அரசியல்
அலசல்
Published:Updated:

அரசுப் பேருந்து விபத்துகள்... ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ பற்றாக்குறை காரணமா?

அரசுப் பேருந்து விபத்துகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அரசுப் பேருந்து விபத்துகள்

தேவையான உதிரி பாகங் களை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலவு பண்ண அந்தந்த டெப்போ மேனேஜர்களுக்கே அனுமதி இருக்கு.

கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்து சம்பந்தப்பட்ட 12 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்; சுமார் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த ஜூலை 30-ம் தேதி பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அரசுப் பேருந்து ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் தேவேந் திரன், நடத்துனர் முருகன் இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். பயணிகளில் பலர் படுகாயமடைந்தனர். அதே நாளில், திருச்சி தென்னூரில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார். இந்த இரு விபத்துகளுக்கும் அரசுப் பேருந்தின் பிரேக் பிடிக்காமல் போனதே காரணம் என்கிறார்கள் டெப்போ ஊழியர்கள்.

அரசுப் பேருந்து விபத்துகள்... ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ பற்றாக்குறை காரணமா?

இதுகுறித்து அனுபவ மிக்க ஓட்டுநர்கள் சிலர் நம் மிடம், “பஸ்ஸுக்கு இன்ஜின் எவ்வளவு முக்கியமோ... அதே மாதிரி ஹெட்லைட்டும், பிரேக் கும் ரொம்ப ரொம்ப முக்கியம். ஆனால் தேய்ஞ்சு, நஞ்சுபோன ஒரே பிரேக் பிளக்கைத் திரும் பத் திரும்ப ரீகண்டிஷன் பண் ணிப் போட்டால் அது எப்படித் தாங்கும்... ‘கண்டிஷனா இருந்தாத்தான் வண்டியை எடுப்பேன்’ என்று சொன்னால், ‘இருக்கிறதைவெச்சு அட்ஜஸ்ட் பண்ணி ஓட்டு’ என்று சொல்கிறார்கள்” என்றனர்.

ஓய்வுபெற்ற ஏ.ஐ.டி.யூ.சி முன்னாள் கிளைச் செயலாளர் ஜெயராமன், “தேவையான உதிரி பாகங் களை வாங்குவதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலவு பண்ண அந்தந்த டெப்போ மேனேஜர்களுக்கே அனுமதி இருக்கு. ஆனாலும், ஆதிகாலத்துலருந்து அந்தத் தொகையை உயர்த்தாமலேயே இருக்காங்க. சில வருஷமா உதிரி பாகங்களோட விலையுடன், ஜி.எஸ்.டி-யும் கூடிட்டதுனால பத்து ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குற இடத்துல ஆறுதான் வாங்க முடியுது. அதைவெச்சு எத்தனை பஸ்ஸைத் தான் சரிபண்ண முடியும்... ஓட்டுநர், நடத்துனர், டெக்னிக்கல் பிரிவு ஆளுங்க பற்றாக்குறையையும் சரி செஞ்சா மட்டும்தான் விபத்தைத் தடுக்க முடியும்” என்றார்.

அரசுப் பேருந்து விபத்துகள்... ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ பற்றாக்குறை காரணமா?
அரசுப் பேருந்து விபத்துகள்... ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ பற்றாக்குறை காரணமா?

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது, “விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைச் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. எனவே விபத்து நடப்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். அதேசமயம், எல்லா விபத்துகளுமே பிரேக், லைட் ஃபெய்லி யரால் நடக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. ஒரு நொடி யில் நடந்துவிடக்கூடிய விபத்துக்கு, இதுதான் காரணம் என்று ஒரு காரணத்தை மட்டுமே சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்ந்து எல்லா டெப்போக்களிலும் ஆய்வு மேற் கொண்டுவருகிறேன். உதிரி பாகங்கள் கொள்முதல் வழக்கம் போல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போதுமான ஸ்பேர் பார்ட்ஸ்கள் கையிருப்பிலும் இருக்கின்றன” என்றார்.

அரசுப் பேருந்து விபத்துகள்... ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ பற்றாக்குறை காரணமா?

அரசுப் பேருந்தை நம்பியிருக்கும் மக்களின் பாதுகாப்பு குறித்து அரசு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது நேரமிது!