Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

வாழ்க்கைல எம்டியா ஃபீல் பண்றப்ப எம்டி மாதிரி நடந்துக்குவேன்.

வலைபாயுதே

வாழ்க்கைல எம்டியா ஃபீல் பண்றப்ப எம்டி மாதிரி நடந்துக்குவேன்.

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/imanojprabakar

பதவி சுகத்தை 6 ஆண்டுகளாக அனுபவித்த, இப்போதும் எம்.பி.யாக இருக்கும் பாபுல் சுப்ரியோ கட்சி மாறுகிறார். ‘கடைசித் தேர்தல்’ என அரசியலையே வெறுக்குமளவு பேசிய பஞ்சாப் கேப்டனால் கட்சி முடிவை ஏற்க முடியவில்லை. அரசியல் எப்போதும் பதவி போதைக் கானதுபோல!

twitter.com/Vkarthik_puthur

நீட் தேர்விற்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தால் எந்தப் பலனும் இருக்காது: பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா

# பலன் இல்லாத தீர்மானத் துக்காகவா பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செஞ்சாங்க?

twitter.com/Abhirhythm_

வாழ்க்கைல எம்டியா ஃபீல் பண்றப்ப எம்டி மாதிரி நடந்துக்குவேன். அப்ப எம்டி கூப்ட்டு, ‘ஏம்மா... உன்கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணி வச்சுருக்க’ன்னு சத்தம் போட்டுத் தெளிய வச்சுருவார்.

Shruti Haasan - சேட்டை பிடிச்ச சிஸ்டர்ஸ்!
Shruti Haasan - சேட்டை பிடிச்ச சிஸ்டர்ஸ்!

twitter.com/shivaas_twitz

யோசிச்சி பாக்குறேன்... பொழுதுக்கும் சோக ஸ்டேட்டஸ் வைக்கிறவங்க, ஸ்மார்ட் போன் வர்றதுக்கு முன்னாடி எப்படி சோகத்தை வெளிப்படுத்தியிருப்பாங்கன்னு?facebook.com/ananya.mahadevan

மீ: வெயில் வந்தாச்சுன்னா வாங்கோ, மாடில போய் கோதுமையைக் காயப்போட்டுட்டு வந்துடலாம்.

ஹீ: ஒரு ஆள் போறாதோ? (திருட்டு முழி)

மீ: சரி, அப்போ நீங்களே போய் வச்சுட்டு வந்துடறேன்னு சொல்றேளா? (திருட்டு முழி) ஹோக்கேய்!

twitter.com/angry_birdu

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியிருப்பது ஆர்.டி.ஐ மூலம் தகவல்! ஏன்னா, அரசுக்கு டாஸ்மாக் வருமானம் வரி மூலமா கிடைக்குது. லாபம் மூலமா இல்ல. பல பேர் இதைத் தவறாத்தான் புரிஞ்சிக்குறாங்க. 2017-ம் ஆண்டு வரி மூலம் கிடைத்த வருமானம் ரூ.14,574 கோடி. ஆனா லாபம் ரூ.25 கோடிதான். சில ஆண்டுகளில் அதுவும் இருக்காது.

சொல்லப்போனா டாஸ்மாக்கை லாபம் வர்ற மாதிரி நடத்தினா தமிழ்நாடு அரசுக்குத்தான் இழப்பு. எப்படி? வர்ற லாபத்துல ஒன்றிய அரசுக்கு கார்ப்பரேட் வரி கட்டி அழணும். அதுக்குப் பதிலா அரசுக்கு வர வேண்டிய லாபத்தை வரியாக வசூல் பண்ணினா முழுவதும் தமிழ்நாடு அரசுக்கே கிடைக்கும்.

Navdeep - தல தரிசனம்!
Navdeep - தல தரிசனம்!

twitter.com/skpkaruna

இந்த பூமியின் மிக சாதுவான உயிரினம், காண்டாமிருகம். சதுப்பு நிலக் காடுகளின் பாதுகாவலன். வேட்டையாடப்படாமல் பாதுகாக்க வேண்டுமெனில் அதன் கம்பீரமான கொம்புகளை வனத்துறையே அறுத்து எடுக்க வேண்டியிருக்கு! மனிதர்கள் மட்டும் அழிந்துபோகும்படியான ஒரு பேரழிவு வந்தே தீர வேண்டும்.

twitter.com/RajaAnvar_Offic

காதலியிடம் பேசியபடி கிணற்றுக்குள் தவறி விழுந்த காதலன்: செய்தி

# இதைத்தான் ‘காதலில் விழுந்தேன்’ன்னு சொல்றாங்களோ!

twitter.com/sankariofficial

‘டூப்பு’களுக்கு ஹீரோ வேடம் கிடைத்தது போன்ற அதிர்ஷ்டம்தான், காளான் மற்றும் மீல் மேக்கருக்கு புரட்டாசியில்!

twitter.com/nandhu_twitts

அதுக்கும் மேல உன் இஷ்டம் என்பது... அட்வைஸின் அதிகபட்ச அழுத்தம்!

twitter.com/ItsJokker

Swiggy, Zomato சேவைக்கு இனி ஜிஎஸ்.டி # ஜி: என்னயவாடா காலையில இருந்து ஓட்டிட்டு இருக்கீங்க?!

twitter.com/RahimGazzali

பப்ஜி மதன் மனைவியால் சொகுசுக்காரான ஆடி சாதாரணக் காராக மாறியது. இப்ப கே.சி.வீரமணி புண்ணியத்தில் ரோல்ஸ் ராய்ஸ் காரும் சாதாரணக் காராக மாறிவிட்டது!

twitter.com/chithradevi_91

புரட்டாசி மாசம்னு நினைக்காம செப்டம்பர் மாசம்னு மாத்தி யோசிச்சுப் பாருங்க. எதுவுமே தப்பில்ல - கறி சாப்பிடுவோர் சங்கம்.

twitter.com/Kozhiyaar

விஜய் சேதுபதி ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து அடுத்த ஸ்பாட்டுக்குப் போற கேப்ல எல்லாம் படம் நடிக்க ஆரம்பிச்சுட்டாருன்னு நினைக்கிறேன்!

twitter.com/Suyanalavaathi

அலாரம் அடிச்சதும் எழுந்தா, மனுஷன். அலாரம் அடிச்சதும் ரெண்டு, மூணு தடவை snooze பண்ணிட்டு எழுந்தா, பெரிய மனுஷன். அலாரம் முழுசா அடிச்சும் எழுந்திருக்காம லேட்டா எழுந்திருச்சுட்டு, ‘‘என்ன, அலாரம் அடிக்கல போலயே’’ன்னு சொல்றவன் Legend.

Samantha - செல்ஃபி புள்ளீங்க!
Samantha - செல்ஃபி புள்ளீங்க!

facebook.com/Elangovan Muthiahமுன்னாள் க்ரஷ் ஒருவர் புதிதாக ஐடி க்ரியேட் பண்ணி ஃபேஸ்புக்கில் இருப்பதாக நண்பன் ஒருவன் ஒற்றறிந்து தகவல் சொன்னான். ஆர்வமா என்னுடைய ஐடியிலிருந்து தேடிப்பார்த்தேன். அப்படி ஒரு ஐடியே இல்லை. ‘பயபுள்ள, பொய் சொல்லீருச்சு போல’ன்னு நினைச்சுக்கிட்டு பேசாம இருந்துட்டேன். அடுத்த தடவை அவனைப் பார்க்கும்போது விஷயத்தைச் சொன்னேன். “இல்லையே மாப்ள, இரு பார்ப்போம்”னு அவன் ஐடில போய்ப் பார்த்தா அம்மணி அவுக ஆத்துக்காரரோட டூர் போன போட்டோலாம் இருக்குது. என் ஐடில இருந்து பார்த்தா இல்ல.

நண்பன் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, அப்புறம் குபீர் சிரிப்போட சொன்னான்... “மொதல்ல உன்னை ப்ளாக் பண்ணிட்டுதான் ஐடியே க்ரியேட் பண்ணியிருக்காபோல மாப்ள!”

தட், ‘ரொம்ப அசிங்கமாப்போச்சு கொமாரு’ மொமண்ட்டுகள். ஏம்மா... நான்லாம் நல்ல குடும்பத்துல பொறந்த பையன்மா, என்னைப் போய்...

facebook.com/Ramanujam Govindan

டேய் மார்க்! எனக்குக் கல்யாணம் ஆகி பத்தாம் க்ளாஸ் படிக்கும் மகள் இருக்கிறாள். நான் ‘கல்யாண மாலை’ எனத் தேடியது எஸ்.பி.பி பாடிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படப் பாடலை; மேட்ரிமோனியலை அல்ல. ஆகவே, அடிக்கடி ‘26 வயது, மாநிறம், அழகான பெண்’ என்றெல்லாம் விளம்பரம் காட்டி வெறுப்பேற்றுவதை நிறுத்தவும்.

www.facebook.com/revathy.ravikanth/

‘‘உங்களாட்டம் ஆக ஸ்லிம் சீக்ரெட் சொல்லுங்க தோழி!’’

‘‘சாப்பாட்டுக்கு முன்னமே நிறைய தண்ணி குடிச்சுரணும்.’’

‘‘அப்ப சாப்பாடு எப்பிடி சாப்புடுறது?!’’

‘‘அதான் தண்ணி குடிச்சுர்றோமே!’’

மை மைண்ட்வாய்ஸ்: எப்பவாச்சும் தண்ணின்னா பரவால்ல, எப்பவுமே தண்ணி தான்னா எப்பிடிப்பா?!