Published:Updated:

குழந்தை வரம் கிடைக்கும்!

குழந்தை வரம் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை வரம் கிடைக்கும்!

அம்பிகையைக் கொண்டாடுவோம்

குழந்தை வரம் கிடைக்கும்!

அம்பிகையைக் கொண்டாடுவோம்

Published:Updated:
குழந்தை வரம் கிடைக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை வரம் கிடைக்கும்!
குழந்தை வரம் கிடைக்கும்!

கல்யாண வரம் தருவாள்!

அம்பிகையை கெளரிதேவியாய் வழிபடுவதால் சகல மங்கல காரியங்களும் தடையின்றி வெற்றி பெறும் என்பது பெரியோர்களின் வழிகாட்டல். மகாபாரதத்தில் ருக்மிணி, ராமாயணத்தில் சீதை, மகா புராணங்களில் சாவித்திரி முதலானோரின் கதைகள் கௌரி பூஜையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.

ஞானநூல்கள் 16 வகையான கெளரிதேவியர் வழிபாடு பற்றி விளக்குகின்றன. அவர்களில் சுயம்வர கெளரிதேவி கல்யாண வரம் அருளும் நாயகியாய்த் திகழ்கிறாள். திருமணத்தடையால் வருந்தும் ஆணோ, பெண்ணோ இருதரப்பினருக்கும் நல்லதொரு வாழ்க்கைத் துணை அமைய அருள்பாலிப்பவள் சுயம்வர கெளரி.

சுயம்வர கௌரிதேவி, சிவபெருமானைத் தன் மணமகனாக மனத்துள் எண்ணியவாறு நடந்து செல்லும் திருக்கோலத்தில் காட்சி யளிக்கிறாள். அவளுடன் கமலினி என்ற தோழி மண மாலையுடன் நிற்கிறாள். சுயம்வர கௌரியுடன் கல்யாண கணபதி வீற்றிருக்கிறார்.

குழந்தை வரம் கிடைக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெளர்ணமி தினங்களிலோ, அம்பாளுக்கு உகந்த நாள்களிலோ சுயம்வர கெளரிதேவியைப் பூஜித்து வழிபடலாம். விரிவான பூஜை முறைகள் ஞானநூல்களில் உண்டு. எளிய முறையில், வீட்டில் இருக்கும் அம்மன் படங்களுக்குப் பூக்கள் - மாலைகள் சூட்டி அலங்கரித்து வைத்து, இனிப்பு நைவேத்தியங்கள் படைத்து, நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடலாம்.

அப்போது மேற்காணும் வண்ணம் சுயம்வர கெளரிதேவியின் திருக்கோலத்தை மனதில் தியானித்து, அபிராமியம்மைப் பதிகம் முதலான துதிப்பாடல்களைப் பாடி அம்பாளை வழிபடலாம்.

- அ.சரஸ்வதி, வள்ளியூர்

குழந்தை வரம் கிடைக்கும்!

குழந்தை வரம் கிடைக்கும்!

சென்னை - சைதாப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது அருள்மிகு பிடாரி இளங்காளியம்மன் திருக்கோயில். வடக்குப் பார்த்த அம்மனை வணங்கினால், முடமாகிப் போன காரியங்கள்கூட கைகூடும் என்பர். அதற்கேற்ப, வடக்கு திசை நோக்கி அருள்கிறாள் இந்த இளங்காளியம்மன். இந்த அன்னையிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தால் மனதில் உள்ள துக்கத்தையெல்லாம் போக்குவாள் என்கின்றனர் பக்தர்கள். அதேபோல் குழந்தை வரம் வேண்டுவோர், இங்கு வந்து கோயிலின் அரசமரத்தில் சிறிய தொட்டில் கட்டி, அம்மனை வேண் டிச் செல்கின்றனர். இதனால் விரைவில் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

-பி.சங்கரி, சென்னை-44