Published:Updated:

வலைபாயுதே

எஸ்.பி.பி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.பி.பி

என்னுடைய குரலாகப் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என் ஜீவனோடு எப்போதும் கலந்திருக்கும்.

Youtube.com/Ilayaraja

கந்தர்வர்களுக்காக பாட போய்ட்டியா... இங்கஉலகம் ஒரே சூன்யமா போச்சு... உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியல... பேச பேச்சு வரலை, வார்த்தை இல்லை...

twitter.com/rajinikanth

என்னுடைய குரலாகப் பல ஆண்டுகளாக இருந்திருக்கிறீர்கள். உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என் ஜீவனோடு எப்போதும் கலந்திருக்கும்.

twitter.com/ikamalhaasan

அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.

twitter.com/Rahman

“Growing up in South India, SPB is part of our culture. His voice is part of our culture. He is part of our victories, love, devotion and joy. And this loss.... I won’t say it’s a loss. I think we have to celebrate his life. Because he has given or shared so much of his gifts with us, that we can only celebrate and not brood over his death. Because what happens, happens!”

வலைபாயுதே

facebook/Mugil Siva

ஒரு பாடலின் வெற்றி என்பது கலைஞர்களின் கூட்டு முயற்சி. ஆனால், எஸ்.பி.பி.யைப் பாட வைப்பது என்பது பாடலின் ஆயுளைக் கூட்டும் முயற்சி.

facebook.com/gokul.prasad

எஸ்.பி.பி.க்கு அஞ்சலி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்

“மூக்கின் மேலே

மூக்குத்தி போலே

மச்சம் உள்ளதே... அதுவா?”

என்று நீங்கள் கேட்க,

கோயம்புத்தூர் முனியாண்டி விலாஸில்

அடுப்பில் கிடந்து கருகும்

திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்

அதுவா..?

அதுவா...?

அதுவா....?

என்று திருப்பிக் கேட்டான்

அப்போது உங்களுக்குச் சிலிர்த்துக் கொண்டதா எஸ்.பி.பி சார்?

- கவிஞர் இசை

twitter.com/Mega1Mind

SPB ஒரு Dream daddy கேரக்டர். உல்லாசம், காதலன், கேளடி கண்மணிலாம் அவர் தனியா நடிக்கவே தேவை யில்லைன்ற மாதிரியான ஒரு குணவார்ப்பு கொண்ட மனிதர்.

அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்தது மழை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வலைபாயுதே

twitter.com/skpkaruna

அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! ஒபாமா என நினைவு. குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்பிபியை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்..

“இவர் எஸ்பிபி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர். 35,000 பாடல்கள் பாடியிருக்கார்.”

அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டிக் கைகுலுக்கிட்டு நகர்ந்துவிடுகிறார். பிறகு நடந்ததை எஸ்பிபி இப்படிச் சொன்னார்...

“அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன். என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன். இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது எனத் தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்துவிட்டு, Mister Singer! Is that true? Did you really sung 30 thousand songs so far? என்றார். நான் பதிலுக்கு No Sir., My President was wrong on that fact. I actually crossed 35 thousand last week என்றேன். அவர் திகைத்தபடி, என்னை இறுகப் பற்றி, oh god! I have never heard about a singer sung more than 1000 songs! you are just impossible என்று சொல்லிவிட்டு, எதையோ முணுமுணுத்தபடியே விலகிச்சென்றார். இப்போது நான் 40,000 பாடல்களைப் பாடி முடித்ததை இங்கிருந்தே அமெரிக்காவுக்குக் கேட்கும்படி உரக்கக் கத்த வேண்டும் போலிருக்கு.”

அமெரிக்க ஜனாதிபதியை விடுங்க! நமக்கு அடுத்த தலைமுறையே இப்படியொரு பாடகர் இருந்தார்! அவர் 11 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். ஒரே நாளில் 7 மொழிகளில் 15 பாடல்களும், ஒரே நாளில் 22 பாடல்களும் பாடினார் எனப் படித்தால் நம்பவாபோகிறார்கள்? இவற்றைக் கேட்டு, பார்த்து வாழ்ந்த நமது வாழ்க்கை அல்லவா முழுமை பெற்ற வாழ்வு!

facebook.com/hemi.krish

தென்னிந்தியாவிற்குள்... ``நான் எஸ்பிபி ரசிகர்” எனச் சொல்வது கடலுக்குள் விழும் மழைத்துளி போன்றது. தனியாக தற்பெருமை கொள்ள முடியாது... கடலோடு சேர்ந்துதான் ஒற்றை மழைத்துளியும் ஆரவாரிக்க முடியும்... spb சார் நீங்க பாடும் நிலா... நாங்கள் ஆர்ப்பரிக்கும் கடல் இப்போது...

facebook.com/latha.arunachalam.3

காத்தோடு மலராடக் கார்குழலாட

காதோரம் லோலாக்கு சங்கதி பாட...

நிலவை வான் நிலவை நான் புடிச்சு வாரேன்...

ஒரு குரல் வரிகளோடு, இசையோடு ஆடக்கூடச் செய்யுமா?

உண்மையிலேயே அந்த நிலவைப் பிடித்துக் கையில் தருமா?

ஆம்!!!

வலைபாயுதே

twitter.com/IlovemyNOAH2019

இத்தனை நாள் உங்க பாடலைக் கேட்கும்போதெல்லாம் இனம்புரியாத சந்தோசம் வந்தது.

இனி உங்கள் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மனதில் மிகப்பெரிய சோகம் தாக்குமே SPB... Sir

உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு. என் கண்களின் ஓரத்தில் ஏன் இத்தனை கண்ணீர்?

வெறும் பாடகன் மட்டுமல்ல

மிகச்சிறந்த மனிதன் நீங்கள்.

twitter.com/narsimp

அடியே... மனம் நில்லுனா நிக்காதடியைக் கேட்டு அழுவேன்னு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை..:(((((

நினைத்ததைவிடவும் மிகக் கடினமாக இருக்கிறது கடப்பது. அவ்வளவு எளிதானதில்லை சில நிகழ்வுகள், அதில் இது முதன்மை மாதிரி ஆகிருச்சு, இந்நொடி... மரணிப்பதைவிடக் கொடிது, இப்படி ஒரு மரணத்தை எதிர்கொள்வது:(

twitter.com/umakrishh

பாடகர்ங்கறத தாண்டி, அவர் காட்டிய சபை நாகரிகம், மேடையில் பேசிய பேச்சுகள், ரியாலிட்டி ஷோக்களில் காட்டிய குழந்தைத்தனம், அனுபவப் பகிர்வுகள், குறைகளை காயப்படுத்தாம சொல்ற விதம், மனசாரப் பாராட்டும் பக்குவம் இதெல்லாம்தான் இவர் நம்ம வீட்டு ஆள் என்ற மனநெருக்கத்தை உருவாக்கியிருக்கு.

twitter.com/NonSens

SPB: உனக்கு புடிச்ச சிங்கர்ஸ்?

RAJA: ஏன்டா? (சிரிக்கிறார்)

SPB: இல்லடா. என் பேரச் சொல்லச் சொல்லியா கேட்டேன்?

“ஒருவர் பொறை இருவர் நட்பு” - நாலடியார்.

வலைபாயுதே

twitter.com/idonashok

கேளடி கண்மணியில் காதலிக்கும், தன் மகளுக்கும் இடையில் தவிக்கும் அப்பா, சிகரத்தில் போதைக்கு அடிமையான மகனைக் கண்டு கண்ணீர் வடிக்கும் அப்பா, காதலனில் மகனுடன் சேர்ந்து பீர் அடித்து அட்வைஸ் பண்ணும் அப்பா, ரட்சகனில் கோபக்கார மகன் எப்படியாவது உருப்பட மாட்டானா எனத் தவிக்கும் அப்பா, மின்சாரக்கனவில் மகனுக்கு பெரிய இடத்தில் பெண் எடுக்கத் துடிக்கும் காமெடியான அப்பா இப்படி எத்தனை அப்பாக்கள். இந்தக் கதாபாத்திரங்களை எல்லாம் அசைபோடும்போது, உலகின் எல்லா அப்பாக்களுக்கும் எஸ்.பி.பியின் குரலும் அதில் தோய்ந்திருக்கும் மென்மையும் இருந்தால் எவனும் அப்பா பேச்சைத் தட்டமாட்டான் எனத் தோன்றுகிறது.

எஸ்.பி.பி நடிக்கும்போது மட்டுமல்ல, பாடும்போதும் நடிப்பார். “என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை” பாடலைக் கேளுங்கள். அதில், “கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்... முந்தானைச் சோலையில் தென்றலுடன் பேசுவாள்...” எனப் பாடும்போது ஒருகிலோ காதலில் இரண்டுகிலோ வெட்கத்தைத் தோய்த்துப் பாடியிருப்பார். இதுபோல் ஆயிரம் பாடல்களைச் சொல்லலாம். அவற்றின் வரிகளைத் தாண்டி இசையைத் தாண்டி அவற்றின் உணர்வுகளை நமக்குள் பல்லாண்டுகளாகக் கடத்திக் கொண்டிருப்பவர் எஸ்.பி.பி.

twitter.com/SadhaaAzhagiri

பாடும் நிலா பாலு will never become a past tense.

twitter.com/iamkarki

தூக்கம், சாப்பாடு மாதிரி நம்ம வாழ்க்கைல எல்லா நாளும் தவறாம இடம்பெறும் விஷயங்கள் ரொம்ப ரொம்ப கம்மிதான். அதுல ஒண்ணுதான் பாலு குரல். எஃப்.எம்.ல, நம்மள ஓவர் டேக் பண்ற ஆட்டோல, பக்கத்து சீட்டு ரிங்டோன்ல, டீக்குடிக்கிறப்ப பக்கத்துல முனகுறவரோட ஹம்மிங்க்ல, யுட்யூபுல, ஸ்பாட்டிஃபைலன்னு எப்படியாச்சும் அவரோட குரல தினம் தினம் கேட்காம இருந்ததில்லை. அப்படி எங்கயும் கேட்க முடியாமப்போனா அன்னைக்கு நைட்டு நாமளா ஒரு பாட்டையாச்சும் தூங்கறதுக்கு முன்னாடி கேட்டுடுவோம். இவ்ளோ நாள் எப்படி இருந்தாரோ அதே மாதிரிதான் இனியும் நம்மகூட இருப்பாரு.. என்ன ஒரு வித்தியாசம்... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

ஜீவன் வந்து சேரும் வரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன்...

இப்படிச் சில வரிகளைக் கேட்குறப்ப கண்ணுல முட்டிட்டு நிக்கப்போற தண்ணியை எப்படி மறைக்கப் போறோம்னுதான் தெரியல... நாங்க என்ன உங்கள மாதிரியா பாலு... என்ன ராகம், என்ன சூழல்னாலும் இலகுவா உங்கள மாதிரி எங்களுக்குச் சிரிக்கத் தெரியாதுல்ல...