Shalinmarialawrence
இத்துனூண்டு துணி மாஸ்க். உயிர் போய்டும்னு சொன்னாலும் அத மூக்குல மாட்டாம, தாடயில மாட்டினு பிள்ளக்கா மாரி திரிஞ்சினு, இவ்ளோ வருஷமா ப்ரா ஸ்ட்ராப் தெரியுது, இடுப்பு தெரியுது, கை தெரியுதுன்னு பொண்ணுங்களுக்கு கிளாஸ் எட்த்துனு இருக்க ராஸ்கல்…
Kanmani.Pandiyan
சினிமாவில் பெண் போலீஸ் role-க்கு தேவையானவை...
- மேக்கப் போடக் கூடாது.
- நாலே நாலு கெட்ட வார்த்தை புழக்கம்.
- லினன் shirt மட்டுமே அணிதல்.
- முகத்தை கடுமையாக ஆனால் அழகாக வைத்துக்கொள்ள முற்படல்.
- `ஐயோ நீங்க செம்ம போலீஸ்' எனச் சொல்ல, கூட ரெண்டு மூணு அல்லக்கை போலீஸ்கள் வைத்துக்கொள்ளல்.

suresh.kannan.1806
“உங்களோட ஸ்டாம்ப் சைஸ் போட்டோ இருக்குதா? பொண்ணு கேட்கறா... அவங்க ஸ்கூல்ல கேட்கறாங்களாம். ஏதோ எக்ஸாமுக்கு போல” என்றபடி வந்தார் தங்கமணி.
“இந்தத் தேசத்துக்கு என்னோட அருமை தெரிஞ்சப்புறம் என் போட்டோவையே ஸ்டாம்ப்பா வெளியிடுவாங்க. அதுவரைக்கும் வெயிட் பண்ணச் சொல்லு” என்றேன்.
mani.pmp.5
இரண்டரை மணி நேரத்தில் முடிந்தால் ஆனந்தம்.
இரண்டரை வருடத்தில் முடிந்தால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
shamshrikha.shamshrikha
தனித்து இயங்குதல், ஆண்-பெண் உறவு களுக்குள்ளான சிக்கல், சுயமறிதல் போன்றவற்றில் எல்லாருக்குமே ஒரு தேடல் இப்போது அதிகரிப்பதை பரவலாகவே பார்க்க முடிகிறது (எனக்கும்தான்). யாரும் தேவையில்லை. தனித்து வாழ்தல் நலம். துரோகங்கள், சலிப்புகள் என மாறி மாறி அம்புகள் இரு பக்கங்களிலிருந்தும் வீசப்படுகின்றன. ஆனால், உண்மையில் தனித்திருத்தல் இந்த பிரபஞ்சத்துக் குண்டான பட்டியலில் இல்லை. தனி... தனி என்று மார்தட்டிக் கொள்பவர்களெல்லாம் அடிமனதில் அத்தனை அழுகையையும் அடக்கி வைத்திருக்கின்றனர். ஒரு மோன இரவின் தனிமையோ, ஒரு தேர்ந்த இசையோ, ஏதோ ஒரு அன்பின் உளம் தொடும் ஸ்பரிசமோ அவர்களை வெகு சீக்கிரம் உடைய வைக்கிறது.
உண்மையில் தனியாய் நின்று மொரட்டு சிங்கிள் எனக் குரல் கொடுக்கும் அனைவருமே பலமாய் அடி வாங்கியிருக்கிறார்கள். போதும் போதும் எனும் அளவுக்கு அன்பைக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு வலியை வாங்கியிருக்கிறார்கள். அந்த வலியைக் கண்டு பயந்து சுடுபால் கண்ட பூனைபோல்தான் அவர்கள் தம் எதிர்பாலினரை நோக்குகின்றனர். கிண்ணம் நிறைய வேகவைத்த கடலையை எடுத்து வைத்துக்கொண்டு கடைசியில் சொத்தைக் கடலை வந்து அவ்வளவு சுவையையும் கெடுத்துவிடும்.

அந்தக் கடைசி சுவைக்கு பயந்து கடலை சாப்பிடுவதை கைவிட்ட கதைதான் இது.
பயந்து பயந்து சுவர் கட்டிக்கொண்டவர்கள் அவ்வளவு உறுதியாகவும் கட்டிக்கொள்வதில்லை. அது வெறும் சாக்பீஸ் கடினமே... மிக மிக லேசான தட்டலில் உடைந்து போகும். இறுக்காதீர்கள்... வெகு தளர்வாக, மிக அழகிய நிகழ்வுகளை நினைத்தபடி தோற்றதையும் தோற்கடித்தவர்களையும் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு விரும்ப முயற்சி செய்வதே அடுத்த நகர்வுக்கான வழி. கூடவே வாசலைப் பூட்டாமல் சற்று அகலவே திறந்து வையுங்கள். அடுத்தது அடுத்தது என அவசரப்பட்டும் நகர்ந்துவிட்டு அனைத்தையும் தொலைத்து விடாதீர்கள். சில சமயம் உங்கள் உள்மனதிடம் கேட்டுப்பாருங்கள். மிகச் சரியாக உங்கள் மனநிலையைச் சொல்லும். முடிந்தவரை ஆறப் போடுங்கள். தள்ளிப்போடுங்கள். நிதானியுங்கள்.
வெறுத்தல் மட்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் இருபுறமும். மிக மிக அவசியமெனில், தன்னையும் தன்னை சார்ந்தவரையும் எந்த குற்றவுணர்வுக்கும் ஆளாக்காமல் வெகு அழகாக விடுவியுங்கள் அல்லது விடுவித்துக்கொள்ளுங்கள்.
ஆண்-பெண் காதலுடன் வாழ்வதற்கே வாழ்க்கை.

revathy.ravikanth
நாம ஸ்கூல் படிச்ச காலத்துலதான் தூக்கம் வந்துச்சுன்னா இப்ப பசங்க Online class live Session-க்கு கூட ஒக்காந்தாலும் தூக்கம் வருது.
@mymindvoice
உடன் எத்தனை பேர் நடந்தாலும், உங்களின் சிலுவையை நீங்கள்தான் சுமந்தாக வேண்டும்.
@imthattaan
மகனை எக்ஸாம் எழுதுடா உக்காந்துனா, முதல்ல போய் ஸ்னாக்ஸ் எடுத்து வைக்கிறான், தப்பாம பொறந்திருக்கானே.
@imthattaan
அப்பா அன்பு காட்டுனா வெளிய அன்பை பெண்கள் தேடமாட்டாங்களாம், இப்படியே ஆண் களுக்கு எதாவது வரையறை இருக்கா...
primyarayee
குறைபட்டுக்கொள்வதற்கு ஒன்றுமில்லை என்கிற போதுகூட நிறையைப் பார்க்க முடியவில்லை என்றால் அதுவே உறவின் தேக்கநிலை…
primyarayee
கொஞ்சநேரம் தானடா சிரிச்சிட்டு இருந்தேன்.அதுக்குள்ள இந்தச் சின்னப்பய மனசாட்சி வந்து என்னதிது கெட்டபழக்கம், உடம்பு கிடம்பு சரி யில்லையா?! நல்லாதான இருக்கன்னு பூட்ட பத்து தடவ இழுத்து இழுத்து பாக்குது.
ஒரு ஹேஷ்டேக்:
#SURIYAismTwitterIs7MStronger
இப்போதெல்லாம் ஒருவர் எவ்வளவு பிரபலம் என்பதை அவரது ட்விட்டர் ஃபாலோயர் கணக்கை வைத்துதான் சொல்கிறார்கள். நடிகர் சூர்யாவின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 70 லட்சத்தை சமீபத்தில் கடந்தது. அதைத்தான் இந்த ஹேஷ் டேகில் கொண்டாடி மகிழ்ந்தனர் சூர்யா ரசிகர், ரசிகைகள்.

எமோஜி புதிர்:
கடந்த சில மாதங்களில் வைரல் ஆன தமிழ்ப் பாட்டின் ஒரு வரி இது. கண்டுபிடிக்க முடிகிறதா?
விடை: கிட்டார் கம்பி மேலே நின்று கூவும் குயில்.