Published:Updated:

மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாசாரம்... முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?

பேனர் கலாசாரம்
பிரீமியம் ஸ்டோரி
பேனர் கலாசாரம்

சமீபத்தில், புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத் தொடக்கவிழாவுக்குச் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாசாரம்... முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?

சமீபத்தில், புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத் தொடக்கவிழாவுக்குச் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

Published:Updated:
பேனர் கலாசாரம்
பிரீமியம் ஸ்டோரி
பேனர் கலாசாரம்

2019-ம் ஆண்டு, செப்டம்பர் 12-ம் தேதி... துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க வைத்திருந்த கட்அவுட் விழுந்ததில் சுப என்ற பெண் பலியானார். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வைக் கடுமையாகச் சாடிய அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர், கட்அவுட் வைக்கக் கூடாது. இந்த அறிவுரையை யாராவது மீறினால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை பாயும். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளிலும் கூட்டத்திலும் நான் பங்கேற்க மாட்டேன்” என்று தன் கட்சியினரையும் எச்சரித்தார்.

மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாசாரம்... முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. தி.மு.க ஆளுங்கட்சி யானது. கட்அவுட் பேனர்கள் வழக்கம்போல அதிகரித்தன. இதற்குக் கடிவாளம் போடும் வகையில் கடந்த 2021, ஜூலை மாதம் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், ``எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் தலைவர் ஸ்டாலின் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. தி.மு.க தலைவரின் ஆணையை மீறும் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதமே (ஆகஸ்ட் 20-ம் தேதி) விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்ற ஒரு திருமணவிழாவுக்காக பேனர், கட்சிக்கொடிகள் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தினேஷ் என்ற 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்தான். சுப உயிரிழந்த சமயத்தில் அ.தி.மு.க-வைக் கடுமையாகச் சாடிய தி.மு.க., அதே தவற்றைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கிறது என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர். ஆனாலும்கூட, தி.மு.க-வின் பேனர் கலாசாரம் தொடர்கிறது. குறிப்பாக சென்னை தவிர்த்த மாவட்டங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் பேனர்களும், வரவேற்பு வளைவுகளும் வைக்கப்படுகின்றன.

மே மாதம் பிரதமர் மோடி சென்னை வந்தபோது பா.ஜ.க-வினர் சாலையைச் சேதப்படுத்தி வரவேற்பு விளம்பரங்களையும், கட்சிக்கொடிகளையும் நாட்டியிருந்தனர். தி.மு.க-வினரும் அதே பேனர் கலாசாரத்தில் ஊறிப்போயிருந்ததால், போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை.

மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாசாரம்... முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?
மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாசாரம்... முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்?

சமீபத்தில், புழல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத் தொடக்கவிழாவுக்குச் சென்றிருந்தார் முதல்வர் ஸ்டாலின். அவரை வரவேற்கும்விதமாக பெரிய அளவில் பேனர், கட்சிக்கொடி வைக்கப்பட்டிருந்தன. தகவலறிந்த முதல்வர் அனைத்தையும் காவல்துறையினரைக் கொண்டு அகற்றிய பின்னரே, விழாவில் பங்கேற்றார். இந்தக் கலாசாரத்தை முதல்வரே விரும்பாவிட்டாலும்கூட, அவரது உத்தரவையும் மீறி கட்சி நிர்வாகிகள் அதை ஊக்குவிப்பதையே இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றன.

இது குறித்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டோம். ``பொதுவாக தி.மு.க-வில் பெரும்பாலானோர் பேனர், கட்அவுட் வைப்பது கிடையாது. அப்படி யாராவது வைத்திருத்தாலும் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறும் நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறோம். தவறு நடந்திருந்தால் நடவடிக்கையும் எடுக்கிறோம். பொதுமக்களுக்கு எவ்வகை இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில், கட்சியும் தலைமையும் உறுதியாக இருக்கின்றன” என்றார் கறாரான குரலில்.

ஆள்வோர் திருந்தாமல், மற்றவர்களைத் திருத்த முடியாது!