கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

 வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

நாயெல்லாம் வளர்த்தா எவ்ளோ சந்தோசமா இருக்கலாம் தெரியுமா?!

twitter.com/ItsJokker

மக்கள் ~ சாப்பாட்டுக்கே கஷ்டமா இருக்கு ஜி.

ஜி ~ அதை விடு... நாயெல்லாம் வளர்த்தா எவ்ளோ சந்தோசமா இருக்கலாம் தெரியுமா?!

twitter.com/itz_Sangeetha

சங்கடங்கள் ஷங்கர் பட பட்ஜெட் மாதிரியும் சந்தோஷங்கள் குறும்பட பட்ஜெட் மாதிரியும் வந்தா, வாழ்க்கை வாழ்ந்த மாதிரிதான்!

Sandhanam - வாரத்துக்கு ஒரு லுக்!
Sandhanam - வாரத்துக்கு ஒரு லுக்!

twitter.com/Ramesh46025635

குடிப்பழக்கத்தைவிட மோசமானது குடிப்பழக்கம் உள்ள எல்லாரையும் கீழ்த்தரமாக நினைப்பது..!

twitter.com/skpkaruna

நண்பன் ஒருத்தன் தனது கடையை ரிலையன்ஸ் டிரண்ட்ஸ்க்கு வாடகைக்குத் தர மறுத்துட்டு (கொள்கைவாதியாம்!) பிக் பஜாருக்கு தர ஒப்பந்தம் போட்டான். நேத்தைக்கு பிக் பஜாரை (Big Bazzar) ரிலையன்ஸ் அம்பானி வாங்கியாச்சுன்னு செய்தி வருது.

twitter.com/DeepaTwtz

வாயில வைக்க முடியாத விளங்காத சரக்கெல்லாம் குடிக்க முடியுது. பொண்டாட்டி போடுற டீ குடிக்க மட்டும் கசக்குதோ..?

twitter.com/narsimp

தான் ஒரு பாடகராக இருந்தும், பாடல்களுக்காகவே பேசப்பட்ட மோகனுக்கு வெறும் பேசும் குரலாக மட்டும் இருந்து, பாடல்களை எஸ்.பி.பி பாடும் சூழலை ஏற்று, அந்தக் காலகட்டத்தைக் கடந்த எஸ்.என். சுரேந்தரின் மனநிலையை யோசித்தால், வாழ்வின் கடினத்தன்மை புரிபடலாம்.

twitter.com/Vkarthik_puthur

இனிமே டிவில புதுப்படம் போடறதா இருந்தா OTT யில் வந்து சில வாரங்களே ஆனன்னுதான் ஆரம்பிப்பாங்க..?!

therealprithvi -  என்றென்றும் புன்னகை
therealprithvi - என்றென்றும் புன்னகை

twitter.com/manipmp

உன் வாழ்க்கை இனி உன் மாஸ்க்கில்.

twitter.com/Kozhiyaar

கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்தவரை, கண்டுகொள்ளாமல் செல்வதற்குக் கடுமையான மன தைரியம் தேவைப்படுகிறது!

twitter.com/GreeseDabba2

கொரோனா : மொத்தமா மாசத்துக்கு ரேட்டு பேசிக்கலாமா இல்ல டெய்லி ரேட்டா..?

எடப்ஸ் : என்னடா ரேட்டு பேசணும்..?

கொரோனா : கட்டுப்பாடு எல்லாம் விலக்கீட்டீங்க, ஞாயித்துக்கிழமையும் வேலை செய்யணும், எக்ஸ்ட்ரா வொர்க் நிறைய பண்ண வேண்டி இருக்குல்ல..

Vignesh Shivan - பறவையா பறக்குறோம்
Vignesh Shivan - பறவையா பறக்குறோம்

twitter.com/star_nakshatra

ஹோட்டலுக்குப் போனோம்னா மொத டேபிளில் மட்டும் உக்காரவே கூடாது...

சர்வர் கொண்டு வர்ற சாப்பாடெல்லாம் நமக்குத்தானோன்னு பார்த்து ஏமாறவேண்டிருக்கு.

itsyuvan - இளைய இசை
itsyuvan - இளைய இசை

twitter.com/krishnaskyblue

~என்னப்பா, அரியர்க்குப் பணம் கட்டுனாலே பாஸ்ன்னு சொல்லுறாங்க... அப்போ இந்த வருஷம் நீ டிகிரி வாங்கிருவேலப்பா.

அரியர் கைஸ்~ இல்ல ஆத்தா, பரீட்சைக்கு சரியா படிக்கலன்னு பணம் கட்டாம விட்டுட்டேன்.

~ஐயய்யோ இந்த தர்த்ரியம் புடிச்ச பயல பாத்தீங்களா... இதுலயே பாஸ் ஆவலயே... இனி இவன் எப்போ பாஸ் ஆக?