Published:Updated:

வலைபாயுதே...

அதிதி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அதிதி ஷங்கர்

நானே யார் முன்னிலையில் அதிமுகவில் சேரலாம்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், போவியா!

வலைபாயுதே...

நானே யார் முன்னிலையில் அதிமுகவில் சேரலாம்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், போவியா!

Published:Updated:
அதிதி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அதிதி ஷங்கர்

twitter.com/VignaSuresh

ஒரு நட்பு முறிந்து போகையில், அவர்களிடத்து மட்டும் பகிர வேண்டிய ரகசியங்கள் எல்லாம் பெறுநர் இல்லா கடிதம் போல் திக்கித்து நிற்கின்றன.

twitter.com/kusumbuonly

தோற்றவனுக்கு தோற்றுப்போன வலியை விட, திரும்பிப் பார்க்கும்பொழுது எவரும் இல்லாமல் போனதன் வலிதான் அதிகம்!

twitter.com/tnrags

சென்னையின் அடையாளம் எப்படி ஃபில்டர் காபி இல்லையோ, அதே மாதிரி மதுரையின் அடையாளம் முறுக்கு மீசை இல்லை.

twitter.com/narsimp

‘சரி, போய்த்தொலையுது’ என்பதன் தத்துவார்த்துமான பதம்தான், பக்குவம்.

twitter.com/JamesStanly

‘‘எல்லாத்தையும் விக்குறீங்களே... எதத்தான் எங்களுக்கு விட்டு வைப்பீங்க ஜீ..?”

‘‘ஆல் இந்தியா ரேடியோ, பொதிகை டிவி...’’

twitter.com/AravindRajaOff

அமெரிக்காவில் மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்த ஜோ பைடன் - செய்தி

‘‘எங்க ஜீயும் தான் 10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி பண்ணி இருக்காரு...’’

‘‘சபாஷ் மாப்ள... கல்விக்கடனா..?’’

‘‘கல்வியா? கார்ப்பரேட் கடன் மாமா!”

facebook.com/Gokul Prasad

மழை வாசத்தையே தூக்கிச் சாப்பிடுகிற நறுமணம் ஒன்று இப்புவியில் இருக்குமானால், அது பக்கத்து வீட்டுப் பிரியாணி வாசமாகும்.

facebook.com/Bapeen Leo Joseph

பழம்பூரினு கேட்டா பழ பஜ்ஜிய கொண்டு வந்து வைக்குறானுங்க... பூரி வாங்காம கடைய விட்டு கிளம்புறதா இல்ல.

facebook.com/Ramanujam Govindan

ஒரு படம் படுதோல்வி அடையப் போகிறது என்று இளையராஜா முன்கூட்டியே மோப்பம் பிடித்து விடுவார். லைட்டா கருகற ஸ்மெல் தெரியும் என நினைக்கிறேன். உடனே பாடல்களையெல்லாம் பிரமாதமாப் போட்டிருவார்.

twitter.com/queentwtz

மிகவும் நம்பிக்கை வைத்த இடத்தில்தான் மிகவும் மோசமாக அவமானப்பட்டு நிராகரிக்கப்பட்டிருப்போம்!

twitter.com/arulrajmv1

சலூன் கடையில முடி வெட்டும்போது வர்ற தூக்கமும், சண்டே மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் வர்ற தூக்கமும் சொர்க்கம்.

twitter.com/amuduarattai

‘பணம் மட்டும் நிம்மதியைத் தராது’ என்பது பணக்காரர்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே சொன்னதாகத்தான் இருக்கும்.

twitter.com/Nila_twitz

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான தருணம் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

# குஜராத் தேர்தல் கண்ணு முன்னாடி வந்து போகுமா, இல்லையா!

twitter.com/Srividhya_Hari

எல்லா மதவெறிக் கூட்டத்துக்கும் ஒரே இலக்கு, பெண்ணின் உடல்.

twitter.com/saravankavi

முதல் அழைப்பிலேயே போன் எடுப்பவர்கள் அனைவரும் வேலை வெட்டி இல்லாதவர்களும் அல்ல! போன் எடுக்காதவர்கள் அனைவரும் வேலையில் இருப்பவர்களும் அல்ல!

twitter.com/karthickmr

உங்களுக்கு உயிரைவிட படிப்பு முக்கியமா? இந்தக்கேள்வி எங்களைப் பார்த்து பல நூற்றாண்டுகளாகக் கேட்கப்படுகிறது. சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் உக்ரைனிலில் இருந்து உயிர்பிழைத்துவந்த மாணவர்களை நோக்கிக் கேட்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வியும் புதிதல்ல, கேட்பவர்களும் புதிதல்ல.

twitter.com/VelusamyB10

வேலை தெரிஞ்சவன்கிட்ட வேலை செய்யலாம். ஆனா, வேலை தெரியுற மாதிரி நடிக்கிறவன்கிட்ட வேலையே செய்யமுடியாது!

twitter.com/shanmugamchin10

பகவத்கீதையை விட்டுவிட்டு திருக்குறளைப் பற்றிப் பேச வைத்தது திராவிடத்தின் வெற்றி.

twitter.com/ParamasivamRam7

அப்பா, அம்மாவிடம் வலிக்காமலேயே வலித்தது மாதிரி நடித்தோம்... பிள்ளைகளிடம், வலித்தாலும் வலிக்காத மாதிரி நடிக்கிறோம்.

facebook.com/gokul Prasad

நொய்டா இரட்டைக் கோபுரத் தகர்ப்பு தொடர்பான வெவ்வேறு காணொளிகளைப் பார்த்தேன். டன் கணக்கில் வெடி மருந்துகளைப் பயன்படுத்தி அருவி வீழ்வது போலக் கட்டிடத்தைச் சரிப்பதால் இந்தத் தரைமட்டமாக்கம் Waterfall technique எனச் சொல்லப்படுகிறது. பல செய்தி ஊடகங்களும் நேரலையில் ஒளிபரப்பினார்கள். அதனால் ஏகப்பட்ட கருத்தீடுகள். எல்லாவற்றிலும் பலமுறை தவறாமல் இடம்பெற்ற பின்னூட்டங்கள் ஜெய்ராம் கோஷமும் பாரத் மாதா கீ ஜே முழக்கமும். அந்தக் கட்டிடமே ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாலும் ஊழல் குற்றச்சாட்டுகளாலும் தகர்க்கப்படுகிறது. அங்கு வந்து ஜெய்ராமாம். ‘Demolition’ என்றதும் என்ன ஏது என விவரம் தெரியாமலேயே அல்லது தெரிந்தே உள்ளூரப் பூரிப்பு பரவுகிறது போல. திருந்தவே மாட்டீங்களாடா!

twitter.com/Kozhiyaar

வாழ்க்கையில் அமைதியாக இருப்பவரை விட, ‘அமாவாசை’யாக இருப்பவருக்கே அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன!

twitter.com/oorkkavalaan

வாழ்க்கையில்ல நமக்கு கஷ்ட காலத்தில எது கூட இருக்கும்னு நினைக்கிறோமோ, அதான் முதல்ல நம்மள விட்டு போகும்..!

twitter.com/amuduarattai

அரசியல் லாபத்துக்காக மக்களை திசை திருப்பாமல் தமிழக வளர்ச்சிக்கு திமுக பாடுபட வேண்டும் - அண்ணாமலை

# நீங்க கண்ணாடியை பார்த்து பேசிட்டு இருக்கீங்க.

twitter.com/saravankavi

அமைதியான மனிதர்களின் மறுபக்கம் அச்சமூட்டுவதாகவே அமைந்திருக்கிறது!

twitter.com/mohanramko

ஓ.பி.எஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பாக்யராஜ்.

# நானே யார் முன்னிலையில் அதிமுகவில் சேரலாம்னு பார்த்துக்கிட்டு இருக்கேன், போவியா!

twitter.com/itz_radhi3

சிறந்த பொய்கள்...

கடைக்காரர்: ஸ்டாக் இப்போதான்பா முடிஞ்சிது.

டாக்டர்: 10 நிமிஷத்துக்கு முன்னாடி வந்து இருந்தா காப்பாத்தியிருக்கலாம்.

அம்மா: உண்மையச் சொல்லு, அடிக்க மாட்டேன்.

டீச்சர்: சத்தம் போட்டா மார்க்ஸ் கம்மி பண்ணுவேன்.

கடைசியா ஒண்ணு... என் கணவர்: இதோ 10 நிமிஷத்துல வீட்ல இருப்பேன்!

twitter.com/Vkarthik_puthur

மலர்தலுக்கும் உதிர்தலுக்கும் இடையில் இந்த வாழ்வை பூ போல புன்னகைத்து வாழ வேண்டும்!

twitter.com/manipmp

காலத்தையே இழுத்துச் செல்கிறது பேட்டரி செல்.

twitter.com/Greesedabba2

செலவைக் குறைக்கணும்னா சுலபமான வழி, கிரடிட் கார்டு டெபிட் கார்டு, கூகுள் பே எல்லாம் விட்டுட்டு பணமா செலவு பண்ணுங்க. தன்னால செலவு கட்டுபாட்டுக்குள்ள வரும்.

twitter.com/senbalan

அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லை என்றால் ஏழை. அடுத்த மாத EMIக்கு வழியில்லை என்றால் மிடில் கிளாஸ்.

facebook.com/N Naveenkumar

குழந்தைகள் தெய்வத்தின் அவதாரங்கள், அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மட்டும்!

twitter.com/mohanramko

மதுரை முத்து டூ அதிதி: எத்தனை வருஷமா நீங்க ஜோக் சொல்றீங்க?

12 வருஷமா அதே ஜோக்கைதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

twitter.com/ItsJokker

நம்ம கொடிய சீனா தயாரிச்சதா ஏன் பார்க்குறே? எதிரி நாட்டையே நம்ம கொடிய தயாரிக்க வச்சு, அவன் பாவத்தை கழுவ வச்சதா பாரு... நம்ம ஜீ யோட மாஸ்டர் பிளான் புரியும்.

twitter.com/Anvar_officia

கடன் வலையில் அதானி நிறுவனங்கள் சிக்கும் என கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதி நிலையை ஆய்வு செய்யும் Credit Sights எச்சரிக்கை - செய்தி

# யம்மோவ்... யாரும்மா வீட்ல? அதானி கடனை அடைக்கணும், காசு கொடும்மா?

twitter.com/Kozhiyaar

புதிதாக Colour Crayons வாங்கித் தந்ததை, சந்திரமுகியாக மாறி எல்லோருக்கும் விவரித்துக் கொண்டிருக்கிறார் மகள்!

facebook.com/ramanujam.govindan?

அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் நல்ல விஷயம் கூட கேலிக்கூத்தாகி விடும். உதாரணம் stress management. அது தேவையான ஒன்றுதான். ஆனால், சிலபல நிறுவனங்கள் வேலைப்பளு, ஆட்குறைப்பு, முறையான பணி நேரமின்மை, போதுமான ஊதியமின்மை, மோசமான பணிச்சூழல், அதிக வேலை நேரம், மிகையான டார்கெட்கள் என ஊழியர்களைக் கசக்கிப் பிழிந்துவிட்டு அவர்களுக்கு stress management ஏற்பாடு செய்வது, ஹிட்லரின் வதைமுகாம்களில் இருக்கும் யூதர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் அவர்களுக்கு stress management கவுன்சிலிங் கொடுக்க ஹிட்லர் அரசாங்கம் முடிவு செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. இது தனிப்பட்ட எந்த நிறுவனத்தையும் குறிப்பது அல்ல. பொதுவாகச் சொன்னேன்.

twitter.com/amuduarattai

ரைட் இண்டிகேட்டரை போட்டுக் கொண்டு ஒன்வேயில் எதிர்ப்புறமாகப் போகலாம் என்பது நம் நாட்டின் சாலை விதிகளில் ஒன்று.

facebook.com/AuthorPara

நல்ல மனிதர்கள் என்று யாருமில்லை. எல்லோருமே சுமாரான அசெம்பிள்டு செட்தான்.

facebook.com/Kabilan.Kamaraj

“ஜப்பான்ல பள்ளிக் குழந்தைகள்தான் வகுப்பறையை சுத்தம் செய்வாங்க தெரியுமா?”

“ஜப்பான்ல ஆசிரியர்கள் சாதி பார்த்து குழந்தைகளுக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. ஜப்பான் கூட ஒப்பிடுறதுக்கு இந்திய சமூகத்துக்கு என்ன யோக்கிதை இருக்குனு அதை எடுத்துக்காட்டா தூக்கிட்டு வர்றீங்க?”

Aditi Shankar: ஸ்டைலிஷ் தமிழச்சி!
Aditi Shankar: ஸ்டைலிஷ் தமிழச்சி!
Jasprit Bumrah: காதல் கிரிக்கெட்டு!
Jasprit Bumrah: காதல் கிரிக்கெட்டு!
Priya Bhavanishankar: ஸ்விஸ் சாப்பாடு!
Priya Bhavanishankar: ஸ்விஸ் சாப்பாடு!
Sivakarthikeyan: எல்லாம் சுகமே!
Sivakarthikeyan: எல்லாம் சுகமே!