Published:Updated:

வலைபாயுதே...

Manju Warrier: வாழ்ந்தா!
பிரீமியம் ஸ்டோரி
Manju Warrier: வாழ்ந்தா!

‘பல்கலைக்கழக ஆண்டு விழாவுக்கு Chief Guest-டா வாங்கன்னு எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்... நான் ரொம்ப பிசின்னு சொல்லி வரவே மாட்டேங்குறார்!”

வலைபாயுதே...

‘பல்கலைக்கழக ஆண்டு விழாவுக்கு Chief Guest-டா வாங்கன்னு எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்... நான் ரொம்ப பிசின்னு சொல்லி வரவே மாட்டேங்குறார்!”

Published:Updated:
Manju Warrier: வாழ்ந்தா!
பிரீமியம் ஸ்டோரி
Manju Warrier: வாழ்ந்தா!

twitter.com/BeingSaThug

மிடில் கிளாஸ் குடும்பத்துல 3 குழந்தைகளா பொறந்ததுல மொத பொறந்த ஆம்பளப் பையனா ஆகிட்டான் கோலி. அவன் என்ன பண்ணினாலும் யாருக்குமே பத்த மாட்டிங்குது. அல்லது ‘நீ பண்ணித்தானே ஆகணும்’ன்ற ஏளனப்பேச்சு வந்துருது. இவ்ளோ வெறுப்புக்கெல்லாம் நீ தகுதியானவனே இல்லடா!

twitter.com/Kozhiyaar

தவிர்க்கிறார்கள் என்பதை உணர்வது ஒரு கலை, அதைப் புன்னகையுடன் எதிர்கொள்வது அதைவிடப் பெரும் கலை!

twitter.com/karkyjohnson

முன்னால போற குட்டி யானைல ‘Follow பண்றியாடா பாடிசோடா’ன்னு எழுதி வெச்சிருக்கான். ஏன்டா, என்னா ஏத்தம் இருக்கணும் உனக்கு!

twitter.com/vandavaalam_

எது நடந்தாலும் சந்தோஷப்பட்டு ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டாடுற அ.தி.மு.க காரங்களுக்கு இருக்குற மாதிரி ஒரு தன்னம்பிக்கையைக் குடு இறைவா!

twitter.com/Thaadikkaran

‘‘சிக்னல் போட்டதும் பறந்துட்டே போனியே, அப்படி போய் என்னதான் பண்ணப் போறே?’’

‘‘அடுத்த சிக்னல்ல மொத ஆளா நிப்பேன்...’’

Mammootty: டக்குன்னு யார் தெரியுறார்?
Mammootty: டக்குன்னு யார் தெரியுறார்?

twitter.com/Vasanth920

மருத்துவமனையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், ‘‘என்ன இவ்வளவு சத்தம், இது ஹாஸ்பிட்டல்’’ என்பதே!

twitter.com/Suyanalavaathi

தீர்ப்பு யாருக்கு சாதகமா இருக்கோ இல்லையோ... பட்டாசுக் கடைக்கும், ஸ்வீட் கடைக்கும் சாதகமா இருக்கு.

twitter.com/Greesedabba2

இல்லாத ஊதாரித்தனமான செலவெல்லாம் செய்துவிட்டு, குளிக்கும்போது பழைய பிஞ்சு போன சோப்பைத் தூக்கி வீச மனமில்லாமல் புது சோப்போடு ஒட்ட வைத்துச் சிக்கனத்தைப் பறைசாற்றுவான் தமிழன்.

twitter.com/saravankavi

ரேஷன் கடைகளில் ஏன் பிரதமர் மோடி படம் வைக்கவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்த நிலையில், காஸ் சிலிண்டரில் மோடி படம் ஒட்டி, சிலிண்டர் விலை ரூ.1,105 எனப் பிரசாரம் செய்கிறது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி.

ஜி: ஏம்மா... நான் பாட்டுக்கு அமைதியாதானே இருந்தேன்!

twitter.com/mohanramko

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இரு முறை குறைக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றியபோது உயர்த்தப்பட்ட உணவகங்களின் விலை, தற்போது குறைக்கப்படவில்லை. ஒரு முறை விலை ஏற்றி, பின்பு குறைத்தால் அதன் பயன் முழுமையாக மக்களைச் சென்று அடைவதில்லை.

twitter.com/amuduarattai

போதைப் பழக்கத்தை முழுமையாக ஒழிக்க தொண்டு நிறுவனங்கள் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

# டாஸ்மாக்கை ஒழிச்சாலே முக்கால்வாசி ஒழிச்சிரலாமே!

facebook.com/Bapeen Leo Joseph

‘‘பல்கலைக்கழக ஆண்டு விழாவுக்கு Chief Guest-டா வாங்கன்னு எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்... நான் ரொம்ப பிசின்னு சொல்லி வரவே மாட்டேங்குறார்!”

‘‘இப்போ நான் சொல்ற மாதிரி போய்ச் சொல்லு...’’

‘‘என்ன சொல்லணும்?’’

‘‘பல்கலைக்கழக ஆண்டு விழாவுல உங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்குறோம்... மறக்காம வந்துடுங்கன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே இரு...’’

Manju Warrier: வாழ்ந்தா!
Manju Warrier: வாழ்ந்தா!

facebook.com/Ramanujam Govindan

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை ஞாயிற்றுக்கிழமைகளில் நன்கு உணரலாம். அவர்கள் ஆறு, ஏரி, குளக்கரைகளில் காற்றாடப் போய்விடுவார்கள். இப்படி ஞாயிற்றுக்கிழமையின் பாதியை டாய்லெட்களைக் க்ளீன் பண்ணியே வீணடிக்க மாட்டார்கள். டாய்லெட் என்பதே ஹார்பிக் கம்பெனியின் கார்ப்பரேட் இல்லுமினாட்டி சதி!

twitter.com/Suyanalavaathi

இந்த மண்ணை ஆக்கிரமிக்கும் திறன் கொண்ட ஆளுமை ரஜனிகாந்த்தான்: மாரிதாஸ்

# ரஜினி: தம்பி... தம்பி... உனக்கு வேற கன்டென்ட் கிடைக்கலன்னா என்னைய கன்டென்ட் ஆக்காதப்பா!

twitter.com/Kozhiyaar

ஆறுதலாய்த் தெரிபவரை தொந்தரவாக மாற்றிவிடக் கூடியது காலம்!

twitter.com/saravankavi

தனக்கென ஒரு பாதையை உருவாக்குபவர்கள், வேகத்தடை அருகே இறங்கிச் செல்பவர்கள்தான்!

facebook.com/Hansa Hansa

குடும்ப வன்முறையில் சிக்கித் தவிக்கும் ஒருத்தியை, வெளியே வரச்சொல்கிறாள் ஏற்கெனவே விவாகரத்தான, சிடுமூஞ்சியான இன்னொருத்தி. இவளின் அன்பான குடும்பமோ, ‘உன் தொழில் முக்கியமல்ல. குடும்பத்தைப் பார். பிள்ளை குட்டி என்றானபின புருஷன் திருந்திவிடுவான்’ என்கிறது. திரும்பி வந்தால் அவளுக்கு, அவள் பெற்றோரும் சகோதரனும் பொறுப்பெடுக்க வேண்டி வருமே’ எனும் பதற்றமும் அக்குடும்பத்திற்கு ஒரு காரணம். ‘குடும்பமோ புருஷனோ, அண்டி இருக்காதே’ என்கிறாள் அந்தச் சிடுமூஞ்சி.

எனக்கென்னவோ அன்பான அவள் குடும்பம் சொல்வதுதான் வன்முறையாகப் படுகிறது.

twitter.com/Vkarthik_puthur

ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 5% ஜி.எஸ்.டி: செய்தி

# இவங்க மக்களை 1% கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க போல...

httwitter.com/Suyanalavaathi

ஹோட்டல்களில் gpay, phonepe, paytm புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, பாதிக்கப்படுவது வெயிட்டர்களே... பர்ஸ்ல சில்லறையும் இருக்காது, டிப்ஸும் கிடைக்காது!

Rahman:  இசை செல்ஃபி!
Rahman: இசை செல்ஃபி!

www.facebook.com/Ravikumar M G R

70ஸ் & 80ஸ் கிட்ஸ்களின் இன்றைய மிகப் பெரிய பிரச்னை, வயது முதிர்ந்த, வயதாவதால் ஏற்படும் நோய்களும் கொண்ட பெற்றோர்கள்தான். உள்ளூரிலேயே இருக்கும் பிள்ளைகள் ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்குத்தான் மனக் கஷ்டம். அவர்களால் வேலையை விட்டுவிட்டு பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள சொந்த ஊருக்கு வர முடிவதில்லை. பெற்றோர்களாலும் பிள்ளைகள் வாழும் ஊருக்குச் செல்ல முடிவதில்லை. போதிய பணம், வசதியான வீடு என இருந்தாலும் அவசரத்தில் உதவ யாருமில்லாத தனிமையில் வாழ வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு. தங்களின், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்களைத் தவிக்க விடுகிறோமே என்கிற குற்றவுணர்வு பிள்ளைகளுக்கு! இதற்குத் தீர்வே இல்லை என்றுதான் தோன்றுகிறது!

twitter.com/amuduarattai

‘மகாத்மா காந்தி துப்பாக்கியால், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்’ என்று பள்ளி வரலாற்றுப் புத்தகங்களில் படிக்கும் பாக்கியம், ஒருவேளை வருங்கால மாணவர்களுக்குக் கிடைக்கலாம்.

twitter.com/saravankavi

தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது: கார்த்தி சிதம்பரம்

# கூட்டணி வச்சிருக்கறதாலதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ்னு ஒரு கட்சி இன்னும் இருக்குன்னு உண்மையான காங்கிரஸ்்காரங்க யாராவது இவருக்குச் சொல்லுங்களேன்.

twitter.com/Sollakudatham

ஊர்ல இருக்குற வியாதிக்கு எல்லாம் மருந்து கண்டுபிடிச்ச போதி தர்மருக்கே முடி கொட்டுறதுக்கு மருந்து கண்டுபிடிக்கத் தெரியல... போங்கடா டேய்!