Published:Updated:

#BTS தெரியாதா அங்கிள்?

 #BTS தெரியாதா அங்கிள்?
பிரீமியம் ஸ்டோரி
#BTS தெரியாதா அங்கிள்?

“BTSல Vன்னு ஒருத்தன், V பேரு கிம் தேயங். அவன் சொன்னதுதான். ரெயின்போல லாஸ்ட் கலர் ஒயல்ட்.

#BTS தெரியாதா அங்கிள்?

“BTSல Vன்னு ஒருத்தன், V பேரு கிம் தேயங். அவன் சொன்னதுதான். ரெயின்போல லாஸ்ட் கலர் ஒயல்ட்.

Published:Updated:
 #BTS தெரியாதா அங்கிள்?
பிரீமியம் ஸ்டோரி
#BTS தெரியாதா அங்கிள்?

“கார்த்தி, BTS கட்டுரை என்ன ஆச்சு?”

“ரெடியாகிட்டே இருக்கு சார்”

கடந்த சில வாரங்களாகவே இப்படியாகத்தான் சென்றுகொண்டிருந்தது.நண்பர்களிடம் BTS பற்றி ஏதாவது தெரியுமா எனக் கேட்டால், BTS டாக்குமென்டரி, BTS கான்ஸ்ப்ரஸி தியரி, BTS explainer, BTS பேட்டிகள் என ஒரு டஜன் வீடியோக்களை மொத்தமாய் அனுப்பினார்கள். அவற்றில் ஆங்காங்கே மானே தேனே போட்டுத்தான் BTS கட்டுரைகளை உருவாக்குகிறார்களாம். ஆனால், தமிழகத்திலேயே BTSக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என கழுகார் பாணி தகவல்கள் வர, அந்த வம்பே வேண்டாம் என அதன் ரசிகர்கள் பக்கம் வண்டியைத் திருப்பினேன்.

இந்த இடைவேளையில் சில பாடல்களைக் கேட்கவும் செய்தேன். `FAKE LOVE’ பாடல் எல்லாம் செம ரகம் என்றாலும், ‘ஒண்ணும் புரியாம தாளம் தட்டுறேனே’ கதியாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தேன். ‘BOY WITH LOVE’ பாடலில் ஆங்காங்கே ஆங்கிலம் வந்தாலும், அதிலும் அந்தப் பிரச்னை இருந்தது. அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது DYNAMITE. ஆம், அந்தப் பாடல் முழுவதுமாக ஆங்கிலத்தில் உருவாகியிருந்தது. இசையை வைத்தே ஒரு பாடலை ரசிக்க முடியும் என்றாலும், அந்த நூலில் கோக்கப்படும் முத்துக்களாக வார்த்தைகள்தான் நம்மை அதோடு ஒன்றச் செய்கிறது. புரிகிறது என்பதாலேயே Dynamite அதிகம் பிடித்தது. இந்தப் பாடல்களைக் கேட்டபோதும், BTS சிறுகுறிப்பு வரைக என்றால் ‘பெப்பே’ தான். ஹாலிவுட் படங்களின் பாடல்களும், மைக்கேல் ஜாக்சனும் தெரிந்தாலே காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம் என்னும் தலைமுறையில் இருந்தபோது, ரிச்சர்ட் மார்க்ஸின் ‘right here waiting’ மாதிரியான சில பாடல்களே, ‘நான் யார் தெரியுமா’ என்கிற பில்டப்புக்குப் போதுமானதாக இருந்தது. எதேச்சையாக உறவினர் ஒருவரின் வாட்ஸப் ஸ்டேட்டசைப் பார்த்தால், ஏதோ எழுதியிருந்தது.

“என்னம்மா எழுதியிருக்கு, சைனீஸா?”

“அது கொரியன். பொராஹே.”

“அப்படின்னா?”

“I purple you-ன்னு அர்த்தம்...”

“I love you, I miss you சரி, ‘purple you’ன்னா?”


“BTSல Vன்னு ஒருத்தன், V பேரு கிம் தேயங். அவன் சொன்னதுதான். ரெயின்போல லாஸ்ட் கலர் ஒயல்ட். அதுமாதிரி, பொராஹேன்னா I Love you till the end of dayன்னு அர்த்தம். இது அவர் 2016 கான்சர்ட்ல சொன்னது. கொரியன்ல பொரான்னா ஒயல்ட்னு அர்த்தம், சராங்கேன்னா I love youன்னு அர்த்தம். இது ரெண்டையும் சேர்த்துதான் பொராஹே, I purple Youன்னு அர்த்தம்.’’

 #BTS தெரியாதா அங்கிள்?

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெண் 8 மார்க் கேள்விக்கு பதில் அளிப்பது போல், யோசிக்காமலே பதில் சொன்னார். இப்படியாகத்தான் BTS பெருங்குறிப்புக்கான அறிமுகம் ஆரம்பித்தது.

“BTS பாடல்கள் கேட்கும்போதே ஒரு மன அழுத்தத்துல இருந்து வெளிய வர்ற மாதிரி இருக்கும். அதே மாதிரி, காலேஜ் படிக்கறப்ப சிலருக்கு ‘நாம எதுக்குமே வொர்த் இல்லை’ன்னு தோணும். BTS பாடல்கள் நம்மள நாமளே எப்படி லவ் பண்ணணும்னு யோசிக்க வைக்கும். அவங்க வாழ்க்கைல பட்ட கஷ்டங்கள், அனுபவங்கள், அதுல இருந்து எப்படி அவங்க மேல வந்தாங்க, எல்லாமே அவங்க பாடல்கள்ல இருக்கும். ஒரு பாட்டுக்கு எல்லாம் 20 நிமிஷத்துல 40,000 டிக்கெட் வித்துச்சு’’ என்கிறார் கல்லூரி மாணவி ஸ்ரீமதி. ஸ்ரீமதியின் ஃபேவரைட் சாங் ‘Make It right.’

அதே கல்லூரியில் படிக்கும் ப்ரீத்திக்கோ BTS என்றால், வார்த்தைகள் அருவியாய்க் கொட்டுகின்றன. “BTSல மொத்தம் ஏழு பேர் இருக்காங்க . இதுல ஜங்கூக், கிம் தேயங், பார்க் ஜிமின், சியோக்ஜின் இவங்க எல்லாம் பாட்டுப் பாடறவங்க. அதாவது vocals. மின் யூங்கி, ஹோப், நம்ஜூன் மூணு பேரு ரேப்பர்ஸ். கிம் நம்ஜூனோட ஸ்டேஜ் பேரு RM, அதாவது RAP MONSTER. Idol, fake love,on,mic drop இப்படி நிறைய பாட்டு ஹிட் ஆகியிருக்கு. ஜங்கூக் ஒரு செக்ஸி ஸ்டார். கூகுள் சர்ச்ல எல்லாம் எப்பவும் நம்பர் ஒன் கிம் தேயங் தான். அவங்க எல்லோரும் அடிக்கடி உச்சரிக்கறது Love Yourself தான். நானெல்லாம் மூணு வருஷமா இந்தப் பாடல்கள் கேட்டுக்கிட்டு இருக்கேன். அவ்ளோ மோட்டிவேஷனலா இருக்கும். என்னோட ஃபேவரைட் சாங் life goes on.’’ நாம் தான் ஆங்காங்கே புள்ளி வைத்திருக்கிறோமே தவிர, ப்ரீத்தி பேசும்போது எங்குமே புள்ளியில்லை. `முத்துமணி ரத்தினங்களும் சிந்திய பவளமும்’ என SPB பாடுவதுபோல் மூச்சுவிடாமல் சொல்கிறார்.

 #BTS தெரியாதா அங்கிள்?

