twitter.com/ItsJokker
இப்போலாம் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிட்டு கோச்சுக்கிட்டு வந்தாகூட பெருசா கண்டுக்குறது இல்லை,
ஆனா சொந்தக்காரங்க இருக்கிற “வாட்ஸ்ப் குரூப்ப” விட்டு எக்ஸீட் ஆயிட்டோம்னா அது பெரிய பிரச்னையாகிடறது.
twitter.com/narsimp
“என்னடா படிச்சிட்டியா, எக்ஸாம்க்கு, சும்மாவே இருக்க..”
“ராகுல் திவாட்டியா கேம் பார்த்தம்லப்பா அதுமாதிரி, எக்ஸாம்க்கு முன்னாடி படிச்சுக்கலாம்”
ரைட்டுகள்

www.facebook.com/revathy.ravikan
தோழி~அல்சீமர் நோய்ல மறதி பிரச்னைல சொந்தக்காரரு ஒருத்தர் கஷ்டப்படறாரு!
மீ~கஷ்டந்தான்!
தோழி~வயசானாலே வந்துருமோ என்னமோ!
மீ~என்னதுங்க?!
தோழி~அல்சீமர்தான்!
புவர் மீ~அல்சீமரா? யாருக்கு தோழி!
twitter.com/manipmp
சிவனேன்னு ஒரு ஓரமா ராகுல் வந்திட்டுப் போயிருப்பாரு..ஆனா பல்வாள் தேவன் பதவியேற்பு விழா ரேஞ்சுக்கு செஞ்சுட்டாங்க.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/mohanramko
காணாமப்போனது கிடைச்சிடிச்சி மாமா.
சிபிஐ ஆதாரமா, மாப்ள?
பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில காணாமல்போன முல்லை, மாமா.
twitter.com/Kannan_Twit
கவலையா இருக்கும்போது என்னாச்சுன்னு கேட்டா கொஞ்ச நேரம் தனியா விடுறியான்னு கத்த வேண்டியது,
சரின்னு எதுவும் கேட்காம விட்டா நான் இவ்ளோ கவலையா இருக்கனே என்னான்னுகூட உனக்குக் கேட்கத் தோணலைலன்னு திட்ட வேண்டியது!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALStwitter.com/shivaas_twitz
Anti viral ப்ளைவுட் - இப்படி ஒரு விளம்பரம் வருது
கொரோனா: நான் நல்லா பண்ணுறனோ இல்லையோ நீங்க நல்லா பண்ணுறீங்கடா.

www.facebook.com/sudharsanh
Gangs of Wasseypur, Mirzapur, Article 15, Paatal Lok இந்த மாதிரி படங்கள், சீரிஸ்லாம் பாக்கும்போது தோணும்... என்ன இவனுங்க ரொம்ப மிகைப்படுத்தி சொல்றாங்கன்னு... அங்க சாமானிய மக்கள் இவ்வளவு கொடூரமானவர்களா இருக்க வாய்ப்பில்லை... சட்டம் ஒழுங்கு பிரச்னைய அரசாங்கம் அப்டியெல்லாம் விட்டுடுமா என்னன்னு? ஆனா சுத்தி நடக்குறதெல்லாம் பாக்கும்போது இதெல்லாம் உண்மையா இருக்க நிறையவே வாய்ப்பிருக்குன்னு தோணுது.

twitter.com/ramesh_twetz
திடீர்னு யாராவது கைத்துப்பாக்கிய எடுத்து நெத்திப்பொட்டுல வச்சாகூட “டெம்ப்ரேச்சர்” தான் செக் பண்ணுறாங்கன்னு அசால்டா நின்னுட்டு இருப்போம் போல...!
# கொரோனாப் பரிதாபம்.
twitter.com/saravankavi
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்துத் தெளிவான முடிவை முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் செங்கோட்டையன்.
குழப்பற முடிவை மட்டும் இவர் அறிவிப்பார்போல...?