Published:Updated:

ஸ்டார்ட்அப் பிசினஸ்... எதிர்பார்த்ததைவிட நிறையவே கற்றுக்கொண்டோம்!

Training class
பிரீமியம் ஸ்டோரி
News
Training class

பயிற்சி வகுப்பு

புதிதாக ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கி நடத்தவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் கனவு. இந்தக் கனவை நிஜமாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ள விரும்பு கிறவர்களுக்கு ஸ்டார்ட்அப் பயிற்சி வகுப்பை, நாணயம் விகடன் கடந்த 15-ம் தேதி சென்னையில் நடத்தியது. இந்தப் பயிற்சி வகுப்பில் ஈரோடு, திருப்பூர், திருச்சி, மதுரை, ஆந்திராவிலிருந்து குண்டூர் எனப் பல ஊர்களில் இருந்தும் கலந்துகொண்டனர். இந்தப் பயிற்சி வகுப்பில் மூன்று பெண்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தகுந்த அம்சம்.

ஸ்டார்ட்அப் பிசினஸ்... எதிர்பார்த்ததைவிட நிறையவே கற்றுக்கொண்டோம்!
ஸ்டார்ட்அப் பிசினஸ்... எதிர்பார்த்ததைவிட நிறையவே கற்றுக்கொண்டோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொன்னார் சென்னை ஐ.ஐ.டி-யின் டிபார்ட்மென்ட் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸின் பேராசிரியர் தில்லை ராஜன். சாதாரண நிறுவனங்களுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் என்ன வித்தியாசம், பிசினஸ் மாடல் என்றால் என்ன, மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கான நிதியை எப்படித் திரட்டுவது எனப் பல விஷயங்களை எடுத்துச் சொன்னார் அவர். ‘‘ஸ்டார்ட்அப்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவே வந்தோம். ஆனால், எதிர்பார்த்ததைவிட நிறையவே கற்றுக் கொண்டோம். இனி நாங்கள் ஸ்டார்ட்அப் தொடங்கத் தயார்’’ என்றனர், இதில் பங்குபெற்ற வர்கள். ஸ்டார்ட்அப் தொடங்க வாழ்த்துகள்!