Published:Updated:

`1.5 ஏக்கரில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா!'- மாத்தி யோசித்த சண்டிகர் மாநகராட்சி

dog park | நாய்கள் பூங்கா
dog park | நாய்கள் பூங்கா

இந்தப் பூங்கா நாய்களுக்கு உடற்பயிற்சி, நடத்தைப் பயிற்சி போன்ற பல்வேறு வசதிகளை நாய்களுக்கு வழங்கும் என்றும், நாய்களைத் தத்தெடுக்கும் வசதியும் மக்களுக்கு வழங்கப்படும்.

மனிதனுக்கு மிகவும் பிடித்த செல்லப்பிராணிகளில் முதன்மையானது நாய். நகரங்களில்தான் அதிக அளவில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பல மாநகரங்களில் மக்களுக்காகப் பூங்காக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அதற்குள் நாய்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் கவனம் செலுத்திய சண்டிகர் மாநகராட்சி, சற்றே மாற்றி யோசித்து, நாய்களுக்கென்று பிரத்யேக பூங்கா ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

`1.5 ஏக்கரில் நாய்களுக்கான பிரத்யேக பூங்கா!'- மாத்தி யோசித்த சண்டிகர் மாநகராட்சி

தெற்கு சண்டிகரின் 43-ம் செக்டாரில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படவுள்ளது. இது, வடஇந்தியாவில் நாய்களுக்காகத் திறக்கப்படும் முதல் பூங்காவாகும். சண்டிகர் அரசாங்கம் பரிந்துரைத்திருக்கும் தடுப்பூசி போடப்பட்ட செல்ல நாய்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தப் பூங்கா உடற்பயிற்சி போன்ற பல்வேறு வசதிகளை நாய்களுக்கு வழங்கும் என்றும், நாய்களைத் தத்தெடுக்கும் வசதியும் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

`மொத்தமாக பணமில்லா பரிவர்த்தனைகளை நோக்கி நகர்கிறதா இந்தியா?!’- Razorpay அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் நாய்களுக்காகப் பிரத்யேகமாக இரண்டு நகரங்களில் மட்டுமே பூங்காக்கள் உள்ளன. ஒன்று ஹைதராபாத்திலும் மற்றொன்று மும்பையிலும். முதன்முதலில் நாய்களுக்கான பூங்கா ஹைதராபாத்தில்தான் நிறுவப்பட்டது. இங்கு நாய் பயிற்சி, உடற்பயிற்சி உபகரணங்கள், புல்வெளிகள், ஆம்பிதியேட்டர், ஸ்பிளாஸ் பூல், மற்றும் பல வசதிகள் உள்ளன. இவ்விரு நகரங்களுக்கு அடுத்ததாக, சண்டிகரில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டிருப்பது நாய் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் இதுபோன்ற பூங்காக்கள் இல்லை என்றாலும், நமது செல்லப் பிராணிகளோடு விளையாடி மகிழ சில இடங்கள் உள்ளன. ஈ.சி.ஆர் அக்கரைப் பகுதியில் அமைந்துள்ள 'ஹோட்டல் ஃபார் டாக்ஸ்' செல்லப் பிராணிகளுக்கானது. இங்கு நாய்கள் சக நாய்களோடு விளையாட, நீச்சலடிக்க, வசதிகள் உள்ளன.

Chandigarh dog park
Chandigarh dog park

நாய்கள் இல்லாதவர்கள்கூட இங்கு சென்று விளையாடி மகிழலாம். சென்னைப் பனையூரில் உள்ள `ஹார்லே அண்ட் மீ' உணவகத்தில் நல்ல தேநீர் அருந்தியபடியே நாமும் நம் நாயும் விளையாடி மகிழலாம். இங்கும் நாய்களுக்கான ஸ்பா, பூங்கா உள்ளிட்டவை உள்ளன. சக நாய்களோடு விளையாடி மகிழ இங்கு மாதம் தோறும் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இங்கு வருடாந்திர சந்தாதாரராகியும் வார விடுமுறையை உங்கள் நாயோடு சிறப்பாக அனுபவிக்கலாம். இதைத் தாண்டி சென்னையில் உள்ள பல உணவகங்களில் நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன. அடையாரில் உள்ள க்ரிம்சன் சக்ரா, நீலாங்கரையில் உள்ள மெட்ராஸ் ஸ்குவையர், அடையாரில் உள்ள க்ரேவ்யார்ட் கஃபே, ஆர்.ஏ புரத்தில் சாண்டி சாக்லேட் லேபரேட்டரி போன்ற இடங்களும் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு