Published:Updated:

உலகைக் குலுக்கும் உளவு!

உலகைக் குலுக்கும் உளவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகைக் குலுக்கும் உளவு!

உளவு பார்க்க குறிவைக்கப்பட்டவற்றில் இந்தியர்களின் மொபைல் எண்கள் 300 இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.

உலகைக் குலுக்கும் உளவு!

உளவு பார்க்க குறிவைக்கப்பட்டவற்றில் இந்தியர்களின் மொபைல் எண்கள் 300 இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி.

Published:Updated:
உலகைக் குலுக்கும் உளவு!
பிரீமியம் ஸ்டோரி
உலகைக் குலுக்கும் உளவு!

மீண்டும் ஒருமுறை இந்தியாவில் ஆளும் அரசின் மீதான ஒரு சர்ச்சை சர்வதேச வெளிச்சம் பெற்றிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே, மக்களை உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கலாம் என முன்னணி சர்வதேச ஊடகங்கள் திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. 'பெகாசஸ்' என்ற ஸ்பைவேர் கொண்டு ஆளும் அரசு, தனக்கு எதிரானவர்களைக் கண்காணித் ததாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதாவது அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, அவர்கள் யாரையெல்லாம் சந்திக்கிறார்கள், என்னவெல்லாம் பேசுகிறார்கள் என்பது தொடங்கி அவர்கள் கூகுளில் என்ன வெல்லாம் தேடுகிறார்கள் என்பதுவரை இந்த ஸ்பைவேர் தோண்டி எடுத்திருக்கிறது.

சர்வதேச அளவில் இந்த ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆயிரக்கணக்கான போன் நம்பர்கள் கசிந்தன. பாரீஸைச் சேர்ந்த தன்னார்வ செய்தி நிறுவனமான ஃபார்பிடன் ஸ்டோரீஸும் (Forbidden Stories) மனித உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனலும் இணைந்து இந்த எண்கள் அடங்கிய ‘பெகாசஸ் டேட்டா'வை ‘தி கார்டியன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ மற்றும் இந்தியாவின் ‘தி வயர்’ போன்ற பல சர்வதேச ஊடகங்களுக்கு அளித்துள்ளன.

உலகைக் குலுக்கும் உளவு!

உளவு பார்க்க குறிவைக்கப்பட்டவற்றில் இந்தியர்களின் மொபைல் எண்கள் 300 இருக்கின்றன என்பதுதான் அதிர்ச்சிகரமான செய்தி. தற்போதைய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சட்ட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், போராளிகள் எனப் பலரின் மொபைல் எண்களும் இதில் அடக்கம். சந்தேகத்தை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கான மொபைல்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஃபாரன்சிக் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் 37 மொபைல்கள் பெகாசஸ் ஸ்பைவேருக்கு இலக்காகி இருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. இதில் 10 இந்தியர்களின் மொபைல்களும் அடக்கம். ஆனால், கூடுதலாக ஆய்வுகள் மேற்கொள்ளாமல், இந்த மொபைல்கள் கொண்டு உளவுபார்க்கப் பட்டதா அல்லது அதற்கான முயற்சிகள் மட்டுமே நடந்ததா என்பதைச் சொல்லிவிட முடியாது. மொத்தம் 17 மீடியா நிறுவனங்கள் நடத்திய இந்த நீண்டதொரு புலனாய்வைத்தான் 'தி பெகாசஸ் புராஜெக்ட்' என்று அழைக்கின்றனர்.

ஆனால், 'பெகாசஸ்' ஸ்பைவேர் குறித்த சர்ச்சை புதிதல்ல. அக்டோபர் 2019-ல் இந்தப் பிரச்னையை முதலில் தொடங்கி வைத்தது வாட்ஸ்அப் நிறுவனம்தான். மே 2019-ல் வாட்ஸ்அப் நிறுவனம் பக் (Bug) ஒன்றைக் கண்டறிந்தது. உலகளவில் தன் பயனாளர்களில் 1,400 பேரின் மொபைல்கள் அதற்கு இலக்காகி இருக்கின்றன என்று தெரிவித்தது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 20 பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் அடக்கம். அவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், அவர்களின் போன்கள் டேப் செய்யப்படுவதாக எச்சரித்தது. இந்த உளவு வேலைக்குப் பயன்படுத்தப்பட்டது 'பெகாசஸ்' எனும் ஸ்பைவேர் என்று கண்டறிந்து அதைத் தயாரித்த இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ (NSO)-வை அமெரிக்க நீதிமன்றத்துக்கு இழுத்தது வாட்ஸ்அப். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்தப் புலனாய்வும் பார்க்கப் படுகிறது.

உலகைக் குலுக்கும் உளவு!

பெகாசஸ் என்ன செய்யும்?

உங்கள் போன் குறி வைக்கப்பட்டால், போனின் பாதுகாப்பு அம்சங்களையும் மீறி தன்னைத்தானே தரவிறக்கம் செய்துகொண்டு பெகாசஸ் உள்ளே நுழைந்து விடும். பின்னர் உங்களின் போட்டோ, வீடியோ, சாட் மெசேஜ்கள், லொகேஷன் தொடர்பான டேட்டா, பிரவுசிங் ஹிஸ்டரி என எல்லாவற்றையும் சேகரித்துக் கொள்ளும். கூடுதலாக, உங்களின் கேமரா, மைக், ஸ்க்ரீன் ரெக்கார்டிங் என எல்லா ஹார்டுவேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும். நீங்கள் போனே பேசாதபோதும், உங்களின் போன் மைக் வழியே நீங்கள் சாதா ரணமாகப் பேசுவதைக்கூட ரெக்கார்ட் செய்து சம்பந்தப் பட்ட உளவாளிக்கு அப்படியே கொடுத்துவிடும். நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பதையும் கண்காணிக்கும். கூடுதல் பிரச்னை என்ன வென்றால், இது உங்கள் மொபைலிலிருந்து இத்தனை வேலைகள் செய்வதை உங்களால் ஹார்ட்வேர் ஆய்வு செய்யாமல் கண்டறியவே முடியாது. வாட்ஸ்அப்பில் இருக்கும் 'End to End Encryption' பாதுகாப்பு கூட இதைத் தடுக்க முடியாது என்கிறார்கள்.

சரி, இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?

என்.எஸ்.ஓ அமைப்பு இந்த ஸ்பைவேரை தீவிரவாதிகளை உளவு பார்க்கக் கண்டறியப்பட்ட ஒரு கருவி என்றே கூறுகிறது. அதன் வாடிக்கை யாளர்கள் அனைவருமே பல்வேறு நாடுகளை ஆளும் அரசுகள்தான். ‘36 நாடுகள் எங்கள் வாடிக்கையாளர்கள்’ என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ‘லீக்கான நம்பர்கள் அனைத்தும் உளவுபார்க்க மட்டுமே பயன்படுத்தப்பட்டவை என்று சொல்லிவிட முடியாது என்கிறது என்.எஸ்.ஓ. இந்த ‘பெகாசஸ்' டேட்டா லீக்கைத் தவறானதொரு ஆய்வு என்றும் அது சொல்கிறது. இந்தச் சர்ச்சை குறித்து அந்நிறுவனம் சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எங்களின் பெகாசஸ் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த நியாயமான குற்றச்சாட்டுகள் இருப்பின், அவற்றை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்போம். எங்களின் இந்தத் தொழில்நுட்பம், தீவிரவாத அச்சுறுதல்களைக் கண்டறியவும், வன்முறை மற்றும் பெருங்குற்றங்களைத் தடுக்கவும் மட்டுமே உதவி செய்து வருகிறது. உயிர் காக்கும் பணியில்தான் எங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு மாறான குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி எங்களின் பணியைத் தொடர்வோம்’ என்று தெரிவித்துள்ளது.

உளவுக் குற்றச்சாட்டுக்கு நீண்டதொரு விளக்கத்தை அளித்துள்ளது மத்திய அரசு. அதில், ‘இந்தியா வலிமையான ஜனநாயக நாடு. இங்கே ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான உரிமைகள் ஓர் அடிப்படை விஷயமாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பிட்ட சிலரை உளவு பார்த்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரம் அற்றவை, உண்மைக்குப் புறம்பானவை’ என்று தெரிவித்துள்ளது. அதே சமயம், பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதை எந்த இடத்திலும் மறுத்துப் பேசாமல், அனைத்து வகை கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளும் அதற்குரிய சட்ட அனுமதியுடனே நடப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், எல்லாவிதமான உளவுப் பணிகளும் தேச நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு சட்டபூர்வ அனுமதியுடன் மட்டுமே செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

உலகைக் குலுக்கும் உளவு!

பல்வேறு நாடுகளில் பல்வேறு சட்டதிட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியத் தந்தி சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் உளவு பார்ப்பதற்கு என்றே சில வரைமுறைகள் இருக்கின்றன. ஆனால், ஹேக் செய்து உளவு பார்ப்பது, ஒட்டுக் கேட்பது போன்றவை இந்தச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். மத்திய அரசின் இந்த முதன்மை விளக்கம் சர்ச்சையைக் கிளப்ப, மழைக்காலக் கூட்டத்தொடரில் இது குறித்த விவாதத்தில் அரசு ‘யாரையும் உளவு பார்க்கவில்லை’ என்று இந்த அறிக்கைக்கு முரண்பாடானதொரு விளக்கத்தை அளித்துள்ளது.

ஆளும் அரசைக் கடுமையாக விமர்சனம் செய்பவர்களின் பெயர்கள் இதில் அடிபட்டிருக்கும் நிலையில், மத்திய அரசின் இந்த விளக்கம் போதுமானதாகவும் தெளிவானதாகவும் இல்லை என்பதே பலரின் கருத்து. பெகாசஸ் குறித்துக் கூடுதல் விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்ற நிலையில், இது குறித்து நடுநிலையான விசாரணை அவசியமாகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

* ராகுல் காந்தி, அவரின் உதவியாளர்கள் இருவர் ஆகியோரின் போன்களும் 2019 தேர்தல் நேரத்தில் கண்காணிப்பில் இருந்தன. ஒட்டுக் கேட்பதிலிருந்து தப்பிக்க, அடிக்கடி தன் மொபைல் போனை மாற்றும் வழக்கம் உள்ளவர் ராகுல். ஆனாலும் அவர் கண்காணிப்பிலிருந்து தப்பவில்லை.

* பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளித்தவர், தற்போதைய தகவல்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ். அவரது போனும் கண்காணிப்பில் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் என வித்தியாசம் இல்லாமல், பலரது போனும் இந்தப் பட்டியலில் இருந்திருக்கிறது.

* மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோரின் போனும் லிஸ்ட்டில் இருக்கிறது. தமிழகத் தேர்தலில் தி.மு.க-வுக்கு இவர்தான் வியூகம் அமைத்துக் கொடுத்தார். அந்தத் திட்டமிடல்களும் உளவு பார்க்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

* உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்த நேரத்தில், அவர்மீது அத்துமீறல் குற்றச்சாட்டு எழுப்பினார், நீதிமன்றப் பெண் ஊழியர் ஒருவர். அந்த நேரத்தில் அந்தப் பெண் மற்றும் அவரின் உறவினர்கள் பலரின் போன் நம்பர்கள் இந்த பெகாசஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism