Published:Updated:

15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?

சிறப்புப் பொருளாதார மண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
சிறப்புப் பொருளாதார மண்டலம்

‘15 வருஷம் ஆகியும் இந்தத் திட்டத்துக்காக ஒத்த செங்கல்லைக்கூட ஆட்சியாளர்கள் எடுத்துவெக்கலை.

15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?

‘15 வருஷம் ஆகியும் இந்தத் திட்டத்துக்காக ஒத்த செங்கல்லைக்கூட ஆட்சியாளர்கள் எடுத்துவெக்கலை.

Published:Updated:
சிறப்புப் பொருளாதார மண்டலம்
பிரீமியம் ஸ்டோரி
சிறப்புப் பொருளாதார மண்டலம்

‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட ‘சிறப்புப் பொருளாதார மண்டல’ அறிவிப்பு காலாவதியாகிவிட்டதால், எங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களையாவது திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்’’ என்று இந்நாள் முதல்வரான மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவிடுக்கின்றனர் பெரம்பலூர் விவசாயிகள்.

கடந்த தி.மு.க ஆட்சியின்போது, பெரம்பலூரில் சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் ‘சிறப்புப் பொருளாதார மண்டலம்’ அமைக்கப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக, சென்னை – பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் எட்டு கிராமங்களிலிருந்து நிலங்களை ஆர்ஜிதம் செய்த அரசு, அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்கியது. ஆனால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் திட்டம் செயல்படுத்தப்படாததையடுத்து, கடந்த 2014-ம் ஆண்டு திட்டத்துக்கான அனுமதியையே ரத்துசெய்தது மத்திய அரசு.

15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?

23 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டத்துக்காகக் கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த மாதம் 8-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ‘தங்கள் நிலங்களையும் இதே போன்று திரும்ப ஒப்படைக்க வேண்டும்’ என்கிற போராட்டக் குரல்கள் பெரம்பலூர் விவசாயிகளிடமிருந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

திட்டத்துக்காக நிலம் கொடுத்த செல்லம்மாள், “ஃபேக்டரி வந்தா வீடுகட்ட நாங்களே இடமும் தர்றோம், வேலையும் போட்டுத் தர்றோம்னு சொன்னாக. ஆனா, பதினஞ்சு வருஷமா எங்க எடமெல்லாம் காட்டுக்கருவை வளர்ந்து தரிசா கெடக்குறதைப் பார்க்குறப்போ மனசெல்லாம் பதறுது. ‘சரி, சும்மாத்தானே கெடக்கு... வெவசாயம் பண்ணலாம்னு நெலத்துக்குள்ள போனா செக்யூரிட்டிக்காரன் தொரத்தியடிக்கிறான். எங்க எடத்தைத் திரும்பத் தந்தா புண்ணியமாப் போகும்” என்றார் வானத்தை நோக்கிக் கும்பிட்டபடி.

நிலமீட்புப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ‘‘15 வருஷம் ஆகியும் இந்தத் திட்டத்துக்காக ஒத்த செங்கல்லைக்கூட ஆட்சியாளர்கள் எடுத்துவெக்கலை. எந்தத் திட்டத்துக்காக நிலம் எடுக்கப்பட்டுச்சோ, அஞ்சு வருஷத்துக்குள்ள அந்தத் திட்டம் செயல்படுத்தப்படலேன்னா, கைப்பற்றப்பட்ட நிலத்தைத் திரும்ப ஒப்படைச்சுடணும்னு சட்டமே சொல்லுது.

15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?
15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?

எனவே, இந்தத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட ஜி.வி.கே நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளிடமே ஒப்படைக்கணும். ஆனால், ஜி.வி.கே குழுமமோ எங்கள் நிலம் அனைத்தையும் தெலங்கானாவில் உள்ள சிண்டிகேட் வங்கி, சென்னையில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, ஆக்ஸிஸ் வங்கிகளிடம் அடமானம் வைத்திருப்பதாகச் சொல்கிறது. எனவே, விவசாயிகளின் நிலம் திரும்பக் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசுதான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தற்போதைய ‘டிட்கோ’ நிர்வாக இயக்குநர் ஜெய முரளிதரனிடம் பேசியபோது, “ஜி.வி.கே குழுமம் வங்கியில் பணத்தைச் செலுத்திவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே, திட்டத்தைச் செயல்படுத்த அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்” என்றார்.

ஜெயஸ்ரீ முரளிதரன்
ஜெயஸ்ரீ முரளிதரன்
வெங்கட ப்ரியா
வெங்கட ப்ரியா

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கட ப்ரியா, ‘‘அரசின் வழிகாட்டுதல்படி இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயன்று கொண்டிருக்கிறோம்” என்றார் நம்பிக்கையுடன்.

இந்த விவகாரம் குறித்து ஜி.வி.கே குழுமத்தின் விளக்கத்தைப் பெற பலமுறை தொடர்புகொண்டும் அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்ட நிலையில், ram.mankekar@gvk.com என்ற அவர்களது அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு நமது கேள்விகளை அனுப்பியிருக்கிறோம். ஜி.வி.கே தரப்பிலிருந்து உரிய விளக்கம் அளித்தால், அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

ஒன்று திட்டத்தைச் செயல்படுத்துங்கள்... இல்லையேல் நிலத்தைத் திரும்பக் கொடுங்கள் ஆட்சியாளர்களே!

15 ஆண்டுகள்... 3,000 ஏக்கர் தரிசு நிலம்... திரும்ப ஒப்படைக்குமா அரசு?

‘நடைபாதை மணல் வியாபாரிகளுக்கே...!’

சென்னை, கே.கே.நகர் காமராஜர் சாலையில் ‘நடைபாதை நடப்பதற்கே’ என போர்டு வைக்கப்பட்டிருக்கும் பாதையையே மணல் வியாபாரிகள் ஆக்கிரமித்து, நடப்பதற்கே வழியற்ற நிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். மாநகராட்சிக்கு இது குறித்துப் பலரும் புகார் அளித்தார்கள். நம் ஜூ.வி ‘கிசுகிசு’ பகுதியிலும் இது குறித்துச் செய்தி வெளியானது. இந்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்திருக்கிறது மாநகராட்சி. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கி மணல் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டார்கள் என நினைக்கிறீர்களா... அதுதான் இல்லை. ‘நடைபாதை நடப்பதற்கே’ என வைக்கப்பட்டிருந்த போர்டை அந்த இடத்திலிருந்து அகற்றியிருக்கிறார்கள். ‘நடைபாதை மணல் வியாபாரிகளுக்கே...’ என்று மாநகராட்சி சார்பில் போர்டு வைக்காமல் இருந்தால் சரிதான்!