“ஆரம்பத்துல ரெண்டு பேர் இருந்தாங்க. ரேப்பர்ஸ், அண்டர்கிரவுண்டு ரேப்பர்ஸ்’’ என BTS பின்கதையை பில்டப்புடன் ஆரம்பித்தார் பாலிடெக்னிக்கில் படிக்கும் செந்தமிழன். ‘‘அப்புறம் ஒவ்வொருத்தரா சேர்ந்தாங்க. இப்ப மூணு ரேப்பர்ஸ், அஞ்சு பாடகர்கள். எல்லோரும் சின்னச் சின்ன அறையில, ரொம்ப ஏழ்மைல இருந்து வந்தவங்க. இவங்க கொஞ்சம் பிரபலம் ஆனதும், ஆரம்பத்துல கூட இருந்த அண்டர்கிரவுண்டு ரேப்பர்ஸ் இவங்கள பொண்ணு மாதிரி இருக்கீங்கன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க. அதையும் ஒரு பாட்டா பாடியிருக்காங்க. இவங்க டான்ஸ் செமயா இருக்கும். எல்லோருமே கடின உழைப்பாளர்கள். அந்த டீம்லயே சின்ன பையன் ஜங்கூக். 13 வயசுல அந்த டீம்ல சேர்ந்தார். உலக அளவுல பாடல்கள அங்கீகரிக்கற பில்போர்ட்ஸ் விருது வாங்கின முதல் கொரிய பாப் பேண்டு BTS தான். ட்விட்டர்ல ரசிகர்களோட எப்பவும் கனெக்ட்ல இருப்பாங்க. இளைஞர்கள தொடர்ந்து ஊக்குவிக்குற மாதிரி பேசுவாங்க. அந்த வயசுப் பிரச்னைகளான மன அழுத்தம், தற்கொலை, தடுமாறும் மனநிலை, பெண் உரிமை, பள்ளிகள்ல அசிங்கப்படுத்தப்படுறது இதெல்லாம்தான் அவங்க பாடல்கள்ல முக்கியமா பாடப்படும். என்னோட ஃபேவரைட் சாங் mic drop.’’

இந்தப் பக்கத்தில் இருக்கும் பாக்ஸ் தகவல்கள் தந்த ஸ்ருதி சுரேஷின் ஃபேவரைட் பாடல் Just One day. கொரியப் பாடல்களுக்குள் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது, பாடல்களின் ஆங்கில, ஜப்பானீஸ், சைனீஸ் பதிப்புகளையும் ஒரு சேர வெளியிடுவது, கலர்ஃபுல் வீடியோக்கள், ஏழ்மையில் இருந்து வந்தவர்கள் என இவர்களின் மார்க்கெட்டிங் டீம் பெரியது என பிசினஸ் மாடலைப் பேசுகிறார் பள்ளி மாணவி ஸ்ருதி.

இத்தனை விஷயம் இருக்கா, என BTS பற்றிப் பேசி முடித்ததும், அடுத்த கடப்பாறையை நெஞ்சில் இறக்கினார் பள்ளி மாணவி ஸ்ரீநிதி. ‘‘அங்கிள், மொத்தம் 100 பேண்டுக்கு மேல இருக்கு. நானாச்சும் BTS மட்டும்தான் கேக்கறேன் என் ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் 100 பேண்டும் அத்துப்படி. Boy Band 62. girl band 47. அதுல ஒரு பாய் பேண்டுதான் BTS. EXOவோட loveshot, BlackPink பேண்டுல இருந்து வந்த Lovesick girls, As if it’s your last இது ரெண்டும் என்னோட ஃபேவரைட்.’’

ஆள விடுங்கடா டேய்.

***

ஜின்: இவர்கள் குழுவில் வயதானவர் ஜின். சமையல் ஸ்பெஷலிஸ்ட்டான ஜின், செம்ம காமெடியான நபர்

சுகா (மின் யூங்கி): மல்ட்டி டேலண்டட். ரேப்பர், ரைட்டர், தயாரிப்பு, நடனம் என எல்லாமே அவர் தான். IU மாதிரியான பிற கொரிய பாப்களுக்கும் உதவுபவர்.

ஹோப்: முக்கியமான டான்சர், பாடகர், ரேப்பர், ரைட்டர். செம்ம ஜாலியான மனிதர்.

RM (கிம் நம்ஜூன்): தனியாவே நிறைய ஆல்பம் பண்ணியிருக்கிறார். ரொம்ப ஸ்மார்ட். அவர்தான் இந்த க்ரூப்பின் லீடர். இவர் ஆங்கிலம் கற்றுக்கொண்டதே FRIENDS தொடர் மூலம்தான்.

ஜிமின்: நிறைய ரசிகர்கள் கூட்டம் இவருக்குத்தான் உண்டு. பாடகர்.

V (கிம் தேயங்): பாடகர், டான்சர். பொராஹே இவர் உருவாக்கியதுதான்.

ஜங்கூக்: ரொம்பச் சின்னப் பையன் (23 வயது).