Published:Updated:

வலைபாயுதே

கீர்த்தி பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி பாண்டியன்

எடப்பாடி, வேலுமணியை எல்லாம் இன்னும் அரெஸ்ட் பண்ணாததைச் சொல்றாரு போல, வெயிட் பண்ணுங்க ஜி

வலைபாயுதே

எடப்பாடி, வேலுமணியை எல்லாம் இன்னும் அரெஸ்ட் பண்ணாததைச் சொல்றாரு போல, வெயிட் பண்ணுங்க ஜி

Published:Updated:
கீர்த்தி பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி பாண்டியன்

twitter.com/GreeseDabba2

அம்மா: டி.வி ஸ்டாண்டு கால் உடைஞ்சிருக்கு, மாத்துடா!

மனைவி: உயரம் அதிகமா வாங்கிருங்க, கிச்சன்ல இருந்து பார்த்தா சரியா தெரிய மாட்டேங்குது.

அப்பா: அப்படினா சோபாவும் உயரமானதா மாத்திருடா...

மகன்: டி.வியும் புதுசா பெரிய சைஸ்ல வாங்கலாம்பா!

குடும்பத்தின் இறுதி முடிவு: ஆணியே புடுங்க வேணாம்.

twitter.com/Suyanalavaathi

நாலு கழுதை வயசு ஆனவனும் போன நோண்டிட்டுதான் இருக்கான்... ஏழு கழுதை வயசு ஆனவனும் போன நோண்டிட்டுதான் இருக்கான்... அந்த மூணு கழுத மட்டும்தான் வித்தியாசம்!

twitter.com/manipmp

‘Keep the change’னு சினிமாவிலதான் சொல்றாங்க. நிஜ வாழ்க்கையில் மீதி சில்லறைக்காக அவங்களையே தேமேன்னு பார்த்துட்டு நிற்கிறோம்!

twitter.com/HariprabuGuru

பழைய சுந்தர்.சி படங்கள்ல மாத்தி மாத்தி கட்டையால அடிக்குற காமெடியை இங்க சீரியஸா பண்ணிகிட்டு இருக்கு தமிழக பா.ஜ.க.

Tom Cruise பைக்கு பற பற
Tom Cruise பைக்கு பற பற

twitter.com/prabhu65290

‘இதுவும் கடந்து போகும்’னு கேக்க நல்லா தான் இருக்கும். ஆனா, கடந்து போவதற்குள் வாழ்க்கைக்கும் மறக்காத மாதிரி போட்டுத் தாக்கிட்டுதான் போகும்.

twitter.com/teakkadai1

இந்த தர்மாஸ்பத்திரி, தர்ம தரிசனம்னு யாராச்சும் சொன்னா தலையில ஒரு கொட்டு கொட்டணும் போல இருக்கு. எல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செயல்படுவதுதான். பொது மருத்துவமனை, பொது தரிசனம்... இப்படிச் சொல்றத விட்டுட்டு.

twitter.com/HAJAMYDEENNKS

தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து விலகுகிறது: ஜி.கே.வாசன்

# எடப்பாடி, வேலுமணியை எல்லாம் இன்னும் அரெஸ்ட் பண்ணாததைச் சொல்றாரு போல, வெயிட் பண்ணுங்க ஜி!

twitter.com/teakkadai1

நீங்கள் தவறவிடும் ஒவ்வொரு வாய்ப்புக்கும், சோம்பலால் முயலாமைக்கும், தள்ளிப்போடும் ஒவ்வொரு வேலைக்கும், செய்யும் வரவறியாச் செலவுகளுக்கும், நீங்கள் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

twitter.com/shivaas_twitz

‘சிங்கிள்ஸ்’ என்பதை ‘தனிமைப்படுத்தப்பட்டோர்’ என்றே அழைக்க வேண்டும். நாங்க என்ன வேண்டி விரும்பியா சிங்கிளா இருக்கோம்?

twitter.com/Raajavijeyan

கஷ்டப்படாம இருக்கணும்னா, படுறது கஷ்டம்னு உணராத அளவுக்குக் கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கணும்...

twitter.com/kumarfaculty

தடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்கிறபோது சண்டைகள் உக்கிரமடைகின்றன!

twitter.com/pachaiperumal23

அம்மாக்களுக்கென்று புதிதாக அலைபேசி வாங்கியதே கிடையாது. வீட்டில் புதிய அலைபேசி வாங்கும்போது, பழைய அலைபேசி அம்மாவுக்கென்பது எழுதப்படாத விதி.

twitter.com/amuduarattai

அரசு சொத்துகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என்பது, கண்களை விற்றுக் கண்ணுக்குக் கூலிங் கிளாஸ் வாங்கிப் போடுவது போன்றது.

twitter.com/Thaadikkaran

நம்மகூட படிச்சவங்கள்ல நல்லா படிக்காத பையங்க எல்லாம் விசிட்டிங் கார்டோடு இருக்காங்க. நல்லா படிச்ச பசங்க எல்லாம் அட்ரஸே இல்லாம இருக்காங்க..!

twitter.com/ItsJokker

‘‘ஏங்க, எல்லாத்தையும் திறந்து விட்டா திரும்ப கொரோனா வரும்ங்க...’’

‘‘ஏன், ஆபீஸ் வரச் சொல்லிட்டாங்களா?”

‘‘ஏதே... ஆமா, அதுக்கு என்னா இப்ப?’’

twitter.com/Thaadikkaran

என்னதான் கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும் ரங்கன் வாத்தியார் மாதிரி மானேஜர் பேரு வாங்கிட்டுப் போயிடுறார். நாம பீடி வாத்தியார் மாதிரி பேரு கிடைக்காம நிக்குறோம்..!

twitter.com/DrSharmila15

‘‘ஒரு மாநிலத் தலைவர் என்ற மரியாதையே இல்லாம கலாய்க்குறாங்க ஜீ’’

‘‘அட, போவியா... ஒரு பிரதமரான என்னையே பாரபட்சம் இல்லாம பங்கம் பண்றாங்க... எதுக்கும் நீ கொஞ்சம் அடக்கி வாசி!”

facebook.com/dvaipayana.krishna

காபூலில் இறந்த 13 மெரைன்களில் நால்வருக்கு வெறும் 20 வயது. ஏறத்தாழ உலக வர்த்தக கோபுரங்கள் தகர்க்கப்பட்ட வருடத்தில் பிறந்தவர்கள். யாருடைய யுத்தம்? என்ன தேசபக்தி? எதற்காக?

facebook.com/sakthivel.subramaniam

எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் புகழுரை ஆற்ற முதல்வருக்கு இரண்டு நிமிஷம், உதயநிதிக்கு ஐந்து நிமிஷம் என எடுத்துக்கொள்கிறார்கள்... என்னதான் புள்ளையாவே இருந்தாலும், 50 வருஷமா உழைச்ச மனுசனுக்கு காண்டாகுமா இல்லையா! அதான் எல்லாத்துக்கும் தடை போட்டுட்டாரு போல!

facebook.com/revathy.ravikanth

சமயத்துல எதுக்கு ஃப்ரிட்ஜ தொறந்தோம்னு மறந்துடுது... சரி, எதுக்கும் கறிவேப்பிலைய எடுத்துட்டுப் போவோம்.

facebook.com/ஃபௌசியா

என்னாது, நிலநடுக்கமா? ரெண்டு நாளா எங்க மாடி வீட்ல வேல நடந்துட்டிருக்கு. அவன் போடற டிரில்லர் செவுத்துலயா, இல்ல என் மண்டையிலயான்னு தெரியாத அளவுக்கு அதிர்வுல இருக்கும், எங்க வீட்ல வந்து உக்காந்து பாக்கறியா?

twitter.com/Vkarthik_puthur

விற்பனை செய்ய இது ஒன்றும் உங்கள் சொத்துக்கள் அல்ல - மம்தா

# அது தெரிஞ்சுதான் குத்தகைக்கு மட்டும் விட்ருக்காங்களோ?!

Keerthi Pandianஸ்டைலிஷ் தமிழச்சி!
Keerthi Pandianஸ்டைலிஷ் தமிழச்சி!

twitter.com/sundartsp

ஹோட்டலின் தரம் வெளியே நிற்கும் ஸ்விக்கி டி-ஷர்ட்கள் எண்ணிக்கையில் தெரிந்துவிடுகிறது.

twitter.com/manipmp

முறைத்துப் பார்த்தாலே ஒருத்தரைப் பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் வாகன ஓட்டிகள்!

twitter.com/ItsJokker

மதன்: உங்க கட்சியில சேர ஆவலா இருக்கேன் அண்ணா...

அதிபர்: அது அநாவசியம். எங்க வீடியோவை ரிலீஸ் பண்ண எங்க சைட்லயே ஆள் இருக்கு. அதனால நீ தேவையில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism