Published:Updated:

வலைபாயுதே

ஏர் இந்தியாவைத் தனியாருக்கு வித்து மக்களை நஷ்டத்திலிருந்து காப்பாத் திட்டாங்களே

பிரீமியம் ஸ்டோரி

twitter.com/ividhyac

நம்ம க்ரஷ்ஷுக்கு ஆள் இருக்குன்னு தெரியும்போது வர்ற வலியைவிட, நம்மள யாருனே அந்த க்ரஷ்ஷுக்குத் தெர்லன்னு தெரிய வரும்போது வர்ற வலி இருக்கே...

twitter.com/JamesStanly

‘‘கட்சி செயற்குழுக் கூட்டம் ரத்தாம்...’’

‘‘எதுக்காம்..?’’

‘‘வாட்ஸப் சர்வர் டவுனாம் மாமா!”

twitter.com/manipmp

‘இதுவும் கடந்து போகும்’ என்பதை விட, ‘இதுவும் கை நழுவிப் போகும்’ என்பதே யதார்த்தம்.

Yohani: சிங்களத்து சிங்கர்!
Yohani: சிங்களத்து சிங்கர்!

twitter.com/Kannan_Twitz

இந்த உணவகங்கள் முன்னாடி மழையில நனைஞ்சிட்டே வண்டிய வழிமறிச்சு சாப்ட கூப்பிடுற வயசான செக்யூரிட்டிகள பார்த்தாலே ஒரு மாதிரி உள்ளம் கலங்கிடுது. உண்மையிலே இந்தப் பசின்றது சாபம்ல!

twitter.com/ArunPandiyanMJ

ரெகுலரா போற சலூன்ல இந்திப்பாட்டா ஓடும். ‘தமிழ்ப் பாட்டு போட முடியுமா’ன்னு கேப்பேன், மாத்திடுவாங்க. ஆனா இன்னைக்குப் போன சலூன்ல ‘இந்திப் பாட்டாச்சும் போடுங்கய்யா யோவ்’னு கெஞ்சுற அளவுக்கு போஜ்பூரிப் பாட்ட போட்டுத் தாளிச்சுட்டானுக. எல்லாப் பாட்டுலயும் மகுடி வாசிச்சுட்டே இருக்கானுக போஜ்பூரிக.

twitter.com/arattaigirl

அன்பின் சொந்தக்கார, நட்பு, எதிரிகளே... ‘சர்ப்ரைஸ் பண்ணுகிறோம்’ என்ற பெயரில் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு வந்து நிற்காதீர்கள். அப்பொழுதுதான் ஆக்கி முடிச்சு அக்கடான்னு உக்கார்ந்திருப்போம் என்பதை உணருங்கள். வீடுவேறு யானை புகுந்த வெண்கலக்கடைபோல் இருக்கக்கூடும்!

twitter.com/thugipl

தல இந்த ஃபார்ம்லயும் ஒவ்வொரு பயிற்சி ஆட்டத்துலயும் செஞ்சுரி அடிச்சிருக் காருன்னா ஃபிளெமிங்தான் பந்து போட்டுருப்பார் போல!

twitter.com/narsimp

இந்த இன்டர்நெட் பேங்கிங் அக்கப்போருகள்... ‘ரொம்ப நாளா ஒரே பாஸ்வேர்டா இருக்கே, மாத்து’ங்குது. இத இப்பத்தான வச்ச, வேற... இதுல நம்பர் இல்ல... இது அவ்வளவு பலமா இல்ல... இதுல போதுமான நீளம் இல்ல... எல்லாத்தையும் குழப்பி கரன்ட்டையும் மறக்கவச்சு..!

twitter.com/Giri47436512

1. இன்னுமா நீ வேலைக்குப் போகல?

2. வீட்ல ஏதாவது விசேஷமா?

3. வீடு கட்டி முடிக்க எவ்வளவு ஆச்சு?

எந்தச் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனாலும் கேட்கக்கூடாத கேள்விகள்...

Kalyani Priyadarshan: நில்... கவனி... செல்!
Kalyani Priyadarshan: நில்... கவனி... செல்!

twitter.com/mohanramko

என்ன பண்ணுனார் என் கட்சிக்காரர்? பேசினது ஒரு தப்பா? அப்படியே அவர் ஆபாசமாகப் பேசியிருந்தா, ‘ஏ’ சர்ட்டிபிகேட் கொடுங்க... அதுக்காக அரெஸ்ட் பண்றதா?

twitter.com/pachaiperumal23

உலக ஊடகவியலாளர்களுக்கு, சமீபத்தில் நோபல் பரிசை வென்ற பிலிப்பைன்ஸ் நாட்டு மரியா ரெஸா மற்றும் ரஷ்யாவின் திமித்ரி முராதொவ் இருவரும் தங்களின் செயல்களின் மூலமாகச் சொல்லும் செய்தி... ‘ஊடகங்கள் அரசின் பிரதிநிதிகளல்ல, மக்களின் பிரதிநிதிகள்’ என்பதேயாகும்.

twitter.com/Suyanalavaathi

சனிக்கிழமை லேட்டா தூங்கி, ஞாயிற்றுக்கிழமை லேட்டா எழுந்து, மதியம் கறிச் சோறு சாப்பிட்டு, சோம்பேறித்தனமா படுத்துட்டே போன், டிவிய நோண்டிட்டு இருக்கிறதுக்குப் பேர்தான் வீக் எண்ட்!

twitter.com/star_nakshatra

சில குப்பைகளுக்காகவும் பல அழுக்குப் பாத்திரங்களுக்காகவும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தோமானால்... ருசியான பிரியாணி சாப்பிட முடியாது!

twitter.com/balebalu

‘‘ஏண்ணே அவனை அடிக்குறீங்க?’’

“ ‘ஏர் இந்தியாவைத் தனியாருக்கு வித்து மக்களை நஷ்டத்திலிருந்து காப்பாத் திட்டாங்களே, இனிமேலாவது அக்கவுன்ட்ல 15 லட்சம் போடுவாங் களா’ன்னு கேக்குறாம்ப்பா!”

twitter.com/God_Official__

‘நயன்தாராவைவிட பிரியங்கா மோகன் அழகா இருக்காங்க’ன்னுதான் சொன்னேன். உடனே 4 பேர் அன்ஃபாலோ பண்ணிட்டுப் போய்ட்டாங்க. இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமே இல்லை!

twitter.com/mohanramko

விமானத்துறை அமைச்சர் மாதிரியேதான் இந்தக் கணவர்களும்... எதுக்கு இருக்கோம்னே தெரியறதில்லை, ஜவுளிக்கடையில்!

twitter.com/meenammakayal_

ஒருத்தன் வெற்றியடையும்போது அவனைக் கொண்டாடிவிட்டு, அவன் consolidation phase-ல இருக்கும்போது மோசமாக விமர்சிப்பது நியாயமே இல்லை. இப்பதான் அவன்கூட இருக்கறது முக்கியம். இது தோனிக்காகச் சொன்னது. தோனி தன் அணியினரிடம் எப்போதும் செய்வது.

twitter.com/mohanramko

ஓ, இது ஹாரன் சத்தமா? நான் எங்கேயோ மியூசிக் கேட்குதுன்னு ஜாலியா கேட்டுக்கிட்டு வந்தா, எதிர்ல வண்டி வருது!

twitter.com/chithradevi_91

கோழில செஞ்சாலும் சேவல்ல செஞ்சாலும், அதுக்குப் பேரு சிக்கன் பிரியாணிதான்!

twitter.com/Suyanalavaathi

புரட்டாசி டு கொரோனா: லாக்டௌன் போட்டாலும், முந்தின நாள் போய் கறி எடுப்பானுங்க... இப்ப கறிக்கடையே தினமும் திறந்து இருந்தாக்கூட எடுக்க மாட்டானுங்க. என்னோட பவர் அப்படி!

twitter.com/ramesh_twetz

வாழ்க்கையில எதிர்பார்க்கக் கூடாத ஒண்ணு, செல்போனோட பாத்ரூம்க்குள்ள போனவங்க சீக்கிரமா வருவாங்கங்கறது!

twitter.com/mohanramko

‘ஹேர் கட்டிங் பண்ணப் போறேன்’னு சொன்னா, ‘நான் கூடவே வந்து டிரெண்டிங்கா வெட்டச் சொல்றேன்’னு பையன் சொல்றான். ஒரு காலத்துல இதையே நான் அவனுக்குச் சொன்னேன். தட், ‘காலம் எவ்ளோ வேகமா சுழலுது பார்த்தீங்களா’ மொமண்ட்!

Deepak Chahar: எங்கேயும் காதல்!
Deepak Chahar: எங்கேயும் காதல்!

twitter.com/kumarfaculty

‘தாயிற் சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது நாத்திகமும் ஆத்திகமும் கலந்தது!

twitter.com/prabhu65290

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க சீமானுக்கு அருகதை இல்லை. - கார்த்தி சிதம்பரம்.

ஏன், நீங்களே ஒவ்வொரு கோஷ்டியும் மாத்தி மாத்தி விமர்சனம் பண்ணிப்பீங்களா?

twitter.com/urs_venbaa

கஷ்டம் வரும்போது வீட்டிலுள்ளவற்றை விற்பதில் மத்திய அரசும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு