Published:Updated:

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்!

ஸ்டார்ட்அப்... சக்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்... சக்சஸ்

`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்!

`பிராஃபிட் அனால்டிகா' காஜா மைதீன்

Published:Updated:
ஸ்டார்ட்அப்... சக்சஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்... சக்சஸ்

ஸ்டார்ட்அப் தொழில்முனைவோரே...

உங்கள் மனநிலையை மாற்றுங்கள்!

நாம் அனைவரும் வெற்றியுடன்கூடிய சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு விருப்பம் உள்ளவர்களே. ஆனால், பெரும்பாலானோர் பிரச்னையை நேரடியாகச் சந்திப்பதற்கு பயப்படுபவர்களாக இருக்கிறோம். அதனால் வெற்றியுடன்கூடிய சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எளிய வழிமுறையையே (Easy Option) தேர்ந்தெடுக்கிறோம். நமது மன மகிழ்ச்சியை, வெற்றியான வாழ்க்கையை மற்றவர்கள் மூலமாகவே வாழ்ந்துவருகிறோம். நம்மை ரஜினிகாந்த், விராட் கோலி, ஜாக்மா, மார்க் சக்கர்பெர்க், ஸ்டீவ் ஜாப்ஸ் எனப் பலராக எண்ணிக்கொண்டு போலியாக மகிழ்ச்சிகொள்கிறோம். அவர்களுக்கும் நமக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், மேற்சொன்ன அனைவருமே தைரியமான (Outrageous) முடிவுகள் எடுத்தவர்கள்; எளிய வழிமுறைகளை (Easy Options) எடுத்தவர்கள் அல்லர். அந்த தைரியமான முடிவுகள் எங்கே கொண்டு செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியாது. எனினும், பாதுகாப்பான முடிவு என்பதை அவர்கள் விரும்பவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல நேரங்களில் ஸ்டார்ட்அப் தொழில் முடிவுகளும் மேற்சொன்னதைப் போன்றதே. எங்கே கொண்டு செல்லும் என்பது ஆரம்பிப்பவருக்குத் தெரியாது. அந்த தைரியமான முடிவெடுக்கும் மனநிலையே மிகப்பெரிய வெற்றியை அடைய அடிப்படைத் தேவை.

 காஜா மைதீன்
காஜா மைதீன்

எப்போதும் சரியான முடிவை எடுப்பதற்கான முயற்சி மற்றும் பாதுகாப்பான முடிவை நோக்கியே பயணம்... இவையே அனைவரும் பொதுவாகச் செய்பவையாக உள்ளன. இவற்றின் முடிவுகளும் அனைவருக்கும் கிடைப்பது போலவே மிகவும் சராசரியாகத்தான் இருக்கும். எப்போதும் சரியான, பாதுகாப்பான முடிவுகள் பெரிய வெற்றியைப் பெற்று தராது.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நோக்கி உங்கள் முடிவுகள் இருக்க வேண்டுமே தவிர, உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலையிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. பாதுகாப்பான முடிவு மந்தமானது (Dull). யூகிக்கக் கூடியது (Predictable) மற்றும் புதிய இடத்துக்குக் கொண்டு செல்லாது (No Where New). தைரியமான (Outrageous) முடிவு, மற்றவர்கள் கற்பனை செய்துகொண்டிருக்கும் இடங்களுக்கும் உங்களை எளிதாக அழைத்துச் செல்லும்.

நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள்?

ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தன் விருப்பத்துக் கேற்ப மாற்றியமைக்க முடியும்தானே? தன்னை ஓர் அலுவலக அதிகாரியாக உயர்த்திக்கொள்ள லாம். நல்ல நண்பர்களோடு பொழுதைக் கழிக்கலாம். ஓர் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராகலாம். ஒரு நடிகராக, டைரக்டராக முயற்சி செய்யலாம்.

ஸ்டார்ட்அப்... சக்சஸ்! - வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்!

ஒரு தொழிலதிபராக பென்ஸ் காருடன் கடற்கரை பங்களாவில் வாழலாம். அமைச்சராக இன்னோவோ காரில் வலம்வரலாம்.

கனவு காண்பதோடு, முறையாக முயற்சி செய்தால், ஒரு மனிதன் என்னவாக விரும்புகிறானோ அதை அடையலாம். கனவு காண்பதும் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதும் மட்டுமே அந்த நிலையை அடைய உதவாது. அதை அடைவதற்குத் திட்டமிட்டுச் செயல்படவும் வேண்டும்.

ஒரே ஒருவரால்தான் உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியும் என்றால், அந்த ஒரே ஒருவர் வேறு யாருமில்லை. நீங்களேதான்!

அவர் எதையும் தவறாகச் செய்யவில்லை. ஆனால்...

சுபா எந்தவிதமான சிக்கல்களிலும் மாட்டிக்கொள்ளாமல் (Non Risk Taker) தனது வேலையை கார்ப்பரேட் நிறுவனத்தில் தொடங்கினார். எந்தவொரு வேலையையும் மிகுந்த சிரத்தையுடன் செய்வார்.

ஸ்டார்ட்அப்... சக்சஸ்!வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்!
ஸ்டார்ட்அப்... சக்சஸ்!வித்தியாசமானவராக இருந்தால் வெற்றி நிச்சயம்!

இப்போது சுபா நிர்வாகியாக (Manager) தகுதி பெற்று நிர்வாகக்குழுவில் ஓர் உறுப்பினராக உயர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் நிறுவனத்துக்கு துணை நிர்வாக இயக்குநர் தேவை என்ற சூழ்நிலை உருவானது.

சுபா கம்பெனியின் சிறந்த பணியாளராகக் கருதப்பட்டாலும்கூட அவர் மந்தமாக இருந்தார். அதாவது... கம்பெனிக்கு என்று எந்த ஒரு புதிய சிந்தனையையும் புகுத்தவில்லை, நிறுவனத்தின் மதிப்பைக்கூட்ட அவரது பணிகள் பயன்படவில்லை.

வேதா என்ற பெண்ணும் சுபாவின் துறையில் இருந்தார். சுபாவின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கையே அவர் பெற்று வந்தார். ஆனால், புதிய சிந்தனையைப் புகுத்துவதில் திறமை வாய்ந்தவராக அறியப்பட்டார். அதனால் துணை நிர்வாக இயக்குநர் பொறுப்பு வேதாவைத் தேடி வந்தது.

புதுமையைப் புகுத்துகிறவர்களுக்கே இந்த உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. ஸ்டார்ட்அப் தொழில்முனைவோர் வேதா போல முன்னேற, புதிய சிந்தனைகளே வழிவகுக்கும்.

நீங்கள் சராசரி (Reasonable) மனிதரா?

ஒரு பிரபல சினிமா இயக்குநர் புதுமுக நடிகர் ஒருவரை, `அப்புறம் வந்து பாருங்கள்' என்றார். அந்த நடிகரோ அதே நாளில் மூன்று முறை வந்து பார்த்தார். `சில நாள்கள் கழித்து வந்து பாருங்கள்' என்ற அர்த்தத்தில்தான் இயக்குநர் கூறினார். ஆனால், சில மணி நேரங்கள் கடந்துவிட்டால்கூட `அப்புறம் பார்ப்பதற்குச் சமம்தானே' என்று ஒரே நாளில் மூன்று முறை முயற்சி செய்தார் அந்த நடிகர்.

இது ஒரு சராசரியான (Reasonable) அணுகுமுறை அல்ல. ஆனாலும், அது வேலை செய்து அவருக்கு வெற்றியைத் தந்தது. நம்மில் பலர் சராசரியாகவே இருக்கிறார்கள். அதனால் சராசரி (Reasonable) வளர்ச்சியை மட்டுமே அவர்களால் அடைய முடிகிறது.

இதையே ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, `சராசரியான மனிதன் தன்னை உலகுக்கேற்ப மாற்றிக்கொள்கிறான். வித்தியாசமான மனிதன் (Unreasonable) உலகத்தைத் தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கிறான்' என்று சொல்லியிருக்கிறார். இப்படி உலகத்தின் அனைத்து வளர்ச்சிகளும் வித்தியாசமானவர்களைச் சார்ந்தே உள்ளன.

இது ஸ்டார்ட்அப் தொழில்களுக்கு அப்படியே பொருந்தும். சராசரியான சிந்தனைகள் இந்தத் தொழிலுக்கு உதவாது. உங்கள் புதிய சிந்தனையை, சரியான முறையில் செயல்படுத்தினால் உங்களிடம் பணம் சேர்வதை யாரும் தடுக்க முடியாது. இவ்வளவு நாள் இந்தப் பணம் எங்கிருந்தது என உங்களையே யோசிக்கவைக்கும்!

உங்கள் கன்னத்தில் அறையச் (Slap) சொல்லுங்கள்!

ஆரம்பநிலைகளில் உங்கள் சேவையையோ, தயாரிப்பு பொருளையே ஒருவரிடம் கொடுத்து, `நீங்கள் இந்தத் தயாரிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என்று கேட்டீர்கள் என்றால், பெரும்பாலும் உங்களை காயப்படுத்த விரும்பாமல் நன்றாக இருப்பதாகவே சொல்வார்கள். அதன் மூலம் உண்மைநிலையை அறிய வாய்ப்பே இல்லாமல் போகிறது. அதே கேள்வியை சற்றே மாற்றி, `தவறு / குறை ஏதும் உள்ளதா' என்று கேட்டீர்கள் என்றால், உண்மையான விமர்சனத்தை நீங்கள் பெறலாம். அதன் மூலம் உங்கள் சேவை அல்லது பொருளின் தரத்தை உயர்த்தலாம். உண்மை வலிக்கும்தான். ஆனால், அந்த விமர்சனங்கள் நாளடைவில் உங்கள் தயாரிப்பை மேம்படுத்த நிச்சயம் உதவும்.

ஸ்டார்ட்அப் தொடங்க விரும்புவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் அடுத்தடுத்த இதழ்களில்...