தமிழக பதிவுத்துறை, வருடத்துக்கு சுமார் ரூ.12,000 கோடி வருவாய் ஈட்டும் மூன்றாவது பெரிய துறையாக உள்ளது. சமீபகாலத்தில் பதிவுத்துறையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் ‘ஆன்லைன்’ பதிவு முறை. `இது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட ஒரு புரட்சி’ என்றுகூடச் சொல்லலாம்.

இந்த ஆன்லைன் பதிவு விரைவில் தமிழ்நாடு முழுக்க வரப்போகிறது. சார்பதிவாளர் அலுவலகம் போகாமல் வீட்டில் இருந்தபடியே சொத்தைப் பதிவு செய்யலாம் என்ற அளவுக்குக்கூட ஆன்லைன் பதிவு முன்னேற்றம் காணலாம்.

ஆன்லைன் பதிவு முறையால், போலி ஆவணப் பதிவு தடுப்பு, ஆள் மாறாட்ட பதிவு தடுப்பு ஆகியவை நிகழ்ந்துள்ளன. ஆன்லைன் பதிவு முறையில் தாய்ப் பத்திரத்தின் எண்ணைப் பதிவு செய்தால்தான் பதிவு கணினிப் புலத்தின் வாசல் திறக்கும். போலி நபர் ஒருவர், வேறு ஒருவர் சொத்துக்கு பத்திரம் தயாரித்துக் கொண்டுவந்தால் கணினியில் புகுத்தும்போதே தெரிந்துவிடும்.

தாய்ப் பத்திரமும் ஆன்லைனில் பதிவாகியிருக்கும்பட்சத்தில் பதிவு அலுவலகத்தில், கைரேகைப் பதிவு செய்யும்போது மாறுபாடு இருந்தால் பதிவைத் தொடர முடியாது. கணினி மறுத்துவிடும்.

அதுமட்டுமன்றி, முன்பதிவு மூலம் சொத்தின் சொந்தக்காரர் போன் நம்பர் கணினியின் மெமரியில் இருக்கும். அவருக்குத் தெரியாமல் வேறு ஒருவர் பத்திரப்பதிவு செய்ய முற்பட்டால், முதல் உரிமையாளருக்கு ‘உங்கள் சொத்தின் மீது வில்லங்கம் செய்யப்படுகிறது’ என்ற குறுஞ்செய்தி போய்விடும். ஆக, உண்மையான உரிமையாளர் மட்டுமே ஒரு சொத்தின் மீது பத்திரம் எழுதிக் கொடுக்க முடியும் என்ற நம்பகத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆவணத்தை டி.டி.பி சென்டரில் உட்புகுத்தும்போதே தவறுகள் வெளிப்பட்டுவிடுவதால், சொத்தை வாங்குபவர்கள் முன்புபோல் ஏமாற்றப்பட வாய்ப்புகள் இல்லை!

இவற்றால் மோசடிகள் பெருமளவு தடுக்கப்படும். இருப்பினும் பழைய ஆவணங்களுக்கு போலி தயாரிப்பதும், ஆள் மாறாட்டம் மூலம் பதிவு நடப்பதும் ஆங்காங்கே நடக்காமல் இல்லை. இதைத் தடுக்க பட்டா போன்ற பழைய ஆவணங்கள் திரும்பப் பெறப்பட்டு பார்கோடுடன் புதிய ஆவணங்களாக அரசு வழங்க வேண்டும்.

முன்பு சொத்து பதிவு நடந்தால், திரும்பப் பெற மூன்று நாள்களாவது ஆகும். தற்போது ஆவணங்கள் அன்று மாலையே தரப்படுவது பெரிய சாதனை.

மேலும், வில்லங்கச் சான்றுகள் ஆன்லைனில் உடனுக்குடன் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால் அலைச்சல் மற்றும் செலவு மிச்சமாகியுள்ளன. இதனால் ஆன்லைன் பதிவு முறைக்கு, பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது.

மேலும், ஆங்காங்கு ஏற்பட்ட குறைகள் சீர்செய்யப்பட்டு புதிய உத்திகள், மென்பொருள் மேம்பாடு புகுத்தப்பட்டு வருகின்றன. இப்போது ஆன்லைன் பதிவில் காணப்படும் பெரிய, சிறிய குறைபாடுகளைச் சுருக்கமாகப் பட்டியலிடலாம்.

1. ஆன்லைன் பதிவுமுறைக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து இல்லை. அரசு ஆணை, பதிவுத்துறை ஆணை ஆகியவற்றின் அதிகாரத்திலேயே ஆன்லைன் பதிவு நடைபெறுகிறது.

2. இதற்கு முன்னர் பத்திரப்பதிவுக்கு வில்லங்கச் சான்று அட்டவணையை அதற்கென இருந்த பதிவு பணியாளர்கள் செய்தார்கள். தவறு செய்யும் பணியாளர்களுக்கு தண்டனை உண்டு. இதை மீண்டும் ஒருவர் சரிபார்த்து, சான்று செய்வார். ஆனால் இப்போது பத்திரங்களை டி.டி.பி சென்டர் பணியாளர்கள் கணினியில் உட்புகுத்துகிறார்கள். இவர்கள் பொறுப்போடு மேற்கொள்ள வாய்ப்பு குறைவு. இவர்களுக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை. இதனால், விற்பவரை வாங்குபவராகவும், அப்பாவை கணவராகவும் கணவரை அப்பாவாகவும் மாற்றி, பிழைகள் மலிந்து கிடக்கும் வகையில் உட்புகுத்துகிறார்கள்.

இதனால், திருத்தம் செய்யக் கோரும் விண்ணப்பங்கள், நூற்றுக்கணக்கில் பதிவாளர் அலுவலகங்களில் தேங்கியுள்ளன. எனவே, வில்லங்கப் பதிவை, பதிவு பணியாளர்களே மேற்கொள்ளவோ அல்லது மேற்பார்வை செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. அவசரம் என்று ஒருவர் வந்து நிற்கும்போது, அவருடைய தேவையை அறிந்து சேவையை வழங்குவதே சார்பதிவாளர் பணி. உதாரணமாக, நாளை காலை வெளிநாடு செல்லும் ஒருவருக்கு உடனடியாக ஓர் ஆவணம் பதிய வேண்டும் என்றால், முன்பெல்லாம் சார்பதிவாளர் அவருக்கு உதவ முடியும்.

மேலும், திடீரென்று நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒருவர் உடனடியாக உயில் எழுதி, சார்பதிவாளரை மருத்துவமனைக்கு வரவழைத்துப் பதிவு செய்யலாம். ஆனால், ஆன்லைன் முறையில் யாருக்கு என்ன ஆனாலும் சரி, டி.டி.பி சென்டரில் போய் டோக்கன் போட்டு, நேரம் குறித்துக்கொண்டு வந்தால்தான் பதிவு. அன்றைக்கு, அவசர சூழலில் இருக்கும் ஒருவருக்கு டோக்கன் சிக்கல்தான். வயதானவர்கள், நோயாளிகள், வெகு தொலைவிலிருந்து வருபவர்களுக்கு பதிவில் முன்னுரிமை அளிக்கலாம்.

4. தேர்ந்த வழக்கறிஞர்கள் எழுதும் ஆவணங்களில்கூட தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆன்லைன் பதிவில் டோக்கன் போடும்போது உள்ளீடு செய்யும் விவரங்களை உடனே மாற்ற முடியாது. மீண்டும் டி.டி.பி சென்டர் போய் காத்துக்கிடந்து வேறு டோக்கன் போட வேண்டும். ஒருவர் காலையில் டோக்கன் போட்டிருப்பார். புதிய டோக்கன், மாலை 3 மணிக்குக் கிடைக்கலாம். எனவே, விற்பவர், வாங்குபவர், சாட்சிகள் அனைவரும் காத்திருக்க வேண்டும். முகூர்த்த நாள் என்றால், டோக்கன் கிடைக்காமல் போகலாம். வெள்ளிக்கிழமை என்றால் திங்கள்கிழமைதான் பதிவுக்கு மீண்டும் நாள் குறிக்க வேண்டும். எனவே, ஆவணங்களில் ஏற்படும் தவறுகளைப் பெயர்கள் மாற்றப்படாத வரையில் பதிவு அலுவலகத்திலேயே சரிசெய்து பதிவு செய்ய மென்பொருளில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

5. ஒருவர் ஆவணப் பதிவுக்கு நான்கு மாதம் முன்பாகக்கூட முத்திரைக் கட்டணத்தைப் பணமாகச் செலுத்தும் வசதி உள்ளது. மேலும் பதிவு தேவையில்லாத ஆவணங்களுக்கு இந்த வசதி, ஒரு வருடம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆன்லைனில் எந்த நாளில் டோக்கன் போடப்படுகிறதோ அப்போதுதான் முத்திரைத் தீர்வையைப் பணமாகச் செலுத்த முடியும். முன்னதாகச் செலுத்த மென்பொருளில் வசதி இல்லை. இதைச் சரிசெய்ய வேண்டும்.

ஆன்லைன் பதிவில் வெகு சில ஆவணங்களுக்கு மட்டுமே பெயர் வழங்கப்பட்டு, மற்றவற்றுக்கு ‘வேறு’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், இவ்வகை ஆவணங்களைப் பதிவேற்றும்போது முத்திரைத் தீர்வை பதிவுக் கட்டணம் குறித்து பெரிய குழப்பம் ஏற்படுகிறது. இவ்வகையிலும் மென்பொருள் தீர்வு காணப்பட வேண்டும்

இவை தவிர்த்து, நிலுவையில் வைக்கப்படும் ஆவணங்கள், ரசீது போன்ற சில ஆவணங்களுக்கு ஆன்லைனில் நகல் கேட்டு விண்ணப்பிக்க முடியவில்லை. பதிவாகும் ஆவணங்கள் மட்டுமே மையக் கணினியில் புகுத்தப்படுவதால், பதிவாகாத பல வகை ஆவணங்களுக்கு நகல் பெற வசதி இல்லை. இதிலும் தீர்வு வேண்டும்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகா ஆன்லைன் பதிவை, நமக்கு முன்னரே தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம், அங்கே ‘சிடாக்’ என்ற மத்திய அரசு நிறுவனம் வழங்கிய சேவையின் அடிப்படையில், தனியார்கள் பதிவு பணியை மேற்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் சார்புநிலை நிலவுகிறது. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் உத்திகள் எங்கு கிடைத்தாலும், அவற்றை இங்கு உடனடியாகச் செயல்படுத்தினால் நல்லது.

ஆவணங்களின் பதிவை மறுக்க, சட்டத்தில் கடுமையான நிபந்தனைகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் சார்பதிவாளர்கள் எதற்குத்தான் பதிவை மறுப்பது என்று கணக்கு வழக்கில்லாமல் சட்டத்துக்கு புறம்பாகப் பதிவை மறுத்து, துண்டுச்சீட்டுடன் ஆவணத்தைத் தூக்கி வீசிவிடுவார்கள்.

இவற்றை மீண்டும் பதிவு செய்ய முயலும்போது, ஆன்லைனில் பல தடைகள் ஏற்படுகின்றன. இதன்மீதும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

முக்கிய பிரச்னைக்கு வருவோம், டோக்கன் முறையில் ‘தள்ளிவைப்பது’ என்ற உத்தி கையாளப்படுகிறது. அதாவது, 10 மணிக்கு டோக்கன் போட்ட ஒருவர், வராவிட்டால் 11 மணிக்கு இறுதியாக அவரது டோக்கன் தள்ளிவைக்கப்படும். அப்போதும் வராவிட்டால், நாளின் இறுதிப் பகுதிக்கு தள்ளிவைக்கப்படும். இதைப் பலர் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இவர்கள், சாவகாசமாக 3 மணிக்கு மேல் வருவார்கள். அப்போது இவர்களின் டோக்கன் வரிசைகட்டி நிற்கும். இதைவைத்து ‘என் டோக்கன் வரிசையில் உள்ளது. ஆவணத்தைப் பதிவு செய்யுங்கள்’ என்று கட்டாயப்படுத்துவார்கள். அப்போது 3 மணிக்கு டோக்கன் எடுத்தவர்களும் ஆவணங்களுடன் காத்திருப்பார்கள். மறுக்க வழியில்லாததால், சார்பதிவாளர்கள் ஆறு மணியானாலும், பதிவு செய்துவிட்டுத்தான் வீட்டுக்குப் போக வேண்டும். எனவே, `முற்பகல் எடுத்த டோக்கன்கள் 12 மணிக்கு மேல் செயலிழந்துவிடும்படி ஆன்லைனில் மாற்றியமைக்க வேண்டும்’ என்பது ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

பதிவுத்துறையின் வரிசை எண் முறை காரணமாக ஓர் ஆவணத்தை முடித்து ஒப்படைத்த பிறகுதான் அடுத்த ஆவணத்தைப் பதிவாளர் கையாள முடியும். முதலமைச்சரே வந்தாலும், இரண்டாவது ஆவணத்தை முதலில் பதிவு செய்ய இயலாது! இப்படிப்பட்ட கட்டுக்கோப்பான சேவைத்துறையான பதிவுத்துறை பணியாளர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை உணர்ந்து, மாலை 5:30 மணிக்கு நிம்மதியாக வீட்டுக்குப் போகும் பணிச் சூழலை அரசு உருவாக்க வேண்டும்!