Published:Updated:

2K kids: “என்றேனும் ஒரு நாள், எம் மண்ணுக்குத் திரும்புவோமா!” - முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

- அ. ஷர்மினி அரவிந்தன்

2K kids: “என்றேனும் ஒரு நாள், எம் மண்ணுக்குத் திரும்புவோமா!” - முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

- அ. ஷர்மினி அரவிந்தன்

Published:Updated:
முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்
பிரீமியம் ஸ்டோரி
முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

நம் இயல்பு வாழ்விலிருந்து வேறுபட்டவர் களின் வாழ்வை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறோமா? ஈரோடு மாவட்டம், பவானி சாகர் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஜாஸ்மினின் வார்த்தைகள், அப்படியான ஒரு கதையை நமக்குக் கடத்துகிறது.

‘`இலங்கையில் மன்னார் வளைகுடா பகுதியில் ஓரளவு செல்வாக்குடன் வாழ்ந்து வந்தோம். என் அப்பா, அம்மா, அக்கா, தம்பி, நான் மற்றும் எங்கள் செல்ல நாய்கள் குட்டப்பா, கருப்பா. எங்கள் வயல், தென்னந்தோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தார் விவசாயியான அப்பா. அம்மா இல்லத்தரசி. பிள்ளைகள் மூன்று பேரும் பள்ளிப் படிப்புப் படித்துக்கொண்டிருந்தோம்.

நாடெங்கும் சம உரிமை, கல்வி, வேலை வாய்ப்புகள், தனிநாடு கோருகின்ற குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஒரு தலைமையின் கீழ் இவற்றுக்கான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இயல்பு வாழ்க்கை என்ற ஒன்றே எங்களுக்கு இல்லாமல் ஆனது. குண்டு வெடிப்புச் செய்திகளும், துப்பாக்கிச் சத்தங்களும் தினசரியான, நிச்சயமில்லாத வாழ்வு. எம்மக்களின் மரண ஓலம் உறங்கும்போதும் எங்கள் செவிகளில் இரைந்துகொண்டிருந்தன. குழந்தை, கணவர், தந்தை, மனைவி என எந்நேரமும் யார் வீட்டிலும் ஓர் உயிர் பறிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

2K kids: “என்றேனும் ஒரு நாள், எம் மண்ணுக்குத் திரும்புவோமா!” - முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

ஒரு நாள் திடீரென ராணுவம் எங்கள் ஊருக்குள் நுழைந்து வீடு வீடாகச் சென்று சிறுமிகள், இளம் பெண்கள், ஆண்களை இழுத்துச் சென்றனர். ‘தனி நாடா கேட்கிறீர்கள் நாய்களே’ என்று அவர்களது வாகனத்தில் ஏற்றி அடித்துத் துன்புறுத்தினர்.

கண் இமைக்கும் நொடியில் எங்கள் வீட்டினுள்ளும் நுழைந்த ராணுவத்தினர், என் அப்பா, தம்பியையும் பிடித்துச் சென்றனர். அதன் பிறகு, அவர்கள் திரும்பவே இல்லை. அந்த மண்ணில் காணாமல் போனவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர்களும் சேர்ந்துபோயின. அம்மாவும் தங்கையும், நானும் தப்பிப் பிழைத்தோம்.

பறிகொடுத்த உயிர்களுக்கும் உறவுகளுக்கும் முழுவதுமாக அழுது முடிக்கக்கூட அவகாசமின்றி, பிழைத்தவர்களையும் சாவு விடாது விரட்டிவரும் சுடுகாடாகிப்போனது எம் நிலம். மிச்சமிருந்த நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, 30 வருடங்களுக்கு முன் பாய்மரக் கப்பலில் ஏறினோம். எப்போது குண்டு பாய்ந்துவரும், இந்தக் கடலில் செத்து மிதப்போம் என்ற அச்சத்தில் உறைந்த பயணம் அது.

தனுஷ்கோடி மண்ணில் கால் வைத்த பின்னரே, உயிருடன்தான் இருக்கிறோம் என்பதை நம்பினோம். உயிர் பிழைத்தலே பெரிது, அரிது என்ற போராட்டத்தில், உடைமைகள் பற்றியெல்லாம் நினைக்கவில்லை. ‘அகதி’ என்று முதன்முறையாக அழைக்கப்பட்டபோது நுரையீரல் அடைத்தது. நாடற்றவர்களாகிப்போன நிதர்சனத்தை செரிக்க முடியவில்லை இன்றுவரை.

2K kids: “என்றேனும் ஒரு நாள், எம் மண்ணுக்குத் திரும்புவோமா!” - முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

முகாமுக்கு வந்த சில வருடங்களில், எனக்குத் திருமணம் முடிந்தது. கணவர், மற்றோர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருமே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்றார்கள். மூத்தவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுகிறாள். முகாமில் மாதத்தில் இரண்டு முறை செக்கிங் நடக்கும் என்பதால், அப்போது அவள் இங்கு இருந்தாக வேண்டும். இதனால் வெளியூர் வேலைகளுக்குச் செல்ல முடியவில்லை.

2K kids: “என்றேனும் ஒரு நாள், எம் மண்ணுக்குத் திரும்புவோமா!” - முடிவுக்கு வராத 30 ஆண்டு கண்ணீர்

அகதிகளுக்கு அரசு வேலை கிடைக்காது. ரேஷன் அட்டையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. குடி உரிமை, ஓட்டுப் போடும் உரிமையெல்லாம் அற்றவர்கள் நாங்கள். எங்களுக்கான விடியல் என்பது என்ன, எப்போது, எப்படி என்பது தெரியவில்லை. என்றேனும் ஒரு நாள் எம் மண் ணுக்குத் திரும்புவோமா என்ற கேள்வியை, தலைமுறைகளாகக் கண்ணீரின் உப்பில் பதப்படுத்திக் காத்துக்கிடக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism