Published:Updated:

வலைபாயுதே

kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!
பிரீமியம் ஸ்டோரி
kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!

குழந்தைகளுக்கு அன்பையும் மனிதத்தையும் கற்றுத் தருவதுதான் முன்னேறிய நாகரிகத்தின் அடை யாளமாகும்.

வலைபாயுதே

குழந்தைகளுக்கு அன்பையும் மனிதத்தையும் கற்றுத் தருவதுதான் முன்னேறிய நாகரிகத்தின் அடை யாளமாகும்.

Published:Updated:
kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!
பிரீமியம் ஸ்டோரி
kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!

twitter.com/tparaval

எனக்கொண்ணு புரியல. கடந்த 2 வருஷமா, 4 மாசத்துக்கொருக்கா இன்டர்நேஷனல் மகள் தினம், மகன் தினம், அம்மா தினம், ஆயா தினம்னு வர்ற மாதிரி ஃபீலிங். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்ல அடிக்கடி ஸ்டேட்டஸ் பாக்குறேன். உண்மையிலேயே அடிக்கடி வருதா? இல்லை, ‘காலம்தான் எவ்ளோ வேகமாச் சுத்திட்டிருக்கு’ன்னு தேவயானி மாதிரி இருக்கோமா?

twitter.com/NaveenFilmmaker

குழந்தைகளுக்கு அன்பையும் மனிதத்தையும் கற்றுத் தருவதுதான் முன்னேறிய நாகரிகத்தின் அடை யாளமாகும். போருக்குப் பழக்குவது சரியானதாக இருக்க முடியாது. அறிவு பெறாத மனித இனமே ஒன்றின் மீது ஒன்று போர் செய்யும்.

Bhavana: நானொரு சிந்து!
Bhavana: நானொரு சிந்து!

twitter.com/JamesStanly

‘‘ஸ்ட்ரெஸ் குறைக்க லடாக் போய்ருக்கேன் ப்ரோ...”

‘‘அதுக்கு ஏன்டா அழுவுற..?”

‘‘அங்க எடுத்த போட்டோவுக்கு லைக்கே வரல... மறுபடி ஸ்ட்ரெஸ் ஆகிருச்சி!”

twitter.com/Kannan_Twitz

பஸ்ல போனா 3 கிலோ மீட்டருக்கு 30 முறை வாந்தியெடுக்க வேண்டியது. ஆனா பயோ, ‘பயண விரும்பி! பயணத்தில் தொலைபவள்’னு வச்சிக்கவேண்டியது!

twitter.com/JayaramArappor

சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றதாகப் போடப்பட்ட பட்டியலில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மட்டும் இல்லை. தி.மு.க அமைச்சர் துரைமுருகன் 50 லட்சம், செந்தில் பாலாஜி 1.2 கோடி, பொன்முடி 40 லட்சம் மற்றும் பல தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். விசாரணை பாயுமா?

twitter.com/thecommonman__

ஃபிளைட் ஏறுற வரைக்கும் தாடிய வளர்க்கறேன்னு சபதம் எடுத்திருந்தாரு போல... இவங்க வேற ‘கொரோனாக்கு’ன்னு வட சுட்டாங்க...

twitter.com/ArunPandiyanMJ

மாஸ்டர் செஃப்ல ‘தில்’ லைலா குல்பி செஞ்சு குடுத்தாக்கூட, “நல்லாருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு. கொஞ்சம் உப்பு போட்டுருக்கலாம்”ங்குறாப்ல விஜய் சேதுபதி.

twitter.com/iParisal

மதியம் கொழம்பு செம்ம காரம். கூப்ட்டு “ஏம்மா இப்டி?”ன்னு கேட்டா, “ஒருநாளாச்சும் சாப்டுட்டு, சாப்டேன்னு கூப்டுச் சொல்றியா? அதான் ரெண்டு மொளகா எக்ஸ்ட்ரா போட்டேன். இப்பக் கூப்டில்ல?”ங்கறாங்க. இதெல்லாம் ரொம்பத் தவறு... ஆமா!

twitter.com/athisha

‘பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை’ என்கிற கருத்தைத் தொடர்ந்து உலகம் முழுக்க இருக்கிற பல பணக்காரர்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எந்தப் பணக்காரரும் தன்னிடம் இருக்கிற பணத்தையெல்லாம் மொத்தமாக இழக்கவோ, ஏழைகளுக்கு அளிக்கவோ தயாராயிருப்பதில்லை.

twitter.com/SHIJA25

உலகிலுள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன், இந்தியா வந்து உற்பத்தி செய்யுங்கள் - மோடி. # செங்கல்பட்டுல தயாரிக்க அனுமதி கேட்டு நாலு மாசம் ஆகுது, அது காதுல விழல!

twitter.com/pachchakkili

புருஷன் பொண்டாட்டிய அடிக்கிறத பாத்து அந்தப் புருஷனை (பொத்தாம்பொதுவாக ஆண்களையும் சேர்த்து) திட்டித் தீர்க்கும் சமூகம், ஒரு பொண்டாட்டி புருஷனை அடிக்கிறத பாத்து சிரிக்குது. # ஆண்/பெண் யாராக இருந்தாலும் அவர்கள் மீது domestic violence தவறு. பாலின வேறுபாடு இல்லாம அதைக் கண்டிக்கணும்.

kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!
kunchacks: நச்னு ஒரு செல்ஃபி!

twitter.com/roadoram

குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் தேடுறவங்க தெரிஞ்ச எல்.கே.ஜி. மிஸ் கிட்ட அட்டெண்டென்ஸ் கேட்டா போதும். இன்று கேட்ட பேர் ‘வேழவேந்தன்.’

twitter.com/JamesStanly

அமெரிக்கா வரைக்கும் வந்து கேட்டுப் பாத்துட்டேன். வாட்ஸ்அப் வீடியோ கால் ரெக்கார்டு பண்றதத் தடுக்க முடியாதாம்...

twitter.com/ramesh_twetz

ஆமா, ‘நாளைய முதல்வரே’ன்னு ப்ளக்ஸ் எல்லாம் அடிச்சிக் கட்டறானுங்க. இவங்க விஜய் ரசிகர்களா? இல்ல, விஜய் அவங்க அப்பா எஸ்.ஏ.சி ரசிகர்களா? # சந்தேகம்

facebook.com/revathy.ravikanth

தூக்கக்கலக்கம் என்ன செய்யும்? கேஸ் சிலிண்டருக்கு 920/- ரூபாய்க்கு 1100/- கொடுத்து மீதம் 80/- வேண்டி நிற்கும்.

facebook.com/Makizhnan/

கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் தொடர்ந்து வழக்காடிய வழக்கறிஞர் பொ.ரத்தினம் இடதுசாரிப் பின்புலத்தில் இருந்து வந்தவர். பட்டியல் சாதியைச் சார்ந்தவர் அல்லர். மேலவளவு முருகேசன் படுகொலை வழக்கில் இவருடைய தலையீட்டின் காரணமாக குற்றவாளி களுக்கு தண்டனை கிடைத்தது. தன்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிலர் தவறாகப் பயன்படுத்தியபோதும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நியாயத்தைப் பற்றிய புரிதல் அவருக்கு உண்டு.

கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் வந்திருக்கிற நீதியின் தொடர்ச்சியாக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள் இவை. ‘என் வலி எனக்குத்தான் தெரியும், உனக்குப் புரியாது’ என்கிற கதையாடல்களைத் தன்னுடைய தொடர் செயல்பாட்டின் வழியாக முறியடித்தி ருக்கிறார் வழக்கறிஞர் ரத்தினம். அவரை வாழ்த்த நாம் கடமைப்பட்டி ருக்கிறோம்.

Modi: இந்தியா ‘ஒளிர்கிறது!’
Modi: இந்தியா ‘ஒளிர்கிறது!’

twitter.com/ramesh_twetz

அடேய், ஒரு விஷயத்த நல்லா புரிஞ்சிக்கோங்கடா... இங்க காசு கொடுத்தா மட்டும் எல்லா வேலையும் செஞ்சிடு வாங்கன்னு நினைக்காதீங்க. அந்த வேலைய செய்யணும்ங்கற எண்ணம் மனசல முதல்ல இருக்கணும்.

facebook.com/karthick.ko

மாத வருமானம் 2,499 ரூபாய்க்கும் குறைவுன்னு அரசால் உறுதிப்படுத்தக் கூடிய ஆவணமான சிவப்பு ரேஷன் கார்டு (வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளவர்கள்) வைத்திருப்பவர்களுக்கு மட்டும் ஜிப்மர் மருத்துவமனையில் இலவச சிகிச்சை - மருத்துவமனை இயக்குநர் உத்தரவு

பெட்ரோல் 100 ரூபாயும், சிலிண்டர் 1,000 ரூபாயும் விக்கிற நாட்டில இலவச சிகிச்சை பெற மாத வருமானம் 2,500 ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டி இருக்கு. இந்த உத்தரவு போட்டவரோட மனநிலை என்னவா இருக்கும்னு யோசிச்சுப் பாக்குறேன். (‘அரசுக்கு இருக்குற கடன்ல எல்லாருக்கும் அரசால இலவச மருத்துவம் கொடுக்க முடியாது... அது அரசோட வேலையும் இல்ல...’ இதைத் தவிர வேற என்ன மனநிலை இருந்துருக்கும்?!)

Malavika: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
Malavika: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

facebook.com/gkarlmax

காது வலி. வழக்கமாகச் செல்லும் டாக்டரிடம் போனேன். வழக்கமாகவா காது வலி வந்துகொண்டிருக்கிறது என்று கேட்காதீர்கள். டாக்டர் ஏற்கெனவே அசோகமித்திரனின் உடற்கட்டுடன் இருப்பார். வயதும் அவ்வளவு இருக்கும். இந்த முறை ரொம்பவும் நைந்து போயிருந்தார். மாஸ்க்கை வைத்து வாய் வரை மூடியிருந்தார். சன்னமான குரலில் ஓயாத இருமல். அதற்கே அவருக்குத் தெம்பில்லை.

உதவியாளர் பெண்மணிதான் ‘அந்த பெஞ்சில் உட்காருங்கோ’ என்றார். டாக்டர் மேசைக்கு முன்னால் ஒரு பெஞ்ச் கிடந்தது. ‘எனக்குக் காது வலிக்கிறது’ என்றேன். ‘நேற்று இரவிலிருந்து’ என்பதையும் நானே சொல்லிவிட்டேன். டாக்டர் கேமரா லைட் சகிதம் இருக்கும் அந்த உபகரணத்துடன் எனது காது மடலைப் பற்றினார். மெல்லிய ‘லொக்... லொக்...’ மற்றும் மூச்சிரைப்பு அருகில் கேட்டது. அதுவரை ஏதோ ஒரு பாடல் ஓடிக்கொண்டிருந்த டி.வியில் இப்போது என் காதின் உட்புறம் தெரியத் தொடங்கியது.

‘கொஞ்சம் திரும்புங்கோ, குனிங்கோ... ம்ம்ம் சரி..’

என் பார்வைக்கு இப்போது டி.வி திரை தெரியவில்லை. ‘காது நல்லாத்தான் இருக்கு’ என்று அவரிடம் தணிந்த குரலில் சொன்னார் உதவியாளர் பெண்.

என் பெயரைக் கேட்டு இங்க் பேனாவால் அழகான ஸ்டைலான கையெழுத்தில் சொட்டு மருந்து மற்றும் சில மாத்திரைகளை எழுதினார். நான் சீட்டை வாங்கிக்கொண்டேன். ‘‘இதை சாப்பிடுங்க சரியாயிடும். தண்ணி படாம வச்சிக்கங்க.’’

‘‘சரி டாக்டர்...’’

லொக் லொக்... ஸ்ஸ்ஸ்ஸ்.

மீண்டும் டிவியின் மேலே இருந்த ஒரு குமிழைத் திருக ஒரு பாட்டு ஓடத் தொடங்கியது. முந்நூறு ரூபாய் கட்டணம். மருந்து மாத்திரைகள் நூற்று அறுபத்தைந்து ரூபாய் வந்தது.

எனக்கு ஏதோ ஒரு சிறுகதையின் பாத்திரத்தை கொஞ்ச நேரம் வாழ்ந்தது போல இருந்தது.

facebook.com/GanesanRules

ஏலேய் வந்திருக்கிறது டீசர், ட்ரைலர்கூட இல்லடா... வெறும் Glimpse. அதுக்குள்ள மொத்தப் படத்துக்கும் விமர்சனம் எழுத ஆரம்பிச்சிட்டாய்ங்க. ஒருத்தன் ‘வினோத் மேல வச்சிருந்த நம்பிக்கையே போச்சி... இதுல ஸ்லோமோஷன்ல எல்லாம் ஷாட் வச்சிருக்காரு. படம் பிடிக்கல’ங்கிற ரேஞ்சுக்கு எழுதி வச்சிருக்கான். ஏன்டா, ஸ்லோமோஷன் வச்சது குத்தமாடா?