Published:Updated:

கோயம்பேடு பகீர்! - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட்? - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

கோயம்பேடு
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு

- ஜி.கௌதம்

கோயம்பேடு பகீர்! - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட்? - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

- ஜி.கௌதம்

Published:Updated:
கோயம்பேடு
பிரீமியம் ஸ்டோரி
கோயம்பேடு

அடிப்படையில் நான் ஊடகக்காரன். விகடன் நிறுவனத்தின் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் மூலம் ஊடக உலகத்துக்குள் வந்தவன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பொதுநலச் சேவைகளைச் செய்வது வழக்கம். அப்படித்தான் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் நல்ல விஷயம் ஒன்றைச் செய்ய முற்பட்டேன். சேவை மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் சிலரும் துணைக்குச் சேர்ந்துகொண்டார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்றோம். அங்கே தனித்தனியாக இருக்கும் காய்கறி, பழம், மலர் மற்றும் உணவுப் பொருள் அங்காடி வளாகங்களுக்குச் சென்று, மக்களின் அத்தியாவசியத் தேவைப் பட்டியலில் இருக்கும் பொருள்களை மொத்தமாக வாங்கினோம். அவற்றை, சென்னையின் பல பகுதிகளுக்கும் வீடு தேடிச் சென்று கொடுக்கும் சேவையை ஆரம்பித்தோம். மொத்த விலைக்கு வாங்கிய பொருள்களை அதே விலைக்கே மக்களுக்கு விநியோகித்தோம். `காலத்தினால் செய்த பேருதவி...’ என்று கூறி மக்கள் எங்களை வாழ்த்தினார்கள்.

கோயம்பேடு பகீர்! - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட்? - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

இந்தப் பணியின் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டின் வளாகங்களுக்குள் தினமும் பல மணி நேரம் இருக்க நேர்ந்தது. அங்கே நடந்த குளறுபடிகளையும் கோளாறுகளையும் கண் முன்னே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக சில கேள்விகளையும் இங்கே எழுப்புகிறேன். பதில்களைத் தேடி ஆராய்ந்தால், கிணறு வெட்ட பூதம் கிளம்பியதுபோல ஊழல் உற்சவங்கள் உலகுக்குத் தெரியவரலாம்!

*******

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது என்பது உண்மையா?

கொரோனா கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து மட்டும் பரவவில்லை. கொரோனா பரவல் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த இடங்களில் கோயம்பேடு மார்க்கெட்டும் ஒன்று. ஆனால், அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து வேறு ‘எதையோ’ மூடி மறைப்பதற்காக இங்கிருந்து மட்டுமே கொரோனா பரவியது என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். கொரோனா கெடுபிடிகள் இறுக்கிப் பிடித்த சூழலில், வணிக வளாகத்தை நிர்வகிக்கும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அதிகாரிகள் கோயம்பேடு வணிகர்களை அழைத்துப் பேசினார்கள். ‘தட்டுப்பாடில்லாமல் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்யுங்கள். அதிக அளவில் பொருள்களை வாங்கி, தட்டுப்பாடு ஏற்படாதபடி சப்ளை செய்யுங்கள். நீங்கள் சப்ளையை நிறுத்திவிட்டால் கள்ளச்சந்தை உருவாகும்; விலைவாசி உயரும். அதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும். அதைத் தடுக்க உதவி செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். பலமுறை இப்படிக் கேட்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

திருமழிசை தற்காலிக சந்தை - மதுரவாயல் பூச்சந்தை - திருமழிசை
திருமழிசை தற்காலிக சந்தை - மதுரவாயல் பூச்சந்தை - திருமழிசை

அரசுக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தாலும், பொதுமக்கள்மீதான அக்கறையாலும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள்களை வாங்கிவைத்தார்கள் வணிகர்கள். ஆனால், அவர்களில் பலர் இன்று தெருக்கோடியில் நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்! பொருள்களை வாங்குவதற்காகக் கடன் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டக்கூட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள்!

சில நூறு பேர் வந்துபோகும் சினிமா தியேட்டர்களிலேயே, `குடிநீர் வைக்கப்பட வேண்டும்’, `கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும்’ போன்ற விதிகள் இருக்கின்றன. ஆனால், தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் வந்துபோகும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில் குடிநீர் வசதி கிடையாது. லட்சக்கணக்கான மக்கள், சிறு வியாபாரிகளுக்காக உள்ளே இருந்து வணிகம் செய்யும் 3,194 வணிகர்களும், அவர்களுக்காக உழைக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தாகம் எடுக்காதா? `ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்’ எனத் தம்பட்டம் அடித்துக்கொள்வதில் காட்டிய அக்கறையை அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் காட்டவில்லை அரசு அதிகாரிகள்.

1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கோயம்பேடு வளாகங்களில் ஆரம்பத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், சிலகாலம்தான். பிறகு குழாயிலிருந்து காற்றுதான் வந்தது. அடுத்த சில வருடங்களில் அந்தக் குழாய்களும் துருப்பிடித்துப் போய்விட்டன. இன்னும் கொடுமையான விஷயம்... கொடுக்காத குடிநீருக்காக குடிநீர் வரி வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்!

மாதவரம் பழச்சந்தை
மாதவரம் பழச்சந்தை

அடுத்து, கழிப்பிட வசதி. 295 ஏக்கரில் அமைந்துள்ள வளாகங்களில் பெயருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கழிப்பிடங்கள்தான் இருக்கின்றன. அவையும் கட்டணக் கழிப்பிடங்கள். ஒப்பந்த அடிப்படையில் கழிப்பிடம் நடத்துவதற்கான அனுமதி யாருக்குக் கொடுக்கப்படுகிறது, யார் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என ஆராய்ந்தால் அது ஒரு தனிக்கட்டுரை. இரவு நேரங்களில் அந்தக் கட்டணக் கழிப்பிடங்களும் மூடப்பட்டு விடுகின்றன. நள்ளிரவில் ஆரம்பித்து அதிகாலை வரைதான் காய்கறி வணிகம் நடைபெறும். அந்த நேரத்தில் `அவசரம்’ என்றால் வணிகர்களும் ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்களும் எங்கே ஒதுங்குவார்கள்?

`அடிக்கடி கைகளைக் கழுவு’ என அறிவுறுத்தும் அதிகாரிகள், அதற்குத் தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டாமா? கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையாவது உருப்படியாகச் செய்தார்களா? மார்க்கெட்டுக்குள் நுழையும் வாகனங்களின் டயர்களுக்கு மருந்தடித்து அனுப்பியதைத் தவிர உள்ளே வேறெந்த உருப்படியான காரியமும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஒரு நாள்... ஒரே ஒரு நாள்... புன்னகை முகத்துடன் மார்க்கெட்டுக்கு வந்துபோனார் துணை முதல்வர். அப்போது மட்டும் அதுவும், அதிகம் போனால் சில நூறு பேருக்கு முகக்கவசங்கள் வழங்கினார்கள். அதுவும் ஒரு முறை உபயோகிக்கும் முகக்கவசங்கள். இந்த லட்சணத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தால் கொரோனா கிருமிகளை எப்படித் தடுக்க முடியும்?

மார்க்கெட் தொடர்பிலிருக்கும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதும் `கோயம்பேட்டில் இருந்துதான் கொரோனா பரவுகிறது’ என்று பீதியைக் கிளப்பிவிட்டார்கள். ‘எடுத்தேன்... கவிழ்த்தேன்’ என்று மார்க்கெட்டை இழுத்து மூடினார்கள்.

கோயம்பேடு மார்க்கெட் என்பது அகண்ட காவிரியின் ஆரம்பப்புள்ளியான தலைக்காவிரி போன்றது. தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், பல்வேறு மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் இங்கிருந்துதான் காய்கறிகளும் பழங்களும் ஒரு சில உணவுப் பொருள்களும் போய்ச் சேர்கின்றன.

திருமழிசை...
திருமழிசை...

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பாதுகாக்க எதையும் செய்யாமல் அலட்சியமாக இருந்துவிட்டு, ஒட்டுமொத்த பழியையும் வணிகர்கள்மீது போட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் காட்டிய முஸ்தீபுகளிலும், பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் சிறிதேனும் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கோயம்பேடு மார்க்கெட்டில் காட்டவில்லை என்பதே உண்மை.

சரி... ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டதும், தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில் இடமாற்றம் செய்யப்படுவதாகச் சொல்லி, கோயம்பேடு மார்க்கெட்டை இழுத்துப் பூட்டினார்கள். மாதவரம் மற்றும் திருமழிசையில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக அங்காடிகளில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரியுமா? இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தினால் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்புகளைக் கண்டறியலாம். காரணம்... மிகவும் எளிமையானது.

கோயம்பேடு பகீர்! - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட்? - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட்

மொத்தம் 295 ஏக்கரில் இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் கட்டுப்படுத்த முடியாத கொரோனாவை சுமார் இரண்டு ஏக்கர் அளவே இருக்கும் மாதவரத்திலும், சுமார் 20 ஏக்கரில் இருக்கும் திருமழிசையிலும் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? போதிய இடவசதியோ, சுகாதார பாதுகாப்பு வசதிகளோ இல்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது மாதவரம். இங்கு பழ வணிகத்தை, படுதா கட்டி, தெருக்கூத்து நடத்துவதுபோல கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள். திருமழிசையில் சிலநாள் கூத்துக்காகத் திறந்தவெளி மைதானத்தில் திடீர் பொருட்காட்சி அரங்குகள் அமைப்பதுபோல அமைக்கப் பட்டுள்ளன அங்காடிகள்.

ஆக மொத்தத்தில்... ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடையைக் குற்றம் சொன்னது போல, கோயம்பேட்டிலிருந்து கொரோனா பரவியதாக வதந்தியைப் பரப்பிவிட்டார்கள். இன்னும் இருக்கின்றன கேள்விகள்... கேட்கிறேன்.

தொடர்புக்கு: editorGGowtham@gmail.com

தொடரும்...