சினிமா
Published:Updated:

வலைபாயுதே

Suriya : குடும்பம் எனும் பெரும்பலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
Suriya : குடும்பம் எனும் பெரும்பலம்!

இனிமே இரண்டு தோசைதான் சாப்டணும், ஸ்ட்ரிக்ட் டயட்னு முடிவெடுக்கற நாளில்தான் சட்னி செம டேஸ்டா அமையும்!

twitter.com/Karuppu_7

அவதார் 2 வேற வருது, அதுலயாவது ரெண்டு குத்துப் பாட்டு வெச்சு கேமரூன் நம்ம ராஜமௌலி மாதிரி ரீச் ஆகுறாரா பாப்போம்.

twitter.com/youknowwho

TTF வாசன் மேல போலீஸுக்குக் கடுப்பாவும் இருக்கு. ஆனா அவனுக்கான மக்கள் செல்வாக்கப் பாத்து பயமாவும் இருக்கு போல. KGF 2 மாதிரி மெஷின் கன் கொண்டாந்து சூலூர் ஸ்டேஷன் முன்னாடி வெச்சு சுட ஆரம்பிச்சிட்டா என்னாகறதுன்னு பயப்படறாங்களா?

Santhosh Narayanan: சிரிப்புக்கு இவர் கியாரன்டி!
Santhosh Narayanan: சிரிப்புக்கு இவர் கியாரன்டி!

twitter.com/teakkadai1

தமிழக அரசின் பொங்கல் தொகுப்பை காரில் வந்து வாங்கியவர்களைப் பார்த்திருக்கிறேன். எங்கள் ஏரியாவில் பெரும்பாலும் நல்ல வசதி உள்ளவர்கள்தான். அவர்கள் தமிழ்நாடு அரசின் எல்லாப் பொருள்களையும் வாங்கியவர்கள்தான். போக, மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் ‘‘இந்த பஸ் (தாழ்தள பேருந்து - எக்ஸ்பிரஸ்) வேண்டாம். ஃப்ரீ பஸ் வரட்டும்’’ என்ற உரையாடலை அடிக்கடி கேட்கிறேன். கப்பலூர் தொழிற்பேட்டையில் பணியாற்றும் பெண்கள் எல்லோரும் இலவசப் பேருந்து ஒரு வரம் என்றே சொல்கிறார்கள். முன்னர் சில வீடுகளில் ‘‘எங்க பிள்ளைகள் எல்லாம் சத்துணவு சாப்பிடாது’’ என்பார்கள். அதற்காக திட்டத்தை நிறுத்தவா முடியும்? காசிருந்தா எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் போங்கள், ஆட்டோவில் போங்கள். இது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற அண்ணாவின் கொள்கைக்கேற்ப வந்துள்ள திட்டம். சில புல்லுருவிகள், புளி ஏப்பக்காரர்களால் நீர்த்துப்போகாது.

twitter.com/NatuViral

நானே என் எக்ஸ் கிட்ட பேசுறதுக்கு இன்ஸ்டால பேக் ஐடி கிரியேட் பண்ணி அவ காலேஜ் ப்ரெண்டு பேர போட்டு ஓப்பன் செஞ்சு பொண்ணு மாதிரி பேசிட்டு இருக்கேன். அவ புருஷன்காரன் என் பேக் ஐடிக்கு ‘உங்க டிபி சூப்பரா இருக்கு, சாட் பண்ணுங்க’ன்னு மெசேஜ் பண்ணுறான். அதுக்கு அவ என்னையவே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

twitter.com/itz_Sangeetha

பணம் வச்சிருக்கவன்லாம் எலைட் இல்ல, நினைச்ச நேரத்துக்கு நினைச்ச மாதிரி வாழறவன்தான் எலைட்.

twitter.com/manipmp

ஷேர் ஆட்டோவில் லேட்டா ஏறுகிறவனுக்குத்தான் மதிப்பு அதிகம்!

twitter.com/Thaadikkaran

சம்பளம், போனஸ் தராமல் இழுத்தடிக்கும் ஓனரை நான் பார்த்துக்கொள்கிறேன். ‘போனஸ் வாங்கிவிட்டேன்’ என்று வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்கும் நண்பனிடமிருந்து என்னைக் காப்பாற்று!

twitter.com/THARZIKA

துயரமென்பது மனிதர்களைப் புரிந்துகொள்வதற்கான யதார்த்தம், அடிப்படையில் அதை ஏற்றுக்கொள்வதுதான் பக்குவம்.

twitter.com/Suyanalavaathi

பஸ் ஸ்டாப்ல நிக்கும்போது, நிமிஷத்துக்கு ஒரு முறை வாட்ச்ச பாத்தாலும், பஸ் வர நேரத்துக்குத்தான் வரும்னு புத்திக்குத் தெரிய மாட்டேங்குது!

twitter.com/Vasanth920

மனைவியிடம் ரகசியம் சொல்வது, மூடியை மூடாமல் மிக்ஸியில் சட்னி அரைப்பதற்குச் சமம்.

twitter.com/itz_radhi3

இந்த ஞாயிறு ஏன்தான் வருதோ? என்ன எல்லாம் செய்யணும்னு பிளான் பண்ணுறதுக்குள்ள அரை நாள் போயிருது!

twitter.com/Greesedabba2

போன் வந்தா எடுத்து ‘வந்தேமாதரம்’ சொல்லாம ‘ஹலோ’ன்னு சொல்ற... நீ தீவிரவாதிதானே?

twitter.com/Vkarthik_puthur

நம்ம ஆளுங்க அவ்வளவு எளிதா ட்ராஃபிக் ரூல்ஸ்ஸ ஃபாலோ பண்ண மாட்டாங்க, அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டா நிறுத்தவே மாட்டாங்க. அதுக்கு ஒரு சிறந்த உதாரணம்தான், இண்டிகேட்டர போட்டா ஆஃப் பண்ணாதது.

twitter.com/narsimp

“எனக்காக ஒருவன் பிறந்து வளர்ந்து வருவதற்குள் நான் கிழவி ஆகிவிடுவேன் போல...”

# த்ரிஷா பாத்திரமாகவே மாறிய இடம்!

Nivin Pauly: விசிறிகளோடு ஒரு செல்பி!
Nivin Pauly: விசிறிகளோடு ஒரு செல்பி!

twitter.com/Greesedabba2

இந்தக் குந்தவை ‘தான் ஒரு பெரிய கிங் மேக்கர்’னு கற்பனை பண்ணிட்டு நந்தினியை ஆதித்த கரிகாலன் கிட்ட இருந்து கட் பண்ணி விடாம இருந்திருந்தா, சோழர் சாம்ராஜ்ஜியத்தை நந்தினி மத்த எல்லாரையும்விட சாமர்த்தியமாவே ஆட்சி பண்ணியிருப்பா...

twitter.com/saravankavi

பிரதமர்: இம்புட்டுகாண்டி குஜராத்ல ஜெயிக்கறதுக்காக லேட்டா வந்ததுக்கு மன்னிப்பு, ஆம்புலன்ஸ் வண்டிக்கு வழி விடறது, பெட்ரோல், டீசல் விலை ஏத்தாம இருக்கறதுன்னு எவ்ளோ கஷ்டப்பட்டு வாழ வேண்டியதா இருக்கு...

twitter.com/teakkadai1

உங்க பருப்பெல்லாம் இங்க வேகாதுங்கிற வழக்கெல்லாம் காலாவதியாகிடுச்சில்ல? அதெல்லாம் ஊற வச்சு நாலு விசில் சேர்த்து வச்சா வெந்துடுங்க...

facebook.com/Revathy

நாமளும் குந்தவை கொண்டை போட்டா ஒரு அடிகூட ஹைட்டாயிருவோம்ல!

facebook.com/Iam Suriyaraj

பாகுபலி ரிலீஸ் டைம்ல, ‘ஆயிரத்தில் ஒருவனில் இல்லாத பிரமாண்டமா’ன்னு குறுக்க விழுந்தானுங்க. இப்போ பொ.செ ரிலீஸ் ஆனதிலிருந்து ‘எனதருமை பாகுபலியே’ன்னு கண்ணீர் விடுறானுங்க. யார்றா நீங்கெல்லாம்?

facebook.com/Sowmya Ragavan

இனிமே இரண்டு தோசைதான் சாப்டணும், ஸ்ட்ரிக்ட் டயட்னு முடிவெடுக்கற நாளில்தான் சட்னி செம டேஸ்டா அமையும்!

Alia Bhatt: தாய்மை!
Alia Bhatt: தாய்மை!

twitter.com/Kannan_Twitz

ஒரு கோப்பைத் தேநீர் முழுவதையும் அதே சூட்டில் பருகிட முடிந்தால் வாழ்தலுக்கு சகிப்புத்தன்மை தேவையில்லை!

twitter.com/asdbharathi

நாமே நமக்குச் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகளே நம்மை உயர்த்தும். துயரத்திலிருந்து வெளிவர உதவும்.

twitter.com/THARZIKA

மெளனத்தைவிடப் பெரிய புறக்கணிப்பென்று அன்பில் வேறொன்றில்லை.

facebook.com/Elangovan Muthiahநம் மக்களின் கிறுக்குத்தனங்களில் சகித்துக்கொள்ளவே முடியாத ஒன்று உண்டு. அது இறுதி ஊர்வலங்களின்போது இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இடப்பட்ட மாலைகளை, இறுதி ஊர்வல வாகனத்தில் கட்டி, இடுகாட்டுக்கோ, சுடுகாட்டுக்கோ போகும் வழியெங்கும் உதிர்த்துவிட்டுக் கொண்டே போவது. ஒரு மணி நேர வாகனப் போக்குவரத்தில் சாலையில் கிடக்கும் மாலைகளும், மலர்களும் அடித்துச் செல்லப்பட்டுவிடும் என்பதால் அதையாவது சகித்துக்கொள்ளலாம்.

ஆனால் பல சமயங்களில் இறுதி ஊர்வல வாகனங்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் மாலைகளைச் சூரையிடுவது போலச் சுற்றி, சாலைகளில் பக்கவாட்டில் வருபவர்கள் மீது வீசி விடுகிறார்கள். இறந்தவர்கள் மீது போட்டிருந்த மாலை என்பதால் அதன்மீது இயல்பாகவே மற்ற மக்களுக்கு ஒருவித ஒவ்வாமை இருக்கக் கூடும். அதில் சில கிறுக்கன்கள் பேருந்துகளிலோ, நடைபாதையிலோ செல்லும் கல்லூரி, பள்ளிப் பெண்களைக் குறிவைத்து அந்த மாலைகளை வீசுவதையும், அவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடுவதைப் பார்த்துச் சிரிப்பதையும் பார்த்திருக்கிறேன்.

நேற்று வசந்த நகர் அருகே இப்படி ஒரு கூட்டம் இறுதி ஊர்வல வாகனத்தின் மீதிருந்து குடிவெறியில் மாலைகளைச் சுழற்றித் தூக்கி வீசிக் கொண்டிருந்தார்கள். அதிலொரு மாலை, சாலைக்கு மறுபுறம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணின் மடியிலிருந்த கைக்குழந்தை மீது விழுந்தது. அந்தத் தாய் ஒரு நிமிடம் பதறியதைக் காணச் சகிக்கவில்லை. நல்லவேளை, வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவர் பதறியிருந்தால் கைக்குழந்தையோடு சாலையில் விழுந்திருப்பார்கள்.

பக்கத்திலேயே நின்றுகொண்டிருந்த போக்குவரத்துக் காவலர்களுமேகூட இதைக் கண்டிக்காமல் இருந்தது எரிச்சலாக இருந்தது. இதுபோல திடீர் மாலை அணிவித்தல்களுக்குப் பதறி யாராவது ரோட்டில் விழுந்து செத்தால்தான் இந்தச் சமூகத்துக்கு இதுபற்றிய சொரணை வரும்போல!

Suriya : குடும்பம் எனும் பெரும்பலம்!
Suriya : குடும்பம் எனும் பெரும்பலம்!

twitter.com/kalgikumaru

டி.ஜி.பி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஹெச்.ராஜா மீது காரைக்குடி டி.எஸ்.பி-யிடம் புகார்.

ஹெச்.ராஜா: எடுங்கடா அந்த மன்னிப்புக் கடிதத்தை!

twitter.com/Kannan_Twitz

நல்ல ஒரு பிரியாணிக்கு இடையில் சிக்கும் கிராம்பு எப்படி அந்த மொத்த டேஸ்ட்டையே மாத்திடுமோ, அதேபோலத்தான் நல்ல மனநிலையில் இருக்கும்போது திடீரென வரும் சில நினைவுகளும்!

twitter.com/ss_twtz

விவரிக்கத் தேவையில்லாத தொலைதல் சாத்தியமாகும்போது மனமென்பது சிறு பறவை.

twitter.com/saravankavi

ஒரு கிலோ சிக்கன் 140 ரூபாய், ஒரு கிலோ கத்திரிக்காய் 120 ரூபாய்...

# அடேய் புரட்டாசி மாதம், நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டே...

twitter.com/Thaadikkaran

இப்பல்லாம் சீரியலுக்கும் படத்தோட பெயரை வச்சிடுறாங்க. விளம்பரம் போடும்போது கீழ டைட்டில் பார்த்துட்டு உக்காந்தா, விளம்பரம் முடிஞ்சதும் சீரியல் ஓடுது!

twitter.com/JamesStanly

11 வருஷத்துல 2 லட்சம் கேஸ்... அங்க சிலிண்டர் போடுற வேலைதான?!

twitter.com/Jaisajoints

எல்லா இடத்துலயும் த்ரிஷா படங்களாத்தான் இருக்கு. நீங்க பண்றதெல்லாம் பாத்தா, ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு புரொமோஷன் பண்ண த்ரிஷாவ கூட்டிட்டுப் போனா மாதிரி இல்ல... த்ரிஷாவுக்கு புரொமோஷன் பண்ண ‘பொன்னியின் செல்வன்’ படத்த எடுத்தா மாதிரி இருக்கு!

twitter.com/IamUzhavan

இந்தத் தொப்பை ஒரு வினோதமான ஆமை. பெண்களைக் கண்டால் தலையைச் சட்டென உள்ளிழுத்துக் கொள்ளும். ஆண்களை ஒரு பொருட்டாக மதிக்கவே மதிக்காது.

twitter.com/Murugankesavan

2017-ல நெருங்கிய நண்பன் ஒருவன் ஹார்ட் அட்டாக்ல இறந்தான்... உயிர் பிரியும்போது ஆம்புலன்ஸ்ல அவன் கூட இருந்தேன். ரெண்டு பேரும் செயின் ஸ்மோக்கர்ஸ். அவன் சாவ நேர்ல பாத்ததும் உயிர் பயத்துல சிகரெட்ட விட்டேன். 5 வருஷமாச்சு... அவன் செத்து என்னக் காப்பாத்தியிருக்கான்!