Published:Updated:

வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!

வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேறுவதை இந்தியர்கள் விரும்புகின்றனர்

வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேறுவதை இந்தியர்கள் விரும்புகின்றனர்

Published:Updated:
வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!

நாடாளுமன்றத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் மழைக்காலக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கிறது. இதில், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எழுத்துபூர்வமாகப் பதிலளித்திருந்தார் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய். அவர் அளித்திருந்த தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், 3.62 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து, வேறு நாட்டுக் குடியுரிமையைப் பெற்றிருக்கின்றனர். (மற்ற தரவுகளுக்கு இன்ஃபோகிராபிக்ஸைப் பார்க்கவும்)

ஏன் வெளிநாட்டுக் குடியுரிமை பெறுகிறார்கள்?

பெரும்பாலும் வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள்தான் இந்தியக் குடியுரிமையைத் துறந்துவிட்டு, தாங்கள் வாழும் நாட்டின் குடியுரிமையைப் பெறுகிறார்கள். அவர்கள் பணிபுரியும் நாடுகளில் கிடைக்கும் வாழ்க்கைத்தரம், சம்பளம், பணிச்சூழல் உள்ளிட்டவை பிடித்துப்போவதால் அங்கேயே வாழ ஆசைப்படுகின்றனர். இந்தியர்கள் அதிகம் விரும்பிச் செல்லும் நாடு அமெரிக்கா. கடந்த மூன்று ஆண்டுகளில், 1.7 லட்சம் இந்தியர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கின்றனர். இதற்கு நம்மவர்களிடமிருக்கும் `அமெரிக்க மோகம்’தான் முக்கியக் காரணம் எனத் தெரிகிறது. ``சிறு வயதிலிருந்தே அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டுமென்ற கனவோடு இருக்கும் இந்தியர்கள் ஏராளம். அங்கிருக்கும் லைஃப் ஸ்டைல் பிடித்துப்போவதால், அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுவிடுகின்றனர்’’ என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!
metamorworks

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் குடியேறுவதை இந்தியர்கள் விரும்புகின்றனர். இந்த இரு நாடுகளும் அங்கு குடியுரிமை பெறுபவர்களுக்குப் பல சலுகைகளை வழங்குகின்றன. வெளிநாடுகளில் குடியேறும் இந்தியர்கள், ``வெளிநாடுகளில் வேலை நேரம் சரியாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகின்றன. நாம் பார்க்கும் வேலைக்கேற்ற சம்பளமும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இவையெல்லாம் கிடைப்பதில்லை. மேலும், சுற்றுச்சூழல் குறித்தும் இங்கிருக் கும் அரசுகள் கவலைப்படுகின்றன. பெருமளவு மாசு இல்லா மல் இருப்பதால், அது சார்ந்த உடல்நலப் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கின்றன. சில நாடுகளில், அரசாங்கங்களே பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன. குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. நல்ல மருத்துவம் கிடைக்கிறது. இதெல்லாம் நாங்கள் அந்தந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்றால் மட்டுமே கிடைக்கும்’’ என்கின்றனர்.

வெளிநாட்டவர்களான இந்தியர்கள்!

அதேநேரத்தில், ``பிறந்த நாட்டின் குடியுரிமையை விட்டுத்தர எங்களுக்கு மனமில்லைதான். ஆனால், இந்தியாவில் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி இல்லையே’’ என்று வருத்தப்படுபவர்களும் இருக்கின்றனர். இந்தியாவில், வேறு நாட்டுக் குடியுரிமை பெற நினைப்பவர்கள், இந்தியக் குடியுரிமையைக் கைவிட வேண்டும். வெளிநாட்டுக் குடியுரிமை பெறும் இந்தியர்களுக்கு ICO (இந்தியன் சிட்டிசன் ஆஃப் ஓவர்சீஸ்) என்ற அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் இந்தியா வர விசா எடுக்கத் தேவையில்லை. இங்கே அவர்கள் வேலை செய்யலாம், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம், வசிக்கலாம். ஆனால், தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ, அரசுப்பணி செய்யவோ, விவசாய நிலங்களை வாங்கவோ முடியாது.

`இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வசதி கொண்டுவரப்பட வேண்டும்’ என்பதே பெரும்பாலான வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் ஆசையாக இருக்கிறது!