வேலை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று நினைத்திருப்பார் அண்ணன். அண்ணன் சீமானும் அவர் தம்பிகளும் ஒரே ஒரு நாளாவது உண்மையான நூறு நாள் வேலைக்குப் போய் வர வேண்டும்.

Malavika Mohanan - ஸ்டைலு ஸ்டைலுதான்!
Malavika Mohanan - ஸ்டைலு ஸ்டைலுதான்!

twitter.com/pachchakkili

‘காலம் முழுக்க என் கூடவே இருப்ப தானே’ என்று கேட்டவங்க எல்லோரும் இன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ஆப்ஷனை ஒழிக்கணும்னு சொல்றாங்க...

twitter.com/MrElani

அவசரமா பிரசவத்துக்கு கால் பண்ணினா, ‘Namaskar, Let us united’னு ஆரம்பிச்சி நீட்டி முடிக்கறதுக்குள்ள புள்ளக்கி காதுகுத்தே வந்துரும் போல!

twitter.com/skpkaruna

சேர்வராயன் மலைக்குக் கீழே மெயின் ரோடிலேயே காட்டெருமைகள் வந்து மேய்வதைக் கண்டு படம் பிடித்தேன். இந்த மழைக்காலத்தில் கூட காட்டெருமைகளுக்குத் தேவையான உணவு கிடைக்காத அளவுக்கு அடர்வனங்களுக்குள் மாடுகளை மேய்த்து நாசமாக்கு கின்றனர். ஆட்கொல்லி புலிகளின் மாற்றத்துக்கு இதுபோன்றவைதான் ஆரம்பப் புள்ளி.

twitter.com/Nattu_G

வூட்டம்மா பாப்பாவை எதுக்கோ ‘தண்டம்’னு திட்ட, ‘நான் தண்டம் இல்ல, சிங்கம்’ங்குது. பாப்பா வளர்ந்து வர்ற வரைக்கும் ஹரி படமெடுப்பார் என நம்புகிறேன். வசனகர்த்தா ஆக்கிடலாம்.

Rahman - பொன்னியின் செல்வர்கள்!
Rahman - பொன்னியின் செல்வர்கள்!

twitter.com/நீலகேசி

இந்தப் பொண்டாட்டிங்க அலப்பறை தாங்க முடியல. கோயிலுக்குப் போனா ‘சட்டைய கழட்டு, பனியன கழட்டு’ன்னு அவ்ளோ கூட்டத்தில் பேர் பாடியா நிக்க விடுறது. வீட்டு வாசலில் ஸ்லீவ்லெஸ் பனியனோடு நின்னா, ‘உள்ள வாங்க, அடுத்த வீட்டுக்காரி பார்ப்பா, எதிர்வீட்டுக் காரி பார்ப்பா’ன்னு முறைக்குறது. # Husband பாவங்கள்

twitter.com/NeoDravidian

நாலு பேரு முன்னாடி வாழ்ந்து ‘காட்டணும்’னு என்னத்தையாச்சும் செய்றாங்க. அப்புறம் நாலு பேரு கண்ணு பட்டுடும்னு திருஷ்டி பொம்மை கட்டுறாங்க. Crazy Fellows!

twitter.com/balasubramni1

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹35 குறைக்க பா.ஜ.க தயாராக உள்ளது: அண்ணாமலை

‘ஆனால், நேரு காலத்தில் போடப்பட்ட பொருளாதாரத் திட்டம்தான் அதைக் குறைக்கத் தடுக்குது.’ அடுத்து அப்படித்தானே சார் சொல்லுவீங்க?

twitter.com/LAKSHMANAN_KL

நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி ‘ஒரே மாவட்டம், ஒரே செங்கல்’ திட்டமா ஜீ..?!

twitter.com/ItsJokker

எவ்ளோ சொன்னாலும் கடைசிவரை கதைகள் தீராத நபர்கள் 2 பேர். ஒன்னு சீமான், ரெண்டாவது கமல்.twitter.com/shanmugamchin10

மூன்றாம் ஆண்டாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம்!

அதே நேரத்தில் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையும், கடன் தள்ளுபடியும் தொடரும்...

twitter.com/angry_birdu

ஒரு கிராமத்துக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அரசு இரண்டு விதமாகச் செய்து கொடுக்கலாம். 1. தனியாருக்கு டெண்டர் விடுவது, 2. அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை வைத்து அரசே செய்து கொடுப்பது.

100 நாள் வேலை உறுதித் திட்டம் இரண்டாவது முறையைக் கையாள்கிறது. இந்தத் திட்டம் கூடாது என்பவர்கள் மறைமுகமாகச் சொல்ல வருவது, அந்தப் பணிகளைத் தனியாருக்கு டெண்டர் விட வேண்டும் என்பதுதான். 100 நாள் வேலை உறுதித் திட்டம் வருவதற்கு முன்பு வரை அதுதான் நடந்துகொண்டிருந்தது.

Vivek Oberoi - இசையும் இளமையும்!
Vivek Oberoi - இசையும் இளமையும்!

facebook.com/Primya Crosswin

சிதைந்துகொண்டிருக்கும் மண் வீட்டில் ஒரு சிறு அகல் ஏற்றியதுபோல, எப்போதாவது யாராவது ‘வாழ்ந்தால் உன் போல வாழ வேண்டும்’ என்கிறார்கள்...

விழுவதற்கு இடம் தேடித்தான் சென்றேன் என்று எப்படிச் சொல்வேன். உப்பரிகையில் நின்றபடி சிரித்து வைக்கிறேன்!

facebook.com/ ஃபௌசியா?

சமந்தாவுக்கு 200 கோடி ஜீவனாம்சம்னு ஏதோ ஒரு தெலுங்குப் பத்திரிகைல வந்த வதந்திய மட்டுமே வச்சி... இங்க எத்தன பேர் ‘ஒட்டுண்ணியா இருக்காதீங்க, சுரண்டிப் பிழைக்காதீங்க, தன்மானத்தோட இருக்கப் பாருங்க’ன்னு ஒட்டுமொத்த பெண் இனத்துக்கும் அட்வைஸ் / ஆராய்ச்சி / ஆதங்க ரைட் அப் எழுதிக் குமிச்சாங்க.

அதே சித்தார்த் தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்துல cheaters never prosper-ன்னு போட்டதுக்கு... சித்தார்த்த குறிப்பிட்டுத்தான் பேசறாங்களே ஒழிய, ‘காதலிச்சிட்டு பிரிஞ்சிட்டா grudge வச்சிக்காதீங்க, அவளுக்கு பில்லி சூனியத்த ஏவி விடாதீங்க’ன்னு எங்கய்யா ஒட்டுமொத்த ஆண்களுக்கான ரைட் அப்பு?

twitter.com/ItsJokker

90 ரன் அடிச்சும் கிடைக்காத வரவேற்பு உன் ஒரு 6க்குக் கிடைக்குதே, எப்படிப்பா?

தோனி: அது தெரிஞ்சா நீ ஹீரோ ஆயிருவியே..?

facebook.com/sowmya.ragavan

நல்லவனா இருக்கறது வேற. புத்திசாலியா இருக்கறது வேற. மக்கள் இரண்டையும் பல நேரங்களில் குழப்பிக்கறாங்க!

facebook.com/R Muthu Kumar

சமந்தா - நாகசைதன்யா இணை பிரிவின்போது வெளியிட்ட அறிவிப்புக்குள் இருக்கும் ஒற்றுமை உள்ளீடாகச் சொல்லும் செய்தி மானசீகமானது. ராமராஜனும் நளினியும் விவாகரத்தாகி நீதிமன்றத்தி லிருந்து வெளியேறி அவரவர் வாகனத்தில் ஏறும்போது பரஸ்பரம் தலையசைத்துக் கொண்டு விடைபெற்ற காட்சி நினைவுக்கு வருகிறது. அந்த நிகழ்வு பற்றி பின்னாளில் ராமராஜனை நேரில் பார்த்தபோது கேட்டேன். பதில் சொல்லாமல் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு வெறுமையாகச் சிரித்தார்.

twitter.com/IlovemyNOAH2019

சாதி வெறியர்களுக்கு சாதிப் பாசம் என்று எதுவும் கிடையாது, மதவெறியர்களுக்கு மதப் பாசம் என்றும் கிடையாது. அவர்களது நோக்கமெல்லாம் சாதியையும் மதத்தையும் வைத்துப் பணம் சம்பாதிப்பது மட்டுமே. இதுதான் இன்றைய சிறப்பான தொழில்!

twitter.com/kumarfaculty

‘நீங்கள் பேசியதை எல்லாம் கேட்டுட்டுத்தான் இருந்தேன்’ என்பது பெகாசஸின் முன்னோடி!

twitter.com/ikamalhaasan

தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?

Gal gadot - சூடா ஒரு போட்டோஷூட்!
Gal gadot - சூடா ஒரு போட்டோஷூட்!

twitter.com/mekalapugazh

ஜோசியம் சொல்றவங்க இப்போது திருமண பாக்கியம், குழந்தைப்பேறு இவற்றுடன் onsight chance-ஐ இணைத்துப் பரிகாரம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அவ்வளவு ஏன்? அரியர் பேப்பர் எல்லாம் க்ளியர் ஆகவும் எளிய வழிகள் (?!) சொல்கின்றனர். ஒருத்தனை ஏமாற்றணுமுன்னா அவன் ஆசையைத் தூண்டணும் என்னும் கருத்தின் அடிப்படையில்...

twitter.com/Kannan_Twitz

ஒண்ணு, தூங்க முடியாத அளவு சந்தோஷமா இருக்கு. இல்லைன்னா, தூங்க முடியாத அளவு சங்கடமா இருக்கு!

twitter.com/GreeseDabba2

ஃபர்ஸ்ட் பேட்டிங் பண்ணுனாலும் கடைசி பால் வரை எதையாவது த்ரில்லிங்காவே கொண்டு போற வியாதி இருக்கும்போல சென்னைக்கு!

twitter.com/ urs_venbaa

எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளும்போது நல்லவர்களாகத் தோன்றும் நாம், எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது மட்டும் கெட்டவர்களாகிவிடுகிறோம்.

twitter.com/amuduarattai

மக்கள் எதிர்பார்த்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என ஓ.பி.எஸ் முதல்வரை வலியுறுத்தல். #அதுதான் கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியாச்சே!

twitter.com/mohanramko

‘‘டி.வி-யில விஜய்சேதுபதி நடிச்ச படத்துக்கு நடுவுல விளம்பரமே போடலை...’’‘‘யோவ், அந்த விளம்பரத்துலயும் அவர்தான்யா நடிச்சிருக்காரு...’’