Published:Updated:

இலங்கையில் என்ன நடக்கிறது?

இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

பொருளாதாரச் சரிவு காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, இலங்கை மக்கள் பலரும் வேலை இழந்துவிட்டனர்.

இலங்கையில் என்ன நடக்கிறது?

பொருளாதாரச் சரிவு காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, இலங்கை மக்கள் பலரும் வேலை இழந்துவிட்டனர்.

Published:Updated:
இலங்கை
பிரீமியம் ஸ்டோரி
இலங்கை

கடும் பொருளாதார நெருக்கடியால், அண்டை நாடான இலங்கையில் மக்கள் திணறிக்கொண்டிருப்பதும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துகொண்டிருப்பதும் நாம் அறிந்ததே. சமீபத்தில் அங்கு நடந்த முக்கியமான சில சம்பவங்கள் இங்கே...

பதவி விலக மறுக்கும் கோத்தபய!

இலங்கையின் காலி முகத்திடலில், ‘அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்’ என மக்கள் தீவிரமாகப் போராடிவருகின்றனர். ஆனால் அவரோ, ``தோற்றுப்போன அதிபராக நான் பதவி விலக மாட்டேன். எனது இரண்டு ஆண்டுப் பதவிக்காலத்தை நிச்சயம் பூர்த்தி செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில், கோத்தபயவுக்கு எதிராகப் போராடிவரும் மாணவர்கள், புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள் இலங்கையின் பத்திரிகையாளர்கள். இது குறித்த ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருக்கின்றனவாம்!

ராஜினாமா செய்த பசில்!

கோத்தபயவின் அண்ணனும், முன்னாள் இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே, ஜூன் 9-ம் தேதி அன்று, தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ``அரசின் எந்த நடவடிக்கையிலும் இனி நான் தலையிடமாட்டேன். அதே நேரத்தில், அரசியலிலிருந்தும் விலக மாட்டேன்’’ என்றிருக்கிறார். அடுத்த தேர்தலில் பசிலை அதிபர் வேட்பாளராகக் களமிறக்க ராஜபக்சே குடும்பம் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் சொல்லப்படுகின்றன. அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருக்கும் பசில், குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன!

இலங்கையில் என்ன நடக்கிறது?

முதலீடுகளை ஈர்க்கத் திட்டம்!

மகிந்த ராஜபக்சே பதவி விலகிய பின்னர், இலங்கையின் பிரதமரான ரணில் விக்ரமசிங்க, ``இலங்கையில், எரிபொருளைப் பொறுத்தவரை அடுத்த மூன்று வாரங்கள் கடினமானதாக இருக்கும். எனவே, முடிந்தவரை எரிபொருளையும் எரிவாயுவையும் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்’’ என்று மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த நெருக்கடியைச் சரிசெய்ய இலங்கை மதிப்பிலான 7,761 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டிருக்கிறது அரசு. மேலும், 49 திட்ட முன்மொழிவுகள் மூலம் இலங்கை மதிப்பிலான 11,331 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கியிருக்கிறது அந்நாட்டின் முதலீட்டு வாரியம்!

பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட 40,000 பெண்கள்?!

பொருளாதாரச் சரிவு காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து, இலங்கை மக்கள் பலரும் வேலை இழந்துவிட்டனர். இதனால், இலங்கையிலுள்ள ஸ்பாக்களில் பெண்கள் பலரும் வேலைக்குச் சேரத் தொடங்கினர். அங்கு வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதற்காகப் பெண்கள் பலரும் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டுவிட்டதாக Standup Movement Lanka (SUML) என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ``மாணவிகள், சிறுமிகள் உட்பட சுமார் 40,000 பெண்கள் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதில் கிடைக்கும் வருவாயை வைத்துத்தான் அவர்கள் குடும்பத்தை நடத்திவருகின்றனர்’’ என்ற அதிர்ச்சிகரமான தகவல் சொல்லப்பட்டிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism