Published:Updated:

மம்தாவின் சோசலிசத் திருமணம்!

 மம்தாவின் சோசலிசத் திருமணம்!
பிரீமியம் ஸ்டோரி
மம்தாவின் சோசலிசத் திருமணம்!

நான் ஆயிரக்கணக்கான திருமணத்துக்குப் போயிருக்கேன். கொடியேற்றித் திருமணம் பண்ணிவெச்சது இதுதான் முதல்முறை’’ என முத்தரசனே ஆச்சரியப்பட்டு மணமக்களை வாழ்த்தினார்

மம்தாவின் சோசலிசத் திருமணம்!

நான் ஆயிரக்கணக்கான திருமணத்துக்குப் போயிருக்கேன். கொடியேற்றித் திருமணம் பண்ணிவெச்சது இதுதான் முதல்முறை’’ என முத்தரசனே ஆச்சரியப்பட்டு மணமக்களை வாழ்த்தினார்

Published:Updated:
 மம்தாவின் சோசலிசத் திருமணம்!
பிரீமியம் ஸ்டோரி
மம்தாவின் சோசலிசத் திருமணம்!

‘சோசலிசம் weds மம்தா பேனர்ஜி’- சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு திருமண போஸ்டர் செம வைரலானது. ‘சோசலிசம்,’ மம்தா பேனர்ஜி என்றெல்லாமா பெயர் வைப்பார்கள்?’ என ஆச்சர்யப்பட்டால், அதே போஸ்டரில் கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம் போன்ற பெயர்களும் இருந்தது நம் கவனத்தை ஈர்த்தது. ‘யாரப்பா இது?’ கல்யாண போஸ்டரில் ‘இசங்களை’ இசைத்திருப்பது எனத் தேடினோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளரான மோகனின் கடைசி மகனான சோசலிசத்தின் திருமண போஸ்டர் தான் அது. கொரோனா ஊரடங்கால் சிம்பிளாக திருமணப் பத்திரிக்கைகூட அச்சடிக்காமல், ஜனசக்தி பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, ஒரேயொரு போஸ்டரை மட்டும் டிசைன் செய்து கொடுத்திருக்கிறார். எப்படியோ வாட்ஸ் அப்பில் பரவி வைரலாகியிருக்கிறது.

 மம்தாவின் சோசலிசத் திருமணம்!

ஜூன் 13-ம் தேதி சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டி காட்டூரில் நடந்த திருமணத்துக்கு நேரில் சென்றோம். மெயின்ரோட்டிலிருந்து மோகனின் வீட்டுக்குச் செல்லும் சுமார் அரை கி.மீ தூரமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடி வரிசையாக நடப்பட்டிருந்தன. சாதாரண ஓட்டு வீட்டிற்கு முன்னால் 25 பேர் மட்டுமே அமரும் வகையில் ஒரு சிறிய பந்தலைப் போட்டிருந்தார்கள். பந்தலில் லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களை மாட்டியிருந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கட்சியின் கொடியை ஏற்றிவைத்து முன்னிலை வகிக்க, தாத்தா - பாட்டி முன்னின்று தாலியை எடுத்துக் கொடுக்க ‘மணமக்கள் வாழ்க’ என்ற பெரும் கோஷத்துடன் சோசலிசம் - மம்தா பேனர்ஜியின் திருமணம் சிம்பிளாக நடந்து முடிந்தது. பந்தலுக்கு முன் இருந்த சாலையிலேயே மேசையைப் போட்டு உணவு பரிமாறப்பட்டது.

``நான் ஆயிரக்கணக்கான திருமணத்துக்குப் போயிருக்கேன். கொடியேற்றித் திருமணம் பண்ணிவெச்சது இதுதான் முதல்முறை’’ என முத்தரசனே ஆச்சரியப்பட்டு மணமக்களை வாழ்த்தினார். ``முன்னப் பின்ன தெரியாதவங்ககூட போன் பண்ணி எங்களை வாழ்த்துறாங்க. இந்தியா முழுக்க பல பத்திரிகைகள்ல இருந்து பேட்டி கேக்குறாங்க. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!’’ என மணமக்கள் நெகிழ்ந்து போனார்கள்.

 மம்தாவின் சோசலிசத் திருமணம்!

பரபரப்பாக இருந்த மணமகன் சோசலிசத்தின் தந்தை மோகனிடம் பேசினோம். “எங்க அப்பா, தாத்தா, பெரியப்பா என எல்லாருமே கம்யூனிஸ்ட். நானும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராகி, தீவிரமாக இயங்கிட்டு இருந்தேன். அப்படி 90-களில் ஒருநாள் ராத்திரி 10 மணிக்கு மேல தூர்தர்ஷன் சேனல்ல ‘சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போயிடுச்சி. எங்கு தொடங்கியதோ அங்கேயே கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிட்டது. இனி கம்யூனிஸ்ட் கட்சி ஜெயிக்காது’ எனச் சொன்னார்கள். தொடர்ந்து பத்திரிகைகளிலும் அந்தச் செய்திகளைப் பார்க்குறப்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு. கம்யூனிசத்துக்கு என்னைக்குமே அழிவில்லைன்னு சொல்லி, எனக்குக் குழந்தைகள் பிறந்தா அதற்கு கம்யூனிச அடையாளத்தை வைக்கணும்னு நினைச்சேன். அப்படி எனக்கு முதல் மகன் பிறந்தப்ப ‘கம்யூனிசம்’னு சொல்லி அவனைக் கூப்பிட்டு, பேர் வச்சேன். அதேபோல, என் ரெண்டாவது பையனுக்கு லெனினிசம், மூன்றாவது மகனுக்கு சோசலிசம்னு பெயர் வச்சேன். ஆரம்பத்தில் ‘டேய் கட்சிக்காரன்டா’ன்னு ஸ்கூல்ல பசங்க கிண்டல் பண்றாங்கன்னு புள்ளைங்க வீட்ல வந்து அழுவாங்க. உங்க பேருக்குப் பின்னாடி பெரும் வரலாறு இருக்குன்னு பசங்ககிட்ட சொல்லிப் பக்குவப்படுத்தினேன். இன்னைக்கு என் பசங்களோட பேரைக் கேட்டு பலரும் பாராட்டுறப்ப மனசுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு.

இதுல பெரிய ஆச்சர்யம் சொந்தத்துல பொண்ணு மம்தா பேனர்ஜிங்கிற பேரோட அமைஞ்சது. பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பம் அவங்களது. காங்கிரஸ் கட்சியில் மம்தா பேனர்ஜி தீவிரமாக இருந்தப்போ, அவரைப் பார்த்துப் பெயர் வச்சிருக்காங்க.

 மம்தாவின் சோசலிசத் திருமணம்!

எனக்குப் பெண் குழந்தை பிறந்தால் ‘மார்க்சியா’ன்னு பேர் வைக்கலாம்னு இருந்தேன். ஆனா, 3 பேரும் ஆணா பிறந்துட்டாங்க. என்னைப் போலவே என்னோட ரெண்டாவது மகன் லெனினிசம் அவரோட மகனுக்கு ‘மார்க்சிசம்’ எனப் பெயர் வைத்திருக்கிறார். இன்னும் ஏங்கலிசம், ஸ்டாலினிசம், கியூபாயிசம் போன்ற பெயர்களை என் பேரக் குழந்தைகளுக்கு வைக்கலாம்னு இப்பவே சொல்லி வச்சிருக்கேன். என்னைப் போலவே கம்யூனிசத்தை மூச்சாகக் கொண்டிருக்கும் என்னுடைய சொந்தக்காரங்க சிலர் வியட்நாம், மாஸ்கோ, ரஷ்யா தேவி, செக்கோஸ்லேவியா, கம்பூசியா, ருமேனியான்னு அவங்க குழந்தைகளுக்குப் பெயர்களை வச்சிருக்காங்க. திருமணத்துக்கு வாழ்த்து சொன்ன முகமறியாத தோழர்களுக்கும், வெளிக்கொண்டு வந்த ஊடகங்களுக்கும் செவ்வணக்கத்துடன் நன்றி!” என்றார்.