Published:Updated:

சந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் போர்ட்ஃபோலியோ!

A.Balasubramanian
பிரீமியம் ஸ்டோரி
News
A.Balasubramanian

‘ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்’ ஏ.பாலசுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி

சிறப்புப் பேட்டி

நிதித் துறையில் சுமார் 30 ஆண்டுகள் பழுத்த அனுபவம்கொண்ட, ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன் அண்மையில் சென்னைக்கு வந்திருந்தார். அவர் நாணயம் விகடன் இதழுக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை எந்த அளவுக்கு இருக்கிறது?

“பொருளாதார மந்தநிலை பெரிய அளவில் நிலவுகிறது என்று சொல்ல முடியாது. சற்று மந்தநிலை இருப்பதாகவே சொல்லலாம். இதற்கு ஆறு முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். 1. மக்கள் செலவு செய்வது குறைந்திருப்பதால், தேவையும் குறைந்திருக்கிறது. 2. மக்களின் சேமிப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது; கடந்த 2010-ம் ஆண்டில் இந்தியர்களின் சேமிப்பு 35 சதவிகிதமாக இருந்தது. அது இப்போது 28 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 3. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியால், வங்கிகள் கடன் கொடுப்பது குறைந்துள்ளது. 4. அமெரிக்கா - சீனா இடையேயான சர்வதேசப் பொருளாதாரப் போர். 5. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடு குறைந்துபோனது. 6. ஐந்தாறு ஆண்டுகளாக நாட்டில் வேளாண் துறை சிறப்பாகச் செயல்படவில்லை. பல விளைபொருள் களின் விலை, அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக விற்கப்படுகிறது.

A.Balasubramanian
A.Balasubramanian

அதேநேரத்தில், சில சாதகமான விஷயங்களும் இருக்கின்றன. பணவீக்கம் குறைந்திருக்கிறது. கடனுக்கான வட்டியும் குறைந் திருக்கிறது. வட்டி இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது. கடந்த 6-7 மாதங்களாக மத்திய அரசின் முதலீடு அதிகரித்து வருகிறது. இந்தப் பொருளாதார மந்தநிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் காணப்படுகிறது.’’

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், பங்குச் சந்தைக்குச் சாதகமாக இருக்கின்றனவா?

“நிதி அமைச்சர், தொழில்துறையினருடன் விரிவான ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். ஆலோசனை நடத்திய பத்து நாள்களில் இந்த அறிவிப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட்டிருப்பது, அவர்கள் மீண்டும் இந்தியப் பங்குச் சந்தையில் அதிகமாக முதலீடு செய்ய வழிவகுக்கும். ஆதார் அடிப்படையிலான இ-கே.ஒய்.சி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எளிமையாகியிருக்கிறது. இதனால், மியூச்சுவல் ஃபண்ட் துறை வேகமான வளர்ச்சி பெறும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் போர்ட்ஃபோலியோ!

நிதி அமைச்சர் அறிவித்துள்ள சலுகைகள்மூலம் வாகனம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை போன்றவை வளர்ச்சிகாண உதவும். மேலும், பங்குச் சந்தை மீதான சென்டிமென்ட் மேம்பட, நம்பிக்கை அதிகரிக்க இந்த அறிவிப்புகள் உதவும். தொழில்துறைக்கு மேம்பாடு அளிக்கும் அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிடும் என எதிர்பார்க்கிறோம். எங்கே எல்லாம் மந்தநிலை காணப்படு கிறதோ, அங்கே எல்லாம் சரிசெய்ய மத்திய அரசு முயற்சியெடுத்து வருகிறது. என்றாலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, தேவை மற்றும் சரியான பருவமழையால் வேளாண் உற்பத்திப்பெருக்கம் போன்றவற்றால்தான் சந்தை மேலே செல்லும் வாய்ப்பிருக்கிறது.”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நீண்ட காலத்தில் எந்தெந்தத் துறைகள் வளர்ச்சிகாணும் என நினைக்கிறீர்கள்?

“தகவல் தொழில்நுட்பம், இருசக்கர வாகனத் தயாரிப்பு, மருந்து உற்பத்தி, வேளாண் மற்றும் உணவு சார்ந்த துறைகள், சிமென்ட் துறை போன்றவை வரும் ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி காணும்.’’

சந்தை ஏற்ற இறக்கத்தில் கைகொடுக்கும் போர்ட்ஃபோலியோ!

மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன் சார்ந்த ஃபண்டுகள் பாதுகாப்பானது எனக் கருதி பலரும் முதலீடு செய்தனர். இப்போது அதுவும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறதே?

“பொதுவாக, கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு வருமானத்தில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்த முறை விதிவிலக்காக வருமானம் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், முதலீட்டுக் காலம் 3-4 ஆண்டுகளாக இருக்கும்பட்சத்தில், இந்தப் பாதிப்பு இருக்காது. கடன் ஃபண்டுகளின் என்.ஏ.வி மதிப்பு என்பது வட்டி வருமானம், கூப்பன் விகிதம், தரக்குறியீடு, வட்டி/ அசலைத் திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் போன்றவற்றின் அடிப்படையில் மாற்றத்துக்கு உள்ளாகும். இங்கே வட்டி/அசலைத் திருப்பி கொடுப்பதில் ஏற்படும் பாதிப்பு என்பது லாபத்தில் குறைவதாக இருக்கும். மூலதனத்தில் இழப்பை ஏற்படுத்துவதாக இருக்காது.

மேலும், கடன் ஃபண்டு களை மூன்று ஆண்டுக்கு மேல் வைத்திருந்தால் ஆதாயத்துக்கு, பணவீக்க சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி என்பது லாபகரமாக இருக்கும். நம்மில் பெரும்பாலோர், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே பங்குச் சந்தைச் சார்ந்த திட்டங்களில்தான் முழு முதலீட்டையும் மேற்கொண்டு விடுகிறோம். இது தவறு. இதற்குப் பதில், முதலீட்டை அஸெட் அலோகேஷன்படி பங்கு சார்ந்தது, கடன் சார்ந்தது, தங்கம், ரியல் எஸ்டேட் எனப் பிரித்து முதலீடு செய்வது எப்போதும் லாபகரமாக இருக்கும். ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் 30-40% தொகையை ஃபிக்ஸட் இன்கம் ஃபண்டுகளில் மேற்கொள்வது நல்லது. அப்படிச் செய்யும் பட்சத்தில், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் மற்றும் வீழ்ச்சியின்போது ஒட்டுமொத்தப் போர்ட்ஃபோலியோவும் இழப்புக்கு வருவதைத் தவிர்க்க முடியும்.”

கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கு வருமானத்தில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்த முறை விதிவிலக்காக வருமானம் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், முதலீட்டுக் காலம் 3-4 ஆண்டுகளாக இருக்கும்பட்சத்தில், இந்தப் பாதிப்பு இருக்காது.

நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைந்த காலத்தில் (1994) இருந்த நிலைக்கும், தற்போதைய நிலைக்கும் மியூச்சுவல் ஃபண்ட் துறை மற்றும் முதலீட்டாளர்களிடையே என்ன வேறுபாட்டைப் பார்க்கிறீர்கள்?

“கால் நூற்றாண்டுக்குமுன் நிறுவனங்கள் மற்றும் பங்குகள் பற்றிய தகவல் கிடைத்தால், அது பொக்கிஷமாக இருந்தது. மேலும், அதிக முயற்சியெடுத்துத் தேடினால்தான் தகவல்கள் கிடைக்கும். இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் விரல்நுனியில் எல்லாத் தகவல் களும் தாராளமாகவும் விரைவாகவும் கிடைக்கின்றன. இதற்குமுன் ஃபண்ட் மேனேஜர்கள் நன்றாக யோசித்து முடிவெடுத்து, பங்குகளில் முதலீடு செய்ய கால அவகாசம் கிடைத்தது. இன்றைக்கு அப்படி இல்லை, விரைந்து முடிவெடுத்து முதலீடு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களை எடுத்துக்கொண்டால், அவர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்குமுன் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து விட்டு, எப்போது லாபத்தை எடுக்க வேண்டும் என்பதை மட்டும்தான் கேட்பார்கள். இப்போது அப்படியல்ல, எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.”

சிறுமுதலீட்டாளர்களுக்கு உங்களின் முக்கிய ஆலோசனை என்ன?

“பங்குச் சந்தைச் சார்ந்த முதலீடு என்கிறபோது அதைப் புரிந்துகொண்டு முதலீடு செய்யவேண்டும். மேலும், பொருளாதாரமும் பங்குச் சந்தையின் செயல்பாடும் எப்போதும் நேர்கோட்டில் பயணம் செய்யாது. அதன் பயணம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் பார்த்தால், ஏற்றத்தில் இருக்கும். பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தையின் செயல்பாடு, சுழற்சியில் இருக்கும். நீண்ட காலத்தில் முதலீட்டின் மூலம் 12% - 14% லாபம் பார்க்க, அஸெட் அலோகேஷன்படி, முதலீட்டைப் பிரித்து மேற்கொள்வது அவசியம்.”